ஒரே குடும்பத்தில் கருத்தியல் வேறுபாடு இல்லையா ? ஏன் திமுகவை சேர்ந்தவர்கள் ஆன்மீக தொடர்பில் இல்லையா? தனது சித்தாந்தத்தை கருத்தை ஏன் குடும்பத்தின் மீது திணிக்க வேண்டும் .. அவரவர் விருப்பம் என சிலர் சொல்வதை பேசுவதை கேட்க உணர முடிகிறது..
..
என் குடும்பத்திலேயே எனது தந்தை காங்கிரஸ்காரர் அவர் சொல் கேட்டு நடக்க ஊரே காத்திருந்தது.. அரசியலில் மிக முக்கிய முடிவுகள் இவரின் அசைவிற்கு காத்திருந்தது.. ஆனாலும் பிள்ளைகள் திராவிட சித்தாந்தத்தை ஏற்றோம்.. என் வீட்டில் கூட ஏன் என் இணையதளம் கூட யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டு .. அவர் திமுகவிற்குதான் வாக்களிப்பார்.. இதெல்லாம் எல்லா திமுககாரன் இல்லத்திலும் நடைபெறுகிற விடயம் ..
..
இது ஏன் பொருந்ததாதா என சிலர் எழுப்பும் வினாக்களுக்கு ஒரே பதில் தான் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கம் அறம் உண்டு .. சிலர் துர்கா அம்மையார் கோவிலுக்கு செல்வதில்லையா என கேள்வி எழுப்புகிறார்கள் .. அம்மையாரின் மகன் மகள் திருமணம் ஏன் அம்மையாரின் திருமணமே எப்படி நடந்தது என்பதை அனைவரும் அறிவோம்
..
பெண்களை காட்சிப் பொருளாக்கி கலைநயம் என்ற பெயரில் சினிமாத்தனம் செய்கிற சிந்தனை எதில் சேர்ப்பது.. இனமான பேராசிரியர் தன் தலைமையில் திருமணம் என்ற தொண்டனின் அழைப்பை ஏற்று சென்றவர் வேதம் முழக்கம் கேட்டு என்னை ஏன் அழைத்தீர்களென திரும்பிய வரலாறு உண்டு .. இப்போதும் இதைதான் சொலைகிறோம் உங்கள் வீட்டு" விசேஷம்" உங்கள் உரிமை .. திமுக கொள்கை ரீதியாக கட்டமைக்கப்பட்டது.. எல்லா பொறுப்பும் எனக்கே வேண்டுமென அடம்பிடிக்கும் உங்கள் மனோபாவம் ஏற்கதக்கதல்ல.. பொருளாளராக இருந்த நீங்கள் செயலாளராக வேண்டுமென அழுததெல்லாம் அறிவோம்.. இனியும் அழுது புரண்டு வேஷம் கட்டாமல் வழிவிடுங்கள்..
..
காலம் காத்திருக்கிறது
..
ஆலஞ்சியார்