Tuesday, October 11, 2016
அரசியல் பிழை..வைகோ..
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திமுகவிற்கு அருகதையில்லை வைகோ..
உண்மையில் வைகோ மீது பச்சாதாபம் வருகிறது..வாய்ச்சொல் வீரராகவே தமிழக அரசியலில் காலத்தை கழித்தவர் .. வைகோவின் பலவீனத்தை அவர் உணரவே இல்லை.. ஒரு ஒன்றிய கவுன்சிலருக்கு கூட நின்று வெல்லமுடியாத கட்சியை நடத்தி வருகிறவர் ஐந்து முறை நாட்டை ஆண்ட இப்போதும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிற திமுகவைப் பற்றி பேச துளியும் அருகதையில்லாதவர் சொல்கிறார் திமுகவிற்கு அருகதையில்லை..
..
வைகோ அப்படியொன்றும் மிகப்பெரிய பலமில்லை என்பதை அப்போதே கணித்தவர்தான் கலைஞர் அவர்கள் ..அதனால்தான் மறுபடியும் திமுக (மதிமுக) என்றார்.. வைகோவின் வீழ்ச்சி 1989 ல் திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த சில தினங்களிலேயே யாரிடமும் சொல்லாமல் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்க சென்ற போதே தொடங்கிவிட்டது.. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு புலிகள் தங்களுக்கென்ற ஆதரவை தமிழகத்தில் திரட்ட ஆள் தேடிக்கொண்டிருந்தார்கள்.. சட்டென்று உணர்ச்சி வயப்படும் வைகோதான் சரியானவர் என புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் இவரை தேர்வு செய்தார்.. அதுவரை புலிகளுக்காகவோ இலங்கை தமிழர்களுக்காகவே ஒரு துரும்பை கூட அசைக்காதவர்/ தராதவர்..கீழ்தஞ்சை மாவட்டத்தில் பெருமளவில் இலங்கை சொந்தங்கள் அகதிகளாக இருந்தார்கள் அவர்களுக்கு பொருள், உணவு ,பணிநியமனம் என எல்லா உதவிகளையும் திமுகதான் செய்தது அதுவும் எதிர்கட்சியாக இருந்தபோது.. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்த எங்களின் வழிகாட்டி கோசி.மணி அவர்கள்தான் உதவினார்கள்.. அப்போதெல்லாம் இலங்கை தமிழர்களிடத்தில் வைகோ யாரென்றே தெரியாது..
புலிகளின் உறவிற்கு பிறகு பிரபலமானார் தன்னை ஆளுமையாக காட்டிக்கொண்டார் ஆனால் He does not have great political personality என்பதை காலம் நமக்கு உணர்த்தியது.. ஆம் இவர் சிறந்த அரசியல் ஆளுமை அல்ல..
வர வர அரசியலில் உளறல் மன்னாகிவிட்டார்.. வைகோவிற்கு தெரியும் திமுகவை வீழ்த்தவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியாதென்று ஏனெனில் நிறைய தடவை பலரால் முயற்சி செய்து தோற்றுப்போன விடயம்.. வைகோ வேறெதாவது செய்து பிழைத்துக்கொள்ளலாம் அரசியல் அவருக்கு சரிப்பட்டுவராது. ..
ஒரு கட்சியையோ அல்லது அமைப்பை
சரியாக தலைமையேற்கவோ வழிநடத்தவோ தகுதியில்லாத ஒருவர்தான் வைகோ.. ஒரு அமைப்போ கட்சியோ எப்போது விழும் விழுந்தால் எப்போது எழும் எப்படி எழுப்பி கட்டமைக்கவேண்டுமென்ற தலைமைத்துவம் சிறிதுமில்லாத தரமோ தகுதியால்லாத #அரசியல்_பிழை வைகோ.. அவர் பேச்சுக்களை தமாஷாக எடுத்துக்கொண்டு புறந்தள்ள வேண்டும்..
He does not have great political personality..
He is political waste..
..
#அரசியல்_கழிவு..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment