Sunday, October 23, 2016
யாரை எங்கே வைப்பது...
ஆளும் கட்சி அனைத்துக்கட்சி கூட்டாவிட்டால் எதிர்க்கட்சியான திமுக அதை செய்யவேண்டும் என்று சொன்னவர் திருமா.. என்ற நெறியாளர் கேள்விக்கு இப்போது அதற்கான சூழல் இல்லை ..என்றார் விசிக பொதுசெயலர் ரவிக்குமார்..
..
இப்போது சூழல் மாறிவிட்டதா கர்நாடகம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா..காவிரியில் தண்ணீரை முழுமையாக நமக்கு தரவேண்டிய அளவு திறந்துவிட்டதா.. அல்லது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுவிட்டதா..
இவையாவும் நடக்காதபோது திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ளமாட்டோம் என நேரடியாக சொல்லாமல் அதற்கான சூழல் இப்போதில்லை என்பது கடைந்தெடுத்த #அயோக்கியத்தனம்..
திரு.பொன்னாரை சந்தித்ததின் விளைவு என்றெல்லாம் கூற தேவையில்லை.. ஏற்கனவே பாஜகவோடு கைகோர்க்கும் முடிவை முன்பே எடுத்துவிட்டு இப்போது அதற்கான காரணங்களை கேடிக்கொண்டிருக்கிறது விசிக..
..
யாரால் ஓடுக்கப்பட்டிருக்கிறதோ.. யாரால் சமுதாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறதோ அவர்களோடு கைகோர்க்கும் சிறுத்தைகளின் செயல் அந்த சமுதாயமக்களிடம் பெரிய பின்னைடைவை சந்திக்க நேரிடும் நம்பிக்கையை இழக்கநேரிடும்...
திருமா நாளை கட்சி கூடி முடிவெடுக்கும் என்கிறார் முடிவை பொதுசெயலர் தொலைக்காட்சி வாயிலாக தெரிவித்துவிட்டபிறகு கூட்டத்தின் முடிவு அறிந்ததுதான்.. ஒருமுறை ரவிக்குமாருக்கும் ஆளுர் சாநவாஸிற்கும் நடந்த கருத்து வேறுபாட்டில் ரவிக்குமாரை பின்துணைத்த போதே
#சொல்லுங்க_எஜமான் என துண்டை இடுப்பில் கட்ட தயாரானது தெரிந்தது…
..
விடுதலைச்சிறுத்தைகளில் சமீபத்திய அரசியல் அந்த கட்சி கடந்துவந்த பாதையிலிருந்து முற்றிலுமாக மாறி வேறுபாதையை தேர்வு செய்திருக்கிறது.. ஆரம்பகாலங்களில் ஒடுக்கப்பட்ட தங்கள் இனத்திற்கான அரசியலாக இருந்தது பின் சமூக நல்லிணக்கம், சமூகநீதியென பயணத்தை விரிவாக்கிய சிறுத்தைகள் செல்வபெருந்தகை விலகலுக்குப்பிறகு .. பாசிச சக்திகளின் பிடியில் மெல்ல கரைய தொடங்கியிருக்கிறது.. பாசிச .. இந்துத்துவா அமைப்புகளைப்போல அராஜகம் அடிதடி கட்டபஞ்சாயத்து என வேறொரு வடிவத்தை கையிலெடுத்து பயணிக்கிறது.. அதற்கான அங்கீகாரமாக பாஜகவோடு இணைக்கமான செயல்பாட்டை கொண்டுநடக்கிறது. நேரடியாகவே பாஜகவின் கிளையாக செயல்படலாம்..
..
விசிக வாராமல் போனால் கூட கவலையில்லை இந்த கூட்டம் தமிழக விவசாயிகளின் நலன்களில் யாரெல்லாம் அக்கறைக்கொண்டிருக்கிறார்கள் அல்லது தமிழகவிவசாயிகளை வைத்து அரசியல் செய்து பிழைக்கிறார்கள் என்பதை தமிழக மக்களுக்கு படம்பிடித்துகாட்ட உதவும்..
..
#யாரைஎங்கேவைப்பதென்றுயாருக்கும்தெரியல...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment