Saturday, August 5, 2017
இழிபிறவி..
sc என்ற இழிவு பட்டியலிருந்து... வெளியேற்ற வலியுறுத்தி போராட்டம்.. பள்ளர் இனத்தலைவர் என சொல்லிக் கொள்ளும் கிருஷ்ணசாமி..
..
இவர் வெளியேறி உயர்ஜாதி அய்யர் அய்யங்காராக கூட மாறி கொள்ளட்டும் அதற்காக sc பிரிவை பட்டியலினத்தை இழிஜாதி என சொல்ல இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது . இவரை மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டாமா..
..
அதாவது தாழ்த்தபட்டவர்கள் இழிவானர்கள் போன்ற தோற்றத்தை ..இதுவரை தாழ்த்தப்பட்டவனாக இருந்தவன் என சொல்ல வருகிறாரா..
தரம் தாழ்ந்து பேசுகிற வார்த்தை உண்மையில் இவரின் தரத்தை நமக்கு வெகுகீழாக காட்டுகிறது.. மிக மோசமான விமர்சனம் இது ..
அதைவிட இவரின் மனநிலை ஏதோ தான் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்கிற போக்கை வெளிபடையாக காட்டுகிறது.. இவர் பட்டியலினத்தவன் என சொல்லிதான் மருத்துவம் பயின்றார்.. அப்போதெல்லாம் தெரியாதா..இதே பட்டியலினத்தவர் தொகுதியில் நின்றுதான் சட்டமன்றம் சென்றார் அப்போதே பொது தொகுதியில் நின்றிருக்கவேண்டியதுதானே.. வாக்கிற்கு மட்டும் தனி தொகுதி வேண்டியிருந்ததா..இப்போது ஏன் கசக்கிறது..
..
உண்மையில் மற்றவரை தாழ்வாக எண்ணும் மனநிலை கொடூர மனப்பான்மை உள்ளவர்களால் மட்டுமே முடியும் சக மனிதனை தாழ்த்தியும் தம்மை உயர்த்தியும் பிடிப்பவர்கள் மனநிலை பாதிக்கபட்டவர்களாகவே பார்க்கவேண்டும்.. உண்மையில் மதவெறி கொண்டு அலைபவன் கொடூரமானவர்கள் என்றால் அதைவிட தன் ஜாதியை உயர்த்தியும் பிற ஜாதியை கீழாகவும் பார்க்கிறவர்கள் வக்கிரமான மிக கொடூரமான மனநிலை பாதிக்கபட்டவர்கள்..
மதவெறியை தூண்டிவிடுகிறவனின் முதல் ஆயுதம் ஜாதியில் நீதான் உயர்ந்தவன் மற்றவர்கள் உன்னிலும் தாழே என புத்திசலவை செய்வதுதான் பிறகுதான் பிற மதங்களின் மீது குதிரை ஏறுவார்கள்..
..
என்னதான் sc பட்டியலினத்திலிருந்து bc/ mbc பிற்படுத்தபட்ட மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பிற்கு சென்றாலும் ஏற்கனவே அங்குள்ளவர்கள் உங்களை இழிவாகவே பார்பார்கள்.. நீங்கள் பட்டியல் இனத்தவர் தாழ்ந்தவராக பார்த்தால் உம்மை பாப்பான் இழிபிறவியாக தான் பார்ப்பார்கள் அதைதான் எங்கள் #பேராசான்_பெரியார்
உயர்ஜாதிக்காரர்களுக்கு நம்ம (sc st bc mbc) எல்லாருமே சூத்திரன் தான் என்பார்..
.
முதலில் மனிதனை சக மனிதனாக சமமானவனாக உயர்ச்சி தாழ்ச்சியற்ற பிறவியாக பார்க்க தொடங்குங்கள்..மனிதம் தானாய் வரும்..இல்லையேல் மனிதாய் பிறந்தும் ஏதும் பயனில்லை..
..
#மனிதாய்_வாழ_பழகு..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment