Saturday, October 8, 2016
இலையுதிர்காலம்
திரைமறைவில்..
நாளுக்குநாள் சந்தேகங்களை விதைத்துக்கொண்டே போகிறது.. சில ஒலிவடிவிளான (ஆடியோ) யூ டியூப் YouTube செய்திகள் மக்களிடையே வேகமாக சென்றடைகிறது. இந்நிலையில் சம்மந்தமே இல்லாமல் ஆளுநர் நேரத்தை ஒதுக்கி வைகோவை சந்திக்கிறார்.. அங்கீகாரம் இல்லாத ஒரு அரசியல்கட்சிதலைவரை.. சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ உள்ளாட்சிகளில் கூட பிரதித்துவம் இல்லாத லெட்டர்பேட் கட்சி தலைவரை சந்திக்கவேண்டிய அவசியமென்ன..?
..
வலைதளங்களில் அதிகாரத்தை கையிலெடுக்கபாஜகவும் அதற்கிடையூறாக காங்கிரஸூம் களத்தில் என செய்திகள் வெளிவருகிறது.. வைகோவின் சமீபகால அரசியல் நடவடிக்கைகள் தரகர் நிலைக்கு அல்லது இடைநிலைக்காரன் என்று அறியபடுகிறார் அதனாலேயே சந்தேகநிழல் வருகிறது..
கவர்னரை சந்தித்தின் நோக்கமென்ன என்ன விடயம் பேசபட்டதென்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளிவருகிறது .. அது அதிமுகவிற்கு குணம் சேர்ப்பதாக இல்லை.. நிறைய அரசியல் தலைவர்கள்
ஜெயலலிதாவின் உடல்நிலைக்குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துக்கொள்ள அப்போலோ வருகிறார்கள் ஆனால் வைகோவிற்கு மட்டும் மேல்விலாச அட்டையை தருகிறார் லண்டன் மருத்துவர் .. வைகோவை சரியாக எடைபோட்டுயிருக்கிறார்..
..
உண்மையில் நடப்பதென்ன என்பது தங்கமலை ரகசியம் போலிருக்கிறது.. இன்றைய மருத்துவ அறிக்கை நிறைய குழப்பத்தில் இருப்பதை காட்டுகிறது Passive physiotherapy செயலற்ற உடல் உறுப்புகளை செயல்படவைக்கும் உடற்பயிற்சி முறை.. இது முன்பு கூறிய தகவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை குறித்த தகவல்கள் வெளிவருகிறது...
தினம் தினம் மாறுபட்ட தகவல்களை தருகிறது அப்போலோ நிர்வாகம்..
..
பிரதான எதிர்க்கட்சிதலைவர் திரு.ஸ்டாலின் மருத்துவமனை வந்தது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.. இங்கே புகழ்பாடுவதாக கருதகூடாது சிறந்த எதிர்க்கட்சி தலைவராக மட்டுமல்ல நல்ல அரசியலையும் கையில் எடுத்திருக்கிறார்.. தளபதி அவர்கள்..
ஏனெனில் ஜெயலலிதாவிற்கு தெரியாத அரசியல் நாகரீகம் இது..
..
நிறைய வதந்திகள் ,ஊகங்கள் ,பித்தாலாட்ட அரசியல் ,கயிறுதிரித்தல், தேசியகட்சிகளின் இலைமறைவு காய்நகர்த்தல்கள்.. இதெல்லாம் நல்ல அரசியலை முன்னெடுக்காது..நல்லதுமில்லை..
மக்கள் அமைதியா கஎல்லாவற்றையும் மிக கவனமாக உற்றுநோக்குகிறார்கள்.. காரணம்.. அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களென்று யாருமில்லாத நிலை / உருவாகவேஇல்லை..
..
#இலையுதிர்காலம்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment