Wednesday, November 15, 2017

மனிதகழிவை மனிதனே அள்ளும் கொஞ்ம் செயலை.

தூய்மை இந்தியா திட்டத்தால் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலை உருவாகியுள்ளது.. மனித கழுவை அள்ளும் பணியில் தாழ்த்தப்பட்ட மக்களையே பயன்படுத்துகிறது.. என ஐ.நா குற்றசாட்டு .. .. இங்கே ஒன்றை நாமெல்லாம் கவனிக்கவேண்டும்.. பிரதமர் அறிவித்த ஒரு திட்டம் தோல்வி என்பதல்ல ..அதை மீறி இதிலுள்ள சூழ்ச்சியை நாம் கவனிக்கவேண்டும்.. பரம்பரை பரம்பரையாக அதே தொழிலை செய்கிறவர்களை... அதிலிருந்து மாறி கல்வி அரசு வேலை என்று நகர்த்தாமல் மலக்குழியிலேயே வைத்திருக்கும் வர்ணாசிரம திட்டம் நமக்கு புலப்படும்.. .. பிரதமர் மோடி பேசும் போது தொடர்ந்து ஒரு சமூகம் பீ அள்ளிக்கொண்டிருக்கிறதென்றால் இதிலிருந்து வெளியேற மறுத்து அதை செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதை புனிதமாக கருதியிருக்கவேண்டுமென்கிறார்.. எவ்வளவு அயோக்கியத்தனமிது... சத்தியமூர்த்தி தேவதாசி முறை ஒழிக்கவேண்டுமென்ற முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் கேட்டபோது அது தெய்வதொண்டென்றாரே .. அதைப்போல மலம் அள்ளும் சமூகத்தை புனித பணி என கூறி அவர்களை அதிலிருந்து வெளியேற விடாமல் செய்கிறார்.. .. எத்தனையோ நவீன உபகரணங்கள் வந்துவிட்டபிறகு மலத்தை அள்ள மனிதனையே பயன்படுத்துவதும் அதை அரசாங்கமே ஊக்குவிப்பதும் கேடுகெட்ட செயல்.. அவனவன் குலத்தொழிலை அவனவன் தான் செய்யவேண்டுமென்ற மநுநீதியை இங்கே நிலைநிறுத்த பாசிச அரசு முயல்கிறது.. தெய்வதொண்டு புனிதமென சொல்லி அந்தந்த நிலையிலேயே வாழ்ந்து மரிக்கவேண்டுமென அரசே சொல்வது #அரசபயங்கரம்.. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டுவரபடும் திட்டங்களை ஆய்ந்தால் அவர்களின் சூழ்ச்சி நமக்கு புலப்படும்.. .. மனித கழிவை மனிதைக்கொண்டே அள்ள வைப்பதும் அதை ஒரு பிரிவினர் மட்டுமே செய்யவேண்டுமென சொல்வதும் திட்டமிட்ட சதி.. ஏன் மற்றவர்களை மனித கழிவை அகற்ற பயன்படுத்தகூடாதா.. ஒரு குறுப்பிட்ட பிரிவினர்களை மட்டுமே பயன்படுத்துவதாக ஐ நா கண்டித்திருக்கிறது.. மீண்டும் மநுதர்ம முறைய கொண்டுவர பாஜக அரசு முயல்கிறது .. தாழ்ந்தவன் உயர்ந்தவன் இவன் இதைதான் செய்வான்.. இவன் இதை செய்தே ஆகவேண்டுமென சொல்வது மனித அநீதி அல்லவா.. .. தூய்மை இந்தியா என்பது புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதல்ல.. போஸ் கொடுத்த நடிகர்களெல்லாம் எங்கே போனார்கள் அளவிற்கதிகமாக மோடியை புகழ்ந்ததை தவிர வேறென்ன பயன் கிட்டியது.. இங்கே எல்லோரும் நடிகர்களானோம்.. .. மனிதகழிவை மனிதனே அகற்றும் கொடுமைக்கு முடிவுகாண்போம்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment