Wednesday, July 19, 2017
கமலின் விளி
கமலின் விளி..
கமலின் அரசியல் பார்வை மிக துல்லியமாக எதிர்ப்பை பதிவு செய்வதில் மட்டுமே இருக்கிறதே தவிர உடனடியாக செயல்படும் எண்ணம் இருப்பதை உணர்த்தவில்லை ஒரு கலைஞனின் சில நிர்பந்தங்கள் தடையாக இருக்கலாம் அல்லது பொதுவான விமர்சகபார்வை போதுமென்று நினைத்திருக்கலாம்.. ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக புரியவைத்திருக்கிறார்..
ரஜினியை போல குழம்பி மற்றவர்களை குழப்பி தெளிவற்ற கோணல் புத்தியோடு கூடிய வியாபாரியாக இல்லாமல் அரசியல்பற்றி விவரம் அறிந்த தன்னை காட்டிக்கொள்ளும் மேதாவித்தனம் அவரின் அறிக்கை நெடுக தெரிகிறது.. அது கமலின் அறிவின் நிழலில் நின்று கதைப்பதால் கூட இருக்கலாம்.. நிறைய விடயங்களில் ஆழ்ந்த அறிவோடு கூடிய நவீன சிந்தனையின் வெளிபாடு அவரை நாகரீகமாக எதிர்க்க வைத்திருக்கிறது.. ஆனால் பாருங்கள் அவர் விமர்சிக்கிற அல்லது எதிர்க்கிற கூட்டம் அதிமுக/பாஜக அரசியலின் விசால பார்வையில்லாத விவேகமற்ற தெளிவில்லாதவர்களாக இருப்பது கமலுக்கு இலகுவாக இருக்கிறது.. அதிமுகவின் அமைச்சர்களோ அல்லது பாஜகவின் மதமேறிய கிறுக்கர்களோ அரசியல் தெளிவற்றவர்கள் அதைவிட விவரகேடுகள்..
..
கமலின் அரசியல் பிரவேசம் உடனடியாக வருமென எண்ணவில்லை என சொன்னதற்கான காரணம் ரசிகர்களை குறிப்பாக காசுக்கு விலைபோகதவர்களை ஊழல் பட்டியலை அனுப்புங்கள் என்பதலிருந்தே தூர நின்று கதைப்பதாகவே தோன்றுகிறது இது மேலே குறிப்பிட்டவர்களின் பேச்சை அடக்க அல்லது திசைதிருப்ப அவர் எடுத்த வழியாக காணலாம்..
கமல் அரசியல் வரவேண்டுமா என்றால் வரலாம் தவறில்லை சினிமா மட்டுமே மூலதனமாக கொண்டு சுயசிந்தனை ஏதுமில்லாக ம.கோ.ரா போன்றவர்கள் வந்து போன தமிழகத்தில் கொஞ்சம் கம்யூனிஸ பார்வையும் சிறியளவில் பெரியாரிய சிந்தனையையும் கொண்டு நடக்கும் நவநாகரீக செயல்பாட்டாளராக தன்னை முன்னிறுத்தும் கமல் வருவதில் என்ன தவறிருக்கிறது.. ஆனால் அதுமட்டுமே தகுதியா என கேட்டால் இல்லை போதாது என்றே பதில் கூறநேரிடும்..
முற்போக்கு சிந்தனையாளர்கள் அரசியலுக்கு வரவேண்டும் ..ரஜினிப்போல மதத்தை தலைக்கேற்றி நடக்கும் போலி காரியவாதிகளை விட கமல் தேவலாம்..
..
கமல் அரசியலுக்கு வந்தாலும் நீண்டநாள் காத்திருக்கவேண்டி வரும் இன்றைய சூழல் அதிமுகவிற்கு மாற்று என்கிற கேள்வி அல்லது அந்த இடத்தை யாரால் நிரப்பமுடியுமென்ற நிலையில் யாராரோ ஆசைப்படுவதும் .. அதற்கு ஊடகங்களும் சமூகவலைத்தளங்களும் கொண்டாடுவதும் எதிர்பார்ப்பை கூட்டுவதை காணலாம் அதெல்லாம் கடைசியில் நீர்த்து போக செய்துவிடுமென்பது தான் யதார்த்த உண்மை இதை அறிந்திருந்தால்தான் ரஜினியோ கமலோ தயக்கம் காட்டுகிறார்கள்..
திமுக எதிர்ப்பு நிலை என்பது இங்கே காலியாக இருக்கிறது அந்த இடத்தை நிரப்ப இன்னும் எத்தனை பேரை தேடுவார்கள் என தெரியவில்லை .. ஆனால் நிச்சயமாக திமுகவை எதிர்க்கும் சக்தி வலுவானதாக இல்லை என்ற நிஜமே தற்போதுவரை இருக்கிறது..
..
திமுக பலமான எதிரியில்லாத களத்தைதான் வரும் தேர்தலில் சந்திக்கும்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment