Thursday, March 30, 2017
ஜெயலலிதாவின் மவுசு..
தீர்ப்புக்குப் பிறகும் குறையாத ஜெயலலிதாவின் மவுசு/மதிப்பு ..தந்தி டிவி
..
தந்தி டிவியின் கருத்தாக இதை ஏற்போம்.. மக்களின் மனநிலையை சொல்வதாக ஏற்கமுடியாது.. ஜெயலலிதா மறைந்து போனதால் மக்களிடையே அவரைப்பற்றி அவ்வளவாக வெறுப்பு இருக்காது காரணம் இறந்தவர்களைப்பற்றி தவறாக பேசகூடாதென்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம்.. இரண்டு ஊடகங்கள் ஜெயலலிதாவை கிரிமினல் 1 என வலியுறுத்தி சொல்லாததும் ஒரு காரணம்.. ஆனால் வெகுமக்களிடம் ஜெயலலிதா பற்றிய எண்ணத்தில் சிறியதொரு விரிசல் விழுந்திருப்பதை தந்தி போன்ற ஊடகங்கள் மறைக்க முயல்வதோடு தூக்கி நிறுத்த போராடுகின்றன..
..
ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் உள்ள வித்தியாசம் அனைவரும் அறிந்ததுதான்..சசிகலாவை அதிகாரத்தில் வரகூடாதென்று கங்கனம்கட்டி வேலைசெய்தவர்கள்.. ஜெயலலிதா முதல்வராக இருந்ததையும் ஒரு கிரிமினல் நாட்டை ஆண்டதையும் மக்களிடம் சொல்ல மறுக்கிறார்கள்.. விசாரணை முடிந்து மாதகணக்கில் கிடப்பில் போடப்பட்டிருந்த தீர்ப்பு.. பெங்களுரு உயர்நீதிமன்றத்தை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று பணித்த உச்சநீதிமன்றம்..விரைந்து தீர்ப்பை தந்திருந்தால் ஜெயலலிதாவும் சிறையில் களி தின்றிருப்பார்.. சசிகலாவிற்காக வேகமாக செயல்பட்டு அரசுநிர்வாகமும் அதிகாரவர்க்கமும் நீதித்துறையும்.. சமூக ஆர்வலர்கள் போர்வையில் உலாவரும் பாசிசவாதிகளும் .. ஜெயலலிதாவிற்கு விரைந்து தீர்ப்பு வழங்க கூறவுமில்லை.. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை..
காரணம் ஜெயலலிதா #பாப்பாத்தி ..
..
இப்போது கூட ஊடகங்கள் ஜெயலலிதாவின் மவுசை குறையாமல் பார்த்துக்கொள்ளதான் முயற்சிக்கின்றன..
பார்பனன் கொலை செய்தால் கூட.. அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து நாடுகடத்துங்கள் என்கிற #மனுநீதி ஆட்சி செய்யும் நாட்டில்..சசிகலாக்கள் தான் தண்டனை பெறுவார்கள் .. கோமளவல்லிகள் அல்ல..
..
சசிகலா ஜெயா இருவரின் அரசியலையும் வெறுப்பவர்கள் இவருமே தமிழகத்திற்கு தீங்கானவர்கள்..என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்..இருவருமே கிரிமினல்கள் ..ஒருவரை மட்டும் புகழ்வதும் ஒருவரை தூற்றுவதுமான செயல் அருவருக்கதக்கது.. ஜெயலலிதாவின் புகழ் மங்கதொடங்கியது என்பதே உண்மை.. தந்தியின் பாண்டே மூச்சுபிடித்து நின்றாலும் காலம் கரைத்துக்கொண்டே போகும்..
#கிரிமினலாகதான்..
வரலாற்றில் எழுதபடுவார்..
#கிரிமினல்_ஜெயலலிதா_எனும்_கோமளவல்லி..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment