Monday, November 21, 2016

விவரக்கேடு

திமுகவின் தற்போதைய தலைவர் யார் திமுக ஜனநாயக இயக்கமா... நடிகர் விஜயகாந்த் கேள்வி.. ஒற்றைவரியில் கூட இதற்கு பதில் இருக்கிறது..முதலில் கேள்வி கேட்பதற்கான தகுதியோடு நிற்கிறாரா என கேட்க வேண்டியிருக்கிறது..யார் வேண்டுமானாலும் கேள்வியை /சந்தேகங்களை எழுப்பலாம் .. ஆனால் தன்னை அரசியல் தலைவராக முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் அறிமுகம் செய்துக்கொண்ட திரு.விஜயகாந்திற்கு அரசியல் தலைவருக்கான தகுதிகளோடு செயல்படுகிறாரா.. அல்லது செயல்பட்டாரா என்ற கேள்வி எழும்.. .. முதலில் திமுக ஜனநாயக இயக்கமா என கேள்வி எழுப்புகிறார் அதற்கு நாங்கள் பதில் சொல்வதைவிட தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய திரு.ஷேசன் .. இந்தியாவிலேயே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் முறைப்படி தேர்தல் நடத்தி ஜனநாயத்தோடு இயங்குகிற கட்சிகள் என்றால் அது இடது கம்யூனிஸ்ட் மற்றும் #திமுக தான் என்றார்.. முறைப்படி தேர்தல் நடத்காத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறதென்றார். எந்த கட்சியும் தேர்வு செய்து கொள்கிறார்களே தவிர ஓட்டளித்து தேர்தெடுக்கபடுவதில்லை.. .. கட்சித்தலைவர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கவேண்டிய அவசியமில்லை..தகுதியானவர் கேட்டால் பதில் அளிக்கலாம்.. திடீர்திடீரென்று அரசியல் பேசுவதும் சிலகாலம் நான் சிங்கப்பூரில் இருந்ததால் நாட்டிநடப்பை பத்திரிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளாததால் கருத்து சொல்ல முடியவில்லை என்கிற அரைகுறைக்கெல்லாம் திமுக தலைவர் யாரென்று தெரியாது தான்.. திமுக தலைவரை ஒற்றை இரவில் நியமித்துவிட முடியாது அதெற்கெல்லாம் பொதுக்குழு அங்கீகாரம் வேண்டும்.. யார் தலைவர் என்பதைப்பற்றி விஜயகாந்த் கவலைபடவேண்டாம்.. .. அன்றாட அரசியல் கூட அறிந்துவைத்திராத அரைகுறையாய் முளைத்த விதைப்போல.. சற்றென்று தலைசாய்ந்து போய் விட்ட கட்சியின் தலைவர் .. சினிமாவில் கதாநாயகன் வேசம் கட்டினால் அரசியலிலும் நாயகனாகலாமென்ற பழைய வழியை பின்பற்றி சட்டென்று உயரத்தை அடையலாமென்ற அவசரகோலம் .. கடைசியில் #கட்டிவச்சகாசும் போய் கரைந்துக்கொண்டிருக்கிறார்.. அரசியலின் அரிச்சுவடியை கூட ஒழுங்காக படித்திடாத/அறிந்திடாத அரசியல் பல்கலைகலைகழகத்தை பார்த்து கேட்கிறார்.. .. #அரசியல்அறியாமை_விவரகேடு …

No comments:

Post a Comment