Sunday, April 2, 2017
வாக்கு சீட்டு முறை
மத்திய பிரதேச பிந்த் நகர் இடைதேர்தலில் வைப்பதற்காக விவிபெட் வாக்கு மெசினை பரிசோதனை செய்த போது சமாஜ்வாடியின் சைக்கிளுக்கு வாக்கு அளித்தால் வாக்கு சீட்டில் பாஜகவின் தாமரை சின்னம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.. பதவான சீட்டை வெளியே எடுத்துச்செல்ல அனுமதி மறுத்தும் வெளியே சொன்னால் விபரீதம் நடக்குமென அதிகாரிகள் மிரட்டியிருக்கிறார்கள்.. காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கிறது.. மாநில தேர்தல் ஆணையத்தை கடுமை சாடி விளக்கம் கேட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்..
..
ஆரம்பம் முதலே வாக்கு பதிவு இயந்திரத்தில் நம்பிக்கையில்லை அதில் நிறைய குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருக்கிறதென.. அரசியல் கட்சிகள் பாஜக உட்பட அச்சம் தெரிவித்திருந்தன..
எந்த முறைகேடும் செய்ய முடியாதென்றும் மிகவும் பாதுகாப்பானதென்றும்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உறுதியளித்திருந்தது..
ஆனால் சமீபத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதற்காக பெரியளவில் தேர்ந்த வல்லுநர்களை களத்தில் இறக்கி விவிபெட் மிஷினில் முறைகேடுகளை வெளியிலிருந்தே இயக்க மாற்றியமைக்க திட்டமிட்டிருப்பதாக பகுஜன் உட்பட சில கட்சிகள் கவலை தெரிவித்திருந்தன அப்போது கூட ஆணையம் வாக்கு இயந்திரத்தில் நம்பலாமென்றுதான் சொன்னது..
இப்போது அதிகாரிகள் முன்னில் நடந்த சோதனையில் எந்த பட்டன் அழுத்தினாலும் அது பாஜகவிற்கு வாக்காய் விழுகிறது..
..
பகுஜன் தலைவர் மாயவதி கூறுவதை போல பாஜக பின்புலமில்லாமல் இப்படியொரு முறைகேட்டை செய்திட முடியாது மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இவர்களின் அடாவடிகளும் எப்படி ஜெயித்துவிடவேண்டுமென்று செய்கிற தில்லுமுல்லுகளும் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வர தொடங்கியிருக்கின்றன.. ஜனநாயகத்தின் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை.. மாற்றி அரசோ கட்சியோ தீர்மானிப்பது சரியான முறையல்ல
மீண்டும் பழையது போல் வாக்கு சீட்டை பயன்படுத்த வேண்டும்.. வளர்ந்த நாடுகளில் கூட (அமெரிக்காஉட்பட) வாக்குசீட்டு முறைதான் செயல்படுத்த படுகிறது..
..
இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யலாம் என்றால் எதற்காக தேர்தல் .. எவ்வளவு செலவு.. யார் வெற்றிபெற வேண்டுமென்று பாஜகவோ அரசோ தீர்மானிக்குமென்றால் .. எதற்காக தேர்தல் நடைமுறை..
தி இந்து கூட இந்த நிகழ்வை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறது..
ஆம் ..
அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளமுடியாது..
..
#தேவை_வாக்குசீட்டுமுறை..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment