Saturday, October 15, 2016
திரை மறைவு அரசியல் திமுகவிற்கு தேவையில்லை
ஜெயலலிதாவை காண மருத்துவமனை சென்றவர்கள் மருத்துவர்களை சந்தித்துவிட்டு வருவதும் அவர்கள் கூறுவதை பத்திரிக்கையாளர்களிடம் கூறுவதும் தான் நிகழ்ந்தது..யாரையும் சந்திக்காத யாருமே சந்திக்காத சசிகலா .. ராஜாத்தி அம்மாளை சந்தித்ததும் அந்த சந்திப்பு நள்ளிரவில் நடந்ததும் அதுவும் 45 நிமிடங்களுக்குமேல் முதல்வர் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்/ஆலோசனை செய்தார் என்ற செய்தி நிறைய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது..
..
இப்போது நடக்கிற திரைமறைவு அரசியலில் மத்தியில் ஆளும் பாஜகவின் அரசியல் நகர்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.. ஓபிஎஸ் நியமனத்தில் பொறுப்புகளின் சுமைதலையை கொடுத்தது கூட பாஜகவின் விரும்பமென்று பரவலாக கருத்துக்களை பல்வேறு அரசியல்கட்சியை சார்ந்தவர்களும் ஊடகங்களும் வெளியிடுகின்றன.. ராகுல் அப்போலோ வருகை கூட எதிர்மறை அரசியல் என கருதவேண்டியிருக்கிறது..இந்த நிலையில் தான் ராஜாத்தி அம்மாள் சசிகலா நடராஜனின் சந்திப்பை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்..
..
இது இப்போது நேற்றல்ல திருமதி காந்தி காலத்தில்தான் தொடங்கியது இந்த திரைமறைவு சூழ்ச்சிகள் பின் தொடர்ந்த ஆட்சியாளர்களும் தொடர்ந்து பின்வாசல் வழியைதான் நாடுகிறார்கள்.. சசி ராஜாத்தி சந்திப்பின் பின்னில் தற்காலிய ஏற்பாடுகள் .. அல்லது தேசிய கட்சிகளின் நெறிகெட்ட அரசியலுக்கு ஒரு முட்டுகட்டையை போட உதவியிருக்கலாம் ..ஆனால் இது திமுகவிற்கு குணம் சேர்ப்பதாக இருக்காது.. சசிகலாபுஷ்பாவின் அஸ்திரங்களிலிருந்து காக்க உதவலாமே தவிர வேறொன்றும் பயனளிக்கபோவதில்லை..ஏனெனில் கலைஞர் சாணக்கியர்களுக்கே #குரு...
..
கொங்கு மண்டலத்தை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்களை விலைபேசுவதாக செய்திகள்.. பாஜக செயல்பாட்டை கவனித்துக்கொண்டிருந்தாலே போதும் வேறெதுவும் செய்யதேவையில்லை திமுக இதுபோன்ற நேரங்களில் அமைதிகாப்பதே நல்லது..
ஜானகி ஜெ. அணிகள் மோதிக்கொண்டபோது இருந்த அதே நடுநிலையோடு செயல்பட்டால் திமுகவிற்கு பிரகாசமான எதிர்காலத்தை தரும்..
எந்தொரு முடிவையும் /அதிகாரத்தையும் மக்கள் தாமே முன்வந்து தரவேண்டும்.. அதற்கான தயாரெடுப்பில் இருந்தால் மட்டும் போதும்..
..
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
என்றான் வள்ளுவன்..
மனம் தளர்ச்சியடையாமல் நம்பிக்கையோடு முயற்சிசெய்தால் பெரிய வலிமையை தரும்..
..
#மக்கள்_வலிமைதருவார்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment