Thursday, March 29, 2018
தண்ணி கொடு இல்லையெனில் தனியே விடு
காவிரி மேலாண்மை வாரியம் ..
கடைசியில் நாம் எல்லாம் நினைத்ததுதான் நடந்தது .. கர்நாடக தேர்தலையொட்டி பாஜக ஆடிய நாடகம் இங்கே உள்ள அரசியல் கழிவுகள் ஆட்சியில் இருப்பதால் பெரிதாக எதுவும் பிரச்சனை வராது மீறிப்போனால் நீதுமன்ற அவமதிப்பு வழக்கு அது விசாரணைக்கு வரும் போது ஏதேனும் காரணத்தை சொல்லி அதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் .. என்ற தைரியத்தில் தமிழக மக்களை இந்த பாஜக அரசு வஞ்சித்துவிட்டது.. அவர்களுக்கு தெரியும் தமிழகத்தில் இழப்பதற்கு ஒன்றுமில்லை ..இழக்க என்ன இருக்கிறது .. ஆனால் கர்நாடகத்தில் பெரும் நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ளலாமென்று எண்ணி காய் நகர்த்தியிருக்கிறது...
..
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இருக்கிறவரை எதையும் சாதித்துக்கொள்ளலாம் ..
இவரது தீர்ப்புகள் பெரும்பாலும் பாஜக கட்சிக்கு ஆதரவாக உள்ளது. மேலும் பல வழக்குகளில் அவருக்கு சாதகமான நீதிபதிகளை நியமித்து வாழக்கின் போக்கை தான் விரும்பியவர்களுக்கு சாதகமா மாற்றினார் என்ற குற்றசாட்டு நிலுவை உள்ளது ..
எவ்வளவு பெரிய அநீதி தவறு செய்தவர்கள் கூட இவரது தீர்ப்பின் மூலம் மாபாதக குற்றங்களில் இருந்து தப்பித்து கொண்டனர்..
அதனால் நீதிமன்ற அவமதிப்பைப் பற்றி பாஜகவிற்கு கவலையில்லை..
..
இனி என்ன செய்யவேண்டும்.. எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் அறிவித்துவிட்டு காலம் கடந்து நாள்குறித்து அல்ல தமிழகம் ஸ்தம்பிக்க வேண்டும் அரசு நிலைகுலைந்து போகவேண்டும்... நீதிமன்ற வழக்குகளைப்பற்றி கவலைபட தேவையில்லை அரசே நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத போது நமக்கு என்ன சங்கடம்.. கடைசிவரை நம்பவைத்து கழுத்தறுத்த கயவர்களை ரோட்டில் இறங்கவிடாதீர்கள்..
பதவிக்காக மலத்தை கூட தின்னும் இந்த கயவர்களை விரட்டுங்கள் .. பேசிக்கொண்டே இருந்தால் தானாக கனியுமென நம்பி பயனில்லை .. "தண்ணியை கொடு இல்லையேல் தனியே விடு" என கேட்க வேண்டிய சூழலுக்கு நம்மை இட்டுச்செல்கிறது மத்திய அரசு இந்திய ஒன்றியத்தில் தமிழகத்திற்கு இனி நியாயம் கிடைக்குமென நம்புவது முட்டாள்த்தனம் .. இந்த கயவர்கள் பதவிக்காக எதையும் இழக்க துணிந்தவர்கள் எதையும் காவுகொடுக்க தயங்கமாட்டார்கள்.. நாடாளுமன்றத்தில் அசுரபலம் .. ஐம்பது எம்பிக்கள் கதறவிட்டிருக்கலாம் செய்யமாட்டார்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாய் இவர்கள் கொள்ளையடித்தது நிற்கிறது..
..
இனியும் பொறுப்பதற்கில்லை
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment