Monday, March 13, 2017
De Mock racy..
ஜனநாயகம் போலி...ஆபாசமாகிறது..
de MOCK racy..சொன்னவர் மன்மோகன் சிங்..
Long live democracy என்ற பிரதமர் மோடியின் ட்விடிற்கு மன்மோகன் தந்த பதில்.. உண்மையில் மன்மோகன் போன்றவர்களிடமிருந்து இதுபோன்று..கருத்துக்கள் வருவது எந்தளவிற்கு ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கிறது பாஜக என்று புரிகிறது..
கோவாவில் 17 இடம் பிடித்தவரை அழைக்காமல் 13 பேரை ஆட்சியமைக்க அழைத்து.. சுயேட்சைகள் விலைபேசும் கேவலம் அதைவிட காங்கிரஸ் சார்பில் நின்று வென்றவர் பாஜக தாவும் அவலம் மணிப்பூரில்.. அதனால்தான் மன்மோகன் U bribe / kidnap 43 mla in panjab.. long live de Mock racy... என பதில் அளித்திருக்கிறார்..
..
சசிகலா எம்எல்ஏக்களை அடைத்தவைத்தபோது.. சிலர் ஊடகங்களில் வந்து வாய்கிழிய பேசினார்கள்.. விசு போன்ற அவாள்கள் இப்போது வாய்மூடி ஜனநாயகத்தை வேடிக்கை பார்க்கிறார்கள்.. சசி செய்தது கூட அவரிடமுள்ள எம்எல்ஏக்களை அடைத்துவைத்தார். ஆனால் இங்கே வெற்றிபெற்று ஒருதினம் கூட முடியவில்லை அதற்குள் விலைபேசும் அயோக்கியத்தனத்தை பாஜக செய்கிறது..இது ஜனநாயகத்தின் குரல்வலையை நெரித்து மூச்சரைக்க செய்யும் வேலை இது..
இப்படிதான் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் தேர்தல் நடைமுறை தேவையில்லை.. விலைபேசி அல்லது ஏலம் விட்டு ஆட்சிக்கு வரலாம்..
மக்கள் யாரை தேர்ந்தெடுத்திருக்கிறார்களோ அவர்களே ஆட்சி செய்ய அனுமதிக்கவேண்டும் சட்டமன்றத்தில் பெருபான்மை நிரூபிக்க முடியாமல் போனால் அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோரலாம்.. அதைவிடுத்து 17 உறுப்பினர் உள்ளவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுக்காமல் 13ஐ அழைப்பது..சரியான முறையா.. குறுக்குவழியில் தான் எப்போதுமே வெற்றிபெற நினைக்கும் பாசிச சிந்தனையுடைவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை எப்போதும் இருப்பதில்லை மதவெறியை மூலதனமாக்கி வெற்றிபெற நினைப்பவர்கள்.. அவர்களின்,ஆயுதம்.. திறக்கப்படாத கதவுகளும் மடிக்கப்படாத விரிப்புகளும்தான்...இதைவைத்துதான் உயரவர நினைப்பவர்கள்.. லஞ்சம் கடத்தல் பெண் பணம் பதவி என ஆசைகாட்டி ஜனநாயகத்தை கடித்து குதறுகிறார்கள்..
..
மத்தியில் ஆட்சி கையிலிருப்பதால் எதையும் செய்யலாமென்று நினைக்கிறார்கள் தாங்கள் விரும்புகிற ஆட்சி வரவேண்டுமென நினைப்பது ..அல்லது தாம் விரும்புகிறவர் ஆட்சிவரவேண்டுமென்று எண்ணுவது அதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது கயமைத்தனம்..
..
#ஜனநாயகம்_மூச்சுதிணறுகிறதுDemocracy_Apnea…
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment