Wednesday, November 18, 2026

ஒரே குடும்பத்தில் கருத்தியல் வேறுபாடு இல்லையா ? ஏன் திமுகவை சேர்ந்தவர்கள் ஆன்மீக தொடர்பில் இல்லையா? தனது சித்தாந்தத்தை கருத்தை ஏன் குடும்பத்தின் மீது திணிக்க வேண்டும் .. அவரவர் விருப்பம் என சிலர் சொல்வதை பேசுவதை கேட்க உணர முடிகிறது..
..
என் குடும்பத்திலேயே எனது தந்தை காங்கிரஸ்காரர் அவர் சொல் கேட்டு நடக்க ஊரே காத்திருந்தது.. அரசியலில் மிக முக்கிய முடிவுகள் இவரின் அசைவிற்கு காத்திருந்தது.. ஆனாலும் பிள்ளைகள் திராவிட  சித்தாந்தத்தை ஏற்றோம்.. என் வீட்டில் கூட ஏன் என் இணையதளம் கூட யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டு .. அவர் திமுகவிற்குதான் வாக்களிப்பார்.. இதெல்லாம் எல்லா திமுககாரன் இல்லத்திலும் நடைபெறுகிற விடயம் .. 
..
இது ஏன் பொருந்ததாதா என சிலர் எழுப்பும் வினாக்களுக்கு ஒரே பதில் தான் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கம் அறம் உண்டு .. சிலர் துர்கா அம்மையார் கோவிலுக்கு செல்வதில்லையா என கேள்வி எழுப்புகிறார்கள் .. அம்மையாரின் மகன் மகள் திருமணம் ஏன் அம்மையாரின் திருமணமே எப்படி நடந்தது என்பதை அனைவரும் அறிவோம்
..
பெண்களை காட்சிப் பொருளாக்கி கலைநயம் என்ற பெயரில் சினிமாத்தனம் செய்கிற சிந்தனை எதில் சேர்ப்பது..  இனமான பேராசிரியர் தன் தலைமையில் திருமணம் என்ற தொண்டனின் அழைப்பை ஏற்று சென்றவர் வேதம் முழக்கம் கேட்டு என்னை ஏன் அழைத்தீர்களென திரும்பிய வரலாறு உண்டு .. இப்போதும் இதைதான் சொலைகிறோம் உங்கள் வீட்டு" விசேஷம்" உங்கள் உரிமை .. திமுக கொள்கை ரீதியாக கட்டமைக்கப்பட்டது.. எல்லா பொறுப்பும் எனக்கே வேண்டுமென அடம்பிடிக்கும் உங்கள் மனோபாவம் ஏற்கதக்கதல்ல.. பொருளாளராக இருந்த நீங்கள் செயலாளராக வேண்டுமென அழுததெல்லாம் அறிவோம்.. இனியும் அழுது புரண்டு வேஷம் கட்டாமல்  வழிவிடுங்கள்..
..
காலம் காத்திருக்கிறது
..
ஆலஞ்சியார்

Saturday, August 22, 2026

வையாபுரி கோபால்சாமி.. 

சிறந்த parliamentarian என சொல்வதை கேட்கும் போது பல நிகழ்வுகள் ஞாபகம் வருகிறது உரக்க பேசுகிறவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள் என சொல் உண்டு அதை கோபால்சாமியிடம் காணலாம் .. இரண்டு நிகழ்வுகள் அதில் ஒன்று மேனாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா துணை குடியரசு தலைவராக இருந்த காலத்தில் மாநிலங்களவையின் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் .. ஒரு நாளிதழில் சர்மா அவர்களை தவறாக சித்தரித்து கட்டுரை வெளியாகி அது குறித்த விவாதத்தில் வை.கோ பேசும் உணர்ச்சிவயப்பட்டு  அந்த காட்டுமிராண்டியை சபைக்கு இழுத்த வாருங்களென "மனோகரா" ஸ்டைலில் பேசினார் அப்போது குறுக்கிட்ட சபைத் தலைவர் சர்மா அவர்கள் நானே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை  என்றார் உடனே எங்கள் சபையின் தலைவரை தவறாக பேசியிருக்கிறார் விட முடியாதென பேசி உணர்ச்சி பிழம்பாக நின்றார்.. 

மற்றொரு நிகழ்வில் எம்ஜிஆரை தவறாக பேசிய போதும் எங்கள் மாநில முதல்வரை எப்படி பேசலாம் என்று என உணர்ச்சி மேலிட குதித்தார்.. எப்போதும் இவர் இப்படிதான் தான் மட்டுமே தன்னால் மட்டுமே என்கின்ற நினைப்பில் எதையும் நிதானமாக அணுகாமல் சட்டென்று உணர்ச்சி பிழம்பாய் நிற்பார்..

நல்ல தலைவருக்கான இலக்கணம் சிறிதும் இல்லாமல் தன் நம்பி வந்த பெரும்சேனையை தவறாக வழிநடத்தி தானும் வழிதவறிய ஆட்டைப் போல திசை தெரியாது நிற்கிறார்.. இளமை காலங்களில் இவரின் பின்னால் அணிவகுத்து நின்று ஏதோ தவறாக தெரிகிறதே என அப்போதே எச்சரிக்கையோடு விலகி நின்றதை பெருமையாக கருதுகிறேன்.. அவன் நடிகன் என ஒற்றை வரியில் எங்கள் கண் திறந்த தஞ்சை பெரியார் "மன்னையார்" உயர்ந்து நிற்கிறார்.. 

.. திமுகவே நான் தான் என கலைஞருக்கு எதிராக சிலரை ஒருங்கிணைத்து நின்றபோது கலைஞர் தஞ்சையிலே பொதுக்குழுவைக் கூட்டிய போது எங்கள் மாவட்ட செயலாளர் மணி அண்ணனின் கட்டளையை ஏற்று அரூர் சுப்ரமணியன் கணபதி அக்ரஹாரம் சச்சிதானந்தன்ஞ இவர்களை பாதுகாப்பாக குருதயாள் சர்மா மண்டபத்திற்கு அழைத்து வந்தது கிடைத்த பெரும் பேறு.. 

..

கலைஞர் கையில் இருந்தவரை போர்வாளாக மின்னியவர்.. பின்பு உடைந்து துருப்பிடித்த வாளாய்  இப்போது யாருக்கும் வேண்டாத மக்கிப்போன இரும்பு துகளாய் அவலநிலை  இதெற்கெல்லாம் அவரின் பேராசையும் தன் உயரமறியா நிலையுமே காரணம் .. இன்னும் அவர் மக்கள் மன்றத்தில் கேட்பாரற்று நிலை காண நேரிடும் உள்ளுக்குள் நயவஞ்சகம் குமரி கடற்கரையில் துரைமுருகன் ஆற்காட்டாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கலைஞருக்கு பிறகு நீ தான் பேச்சுவாக்கில் சொல்ல பெரியார் போல கலைஞரும் 94 வயது வரை உயிரோடு இருந்துவிட்டால் என  கேட்டவர் .. அப்போதும் நேர்மையாக இல்லை இப்போதும் நேர்மையாக இல்லை..  நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சி பொறுப்பில் வந்த பிறகு யாரிடம் சொல்லாமல் இலங்கைக்கு சென்று திமுக அரசிற்கு சங்கடத்தை உருவாக்கி யாருக்கோ உதவியவர்.. எப்போதும் நம்பிக்கைக்குரியவரில்லை இப்போதும் 

நொச்சிப்பட்டி தண்டபாணி 

இடிமழை உதயன் 

மேலப்பாளையம் ஜஹாங்கீர் 

கோவை பாலன்

உப்பிலியாபுரம் வீரப்பன் 


- 'மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்' உருவாக உயிர் கொடுத்தவர்கள். வைகோவுக்கு எதிராக நடத்தப்பட்ட வேள்வியில் தீ குளித்தவர்கள். மண்ணில் புதைந்த இந்த எலும்பு கூடுகள் இன்றைக்கு புரண்டு படுத்திருக்கும்!

..  

ஆலஞ்சியார் 



Wednesday, July 15, 2026

கலைஞரின் இடத்திற்கு குறி வைத்த வைகோ!

’’ரகசியத்தைக் காப்பாற்றுவதில் துரைமுருகன் இரும்புப்பெட்டி'' என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 2009-ஆம் ஆண்டு ஒரு கவிதையில் குறிப்பிட்டிருந்தார். அரசியல்வாதிகள் பொதுவாக ரகசியங்களைக் காப்பார்கள். ஆனால், துரைமுருகன் அதற்கு மேலானவர் என்பதால்தான் `இரும்புப் பெட்டி' என்றார் கலைஞர் கருணாநிதி. 

அவர் ஏன் இப்படிச் சொன்னார்? என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. அது 2009 தேர்தல் பரபரப்புக்கிடையே கவிதையாக வெளிப்பட்டது. ’தம்பி ஒருவர் திமுக-வில் இருந்தபோது, என் பதவிக்குக் குறி வைத்தார். நான் நீண்ட காலம் உயிரோடு இருந்தால், தலைவர் பதவியை அடைய முடியாதே என்றும் கவலைப்பட்டார்'' என அந்தக் கவிதையில் ஒருவரைச் சுட்டிக் காட்டினார் கலைஞர் கருணாநிதி. 

சில ஆண்டுகளுக்கு முன்பு குமரிமுனைக் கடற்கரை விருந்தினர் மாளிகையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கவிதையில் விவரித்திருந்தார் கலைஞர் கருணாநிதி. கலைஞர் தூங்கிக் கொண்டிருந்தபோது துரைமுருகனும், ஆற்காட்டாரும் அந்தத் தம்பியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்தத் தம்பி கலைஞர் கருணாநிதியின் இடத்துக்குக் குறிவைத்து கருத்துகளை வெளியிட்டார். அந்தத் தம்பியின் பெயரைக் கலைஞர் கருணாநிதி குறிப்பிடவில்லை. ஆனால், அவர் யார்? என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்திருந்திருந்தது. அந்தத் தம்பி வைகோதான்!

குமரிமுனைக் கடற்கரை விருந்தினர் மாளிகையில்
குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தேனாம்; 
அந்த நள்ளிரவில் அப்போது நமது தம்பிமார்கள் 
ஆற்காட்டார் துரைமுருகன் இன்னொருவர் இப்போது நான், 
பெயர் சொல்ல விரும்பாதவர்: இவர்கள் மூவரும் 
மாடித் தாழ்வாரத்தில் தேடக் கிடைக்காத திரவியமாய்த் 
திராவிடர்க்குக் கிடைத்த திமுகழகத்தின் வளர்ச்சி, 
வலிமை, வற்றாத பாச உணர்வு இவை பற்றியும் அதன் 
வருங்காலம் பற்றியும் வானம் வெளுக்கும் வரையில் 
உரையாடினார்களாம்.

அப்போது, அந்தத் தம்பி - நான் பேர் சொல்லாப் பெருமகன்; 
என் தம்பிகள் ஆற்காட்டாரையும், துரைமுருகனையும் பார்த்து
“சரி, கலைஞருக்கு அடுத்து கழகத்தின் தலைவர் 
ஸ்டாலின்தானா?" என வெகுண்டெழுந்து கேட்டாராம் 
எப்படி அதைச் சொல்கிறாய் என அந்தத் தம்பியர் 
கேட்டவுடன் "பேராசிரியர் அவர்கள், கூட்டங்கள் - மாநாடுகளில் 
கூறுகின்ற புகழுரைகள் ஸ்டாலினைப் பற்றி 
மழையாகப் பொழிகிறதே 
என ஆயாசப்பட்டாராம்; அந்த அருமைத் தம்பி! 

உடன்; ஆற்காட்டாரும், துரைமுருகனும்; "அன்பழகனார் 
அப்படிப் பேசுவதில் என்ன தவறு? அந்தப் பிள்ளையாண்டான் 
செய்துள்ள தியாகம் இளைஞர் அணியை வளர்க்கும் 
இணையற்ற ஆற்றல் இவற்றைப் பேராசிரியர் பாராட்டுவதில் 
என்ன குறை - யாரையும் எடை போட்டுத்தான் 
பேராசிரியர் ஏற்றுக் கொள்வார் 
கலைஞரையே உறைத்துப் பார்த்து உண்மைத்திறனை உணர்ந்த
பிறகுதான் ஒப்புக் கொண்டார்; தனக்கே தலைவராக! 
எனவே இப்போது கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் 
என்ற பேச்சுக்கு என்ன அவசரம்? நீர் ஏன் நெருப்பைத் 
தொட்டது போல் துடிக்க வேண்டும்? கலைஞரே இப்போது 
உம்மைத் தானே "போர்வாள்" என்று புகழ்கிறார் - போற்றுகிறார் 

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உமக்கு வழங்கியது போல
வேறு யாருக்கு இப்படித் தொடர்ந்து வழங்கியிருக்கிறார்.
கவலைப்படாமல் இருந்திடுக! கலைஞர் அவர்கள்; தனக்குப் பிறகு 
உம்மைத்தான் தலைவராக்குவார் இயக்கத்திற்கு" என்று நம்பிக்கை 
தெரிவித்து அந்த நள்ளிரவிலும் நமது பேர் சொல்ல விரும்பாத 
பெருமை மிகு தம்பியின் முகத்தில் ஒளி பிறக்கச் 
செய்திருக்கிறார்கள்.
புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில் 
புதியதோர் சிந்தனை அது ஒரு கேள்வியாகவும் மாறியது! 
’’ஏன் துரைமுருகன்; நான் கலைஞருக்குப் பிறகு 
தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது 

கலைஞர், பெரியார் போல ராஜாஜி போல - தொண்ணூறு 
வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு 
எத்தனை வருடம் காத்திருப்பது?" 
இதைக் கேள்வியாகக் கருதாமல், மற்ற இரு தம்பியரும் 
தேன் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி 
இருவரும் இரகசியமாகச் சத்தியம் செய்து கொண்டார்களாம் 
இந்தச் செய்தியை இருவரும் தலைவரிடம் 
எப்போதும் சொல்வதில்லையென்று !
ஆனால்
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ அசல்; கண்ணாடிப் பேழை எனினும்

ஆண்டுகள் சில பல கடந்த பிறகே:
அன்றைய குமரிமுனையில் குமுறிய எரிமலையின் 
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு!
குறளின் அமுத மொழியாம்;
"செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே 
உட்பகை உற்ற குடி'

(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்கமாட்டார்கள்)

உடன்பிறப்பே,
குறளோவியம் நூல் தொகுப்பில் நான்
குறிப்பிடாமல் விட்டுப் போன இந்தக் குறட்பா, இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே
அந்த நினைவுக்கு ஒரு நன்றி!

என அந்த கவிதையை முடித்திருந்தார். இந்தக் கவிதை எழுதப்பட்ட காலத்தில்தான் மதிமுகவில் இருந்த எம்.எல்.ஏ-கள் மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர்ந்தார்கள். அடியொட்டிதான் நினைவலைகளைக் கவிதையாக வடித்தார் கலைஞர் கருணாநிதி. 

இப்போது 2026 சட்டமன்றத் தேர்தல் காலத்திற்கு வருவோம். திமுக கூட்டணியிலிருந்து தவெக கூட்டணிக்கு முகாம் மாறியிருக்கும் வைகோ, ’’பதவியை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் சேர்வது குதிரைப் பேரம் அல்ல’’ என தவெகவிற்கு ஆதரவாகப் பொழிப்புரை எழுதினார். 

மு.கண்ணப்பனும் என்.ராமகிருஷ்ணனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த போது ’’மு.கண்ணப்பனின் இந்தச் செயல் கட்சிக்குச் செய்த பெரும் துரோகம்’’ எனக் குற்றம் சாட்டினார் வைகோ. தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ-கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேர்ந்தால் துரோகம், சதிவலை எனச் சொன்ன வைகோ, தவெகவில் சேர்வதற்காக எம்.எல்.ஏ பதவிகளை அதிமுகவினர் ராஜினாமா செய்வதைக் குதிரைப் பேரம் அல்ல என்கிறார்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

Saturday, June 20, 2026

வை.கோபால்சாமி 
முன்பு பலமுறை சொன்னதுதான் தஞ்சை பெரியார் மன்னையார் சொன்னதுதான்  அவன் "நடிகன்"..
இங்கே ஒரு விடயத்தை சொல்லவேண்டும் ..
கன்னியாக்குமரி கடற்கரையில் அன்றைய பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு வை.கோ. துரைமுருகன் ஆற்காடு வீராசாமி மூவரும் காலை கதிரவனை காண காத்திருந்தார்கள் கடற்கரையில்,அப்போது துரைமுருகன் கலைஞருக்கு பிறகு நீதான்யா என பேச்சுவாக்கில் சொல்ல உடனே வை.கோ பெரியார் போல கலைஞரும் 94 வயது வரை உயிரோடு இருந்துவிட்டால் என பதிலளிக்க இருவரும் அமைதியானார்கள்.  அதற்கு பிறகான உரையாடல் அற்ற பெரும் அமைதியாக இருந்தது.. 
ஆனால் அந்த இருவரும் என்ன இவன் இப்படி பேசுகிறான் என அங்கிருந்து கிளம்பினர் .. பின்னொரு நாளில் தீட்டிய மரத்தை கூர் பார்த்த போது கலைஞர் பெருமகன் இதைப்பற்றி சொல்லி அந்த இருவரில் ஒருவர் மனம் கண்ணாடிப் பெட்டி  மற்றொருவர் மனம் இரும்புப் பெட்டி என்றார் 
ஆனால் யார் சொன்னார்களென யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை..
சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நகரில் பூண்டியார் நினைவேந்தல் நிகழ்வில் உரை நிகழ்த்தும் போது 
வைகோ கட்சியை விட்டு பிரிந்து நான் தான் திமுக என உரிமைக் கொண்டாடி கலவரம் செய்த போது தஞ்சை குரு தயாள் சர்மா மண்டபத்தில் நடந்த பொதுக்குழு அது முடிந்த திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தை நடத்த விடாமல் கலவரம் செய்ய ஆட்களை  தயார் படுத்தி வைத்திருந்த நிலையில் உன்னை நம்பிதானே மணி வந்திருக்கேன் என கலைஞர் சொன்னதும் இரு வரேன் என எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளர் தொம்பன் குடிசை பகுதிக்கு சென்று எச்சரித்தை எல்லாம் பேசி அன்று உறுதுணையாய் நின்ற பூண்ட
 கே.கலைச் செல்வத்தை நினுவுகூர்நது முடிக்கும் போது இப்படி சொன்னேன்.. மாவீரன் கையில் இருக்கும் வரைதான் அது போர்வாள் இல்லையென்றால் அது கயலாம்கடையில் இருக்கும் இருக்கும் இரும்பு அவ்வளவு  எனச் சொன்னேன்..கலைஞர் கையில் இருந்தவர்தன் அது போர்வாள்.. பகன் துருப்பிடித்த பழைய இரும்பு.. இப்படி பேசியவுடன் சிலர் என்னை கடிந்துக் கொண்டனர்.. சிலர் நம் கூட்டணியில் இருக்கிறார் தவிர்த்திருக்கலாம் என்றனர்.. சிலர் தேவையில்லாதது என்றும் சொன்னார்கள் .. ஆனால் நான் அபபோதும் மட்டுமல்ல எப்போதும் சொல்வது தான் நம்பிக்கையற்ற நயவஞ்சகர்..கலைஞரைப்போல தளபதியாரும் மன்னிக்கும் பெரும் குணம் தான் அவரை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்பியது.. இப்போதும் சந்தர்ப்பத்திற்கும் காத்துக்கிடக்கும் பிணம்தின்னி கழுகின் குணம் கொண்டவர்தான் வைகோ.. 
..
அவரோட இருந்தவர்கள் ஏறக்குறைய எல்லாருமே அவரை காலதாமதமாக உணர்ந்து வெளியேறிவிட்டனர் இன்று மதிமுக வின் நிலை சாதி கட்சியாக சுருங்கிவிட்டது.. இன்றைய தினம்
துரதிர்ஷ்டவசமாக தனிச் சின்னத்தில் நிற்காமல் போய்விட்டோம் என வை.கோ.துரையின் பேச்சியிலிருநது வெளியேற தயாராக இருப்பதும் ஷோபா கிடைக்காமல் வருத்தமும் தெரிகிறது ..  செல்லுங்கள் திரும்ப வராதீர்கள்..பழைய இரும்புக்கரம் துருப்பிடித்த கத்தி..
ஆலஞ்சியார் 

Monday, May 18, 2026

திமுக..
 நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் அதிகாரம் சார்ந்த பிரிவு.. பவளவிழா கண்ட கட்சி இனி என்ன செய்யவேண்டும் என்ற மறு பரிசோதனைக்கு வந்திருக்கிறது.. இன்னமும் பழங்கதைகளை பேசி புதிய தலைமுறையை அணுக இயலாது 
காரணம் எளிது..
என் பாட்டன் செருப்பு இல்லாமல் நடந்தான் நான் சூ போட்டுக் கொண்டுதானே பள்ளிக் சென்றேன்  என்பவனிடம் இனியும் சமூகநீதிப் பற்றி பாடமெடுக்க தேவையில்லை..
..
எல்லைகளை கடந்து நிற்பவனிடம் "பாண்டியாட்டம்" ஆட சொல்லி அழைப்பது வீண்.. சுயமரியாதை இருக்கிறது அது பொங்கி வழிய தேவையில்லை என்கிற மனநிலை.. சாதிய அடையாளங்களை மறைத்து வாழ விரும்பாதவர்களிடம் தீண்டாமை பாடமெடுத்து என்ன பயன்.. தீண்டாமைக்குள் அடைந்து கிடப்பவனே அதை கண்டுக்கொள்ளாத போது சமநீதி வகுப்பு  போரடிக்கும்..
..
தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிடம் 2.O தேவை குறித்து பேசியதன் பொருள் இதுதான்.. இன்றைய தலைமுறையினரை எதை நோக்கி அழைத்துச் செல்லவேண்டும் கசப்பான மருந்தை கொடுக்க தாய் தேன் கலந்து தருவதைப் போல  நல்வழிப்படுத்த,குணப்படுத்த திராவிட இயக்கம் உயிர்ப்போடு இருப்பது காலத்தின் கட்டாயம்..அதற்கான பணிகள் 
செவ்வனே நடைபெற துவங்கியிருப்பதாக அறிகிறேன்
..
பழையன கழிதல் என்பது இயற்கை நியதி புதியன புகுதல் காலத்தின் தேவை ஐந்து பத்தாண்டுகள் சலிப்பை தந்திருக்கும் அதனால் தான் புதியதை கண்டதும் பாய்ச்சலோடு அரவணைத்துக் கொண்ட நிகழ்வு அரங்கேறியது அது சரியானதாக இல்லை என்பதுதான் கொடுமை..  அரசியல் பழகாமல் பயிலாமல் கவர்ந்திழுக்கும் மாயை பின்னோக்கி இட்டு செல்லும்
அதை தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு..
..
திராவிட இயக்கத்தின் பணி முன் எப்போதுமில்லாத வகையில் தேவை ஏற்பட்டிருக்கிறது.. புதிய குருதி பாய்ச்சபடவேண்டும் சில முதியவர்கள் வழிவிட வேண்டும் நல் ஆலோசனைகள் வழங்கி இளைஞர்களை புதிய தலைமுறையை உருவாக்கிட வேண்டும்.. தமிழ் நாட்டின் வளர்ச்சியை கண்டு கையாலாகாதத்தனத்தோடு நம்மை சூழ்ச்சியில் வீழ்த்திட காத்திருக்கும் ஒரு கூட்டம்.. மெல்ல நம் பண்பாட்டின் மீதான தாக்குதலை மொழி மீதான தாக்குதலை முன்பை விட வேகமாக செய்ய திட்டமிட்டு அதை செயல் வடிவில் காட்டுகின்றனர்..  
..
நாம் தொடர்ந்து சண்டை செய்து கொண்டே இருக்க வேண்டமென நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர் நம் எதிரிகள்.  
நாம் புதிய வழிகளில் புதிய திட்டங்களால் புதிய செயல்வடிவில் புதிய பாய்ச்சலில் புதியவர்கள் படையோடு திராவிடம் வெல்ல வேண்டும் வெல்லும் திராவிடம்
..
ஆலஞ்சியார் 

"ஏழ்மைதான் எனது பெருமை. 
செல்வமும் பொன்னும் தொப்பியைப் போன்றவை.
வழுக்கைத் தலையன்தான் 
தலையைத் தொப்பிக்குள் மறைப்பதில் மகிழ்வான். 
சுருள் முடிக்காரனின் சந்தோஷம் 
தொப்பி தொலையும்போதுதான்.”

#மெளலானா ரூமி ரஹிமஹுல்லாஹ்

Tuesday, May 5, 2026

தலைவன்..
பொதுவாழ்வில் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக பாவித்து தொடர்ந்து இயங்குகிற தலைவன்.. வெற்றிக் கண்டு துள்ளி குதிக்கவில்லை.. தோல்வி அவரை முடக்கிவிடவில்லை.. தன்னை தோற்கடித்த கொளத்தூர் மக்களிடையே மறுதினமே சென்று நன்றி சொல்கிறார்.. மக்கள் செய்வதறியாது கண்ணீர் மல்க கைகூப்பி நிற்கின்றனர்..
..
ஊடகங்களில் ஸ்டாலின் தோற்றிருக்க கூடாதென நடித்த நடுநிலைவாதிகள் கொளத்தூரில் ஸ்டாலின் நன்றி அறிவிப்பை கண்டு மிரண்டு போனார்கள்.. 
..
கொளத்தூர் 
கண்ணீரால் குளமானது..
வழிநெடுக நின்றவர்கள் 
வாய் பொத்தி அழுததை 
வரலாறு பதிவு செய்தது ..
..
நன்றி கூற தான் சென்றார்
வெற்றி களிப்பில் அல்ல 
தோல்வியில் துவண்டுவிட மாட்டேன் 
எப்போதுமிருப்பேன் என சொல்லாமல் சொன்னார்
..
வழி நெடுக 
வளர்ச்சிகள் தந்தவன் 
தலைநிமிர்ந்து 
நடைப்போட்டான் 
கண்டும் உண்டும்
மகிழ்ந்தவர்கள் 
தலைகுனிந்து நின்றனர்
"அட்டாலும் பால் சுவையில் குன்றாது" ..
..
எதிரிகள் கூட தோற்றதைக்
கண்டு கலங்கி நின்றனர்
ஆனால்..
கட்சிக்காரன் சொல்கிறான்
வாக்களிக்கச் செல்லும் முன் 
என் இரு குழந்தைகள் 
காலில் விழுந்தன நம் வாக்கா மாறிவிட போகிறதென நினைத்தேன்.. 
மற்றொருவர் 
வளர்ச்சி எல்லாம் சரி 
கட்சிக்காரனுக்கு என்ன செய்தார்
கேள்விகள் ஆயிரம்
பதில் ஒன்றுதான்.. கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய தேர்தல் இது
..
கட்சிக்குள் புது இரத்தம் பாய்ச்சபட வேண்டும் 
தனக்கு வாய்ப்பில்லை என்றவுடன்
கூறுமாறும் "கயமை" களையப்பட வேண்டு்ம்.. பல்வேறு அணிகள் செயல்பாடடில்  ஆதிக்க திமிரையும், லாபிகளையும், தடுத்து நிறுத்த வேண்டும்.. கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் கண்டு அவர்கள் சொல் கேட்டு வழிநடத்தும் நிர்வாகிகளை தேர்வுச் செய்ய வேண்டும்.. மாவட்டங்களில் தனக்கு பிறகு தனக்கு வேண்டியப்பட்டவன் என்ற நிலை மாறவேணடும்.. மொத்தத்தில் பழைய திமுகவாக வேண்டும்
..
ஆளும்கட்சியாக பார்த்த இளம்தலைமுறை எதிர்க்கட்சியாக பார்க்க வேண்டும்..
பழைய எதிர்க்கட்சியாக..
தலைவர் நேற்றே களத்தில்.. இனி 
we will fight we will win
..
திமுக எப்போதும் மக்களுக்கானது
..
ஆலஞ்சியார்

Saturday, May 2, 2026

திமுககாரனுக்கு துரோகங்கள் புதிதல்ல..
..
விசிக தலைவர் தோல்.திருமாவளவன் எங்கள் கட்சியினர் விசிக போட்டியில் தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளில் சரியாக பணியாற்றவில்லை என்கிறார்.. மகிழ்ச்சி இப்போதாவது ஒப்புக்கொண்டமைக்கு  .. திமுகவிற்கு எப்போதுமே தலித் சமூகம் (குறிப்பாக பறையர் சமூகம்) பெருவாரியாக வாக்களித்ததில்லை.   காங்கிரஸ் நிலக்கிழார்களின் சொல்லிட்டு வாக்களித்தவர்கள் எம்ஜிஆர் காலத்தில் கவர்ச்சி ஈர்ப்பின் காரணமாக வெகுவாக வாக்களித்தவர்கள் தான்.. கலைஞருக்கு சொற்பமாக உணர்வுள்ளவர்கள் வாக்களித்திருகிறார்கள்.. அவர்களின் முடிவை நான் விமர்சிப்பதற்கில்லை.. ஆனால் "அமைப்பாய் திரள்வோம்" என பறையர் சமூகத்தை ஒருங்கிணைத்த திருமா  இன்று பலவீனப்பட்டு நிற்கிறார்..
தேர்தலுக்கு முன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டிய பிறகு களம் மட்டுமே கவனமாக இருக்கவேண்டும் ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விசிக உட்பட நேர்மையாக உழைக்கவில்லை அதிலும் காங்கிரஸ் அலட்சியமாக செயல்பட்டது.. 
..
கூட்டணி ஒழுங்கு இம்முறை இல்லை என்பதை முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அறிவார்.. அதனால்தான் தன் கட்சியினரை மிக கவனமாக முனைப்போடு செயல்பட சொன்னார்.. கூட்டணிக்கட்சிகளின் தலைவன் எல்லாரையும் விட கடுமையாக உழைத்திருக்கிறார்.. ஆனால் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தங்களின் பலமறியாமல் சலசலப்பை தொடர்ந்து உணடாக்கினர்.. ஆனால் அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்தி தான் மிகச் சிறந்த தலைவனாக தமிழ்நாட்டில் உயர்ந்து நிற்கிறார்.. கூட்டணிக்கட்சிகள் தங்கள் பங்களிப்பதை சரியாக செய்யவில்லை என்ற போதும் திமுக மிக எழுச்சியோடு செயல்பட்டிருக்கிறது இந்த என்பதை மே 4 சொல்லும் 
..
கருத்துகணிப்புகளில் தலித் மற்றும் இஸ்லாமிய சமூகம் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என தெரிகிறது.. கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களுக்கு பிறகு இஸ்லாமிய வாக்குகள் முழுவதுமாக திமுகவிற்கு வந்ததில்லை. அதிமுக திமுக என வாக்குகளை மடைமாற்றிய வரலாறும் உண்டு.. இப்போது பல்வேறு அமைப்பாய் பிரிந்து திமுக துரோகம் செய்துவிட்டதென்ற புலம்பல் நாம் கேட்டுக் கொண்டுதானிருநதோம்.   எப்போதும் நம்பிக்கைக்குரியவர்களாக தலித் மற்றும் இஸ்லாமிய சமூகம் இருந்ததில்லை,  இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை.. ஆனால் தங்கள் பலமறியாமல்  பேசுவதும் இன்றைய மெச்சதக்க நிலைக்கான காரணிகளில் திமுகவும் ஒரு காரணம் என்பதை மறந்து பேசுவதும் சில நேரங்களில் ஏசுவதும் கேட்க சகிக்கவில்லை..
..
திருமா அவர்களுக்கு நன்றி!.. வெளிப்படையாக சொன்னதில் மகிழ்ச்சி..இது போன்று பல்வேறு காலகட்டங்களில் ஏமாற்றங்கள் துரோஙகள் சந்தித்தவைதான் ஆனால் இந்த முறை உங்கள் எண்ணம் ஈடேறாது .. திமுகவை இம்முறை வீழ்த்த முடியாது தெளிவான திட்டமிடல் யாரை எங்கே எப்படி கையாள்வது எங்கே நிறுத்துவதென என திறம்பட செயல்பட்டு தலைவர் ஸ்டாலின் மிகச்சிறந்த ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்..
..
வெல்வோம் 
திராவிடம் வெல்லும்...
#திராவிடமாடல் 2.O தொடரும்..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் எனும் நான்..
..
ஆலஞ்சியார் ..
வாக்காள பெருமக்களே!..
வணக்கம்..
2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரைகள் முடிந்த அமைதியான சூழலில் யாருக்கு வாக்களிப்பது என யோசனையில் அசைப்போட்டுக் கொண்டிருப்பீர்கள்.. இந்த மாநிலம் எப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியான சூழலில், கல்வி வளர்ச்சியில் எந்த மாநாலமும் எட்டாத உயரத்தை தொட்டு நிற்கிற நிலையைக் கண்டு ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எப்படியேனும் தடுத்திட வேண்டும் என எட்டப்பன்களைக் கொண்டு இங்கே முயற்சிக்கிறது.. அதைவிட கொடுமை இந்த ஐம்பதாண்டுகளில் நாம் செய்ய தவறிய ஒன்று சினிமா மோகம் .. தரையில் தலைவனை தேர்ந்தெடுக்க கற்றுதரவில்லையோ என நினைக்க வைக்கிறது.  
..
தலைவர் ஸ்டாலின் மக்களை சந்திக்கிறார் செய்ததைச் சொல்லி வாக்கு கேட்கிறார் .. இளைஞர்களை சந்திக்கிற போது கூட அவர்களை என்ன படிக்கிறீர்கள் என அவர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து நல்லா படியுங்கள் என்று கேட்கிறார் தவிர உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள் எனக் கேட்கவில்லை ஆனால் இங்கே ஒரு நடிகன் சிறார்களை உங்கள் வீட்டில் அடம் பிடியுங்கள் என சொல்கிறான்.. 
..
பாஜகவை விட மிக ஆபத்தானவன் சிறார்களை வழிபாடடில் நிறுத்துகிற செயல் மூளையை மழுங்கடிக்கிற வேலையை செய்யும் இவனைப்போன்ற சைக்கோவை எக்காரணம் கொண்டும் நுழைய அனுமதிக்க கூடாது.. தமிழ்நாட்டின் நலனை அடகுவைக்கிற எடப்பாடி இந்த தேர்தலோடு முடிவுரை எழுத வேண்டியது அவசியம்.. பல்வேறு வழிகளில் எப்படியேனும் தமிழ்நாட்டில் அதிகாரத்தை அடைந்திட வேண்டுமென துடிக்கும் பாஜகவின் தந்திரங்கள் தோற்கடிக்கப்பட வேண்டயது காலத்தின் அவசியம்
..
நீங்கள் செலுத்தும் வாக்கு உங்களின் எதிர்காலத்தை உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தமிழ்நாட்டின் வளமான வளர்ச்சியான சீரான பாதையை கொண்டதாக அமைய, கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் தமிழ் மாநிலத்தவருக்கே முன்னுரிமையை உறுதி செய்ய, தமிழ் பண்பாட்டை காக்க, திமுகவிற்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.. 
..
உங்கள் கைகளில் உங்களின் உங்கள் தலைமுறையின் எதிர்காலம்.  
திமுக ஒன்றே நமது பாதுகாவல்.  
மறக்காமல் வாக்களியுங்கள் 
திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு.. 
தொடரட்டும் திராவிட மாடல் 2.O
..
மீண்டும்
முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..
கேட்க ஆவலாய் காத்திருப்போம்..
வெல்வோம் ஒன்றாக. 
தமிழ்நாடு தலை நிமிர
..
ஆலஞ்சியார்

Monday, March 30, 2026

திருமாவளவன்..
வேட்பாளர் அறிவிப்பின் ஊடாக ஒரு செய்தியைச் சொல்கிறார்  இனி வரும் காலங்களில் வேட்பாளர் தேர்வை நான் செய்ய போவதில்லை அந்தந்த மாவட்ட பிரதிநிதிகளே தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த போவது சொல்கிறார்.. அதிக இடம் கிடைக்கவில்லை கிடைத்த இடத்திற்கு யாரை நிறுத்துவது என்பதில் ஏற்பட்ட மனகசப்பை அவரது மொழியில் புரிந்துக்கொள்ள முடிகிறது..
..
சிலநேரங்களில் சிலருக்கு தொடர்ந்து வாய்ப்பை வழங்கவேண்டியிருக்கும் சிலரை மாற்றி வேரொருவருக்கு அந்த வாய்ப்பை நல்க வேண்டியிருக்கும் இத்தனை காலம் நான்தானே இருந்தேன் என்னை ஏன் மாற்றவேண்டும் என்று கேட்போர் எல்லா கட்சிகளிலும் காணமுடிகிறது.. தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதுதான் நீங்கள் ஏற்ற கொள்கைக்கும் கட்சிக்கும் தலைமைக்கும் கட்டப்படுவதாக அமையும் ..
..
திருமா மிக உடைந்துப் போய் இருப்பது தெரிகிறது.. மாநில அரசியலுக்கு அவர் வருவது கூட கட்டமைப்பின் பிடி நழுவுகிறதோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாக கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.. உள்கட்சி சனநாயகம் என்பது கருத்தை செவிமடுத்தல் உள்வாங்கல் அவர்களின் பங்களிப்பை மதித்தல்,
முடிவெடுக்கும் முன்பு கலந்தாலோசித்தல் ஆனால் முடிவை எடுக்கும் அதிகாரமும் எது வருங்காலத்தில் கட்சிக்கு நலம் பயக்கும் என அறிந்து செயல்படுதலும் தலைமைக்கு மிக அவசியம்.. சில நேரங்களில் கடுமையும் தேவை.. 
..
திமுக எழுபதாண்டுகளாக சனநாயகத்தின் அடிநாளம் கெட்டுவிடாமல் காத்துநிற்கிறது.. தேர்தல் தோல்வி தொகுதி பங்கீட்டில் பிடிவாதம் நம்பிக்கை துரோகம் குழிபறிப்பு திரைமறைவு வேலைகள் சிரித்தே கெடுக்கும் குணங்கொண்டவர்கள் என எல்லாவற்றையும் கடந்து இன்றும் மக்களிடையே பேசும் பொருளாய் திகழ்கிறது.  திமுகவை மறுத்தே சேர்த்தோ தான் அரசியல் செய்ய இயலும் என்ற நிலையே உருவாக்கி இருக்கிறது..புதிதாக அரசியல் தொடங்குவோர்  ஏற்கனவே அரசியல் செய்வோர்  அரசியல் பழகுவோர் யாராயினும் திமுகவை தவிர்த்து அரசியல் செய்ய இயலாது.. 
..
திமுகவில் எல்லாகட்டங்களிலும் வேட்பாளர் தேர்வில் அதிருப்தியும் பிணக்குகளும் ஏற்பட்டிருக்கிறது ஆனால் எது சரியானதாக இருககும் என தலைமை முடிவெடுக்கும் அதில் உறுதியாக நிற்கும்..  இப்போது கூட தாம்பரத்தில் சலசலப்பு கேட்டது அது உரிமையோடு கேட்டும் விளங்கங்களை பெற்றும் கழகப்பணி செய்ய புறப்பட்டனர் நிர்வாகிகள்.. மன புழுங்கங்கள் மறையும் கழகம் வெல்ல வேண்டும் என்ற ஒற்றை எண்ணமே மேலோங்கும்.  
..
திருமா சொல்லும் மற்றொரு செய்தி தேர்தலுக்கு பிறகான நிலை சூழல் மாறபோகிறது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.. 
கயிற்றை பலமாக பற்றிக் கொள்ளாவிட்டால் பாமகவிற்கு நேர்ந்த நிலை வரும் என கணிக்கிறாரென எண்ணுகிறேன்..
இரட்டை இலக்க தொகுதி கிடைக்காமல் போனதிலிருந்து அவரின் உடல்மொழி தரும் சேதி எப்படி இதைக் கொண்டு சமாளிப்பது என்பதாக இருந்தது..
மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடும் போது இருவரை தம்பி என்று ஒருவரை நம்மவர் என்று சொல்கிறார்.. அப்படி சொல்பவரல்ல, பதற்றம் இயலாமை தெரிந்தது..
ஆளூராருக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விகள் சமூகங்களில் பிரதிபலிப்பதும் கட்சிக்குள்ளேயே சிலருக்கு வாய்ப்பு வழங்கமுடியவில்லை என்ற ஆதங்கமும் தெரிகிறது.  
வி.ச.க  போன்ற கட்டமைப்பு பலமாக உள்ள கட்சியில் தலைமைத்துவம் கனிவாகவும் சிலநேரம் கடுமையாகவும் இருக்கவேண்டும்.. இல்லயெனில்
 அது மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும்..
..
திமுக போன்ற மிகப்பெரிய 
வலுவான சனநாயக கட்டமைப்பை  கொண்ட கட்சியில் கூட இதுபோன்று நடந்திருக்கிறது ஆனால் தலைமை கனிவோடு கண்டிப்பும் காட்டி கண்ணியத்தை பேணியிருக்கிறது.. விசிக போன்ற கட்சி ஒடுக்கபட்டவர்களுக்காக மட்டுமல்லாது பொது சமூகத்திற்கும் சனாதனத்தை வேரறுக்கவும் இன்றைய நிலையில் தேவை.. மிகவும் பக்குவப்பட்ட தலைமை சிலநேரங்களில் தளர்வு நேரிடும் அதை காலம் தந்த பரிட்சையாக நினைத்து கடந்துச் செல்லவேண்டும்.. சாதிய நிலைபாட்டை மீறி பொதுவெளியில் பரவலாக நேசிக்கபடுகிற தலைவர்களில் ஒருவராக திருமா திகழ்கிறார்..
..
ஆலஞ்சியார்


Wednesday, February 11, 2026

காங்கிரஸ்..
கழுதை தேய்ந்த கதையாக..
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.. நன்று.. 
முதலில் தன் பலம் அறிதல் நன்று!.. 
..
முன்பெல்லாம் சிற்றூர்களில் நிலக்கிழார்களும் செல்வந்தர்களும் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்ததும் அவர்கள் பண்ணையாட்களோடு அதிகார தொனியில் நடந்துக்கொண்டு காங்கிரஸை நடத்தி வந்தார்கள்.. தேர்தல் காலக்கட்டத்தில் மொத்தமாக விலைபேசி வாக்குகளை வாங்கி வென்றவர்கள் திராவிட இயக்கம் வளர தொடங்கிய போது மெல்ல மறைய தொடங்கினார்கள்..
..
1967 க்கு பிறகான அவர்களது அரசியல் திராவிடக்கட்சியான திமுக மற்றும் அதிமுக என சார்ந்தே நின்று வென்றவர்கள் நாளடைவில் கரைந்து சிலர் பாசிசத்தின் பிடியிலும் சிலர் வேண்டாவெறுப்போடு அரசியல் செய்கிறார்கள்.. இன்று காங்கிரஸ் யாராவது கைதாங்கலாக பிடித்தால்தான் நடக்கவே முடியும் என்கிற நிலை.. காங்கிரஸ் சீரழிவு என்பது இயல்பாக நடப்பதைப்போல தோன்றினாலும் அதன் பின்னால் ஆர்எஸ்எஸின் வலை பின்னப்பட்டிருக்கும் அது மிக சிரத்தையோடு மெல்ல விழுங்க செய்யும்.. 
..
மாண்பமை மன்மோகன்சிங் பிரதமராகாமல் ஆர்எஸ்எஸ் பிரணாப் முகர்ஜி பிரதமராகிருந்தால் அமைதியாக இருந்திருப்பார்கள் .. ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை  தவிர்த்த காங்கிரஸை இனியும் விட்டுவைப்பதில் பலனில்லை என அறிந்து காய்ந்த நகர்த்துகிறார்கள்.. இப்போதும் காங்கிரஸ் உள்ளே ஆர்எஸ்எஸின் "கைகள்" இருப்பது காங்கிரஸ் மேலிடம் அறியாமலா இருக்கும்..
.. 
தமிழ்நாட்டில் ஊருக்கு 10 வாக்குகள் கூட இல்லாத வெற்றுச்சுமையை தோளில் சுமக்க வேண்டுமா என்ன.. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கொஞ்சம் உயிர்ப்போடு இருக்கும் காங்கிரஸை சாகடிக்க வெளியிலிருந்து யாரும் தேவையில்லை அவர்களே அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் இட்ட கட்டளையை செவ்வனே செய்து "காரியம்" நடத்திடுவார்கள்  அதைதான் சிலர் ஆட்சியில் பங்கு என பழைய பல்லவியை புதிய சுரத்தில் பாடுகிறார்கள்.  
..
சிறிய கட்சிகள் கூட தங்கள் பலத்தை நிரூபிக்க தனியாக மாநாட்டை நடத்தி வலிமையை காட்டுகிறார்கள்.. எத்தனை விழுக்காடு கிடைக்குமென அறிந்து அதற்கேற்ப பங்கீட்டை கேட்கிறார்கள் ஆனால் கூட்டம் நடத்தவே வக்கில்லாமல் பழைய நினைப்போடு வலம் வருவது "ஏட்டுச் சுரைக்காய்" தான்..
.. 
கடந்த தேர்தலில் இரட்டை இலக்கில் தொகுதி ஒதுக்கியதே காங்கிரஸ் "பேரியக்கம்" என்பதால் தானே தவிர பலமான கட்சி என்பதால் அல்ல அதை காங்கிரஸ்காரர்கள் புரிந்துக்கொள்வார்கள்.. ஆனால் ஆர்எஸ்எஸ் அடிவருடிகள் கூட்டணியை கலைக்க வாய்ப்பிருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள்.. அதை தெளிவாக அறிந்ததால்தான் தலைவர் ஸ்டாலின் 
M. K. Stalin  ஆட்சியில் பங்கு இல்லை என தெளிவாக பிரகடனம் செய்துவிட்டார்.. 
ஊளையிடுவோர் சத்தம் குறையலாம்.   காஙகிரஸ் கடந்த தேர்தலைவிட குறைவான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்..
 வெற்றுச்சுமையை ஏன் சுமக்க வேண்டும்.. 
..
காங்கிரஸ் வெளியேறுவதால் காங்கிரஸிற்கு இழப்பே தவிர திமுகவிற்கல்ல .  
பிற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் காணாமல் போகும். 
நல்லதே நடக்கும்..
..
ஆலஞ்சியார்
அதிமுக வரலாறே அப்படிதான்.. ஆர்எஸ்எஸ் திராவிடச் சித்தாந்தத்தின் எழுச்சியைக் கண்டு பதறி எப்படியேனும் அதை முடக்கிய வேண்டுமென திட்டம் தீட்டி மகோரா (எம்ஜிஆர்) எனும் கைப்பாவையை களமிறக்கியது.. திமுக மீது ஊழல் குற்றசாட்டை ஊடகங்களும் இந்திய வரலாற்றிலேயே முதன் முறைப்போல எழுதி தீர்த்தன..முதல் ஊழல்வாதி டி.டி.கிருஷ்ணமாச்சாரி எனும் பார்ப்பனர் என்பதை எல்லாம் மறந்து பேசின.. ஆனால் கடைசிவரை திமுக மீதான குற்றசாட்டுகள் நிரூபணம் செய்ய முடியாமல் போனது.. ஆனால் திமுகவை தோற்கடிக்க பெரும் பயன்பட்டதென்பது உண்மை..
நியாயவான் சுத்தம் என்றெல்லாம்
காமராஜர் மீது எங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் கொஞ்சம் கூட குறையவில்லை.. எதிர்கட்சியாக இருந்த போது எங்கள் கடமையை சரியாக செய்தோம் அரசியலைத் தாண்டி அந்த மனிதர் மீதான பார்வை கண்ணியம் மிக்கதாக இருந்தது.. ஆனால் காமராஜர் காங்கிரஸிருந்து விலகிச் சென்ற பின் அவரை மிக கரிசனத்தோடு திமுக தலைவர்கள் காத்தார்கள் என்பதுதான் உண்மை..
..
இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு (இப்போதெல்லாம் காங்கிரஸ்காரர் இருக்கிறார்களா என கேட்க வேண்டாம்) காமராஜை கூட சரியாக படிக்காமல் அல்லது புரியாமல் வந்திருக்கிறார்கள்..
ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்த முனைந்த போது இனியும் அவரை விட்டு வைத்தால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாதென தீர்மானித்த பெரியார் குடியாத்தத்தில் நிறுத்தி வெற்றி பெற செய்தார் தி.க விலிருந்து பிரிந்து தி.மு.க  துவங்கிய காலமது ஆனால் அண்ணா குணாளா,குலக்கொழுந்தே சென்று வா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு என்றார்.. இன்றைக்கு சாதிக்குள் அடைக்க நினைக்கும் நாடார்களுக்கு தெரியுமா.. பெரியார் குடியாத்தத்தில் நிற்க சொன்ன போது காமராஜர் அங்கே முதலியார்களும் முஸ்லிமானகளும் தானே அதிகம் என்னைப்போல மிகவும் பிற்படுத்தப்பட்பவனை தேர்வு செய்வார்களா என்றார் எப்படி ஜெயிக்க வேண்டுமென எனக்கு தெரியும் என்றவர் பெரியார்..
..
இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி..
..
தொடர்ந்து தமிழ்நாட்டில் விவாதிக்கப்படும் விடயமாக இருக்கிறது.. உண்மையில் இஸ்லாமியர்கள் ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு வாக்களிக்கிறார்களா என்றால் பதில் பரிகாசமாக வரும்.. 
அவர்களின் "தலைமை" போதை என்னைச் சுற்றியே இயங்க வேண்டும் என்ற பேராசை தனித்"தவில்" ஆக ஓசை கேட்க வேண்டுமென்ற பேராவல் ஒற்றுமையை சிதைத்து தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள் ஆனால் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மைக்கு திமுகதான் காரணம் என்று ஒப்பாரி வைப்பார்கள்.. தங்களுக்குள் அதிகாரம் வேண்டுமென்ற எண்ணம், தானே "ராஜாவாக" வலம் வரவேண்டும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக தானே அடையாளப்படுத்தப்பட வேண்டுமென்ற பேராசை இந்த சமூகத்தின் சாபக்கேடு..
..
IUML கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது ஏன் என யாருமே யோசிப்பதில்லை.. ஏன் எல்லோரும் ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டுமென எண்ணுவதில்லை.. யார் தலைமை ஏற்பது என்பதில் தான் தலையாய பிரச்சனை இருக்கிறது.. இன்றைய முஸ்லிம்கள் புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் தொப்பியோடு போய் முன் வரிசையில் நின்ற கூவுகிற நிலை  எப்படி வந்தது..  ஆளுக்கொரு அமைப்பை ஏற்படுத்தி அந்த வட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதால் என்ன பயன்..  யாருக்கும் இதனால் எந்த பயனுமில்லை/பலனுமில்லை என்பதை உணராத சமுதாய தலைவர்கள்.. கொடுமை
..
காலங்காலமாக திமுகவிற்குதான் வாக்களித்தோம் என்பதெல்லாம் பழங்கதை.. இப்போதெல்லாம் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு குழுக்களில் பயணிக்கிறார்கள் .. நாளைக்கு ஒரு அமைப்போ கட்சியோ தொடங்கினால் முதல் துண்டு இஸ்லாமியனுதாக இருக்கும்.. இதில் குறைகூற இவர்களுக்கு "திராவிடம்" இருக்கிறது.. மாண்பமை A.K.A .அப்துல் சமது காலத்திலிருந்தே காண்பதுதான் பன்மொழிப்புலவர் அப்துல் லத்தீப் சாஹிப் பிரிந்த போது திமுகதான் காரணம் என்று சொன்னவர்கள் அதற்கு முன்பே அப்துல் ஜப்பார் பிரிந்து எம்ஜிஆரோடு சென்றதை கணக்கில் கொள்ளவில்லை.. முஸ்லிம் லீக்கும் அதிமுக திமுக என்று மாறி மாறி சவாரி செய்தது..
..
இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை அனைத்து இஸ்லாமிய கட்சிகள்/அமைப்புகள் ஒருங்கிணைத்து ஒரு கட்சியாக செயல்பட முடியாவிட்டாலும் இணைந்து  தனித்து களம் கண்டு எத்தனை விழுக்காடு வாக்கு என்பதை உறுதி செய்தால் வரும் காலங்களில் உங்களுக்கான அதிகாரம் கைக்கூடும்.. இல்லையெனில் ஒரு தொகுதி இரண்டு தொகுதிகளுக்குள் முடங்கி போகும் சமுதாயமாக பரிதாபகரமான நிலைதான் வரும் காலங்களில் கிடைக்கும்.. 
ஒற்றுமை எனும் கயிற்றை 'பற்றி' பலமாக பிடித்துக் கொள்ளுங்கள் என்பதெல்லாம் "கிதாப்" களில் மட்டுமே காணலாம்..
..
இளைஞர்களில் வழி கெடுத்ததில் இன்றைய தலைவர்களுக்கும் கணிசமாக பங்குண்டு.. உணர்ச்சி மேலிட பேசி கோப தணலில் நிறுத்தியது தவிர வேறொன்றும் பெரிதாக இல்லை.. ஆளுக்கொரு கொடியோடு போராட்டம், அரசிற்கெதிராக நிறுத்தல் இவை தவிர வேறென்ன கண்டீர்.. பொது சமூகத்தோடு கரம் சேரத்து கரை சேர்வது இன்றைய காலக்கட்டதில் அவசியம்.. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதல்ல .. நாம் யாரை தீர்மானிக்கிறோம் யாரை முன்னிறுத்துகிறோம் நமது பங்களிப்பில்லாமல் எதுவுமில்லை எதுவும் நடக்காது என்ற நிலை எப்போது உருவாக்க போகிறீர்கள்..
..
சிலர் இப்போதும் திமுக வஞ்சித்துவிட்டது என்ற குரலில் மெல்லிதாய் முணுமுணுக்கலாம் .. ஏன் அதிகார பகிர்வு தரவில்லை என கேள்வி கேட்கலாம் .. எந்த அரசியல் கட்சியும் எத்தனை விழுக்காடு என கணக்கு பார்க்கும் என்பதை எப்போது உணர போகிறீர்.. "நெஞ்சில் இடமிருக்கு" என்பதில் கோபம் கொள்ள என்ன இருக்கிறது.. உங்கள் பலத்தை நீங்கள் நிரூபிக்காத வரை எதுவும் நடந்துவிட போவதில்லை..
..
இந்தியா முழுக்க இதுதான் நிலை.. கேரளத்தில் மெச்சதக்க  வகையில் இஸ்லாமிய இயக்கத்தின் செயல்பாடு இருக்கிறது.. மற்றபடி இந்திய ஒன்றியம் முழுவதும் காங்கிரஸைப் போல தேய்ந்துக்கொண்டிருக்கிறது.. இந்திய அரசியலையே தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய IUML இன்றைய நிலைமை...?
கும்பகோணத்தில் நடந்த அனைத்து முஹல்லா மாநாடு எத்தனை ஜமாத் புறக்கணித்தது.. ஏன் உங்களால் பெரும்படையை திரட்ட முடியவில்லை.. தவ்ஹீத் ஜமாத், தமுமுக,  ம.ஜ.க ஏன் வரவில்லை.. முதலமைச்சரை அழைத்து கூட்டம் நடத்தினால் போதுமா.. அரங்கில் திமுகவினர் தானே அதிகம்..  ஏன் அனைவரையும் அழைத்து அரவணைத்து முன்னெடுத்திருந்தால் வழி திறந்திருக்குமே.. செய்ய மாட்டீர்கள்.. உங்களுக்குள் பிரிவினை என்பது ஊறிப்போன விடயம்.. காலங்காலமாய் புரையோடிப் போய் சீழ் பிடித்த மனம் .. என்ன செய்துவிட்டீர்  இட ஒதுக்கீட்டை உயர்த்தி கேட்டீரா என கேட்கிறீர்.. ஏற்கனவே பலமுறை சொன்னதுதான்.. ஆந்திர முஸ்லிம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை இல்லாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்றதை கணக்கில் கொண்டுதான் கலைஞர் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையோடு சிறுபான்மையினருக்கு (கிருஸ்துவம்,இஸ்லாம்,ஜெயின்)
வழங்கினார் ..  அதாவது 8% விழுக்காடு வழங்கலாம் என்ற பரிந்துரையில் கிருஸ்துவர்கள் 3.5% முஸ்லிம்களுக்கு 3.5% ஜெயின் சமூகத்திற்கு 0.5% என தந்தார்.. 
ஆனால் கிருஸ்துவர்கள் நாங்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொது பிரிவில் இதைவிட அதிகமாக பெறுகிறோம் எனச் சொல்லி வேண்டாம் என்றனர்.. ஆனால் அதை நாம் கேட்க முடியாது.. மீறி தந்தால் உள்ளதும் போகும்..  பாமக உள்ஒதுக்கீட்டு நிலை அறிந்தது தான் தீடீரென அறிவித்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் உச்சநீதிமன்றம் ரத்து செய்ததே அதைப்போல நடக்கும்..
..
முதலில் உங்கள் பலத்தை நீங்கள் நிரூபியுங்கள்.. வானத்தை தொட ஆசை தான்.. ஆனால் "ஏணி"கூட நம்மிடமில்லை.. இரவலில் நாம், ஊர்ந்து செல்லும் நிலை .. நம் பலம் நாமே அறியாமல் இருக்கிறோம் என்ற புரிதல் கூட இல்லை.. எத்தனை அமைப்புகள் (48).. ஆனால் அவரவர் தன்சுயத்திற்காக சமுதாயத்தை கூறு போடுகிறார்கள் .. "ஒற்றுமை" சமுதாய தலைவர்களுக்கு ஒவ்வாமை.. ஆனால் இதற்கும் திமுக தான் காரணம் என்பார்கள்
..
சாதாரண வீடுகளின் கதவை தட்டாதீர்கள்.. உங்கள் கைகள் சொர்க்கத்தின் கதவை தட்டும் அளவிற்கு நீளமானது ..என்ற "#மௌலானா_ரூமியின்" வரிகள் ஞாபகம் வருகிறது.. நீங்கள் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து ஒரு குடையில் நின்றால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.. நீங்கள் சுயத்திற்காக பலமறியாது நிற்கிறீர்கள்.. "சாதாரண கதவுகளை" தட்டிக் கொண்டே காலம் கடத்திக் கொண்டிருக்கிறீர்.
ஒருங்கிணைந்தால் உங்கள் கைகள் நீளமானவை.. 
..
குருதியைக் கொண்டு காயத்தை கழுவாதீர்கள் (ரூமி)..
..
ஆலஞ்சியார்