Wednesday, March 22, 2017
கிரிமினல்..
தியாக செம்மல்..
தஞ்சை நவநீதகிருஷ்ணன் எம்பி.. புரியவில்லையென்றால் காஷ்மீர் பியூட்டிப்புல் காஷ்மீர் புகழ் .. கிரிமினல் சசிகலாவை இப்படிதான் அழைத்தார்.. தஞ்சாவூர்காரர்களுக்கு தெரியும் .. நடுவர் நீதிமன்றங்களில் தேங்காய்மூடிலாயர் என்று அழைக்கப்பட்டவர்.. கலைராஜன் மூலம் சசிகலாவிற்கு அறிமுகமாகி ஜெயலலிதா வழக்கில் வாதாடியவர்களுக்கு உதவ நியமனம் செய்யபட்டார்.. சசியின் தீவிரவிசுவாசியாக இருந்ததால்/சொல்படி ஆடியதால் மாநிலங்களவை உறுப்பினராகி..
கஷ்மீரில் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து மாநிலங்கவையில் பேசும் வாய்ப்பு வந்தபோது.. பாட்டு பாடி தமிழக மானத்தை வாங்கினார்..
..
அதென்ன #தியாகசெம்மல்..
A2 கிரிமினல் சசிகலா அப்படிதான் ஊடகங்கள் அழைத்திருக்கவேண்டும் .. குற்றவாளி சசி என சமூகவலைதளங்களில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.. நாம் கூட அதிமுக பொதுசெயலர் என்று எழுதுவதால் கிரிமினலை தியாகியாக்கி ஊடகங்களில் பேசி பதியமுடிகிறது.. உண்மையில் வெட்கபடவேண்டிய விடயம்.. கிரிமினல் 1 ஜெயலலிதாவின் சமாதியை அரசே நிர்வகிப்பதும் அரசும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளும் படையெடுப்பதும் தமிழகத்தை தலைகுனிய வைக்கிறது.. செத்துவிட்டதால் ஒருவர் புனிதரென்றால் ஹிட்லர் கூட மேன்மையானவர்தான்.. முதலில் இது இந்தியாவிற்கே இழுக்கு .. உலகமெங்கும் குற்றவாளியை கிரிமினலை புகழ்வதை பார்த்து சிரிக்கிறார்கள் இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருத்த அவமானம்..
ஜெயலலிதா சமாதியை அகற்றியிருக்கவேண்டும் .. அல்லது அரசோ அமைச்சர்களோ அங்கு செல்வதை தவிர்த்திருக்கவேண்டும் அரசு விழாக்களில் கிரிமினல் ஜெயலலிதா படத்தை அகற்றியிருக்கவேண்டும்..
இந்த அசிங்கங்களை எல்லாம் நாம் எதிர்க்காமல் சகித்துக்கொண்டதால்.. கிரிமினல் தியாகசெம்மலானது..
..
விடுதலைக்காக போராடியவர்களை போற்றும்வண்ணம் நாம் தியாகி என்றழைத்து கௌவரம் செய்தோம் இனி.. தியாகி என்றாலே (கிரிமினல்கள் )கொலைகாரர்களும் கொள்ளையடிப்பவனும் நியாபகம் வருவார்கள்.. அதிமுக எனும் கட்சியே அரசியலில் அவமானம் கெட்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள் அரசியலில் மறுப்பதற்கில்லை ஆனால் இவர்கள் கேடுகெட்டவர்கள்..
விரட்டப்படவேண்டியவர்கள் சுயநலத்திற்காக ஒட்டுமொத்த தமிழர்களின் மானத்தை வாங்குகிறார்கள்.. ஆம் அதிமுகவினர்..
#அழித்தொழிக்கப்படவேண்டிய_விஷகிருமிகள்..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment