Tuesday, October 17, 2017
சாதியற்றவர்கள்
#சாதியற்றவர்கள்..
கேரள அரசு சாதி மத மறுப்பு திருமணம் செய்துக்கொண்டவர்களை சாதியற்றவர் என்ற நிலையை உருவாக்கி இடஒதுக்கீடு அளிக்கப்படும் ..நல்ல செய்தி
கலப்பு திருமணம் என்பது தவறு மனிதனும் மிருகமும் திருமணம் செய்துக்கொள்ளவதில்லை .. மாறாக சாதியை மதத்தை மறுத்து பிற சாதி மத சேர்ந்தவர்களோடு வாழ்வது சாதிய கட்டமைப்பபை உடைக்கும்.. சம நீதி வெளிபடும்..
..
கேரளாவில் இதெல்லாம் சாத்தியபடும்.. அங்கே சாதி மீறல்கள் ஒரு பிரச்சனையல்ல அவர்களின் விருப்பம் தனியுரிமை அவர்களின் தனிப்பட்ட (Personal) விடயங்களில் யாரும் தலையிடுவதில்லை நிறைய மத மறுப்பு திருமணங்கள் அங்கே சாதாரணம்.. Maturity முதிர்ச்சியான போக்கு கைரளியர்களிடம் உண்டு..
கோட்டயம் மலப்புரம் பாலக்காடு என குறிப்பிட்ட மாவட்டங்களில் மதம் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தினாலும் அங்கும் மதத்தை மீறிய திருமணங்கள் நடந்துக்கொண்டுதானிருக்கிறது..
தமிழகத்தில் நடப்பதைப்போல சாதிய கொலைகளை (அதென்ன கௌரவகொலை- சாதிய கொலையென்றுதான் சொல்லவேண்டும்) நடப்பதில்லை அரிதாக சில வேறு சில காரணங்களுக்காக நடந்திருக்கலாம் சாதிய மறுப்பு செய்துக்கொண்டார் சாதியிலிருந்து தள்ளிவைக்கும் பழக்கமெல்லாம் அங்கே வேகாது ..
சபரிமலைக்கு சென்றாரென்பதற்காக யேசுதாஸை மதத்திலிருந்து வெளியேற்றி பின் அசிங்கபட்ட சம்பவமெல்லாம் உண்டு..
..
தமிழகம் போன்ற சாதிய ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் இன்னும் சிலகாலம் பிடிக்கும் ஆனால் நல்ல தொடக்கத்தை தோழர்.பிரணாயி விஜயன் துவங்கி வைத்திருக்கிறார்.. கம்யூனிஸ்ட் கட்சி இப்போதுதான் சரியான பாதையில் செல்கிறது .. அதன் தலைமையில் பார்பனர் ஆதிக்கம் அதிகமிருந்தது இப்போது அது தளர்ந்ததால் இது போன்ற முற்போக்கு கருத்துக்கள்/விடயங்கள் பேச/விவாதிக்க செயல்படுத்த முடிகிறது.. திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ள தொடங்கியதிலிருந்தே கர்நாடகம் கேரளமென தேசியளவில் மாறுப்பட்ட கருத்தை சொல்ல தொடங்கியிருப்பது நல்ல ஜனநாயகத்தை விதைக்கிற செயல் குறிப்பாக மதவெறியை உள்ளே விடாமல் விரட்டியடிக்க .. அவர்கள் எதை கொண்டு மக்களை பிரித்தாள நினைக்கிறார்களோ அதையே இல்லாதாக்கினால் அவர்கள் தளர்ந்து போவார்கள்..
தலித்தை இடைசாதிகாரனையும் பிரித்து சாதிவெறியை ஊட்டி குளிர்காய நினைக்கும் ரத்தம் செத்த கூட்டம் தளர தொடங்கியிருக்கிறது.. சாதி சொல்லி பிரித்தர நம்மை முட்டாளாக்கியவர்கள் விரட்டியடிக்கபடவேண்டும் நல்லதொடக்கமிது..
#மகிழ்ச்சி
..
#திராவிடம்
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment