Tuesday, July 18, 2017
பெரியார் சிலையும்..பூணூலும்
பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த s.v. சேகர் பன்றிக்கு குல்லா போடுவார்களா என திசை திருப்பும் செயலை அதாவது சம்பந்தமே இல்லை முஸ்லிம்களை உள்ளே இழுத்துவிடுகிறார்..
இதைதான் காலம்காலமாக பாப்பான் செய்து வருகிறான் .. குல்லா போடவேண்டுமென்று இஸ்லாத்தில் சட்டமெல்லாம் இல்லை தேவையானால் போடு இல்லையேல் தூக்கியெறி உன் இஷ்டம் இதுதான் இஸ்லாம் மதம் சொல்கிறது.. ஆனால் பூணூலை இந்துமதத்தின் அடையாளமாக இங்கே அடையாளப்படுத்த நினைக்கிறார்..அது பாப்பானின் அடையாளமே தவிர வெகுஜன இந்துக்களின் அடையாளமல்ல..
..
பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தில் நமக்கு விருப்பமில்லை ஆனால் நூல் செய்கிற சேட்டைகளை அதிகார திமிர்த்தனத்தை ..ஆணவபோக்கை தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை இல்லாதாக்குவதே நோக்கம்.. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வளவு ஆட்டம் ஆடுகிறார்கள் தெனாவட்டாக பேசுகிறார்கள் அதற்கெல்லாம் கடிவாளம் போடவேண்டுமென்பதற்காகவே விரும்பமில்லாமல் சில தோழர்கள் செய்கிற செயலை கடந்து போகவேண்டியிருக்கிறது..
..
மற்றொரு விடயத்தில் ஸ்ரீரங்கத்தில் கோவில் வெளியே பெரியார் சிலை இருப்பதை கிண்டல் செய்யும் விதமாக கோவில் வெளியே பிச்சைக்காரர்கள் இருப்பது சகஜம்தானே என்று சொல்லியிருக்கிறார்.. அப்படியெனில்
பெரியார் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் வரை சென்று போராடியது ஏன் .. ஒவ்வொரு முறையும் பெரியாரை தரிசித்துவிட்டுதான் கர்ப்பகிரகத்திற்குள் நுழைய முடியுமென்கிற நிலையை உருவாக்கி இருக்கிறோமே அந்த எரிச்சலில் பேசுகிறார்.. தட்டிலே காசை எதிர்பார்க்கிற பிச்சைக்காரர்களுக்கு வெளியில் அறிவுக்கொண்டு அந்தணர்கள் ஆட்டத்தை அடைக்கிவைத்த ஆசானை காணும் போதெல்லாம் கோவம் வரதானே செய்யும் ..
..
பெரியாரை பிச்சைக்காரன் என பேசிய சேகரை அதே மொழியில் பதிலளித்திட/பேசிட முடியும் ..
ஆனால் அவர்களின் கோபப்படுகிறார்கள் என்றால் நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதால் கண்ட ...கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.. கடலூரில் பெரியார் மீது செருப்பெறிந்தார்கள் செருப்பு எறிந்த இடத்தில் சிலையை நிறுவினார் கலைஞர் ..
செருப்பிற்கு ஒரு சிலை வருமென்றார்..
அதையே தான் இப்போதும் சொல்கிறோம்.. பெரியாரை இழிவாக பேசும் போதெல்லாம் .. மீண்டும் மீண்டும் ஆரிய எதிரிப்பை பார்பன திமிரை அடக்க முன்னெப்போதுமில்லாத வேகத்தோடு செயல்படுவோம்..
#எச்சரிக்கை..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment