Wednesday, November 8, 2017

கருப்புபணம்..

எங்கே போனார்கள் என்று பார்க்கிறேன்.. யாரையும் காணோம்.. புதிய இந்தியா பிறந்தது வாழ்த்துகள் மோடி ஜி என்ற ரஜினி தொடங்கி இன்னமும் நம்பிக்கையிருக்கிறது என கடைசியில் மன்னிப்பு கோரும் கமல் வரை.. நல்ல வசனத்தை கேமிராவிற்கு முன்பு பேசுவதோடு நிறுத்தியிருக்கலாம்.. இடையில் காமெடியன் வேறு நோட்டில் சிப்ஸ் இருக்கு கள்ளபணத்தை கண்டுபிடித்துவிடலாமென மக்களிடம் கூத்தடித்தவர்கள்.. எந்தவொரு விடயத்தையும் அறிந்திராமல் கருத்து சொல்வது எவ்வளவு ஆபத்தானதென்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள்.. அப்படிதான் எல்லோரையும் நம்பவைத்தார் மோடி. இதோ இனி கள்ளநோட்டோ கருப்புபணமோ இந்தியாவில் இருக்காதென்றார்.. அப்போது தெரியவில்லை ஒட்டுமொத்த கருப்பையும் அமிர்ஷாவிடம் கொடுத்து வெள்ளையாக மாற்றிக்கொள்ளமுடியுமென்று .. .. ஆம் கவிஞர் மேத்தா வரிகளில் சொல்லவேண்டுமெனில்.. #கொள்ளை நோட்டுக்களும் கள்ளநோட்டுக்களும் குளிர்சாதன அறையில் கூடி பேசுகின்றது பாவம் நல்ல நோட்டுக்கள்தான் அலைகின்றன நடுத்தெருவில்.. .. ஆம்.. சேகர்ரெட்டி போன்றவர்களால் ₹2000 கோடிகளை பெற முடிந்தது சாமானியன் ₹4000 ரூபாய் வாங்க கையில் கருப்புமை வைக்கபட்டது.. இந்திய பொருளாதாரம் இறங்குமுகமாகுமென டாக்டர் மன்மோகன்சிங் நாடாளுமன்ற உரையாற்றியபோது சிலர் காங்கிரஸிற்கெதிராக கம்பு சுத்தினார்கள்.. அறுபதாண்டுகள் பாழாக்கிவிட்டது என்றெல்லாம் சொல்லி கடைசியில் இந்திய பொருளாதாரம் சரிவை சந்திக்கிறது.. பித்துக்குளி தலையில் கிரீடம் சூட்டியதன் விளைவை மக்கள் அனுபவபூர்வமாக உணர்கிறார்கள்.. பாஜகவிலேயே இருபிரிவினர் .. சிலர் மோடியையும்.. மோடியின் ரசிகர்கள் ஆர்எஸ்எஸையும் கைகாட்டி தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள் மோடியின் அவசரத்தனமென்று சிலரும்.. மோடியை இயக்குவதே பாசிச கும்பல்தானென சிலரும் மாறி மாறி கதைத்து கைநழுவ பார்க்கிறார்கள்.. .. எங்கே போனது கருப்புபணம்.. நல்ல பணமாய் மாறி நம்மை பார்த்து சிரிக்கிறது..இதில் கொடுமை.. திரை உலகத்தை சேர்ந்த நடிகர்கள் கலைஞர்கள் மோடியை உச்சிமுகர்ந்து புகழ்ந்ததுதான் வேடிக்கை.. ரஜினி,கமல், சூர்யா தனுஷ்.. இவர்களெல்லாம் எவ்வளவு சம்பளம் வாங்கினார்களோ அதற்கு சரியாக வரிகட்டியவர்கள் ..நம்பவேண்டும் .. 2014 வருமான வரித்துறை அளித்த தகவல்படி .. ரஜினி சம்பளம் ₹4 கோடி கமல் 3. .. இதுதான் இவர்கள் அந்த ஆண்டில் சம்பளமாக பெற்று நடித்தார்கள் இந்தளவிற்குதான் அவர்கள் வருமானமிருந்தது என நம்பவேண்டும் கருப்புபணமா அதெல்லாம் என்னவென்றே தெரியாதவர்கள்.. இவர்கள்தான் மோடியின் கருப்புபணயொழிப்பை .. புதிய இந்தியா பிறந்ததாக கொண்டாடியவர்கள் .. .. கருப்புபணமோ குளுகுளு அறையில் நல்ல பணமோ நடுத்தெருவில்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment