Saturday, May 6, 2017
தளபதி..
தமிழகத்தை காப்பாற்ற ஸ்டாலினால் மட்டுமே முடியும்!
#சகாயம்_IAS..
..
அவர் சொன்னாரா இல்லையா என்பதைவிட தமிழக மக்களின் எண்ணவோட்டம் அதுவாகதானிருக்கிறது
காரணம் அதிமுக ஆட்சியில் கடந்த ஜெயலலிதாஆட்சியில் இன்று வரை தொடரும் அவலங்கள்.. ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்திருக்கும் அரசு நிர்வாகம்.. வெளிப்படையான கொள்ளை .. முதல்வர் முதல் அதிமுககட்சியின் வட்ட செயலாளர்வரை ஊழலில் திளைத்து நிற்கும் கொடுமை.. உச்சநீதிமன்றமே தண்டித்தும்.. நீண்ட சட்டபோராட்டத்தில் நிறைய தடைகளை மீறி ஜெயலலிதா என்ற பிம்பம் சரிந்தது கிரிமினலாக கொள்ளைக்காரியாக .. மக்கள் மனதில் உருவெடுத்திருப்பதும்.. அதிமுக என்ற பெயரளவிலான திராவிட கட்சியை பாஜகவில் அடகுவைத்துவிட்டு தங்களை காப்பாற்றிக்கொள்ள அதிமுக இரு அணிகளும் துடிப்பதும்.. நான் யோக்கியன் அவன்தான் அயோக்கியன் ..என மாறி மாறி எச்சிலை துப்பிக்கொள்வதுமாக ஒட்டுமொத்தமாக அதிமுக செய்த செய்துக்கொண்டிருக்கிற அவல ஆட்சியில் மக்கள் வெதும்பிப்போய் இருக்கிறார்கள்..
..
தமிழகத்தை பிடித்த கோரமுகத்தின் தாண்டவத்தை மக்கள் இனியும் பொறுப்பதில்லை என்ற முடிவிற்கு வந்து வெகுநாட்களாகிவிட்டது ..அவர்கள் முன் இருக்கும்,ஒரேயொரு option விருப்பம்.. திரு.ஸ்டாலின் தான்.. வெகுதூரத்திற்கு ஆட்களே கண்ணில் படவில்லை.. தூரத்தில் தெரிவதுபோல் தோன்றினாலும் அது கானலாய் ..இருக்கிறது.. மதமும் சாதியும் வெறிக்கொண்டு அலைகிறது..மக்களோ நிதானமாய் சிறியதொரு புன்சிரிப்போடு நகைக்கிறான்..திரும்பி பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை ..
இதுதான் யதார்த்தம்..
..
#தளபதி_ஸ்டாலின் காலத்தின் கட்டாயம்.. அவர் மிகவும் பக்குவப்பட்டிருக்கிறார்.. மிக நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்கிறார்.. தோல்விகள் அவரை சங்கடபடுத்திடவில்லை மாறாக நல்ல அனுபவத்தை தந்திருக்கிறது.. நீண்டநாட்கள் பொதுசேவையில் தன்னை பதப்படுத்திருக்கிறார்.. எதிர்க்கட்சி தலைவராக மிக சதூர்யமாக அதே நேரம் அறவழியில் நெறிபிறழாமல் பணிகளை செய்கிறார்.. இதோ அரசு தானே செய்வேண்டுமென்றில்லாமல் சைதையில் தூர்வாருகிறார்.. மக்களோடு மக்களாக இணைந்து செயலாற்றுகிறார்..
..
மிக சிறந்த நல்ல தலைவனை காலம் தந்திருக்கிறது.. தமிழகமக்கள் பற்றிப்பிடித்துக்கொள்ளவேண்டும்..
ஆம்
#ஸ்டாலின்_கரத்தை_பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்
#நலம்பெறுவீர்_நாடும்_நலம்பெறும்..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment