Monday, May 18, 2026

திமுக..
 நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் அதிகாரம் சார்ந்த பிரிவு.. பவளவிழா கண்ட கட்சி இனி என்ன செய்யவேண்டும் என்ற மறு பரிசோதனைக்கு வந்திருக்கிறது.. இன்னமும் பழங்கதைகளை பேசி புதிய தலைமுறையை அணுக இயலாது 
காரணம் எளிது..
என் பாட்டன் செருப்பு இல்லாமல் நடந்தான் நான் சூ போட்டுக் கொண்டுதானே பள்ளிக் சென்றேன்  என்பவனிடம் இனியும் சமூகநீதிப் பற்றி பாடமெடுக்க தேவையில்லை..
..
எல்லைகளை கடந்து நிற்பவனிடம் "பாண்டியாட்டம்" ஆட சொல்லி அழைப்பது வீண்.. சுயமரியாதை இருக்கிறது அது பொங்கி வழிய தேவையில்லை என்கிற மனநிலை.. சாதிய அடையாளங்களை மறைத்து வாழ விரும்பாதவர்களிடம் தீண்டாமை பாடமெடுத்து என்ன பயன்.. தீண்டாமைக்குள் அடைந்து கிடப்பவனே அதை கண்டுக்கொள்ளாத போது சமநீதி வகுப்பு  போரடிக்கும்..
..
தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிடம் 2.O தேவை குறித்து பேசியதன் பொருள் இதுதான்.. இன்றைய தலைமுறையினரை எதை நோக்கி அழைத்துச் செல்லவேண்டும் கசப்பான மருந்தை கொடுக்க தாய் தேன் கலந்து தருவதைப் போல  நல்வழிப்படுத்த,குணப்படுத்த திராவிட இயக்கம் உயிர்ப்போடு இருப்பது காலத்தின் கட்டாயம்..அதற்கான பணிகள் 
செவ்வனே நடைபெற துவங்கியிருப்பதாக அறிகிறேன்
..
பழையன கழிதல் என்பது இயற்கை நியதி புதியன புகுதல் காலத்தின் தேவை ஐந்து பத்தாண்டுகள் சலிப்பை தந்திருக்கும் அதனால் தான் புதியதை கண்டதும் பாய்ச்சலோடு அரவணைத்துக் கொண்ட நிகழ்வு அரங்கேறியது அது சரியானதாக இல்லை என்பதுதான் கொடுமை..  அரசியல் பழகாமல் பயிலாமல் கவர்ந்திழுக்கும் மாயை பின்னோக்கி இட்டு செல்லும்
அதை தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு..
..
திராவிட இயக்கத்தின் பணி முன் எப்போதுமில்லாத வகையில் தேவை ஏற்பட்டிருக்கிறது.. புதிய குருதி பாய்ச்சபடவேண்டும் சில முதியவர்கள் வழிவிட வேண்டும் நல் ஆலோசனைகள் வழங்கி இளைஞர்களை புதிய தலைமுறையை உருவாக்கிட வேண்டும்.. தமிழ் நாட்டின் வளர்ச்சியை கண்டு கையாலாகாதத்தனத்தோடு நம்மை சூழ்ச்சியில் வீழ்த்திட காத்திருக்கும் ஒரு கூட்டம்.. மெல்ல நம் பண்பாட்டின் மீதான தாக்குதலை மொழி மீதான தாக்குதலை முன்பை விட வேகமாக செய்ய திட்டமிட்டு அதை செயல் வடிவில் காட்டுகின்றனர்..  
..
நாம் தொடர்ந்து சண்டை செய்து கொண்டே இருக்க வேண்டமென நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர் நம் எதிரிகள்.  
நாம் புதிய வழிகளில் புதிய திட்டங்களால் புதிய செயல்வடிவில் புதிய பாய்ச்சலில் புதியவர்கள் படையோடு திராவிடம் வெல்ல வேண்டும் வெல்லும் திராவிடம்
..
ஆலஞ்சியார் 

"ஏழ்மைதான் எனது பெருமை. 
செல்வமும் பொன்னும் தொப்பியைப் போன்றவை.
வழுக்கைத் தலையன்தான் 
தலையைத் தொப்பிக்குள் மறைப்பதில் மகிழ்வான். 
சுருள் முடிக்காரனின் சந்தோஷம் 
தொப்பி தொலையும்போதுதான்.”

#மெளலானா ரூமி ரஹிமஹுல்லாஹ்

Tuesday, May 5, 2026

தலைவன்..
பொதுவாழ்வில் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக பாவித்து தொடர்ந்து இயங்குகிற தலைவன்.. வெற்றிக் கண்டு துள்ளி குதிக்கவில்லை.. தோல்வி அவரை முடக்கிவிடவில்லை.. தன்னை தோற்கடித்த கொளத்தூர் மக்களிடையே மறுதினமே சென்று நன்றி சொல்கிறார்.. மக்கள் செய்வதறியாது கண்ணீர் மல்க கைகூப்பி நிற்கின்றனர்..
..
ஊடகங்களில் ஸ்டாலின் தோற்றிருக்க கூடாதென நடித்த நடுநிலைவாதிகள் கொளத்தூரில் ஸ்டாலின் நன்றி அறிவிப்பை கண்டு மிரண்டு போனார்கள்.. 
..
கொளத்தூர் 
கண்ணீரால் குளமானது..
வழிநெடுக நின்றவர்கள் 
வாய் பொத்தி அழுததை 
வரலாறு பதிவு செய்தது ..
..
நன்றி கூற தான் சென்றார்
வெற்றி களிப்பில் அல்ல 
தோல்வியில் துவண்டுவிட மாட்டேன் 
எப்போதுமிருப்பேன் என சொல்லாமல் சொன்னார்
..
வழி நெடுக 
வளர்ச்சிகள் தந்தவன் 
தலைநிமிர்ந்து 
நடைப்போட்டான் 
கண்டும் உண்டும்
மகிழ்ந்தவர்கள் 
தலைகுனிந்து நின்றனர்
"அட்டாலும் பால் சுவையில் குன்றாது" ..
..
எதிரிகள் கூட தோற்றதைக்
கண்டு கலங்கி நின்றனர்
ஆனால்..
கட்சிக்காரன் சொல்கிறான்
வாக்களிக்கச் செல்லும் முன் 
என் இரு குழந்தைகள் 
காலில் விழுந்தன நம் வாக்கா மாறிவிட போகிறதென நினைத்தேன்.. 
மற்றொருவர் 
வளர்ச்சி எல்லாம் சரி 
கட்சிக்காரனுக்கு என்ன செய்தார்
கேள்விகள் ஆயிரம்
பதில் ஒன்றுதான்.. கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய தேர்தல் இது
..
கட்சிக்குள் புது இரத்தம் பாய்ச்சபட வேண்டும் 
தனக்கு வாய்ப்பில்லை என்றவுடன்
கூறுமாறும் "கயமை" களையப்பட வேண்டு்ம்.. பல்வேறு அணிகள் செயல்பாடடில்  ஆதிக்க திமிரையும், லாபிகளையும், தடுத்து நிறுத்த வேண்டும்.. கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் கண்டு அவர்கள் சொல் கேட்டு வழிநடத்தும் நிர்வாகிகளை தேர்வுச் செய்ய வேண்டும்.. மாவட்டங்களில் தனக்கு பிறகு தனக்கு வேண்டியப்பட்டவன் என்ற நிலை மாறவேணடும்.. மொத்தத்தில் பழைய திமுகவாக வேண்டும்
..
ஆளும்கட்சியாக பார்த்த இளம்தலைமுறை எதிர்க்கட்சியாக பார்க்க வேண்டும்..
பழைய எதிர்க்கட்சியாக..
தலைவர் நேற்றே களத்தில்.. இனி 
we will fight we will win
..
திமுக எப்போதும் மக்களுக்கானது
..
ஆலஞ்சியார்

Saturday, May 2, 2026

திமுககாரனுக்கு துரோகங்கள் புதிதல்ல..
..
விசிக தலைவர் தோல்.திருமாவளவன் எங்கள் கட்சியினர் விசிக போட்டியில் தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளில் சரியாக பணியாற்றவில்லை என்கிறார்.. மகிழ்ச்சி இப்போதாவது ஒப்புக்கொண்டமைக்கு  .. திமுகவிற்கு எப்போதுமே தலித் சமூகம் (குறிப்பாக பறையர் சமூகம்) பெருவாரியாக வாக்களித்ததில்லை.   காங்கிரஸ் நிலக்கிழார்களின் சொல்லிட்டு வாக்களித்தவர்கள் எம்ஜிஆர் காலத்தில் கவர்ச்சி ஈர்ப்பின் காரணமாக வெகுவாக வாக்களித்தவர்கள் தான்.. கலைஞருக்கு சொற்பமாக உணர்வுள்ளவர்கள் வாக்களித்திருகிறார்கள்.. அவர்களின் முடிவை நான் விமர்சிப்பதற்கில்லை.. ஆனால் "அமைப்பாய் திரள்வோம்" என பறையர் சமூகத்தை ஒருங்கிணைத்த திருமா  இன்று பலவீனப்பட்டு நிற்கிறார்..
தேர்தலுக்கு முன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டிய பிறகு களம் மட்டுமே கவனமாக இருக்கவேண்டும் ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விசிக உட்பட நேர்மையாக உழைக்கவில்லை அதிலும் காங்கிரஸ் அலட்சியமாக செயல்பட்டது.. 
..
கூட்டணி ஒழுங்கு இம்முறை இல்லை என்பதை முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அறிவார்.. அதனால்தான் தன் கட்சியினரை மிக கவனமாக முனைப்போடு செயல்பட சொன்னார்.. கூட்டணிக்கட்சிகளின் தலைவன் எல்லாரையும் விட கடுமையாக உழைத்திருக்கிறார்.. ஆனால் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தங்களின் பலமறியாமல் சலசலப்பை தொடர்ந்து உணடாக்கினர்.. ஆனால் அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்தி தான் மிகச் சிறந்த தலைவனாக தமிழ்நாட்டில் உயர்ந்து நிற்கிறார்.. கூட்டணிக்கட்சிகள் தங்கள் பங்களிப்பதை சரியாக செய்யவில்லை என்ற போதும் திமுக மிக எழுச்சியோடு செயல்பட்டிருக்கிறது இந்த என்பதை மே 4 சொல்லும் 
..
கருத்துகணிப்புகளில் தலித் மற்றும் இஸ்லாமிய சமூகம் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என தெரிகிறது.. கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களுக்கு பிறகு இஸ்லாமிய வாக்குகள் முழுவதுமாக திமுகவிற்கு வந்ததில்லை. அதிமுக திமுக என வாக்குகளை மடைமாற்றிய வரலாறும் உண்டு.. இப்போது பல்வேறு அமைப்பாய் பிரிந்து திமுக துரோகம் செய்துவிட்டதென்ற புலம்பல் நாம் கேட்டுக் கொண்டுதானிருநதோம்.   எப்போதும் நம்பிக்கைக்குரியவர்களாக தலித் மற்றும் இஸ்லாமிய சமூகம் இருந்ததில்லை,  இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை.. ஆனால் தங்கள் பலமறியாமல்  பேசுவதும் இன்றைய மெச்சதக்க நிலைக்கான காரணிகளில் திமுகவும் ஒரு காரணம் என்பதை மறந்து பேசுவதும் சில நேரங்களில் ஏசுவதும் கேட்க சகிக்கவில்லை..
..
திருமா அவர்களுக்கு நன்றி!.. வெளிப்படையாக சொன்னதில் மகிழ்ச்சி..இது போன்று பல்வேறு காலகட்டங்களில் ஏமாற்றங்கள் துரோஙகள் சந்தித்தவைதான் ஆனால் இந்த முறை உங்கள் எண்ணம் ஈடேறாது .. திமுகவை இம்முறை வீழ்த்த முடியாது தெளிவான திட்டமிடல் யாரை எங்கே எப்படி கையாள்வது எங்கே நிறுத்துவதென என திறம்பட செயல்பட்டு தலைவர் ஸ்டாலின் மிகச்சிறந்த ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்..
..
வெல்வோம் 
திராவிடம் வெல்லும்...
#திராவிடமாடல் 2.O தொடரும்..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் எனும் நான்..
..
ஆலஞ்சியார் ..
வாக்காள பெருமக்களே!..
வணக்கம்..
2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரைகள் முடிந்த அமைதியான சூழலில் யாருக்கு வாக்களிப்பது என யோசனையில் அசைப்போட்டுக் கொண்டிருப்பீர்கள்.. இந்த மாநிலம் எப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியான சூழலில், கல்வி வளர்ச்சியில் எந்த மாநாலமும் எட்டாத உயரத்தை தொட்டு நிற்கிற நிலையைக் கண்டு ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எப்படியேனும் தடுத்திட வேண்டும் என எட்டப்பன்களைக் கொண்டு இங்கே முயற்சிக்கிறது.. அதைவிட கொடுமை இந்த ஐம்பதாண்டுகளில் நாம் செய்ய தவறிய ஒன்று சினிமா மோகம் .. தரையில் தலைவனை தேர்ந்தெடுக்க கற்றுதரவில்லையோ என நினைக்க வைக்கிறது.  
..
தலைவர் ஸ்டாலின் மக்களை சந்திக்கிறார் செய்ததைச் சொல்லி வாக்கு கேட்கிறார் .. இளைஞர்களை சந்திக்கிற போது கூட அவர்களை என்ன படிக்கிறீர்கள் என அவர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து நல்லா படியுங்கள் என்று கேட்கிறார் தவிர உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள் எனக் கேட்கவில்லை ஆனால் இங்கே ஒரு நடிகன் சிறார்களை உங்கள் வீட்டில் அடம் பிடியுங்கள் என சொல்கிறான்.. 
..
பாஜகவை விட மிக ஆபத்தானவன் சிறார்களை வழிபாடடில் நிறுத்துகிற செயல் மூளையை மழுங்கடிக்கிற வேலையை செய்யும் இவனைப்போன்ற சைக்கோவை எக்காரணம் கொண்டும் நுழைய அனுமதிக்க கூடாது.. தமிழ்நாட்டின் நலனை அடகுவைக்கிற எடப்பாடி இந்த தேர்தலோடு முடிவுரை எழுத வேண்டியது அவசியம்.. பல்வேறு வழிகளில் எப்படியேனும் தமிழ்நாட்டில் அதிகாரத்தை அடைந்திட வேண்டுமென துடிக்கும் பாஜகவின் தந்திரங்கள் தோற்கடிக்கப்பட வேண்டயது காலத்தின் அவசியம்
..
நீங்கள் செலுத்தும் வாக்கு உங்களின் எதிர்காலத்தை உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தமிழ்நாட்டின் வளமான வளர்ச்சியான சீரான பாதையை கொண்டதாக அமைய, கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் தமிழ் மாநிலத்தவருக்கே முன்னுரிமையை உறுதி செய்ய, தமிழ் பண்பாட்டை காக்க, திமுகவிற்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.. 
..
உங்கள் கைகளில் உங்களின் உங்கள் தலைமுறையின் எதிர்காலம்.  
திமுக ஒன்றே நமது பாதுகாவல்.  
மறக்காமல் வாக்களியுங்கள் 
திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு.. 
தொடரட்டும் திராவிட மாடல் 2.O
..
மீண்டும்
முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..
கேட்க ஆவலாய் காத்திருப்போம்..
வெல்வோம் ஒன்றாக. 
தமிழ்நாடு தலை நிமிர
..
ஆலஞ்சியார்