Tuesday, December 20, 2016
தகரங்கள்
தீபா..
நேற்றைய தினம் பார்க்கமுடியாத பாண்டேவுடனான சந்திப்பை யூடியூப்ல் பார்த்தேன் ஜெயலலிதாவின் குரலின் சாயல் இருக்கிறது..
ஒரே நாளில் அரசியலிக்கு வருவதென்பதும் உடனே உயர் பொறுப்புக்களை பெறுவதும் இந்திய அரசியலில் நடக்காத காரியமில்லை.. விமான ஓட்டியை திடீரென பிரதமராக்கிய அதைவிட ஏற்றுக்கொண்ட நாம்.. இதுபோன்றவர்களை கடந்து போக வேண்டியிருக்கிறது..
..
அதிமுகவில் அதிகார போட்டி இப்போது வெளிப்படையாக தெரியவருகிறது.. நிறைய கேள்விகளுக்கு பதில் அவரிடம் இல்லையென்றாலும் மென்மையாக சமாளிக்கும் திறன் இருந்தது சசியைப்போல் இலைமறைவு ஊமைநாடகம் நடத்தவில்லை அதுவரை நல்லது.. இருவருமே தகுதியானவர்களா என்றால் இல்லை
தமிழகத்தின் சாபம் தீர நான்காண்டுகால அவகாசம் தான் பெரிய இடைஞ்சல்..
இல்லையெனில் இந்நேரம் முடிவு தெரிந்திருக்கும்..
பாண்டேவின் மடத்தனமாக #சசிஅத்தைக்கு தீபக்கை பிடிக்கிறதே தீபாவை ஏன் பிடிக்கவில்லை என்றார்.. பதவிக்கு ஆசைபடாதவரை பிடிக்கதான் செய்யும் எங்கே தீபாவை விட்டால்( தீபா ஒரு பத்திரிக்கையாளர்) தனக்கு இணையாகவந்துவிடுவாரோ என அஞ்சி தவிர்த்திருக்கலாம்..
..
அதிமுக சிதறுண்டு போகாமல் தடுப்பது கால அவகாசம் அதிகமிருப்பதும் ஏப்போதுமில்லாத அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதுமே காரணம்.. நிறைய அதிமுககாரர்கள் சசியால் மட்டுமே செலவு செய்யமுடியுமென நம்புகிறார்கள்..சில பகுதிகளில் சாதீய ரீதியான எதிர்ப்பும் வலுக்கிறது.. சிறிதுகாலம் இதை ஆறபோடலாம் ஆனால் ஒருநாள் சிதறிப்போகும்.. காரணம் அதிமுக என்பதே கொள்கையாலோ இன மொழி உணர்வாலோ ஏற்படுத்தப்பட்ட இயக்கமோ கட்சியோ அல்ல அது ஒரு தனியார் அமைப்பை போன்றது.. தனிநபர் கவர்ச்சியில் கட்டமைக்கப்பட்டது நீண்டகாலம் அதிகாரம் ஆட்சி பணம் போன்றவைகளைக்கொண்டு மெழுகப்பட்டிருந்தது அவ்வளவுதான்.. ஒரு குறிப்பிட்டவர்களின் கீழ் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது அக்கட்சி தொண்டர்களிடம் கூட கவர்ந்திருக்கும் தனித்தன்மை இப்போது போட்டியிடும் சசி & தீபா விடம் இல்லை..
பணம் சிறுதுகாலம் துணைநிற்கும் தொடர்ந்து கட்டிகாக்குமா என்றால் முடியாதென்றே பதில் கிடைக்கும்..
..
பொதுமக்களிடம் ஜெயலலிதாவிற்கு இருந்த ஆதரவு இந்த இருவருக்கும் இருக்குமென கூற முடியாது அது பெரும்பின்னடைவை அதிமுகவிற்கு தரும் இப்போதைய சூழலில் பணமும் பதவியும் காப்பாற்றலாம்.. அவ்வளவுதான்..
#தகரங்கள்_துருப்பிடிக்கும்..
..
ஆலஞ்சி மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment