Tuesday, August 22, 2017
வைகோ...
வைகோ..
நிறைய கோபமுண்டு எங்கெல்லாம் தவறு செய்தாரென்ற பட்டியல் நீண்டது.. சிலநேரம் சமநிலை தட்டி கடும் சொற்களால் இழிச்சொல் பாடியதெல்லாம் மறக்கத்தான் முடியவில்லை..
எங்கோ உயரத்திற்கு செல்லவேண்டியவர் ..தவறான பாதையில் பயணிக்கிறாரே என்று வருத்தமும் .. வழிகேட்டில் நிற்பதை அறியாமல் போகிறாரே.. அரசியலில் இடம்தெரியாமல் போககூடுமே என்ற பதட்டமும் வந்து போகும்..
..
கீழ்தஞ்சை மாவட்டத்தில் திராவிட கழக கூட்டங்களில் இவரைப்பற்றி அதிகம் விவாதித்திருக்கிறோம் அப்போதெல்லாம் ஆசிரியர் கூட்டங்களை விட திமுகவின் கூட்டத்தில் புதுவித ஈர்ப்பை தந்திருக்கிறது..
உள்ளுர் அரசியல் தொடங்கி உலக அரசியலை அதன் விளங்கங்களை விரிவாக பேராசிரியர் போல விளக்கி பேசுவது கண்டு நாடி நரம்ரெல்லாம் சூடேறிய காலம் அது.. திமுக முன்னோடிகள் தஞ்சை பெரியார் மன்னை ஆகட்டும் .. தஞ்சையின் காவலர் கோ.சி.மணி ஆகட்டும் மூன்று மாதத்திற்கு ஒரு கூட்டமேனும் வைகோவை அழைத்து வந்துவிடுவார்கள் ..
கலைஞரின் மீது அப்படியொரு விசுவாசம்..அவரை அறியாமலேயே கலைஞரின் பெரும்தொண்டாய் தான் இருந்தார்..
திடீரென மூளைச்சலவை செய்யப்பட்டு.. கள்ளத்தோணி அவரின் அரசியல் வாழ்வையே புரட்டி போட்டது..
..
நிறைய கருத்து மோதல்களை செய்திருந்தாலும் இவரின் அரசியலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தாலும் திராவிட இயக்க அரசியலில் இவரின் பங்கை .. எடுத்து களைந்துவிடமுடியாது
இன்றைய சூழலில் இவரின் ஆதரவு திமுகவிற்கு தேவையில்லை.. இவரது ஆதரவோடுதான் வெற்றி பெற வேண்டுமென்ற நிலை இல்லையென்ற போதும்.. பாசிச எதிர்ப்பை.. வலிமைபெற செய்ய ஒரு கை கூடுதலாக வந்திருப்பது மகிழ்ச்சி தான்.. இன்றைய சூழலில் அதிமுகவை சிதைத்து பாஜக மறைமுகமாக நுழையும் நேரத்தில் கடுமையாக எதிர்க்க வைகோ போன்ற திராவிட இயக்க செயல்பாட்டாளர்களின் பங்கு அவசியமாகிறது என்பதை மறுப்பதற்கில்லை
ஆனாலும் இவரது முன்பத்திய செயல்கள் நம்பிக்கை தர மறுப்பதையும் சொல்லவேண்டியிருக்கிறது..
..
நெஞ்செல்லாம் பகைக்கொண்டு நடந்தவரை.. கடும் சொல்லால் வசைமாறி பொழிந்தவரை வாசல் வரை வந்து வரவேற்று அழைத்து சென்ற பெருந்தகையாளர் #தளபதி.. கலைஞரின் பிள்ளை என்பதை உணர்த்தியிருக்கிறார்..
#உள்ளத்தால்_உயர்ந்தோர்_வீழ்வதில்லை
..
இனியேனும் வைகோ நல்லதொரு அரசியலை கையில் எடுக்கட்டும் அது எதிர்ப்பாய் இருந்தாலும ஆதரவாய் இருந்தாலும் அதில் நாகரீகம் இருக்கட்டும்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment