Thursday, January 19, 2017
தேவை அவசரசட்டம்
Hot topic..
சூடான செய்திகள்.. ஜல்லிக்கட்டு போராட்டம்
நாம் தமிழர்க்கட்சி சீமான் தனியாக போராட்டம் என்கிறார். திமுக நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் உணர்விற்கு மதிப்பளித்து மாற்றிவைக்கிறது.. மோடி அவசரசட்டம் இயற்ற வழியில்லையென்கிறார்..
..
முப்பதுக்கு மேற்ப்பட்ட அமைப்புகளின் கீழ் மெரினாவில் மாணவர்கள் குவிந்திருக்கிறார்.. தமிழகமெங்கும் மாணவர் தன்னார்வத்தோடு திரண்டிருக்கிறார்கள்.. ஏன் இதை பதிவு செய்கிறேன் எனில் மாணவர் போராட்டம் சரியான திசையில் பயணிக்கிறது அதை மடைமாற்ற சீமான் போன்றவர்கள் தனிஆவர்த்தனம் செய்கிறார்கள்
தரகர் வைகோ மாணவர்கள் போராட்டத்தால் பயனில்லை என்கிறார் .. ஈழத்தமிழ் வியாபாரிகள் திருமுருகன் போன்றோர் நழுவுகிறார்கள் மற்றவர்களின் பேச்சையே காணோம்.. அவர்களுக்கெல்லாம் நோக்கம் உணர்வல்ல மாறாக
சம்பாதிக்கவேண்டும் இங்கே எதுவும் தேறாது என்பதால் மாறி நிற்கிறார்கள்..
..
திமுக நீட்தேர்விற்கான போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு மாணவர் போராட்டத்தின் நோக்கம் சிதையாமல் உதவுகிறது ஆனால் அதிமுகவினரும் பாஜகவினரும் மாறி மாறி கையை காட்டிக்கொண்டு ஒருவரையொருவர் குற்றம் சாட்டியும் தங்களின் நடவடிக்கைக்கு துணைநிற்பதாக சொல்லி நழுவுகிறார்கள்
அதுமட்டுமல்ல.. முதல்வரை தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்து பதாகைகள் .. இது எந்தவகையான போராட்டமென தெரியவில்லை.. ஒருமாணவர் எங்களுக்கு அவசரசட்டம் வேணாம் எங்களுக்கு எங்கள் உரிமை நிலைநாட்டபடவேண்டுமென்கிறார்..
இதெல்லாம் தெளிவில்லாமை திட்டமிடப்படாததால் வந்தது.
..
அரசியல்வாதிகள் வேண்டாமென்பது சரி ஆனால் இந்த போராட்டம் அரசியல் ஆக்கபடவேண்டும் இல்லையேல் உயிர்தெழாமல் முடங்கி போகும் அல்லது முடக்கப்படும். முப்பதற்கு மேற்பட்ட மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைக்கபடவேண்டும்..போராட்டம் இன்னமும் செறிவூட்டப்படவில்லை Concentration..
மாறாக திசைக்கொன்றாக மாறி வீச தொடங்கியிருக்கிறது எச்சரிக்கை..
மிக எளிதில் பலவீனமடைய போதுமானவையாக இருக்கிறது தற்போதைய நிகழ்வுகள்
..
2009 ல் திமுக அவசர சட்டமியற்றி அதை அரசிதழில் வெளியிட்டது அதேபோல் மீண்டும் சட்டமியற்றி அரசிதழில் வெளியிடலாம்.. சினிமாகாரர்களும் ஈழவியாபாரிகளும்,செல்பி எடுப்பதற்காக வந்த பெருந்தகைகளையும் முதலில் புறக்கணியுங்கள்..
சரியான நேரமிது தவறினால்.. தமிழகம் மிகப்பெரிய இழப்பை சந்திக்கநேரிடும்..
..
#ஜல்லிக்கட்டு_எமதுபண்பாடு…
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment