Saturday, April 29, 2017
தளபதி
திராவிட இயக்க உணர்வோடு வெளியிட்ட ஸ்டாலின் அறிக்கையை வரவேற்கிறேன்.. வி.பி.கலைராஜன்..
இது ஏதோவொரு கலைராஜனின் மனநிலை அல்ல ஒட்டுமொத்த அதிமுககாரனின் எண்ணவோட்டம்..
தமிழகத்தின் ஆளும் அரசை சின்னபின்னமாக்கி தங்களின் கொள்கைகளை புகுத்த நினைக்கும் கேடுகெட்ட அரசியலை எதிர்க்கவேண்டிய கடமை பிரதான எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.. அதைதான் செய்திருக்கிறார் #தளபதி அவர்கள்..
..
தளபதி தனது அறிக்கையில்..
//மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட ஏஜென்ஸிகளைவைத்து, தமிழக அரசின் நிர்வாகத்தை நிலைகுலைய வைத்துள்ளது. வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராம மோகனராவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது ஏன்? ஒருபக்கம் ஊழல் விசாரணை உறங்குகிறது. இன்னொரு பக்கம் ஊழல் விசாரணை துள்ளிக்குதித்து ஓடுகிறது. இந்த இரண்டிற்கும் இடையில் பிரிந்து சென்ற அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேருவதற்காக திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். ஆகவே தமிழகத்தில் இப்போது அதிமுகவில் உள்ள ஒரு அணிக்கு எதிராக நடக்கும் “செலக்ட்டிவ் ரெய்டு” – “செலக்ட்டிவ் கைது” உள்ளிட்டவற்றின் பின்னணியிலும், இன்னொரு அணியின் ஊழலை தூசு படியவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க.வின் கை மறைவாகக்கூட அல்ல வெளிப்படையாகத் தெரிகிறது. //
..
சிலர் காலம்கடந்து விழித்துக்கொண்டிருக்கிறது திமுக என்கிறார்கள் அப்படியல்ல.. அதிமுகவில் சிலர் காக்கிற மௌனத்தை மக்கள் புரிந்துக்கொள்ள அவகாசம் வழங்கவேண்டும்.. எதுவரை பயணிக்கிறார்கள் என்பதையும் எப்படியெல்லாம் பாஜகவிற்கு வழங்கி தங்கள் முகத்தை இழக்கிறார்களென தெரியவேண்டும்.. ஒட்டுமொத்த கொள்ளையர்களில் சிலரை மட்டும் துரத்தும் செயலையும் ஆமாம் சாமி போடும் அயோக்கியக்கர்களை காப்பாற்றுகிற பாஜக அரசை தமிழக மக்கள் புரிந்துக்கொள்ள இந்த கால அளவு தேவைப்பட்டது..
..
பன்னீர்&கோ வை புனிதராக்கி பாஜக நடத்தும் நாடகத்தின் உண்மையை தோலுறித்திருக்கிறார் #எம்செயல்தலைவர்..இது எச்சரிக்கையும் கூட
பாஜக வை ஆதரிப்பவர்களை நல்லவர்களாக காட்டி எதிர்பவர்களை ஏதோ கொடும் கொள்ளையர்போல் சித்தரிப்பது சரியல்ல.. மக்கள் மிக தெளிவாக பாஜகவின் சித்துவிளையாட்டை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்..
..
தளபதியின் இன்றைய அறிக்கை #வரலாற்றுசிறப்புவாய்ந்தது..
...
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment