Tuesday, May 30, 2017
நல்ல தலைவன்
மு.க.ஸ்டாலின் #இந்தியஅரசியலின்_உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.
டைம்ஸ் ஆப் இந்தியா...
..
நிதானமாக அதைநேரம் கூர்மையாக செயல்படும் தலைவராக திரு.ஸ்டாலின் திகழ்கிறார். கலைஞரின் ஓய்வால் ... இவருக்கு தரப்பட்ட அதீத பொறுப்பை மிக சாதூர்யமாக தொலைநோக்கோடு அவசரப்பட்டு அலங்கோல அவல ஆட்சியை கலைக்காமல் அதன் போக்கிற்கே விட்டு .. தமிழகத்தின் மிகசிறந்த தலைவர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தி இந்தியளவில் தனி கவனத்தை ஈர்த்திருக்கிறார்..
..
ஒரு இரவில் பூத்துவிடவில்லை.. நீண்டகால பயிற்சி மிசா காலந்தொட்டு கட்சிப்பணி.. ஏறக்குறைய ஐம்பதாண்டுகள் மக்களோடு இணைந்து பணியாற்றி.. கிளைக்கழகம் தொடங்கி..இன்று செயல்தலைவராக தன்னை உயர்த்தியிருக்கிறார்.. தமிழக அரசியலில் நாகரீகத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்.. இக்கட்டான நேரங்களில் கூட அமைதியாக அதேவேளை உறுதியோடு செயல்பாட்டை முன்னெடுக்கிறார்.. கலைஞர் உடல்நலிவுற்றவுடன் சிலர் முடிந்தது கதை என இறுதி அத்தியாயம் எழுத நினைத்ததும் .. மாற்றி புதிய அத்தியாயத்தை தொடங்கி எதிரிகளை தூரத்திற்கு விரட்டியடித்திருக்கிறார்.. கலைஞரைப்போல தன்னைச்சுற்றியே தமிழக அரசியலை இயங்கவைத்து ..தேசியளவில் திமுகவை முன்னெடுக்கும் உக்தியை கண்டு கலைஞரின் வழித்தடம் எவ்வளவு அருமையாக பயணிக்கிறதென அரசியல் நோக்கர்கள் உற்று ஆச்சரியத்தோடு கவனிக்கிறார்கள் ..
..
திராவிடம் மிகப்பெரிய தாக்கத்தை தந்திருக்கிறது/ விதைத்திருக்கிறது..
நானிகாம் தலைமுறையை மிக வழிநடத்த சிறப்பான தலைவனை தேர்வு செய்திருக்கிறது..
தேசம் கவனிக்கிறது..
..
#நல்ல_தலைவன்
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment