Saturday, May 27, 2017
தலையாட்டி பொம்மைகள் ..
இந்தியாவை ஆள்வது ஆர்எஸ்எஸ் தான் திருமா..
யார் காரணம் திருமா.. தமிழகத்தில் இந்த கேடுகெட்ட ஆட்சி வருவதற்கு யார்காரணம் திருமா.. காங்கிரஸை தடுத்து மோடி வந்தால் நல்லதென இங்கே கூப்பாடு போட்டது யார் திருமா...
..
திமுகவை தனிப்படுத்த எண்ணி .
வலிய வந்து வாழையிலை விருந்து வைத்தது யார் .. ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டியதை மறந்து வைகோ என்ற கேடுகெட்ட தரகனை நம்பி போனது ஏன்.. வாக்குகளை பிரித்து திமுகவின் வெற்றியை தடுக்க நினைத்து கடைசியில் இருக்கிற கோவணமும் அவிழ்ந்ததே யாரால் வந்தது இதெல்லாம் அறியாதவரா தாங்கள்...
..
அரசியலில் எல்லோரும் வரலாம் வந்து பங்களிக்கலாம் மறுப்பதற்கில்லை அதை மக்கள் ஏற்கிறார்களா தங்களின் பலமென்ன என்பதை அறிந்திருக்க வேண்டாமா.. மீடியா #வெளிச்சம் வரவேண்டுமென்பதற்காக .. சேர்ந்து உண்டு சேர்ந்து திரிந்து கடைசியில் போய் சேருமிடம் தெரியாமல் தடுமாறி நிற்பதேன்.. இங்கே இன மொழி அரசியல் என்ற பெயரில் மறைமுகமாக சிவப்பு கம்பளம் விரித்து பாசிச சிந்தனையோடே வாழ்ந்த ஜெயலலிதாவை மீண்டும் வர வசதியாய் மாறி நின்றதன் விளைவு இன்று கல்கியெல்லாம் நீயும் பொம்மை நானும் பொம்மை என கிண்டல் செய்கிற நிலைக்கு தமிழக அரசியலை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது..
..
அரசியல் கட்சி இதெல்லாம் மீறி தார்மீக பொறுப்பு
இல்லாமல் போனதால்..ஆரிய கூட்டம் நேரடியாக இம் மண்ணில் அதிகாரம் செலுத்த முடியாதென்பதால் அதிமுகவை சிதைத்து சின்னாபின்னமாக்கி மறைமுகமாக ஆட்டுவிக்கிறது தேசியளவில் பாஜக என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இருப்பதைபோல .. அதிகாரத்திற்கு வராமலேயே இங்கேயும் மாமாக்களும் மாமிகளும் திமிரோடு பேசுகிறார்கள்.. உணவில் கூட அரசியல் செய்கிற கொடுமை உலகில் எங்கும் நிகழாதது..
..
தமிழகத்தில் திமுகவை தவிர்த்து எவருக்குமே ஆள தகுதி இல்லை அதுதான் உண்மையும்கூட.. சதா மீடியாக்களில் பேசி திரிவதால் எந்த மாற்றத்தையும் சீமான் வகையறாக்கள் ஏற்படுத்த போவதில்லை.. மக்களின் ஒரே நம்பிக்கை இன்றளவில் திமுக தான் .. அதை பின் துணைக்காவிட்டாலும் புறம் நின்று குத்தும்வேலையை உதிரி கட்சிகள் செய்யாமல் இருந்தால் போதும்...நாட்டிற்கு நல்லது நடக்கும்..
..
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாஜகவை மதவெறி மூடர் கூட்டத்தை ஜாதிவெறி கும்பலை மதம்,மொழி,இன வெறியாளர்களை
வேரோடு சாய்த்திட திமுகவால் மட்டுமே முடியும்...
மாநிலத்தில் மட்டுமல்ல மத்தியிலும் மாற்றத்தை கொண்டுவர .. திமுகவால் முடியும்..
..
#நிச்சயம்_நல்லதே_நடக்கும்…
..
தோழர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment