Wednesday, March 29, 2017
மரியாதை...
இந்த படம் சில உண்மைகளை நமக்கு உணர்த்தும்.. இருவேறு கட்சி பிரதிநிதிகளோடு மாண்பிமை அமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் விவசாயிகளை சந்திக்கிறார்.. ஒரு பிரிவினர் அமர வைக்கப்படுகிறார்கள்.. மற்றொரு பிரிவினர் நின்றுக்கொண்டே பேசி அனுப்பிவிடுகிறார்.. இரண்டிலும் கலந்துக்கொண்டதென்னவோ உழவர்கள் தான்..
..
திருச்சி சிவா சுயமரியாதைக்காரர்.. எப்போதும் எதிலும் கம்பீரமாக செயல்பட கூடியவர் எக்காரணத்தை கொண்டும் மரியாதைக்கு இழுக்கு வந்துவிட கூடாதென்பதில் கவனம் செலுத்துபவர். எதை எப்படி செய்தால் எவரை அணுகலாம் எப்படி இந்த பிரச்சனையை கையாளலாம் .. எப்படி அரசின் கவனத்திற்கு கொண்டுவரலாம் என்று அறிந்தவர்..
அதனால் தான் முன்கூட்டியே சந்திப்பதற்கு நேரம் கேட்டு உழவர் பெருமக்களை அழைத்துக்கொண்டு சந்திந்திருக்கிறார்.. திருச்சி சிவா சந்தித்து விட்டாரே என்ற ஒரு காரணத்திற்காக அவசரகதியில் மாண்பிமை அமைச்சரிடம் நேரம் கூட ஒதுக்காமல் அவசரமாக சந்தித்ததால் நிற்கவைத்தே பேசி அனுப்பிவிட்டார்கள்..
..
தம்பிதுரைக்கு மானம் மரியாதை இதெல்லாம் தெரியாது இத்தனை ஆண்டுகள் டெல்லியிலே குப்பை கொட்டியும் இவரால் எதாவது ஒரு மசோதாவோ.. அல்லது ஏதாவது ஒரு கவனஈர்ப்பு கொண்டுவந்து சபையின் கவனத்தை கையிலெடுக்க முடியவில்லை.. மாறாக தன் தலைமைக்கு சிறிய சங்கடம் வந்துவிட்டால் உடனே கூச்சலிட்டு சபையில் கத்தி கலாட்டா செய்ய தெரியும். இவரென்றில்லை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்திற்கு..ஏதேனும் நல்லது நடந்திருக்கிறாதா.. அல்லது இந்த தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் சரியான பங்களிப்பை செய்து அரசை பணியவைக்க முடிந்திருக்கிறதா.. என்றால் இல்லை..
..
சரியான திறமையான நபர்களை அதிமுக கேர்வுசெய்து நிறுத்தாததும் ..யார் சரியானவர் நமக்கு நல்லதை செய்வார் ..இவரால் தமிழகம் பெருமைபடுமென என சிந்தித்து வாக்களிக்காமல் கண்டவர்களையும் அனுப்பிவைத்ததுதான் இவ்வளவிற்கும் காரணம்..
ஒரு சிலர் திறமையாளர்களாக.. நல்ல சிந்தனை உடையவர்களாக இருக்ககூடும் அவர்களை வாய்திறந்து பேச அதிமுக தலைமை அனுமதிருக்கவில்லை..
தாம் அழைத்துச் செல்கிறவர்களுக்கு மரியாதையை பெற்று தரவேண்டுமென்ற அடிப்படை கூட தெரியாதா.. பாவம் காலில் விழுந்து விழிந்து குனிந்து நின்றே பழகிப்போனதால்.. மானம் மரியாதையெல்லாம் என்னவென்றே அறியாமல் போனீர்கள்..
..
#மானமொன்றே பெரிதென கொண்டு வாழ்ந்தது எங்கள் சமுதாயம்..
#மறந்துபோனதோ..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment