Monday, October 23, 2017
ரெய்டு
ரெய்டு..
மத்தியில் ஆள்வோருக்கு ..
தங்களோடு
இணங்காதவர்களை மிரட்ட பயன்படுத்த பெரிதும் பயன்படுவது.. இதில் காங்கிரஸ் பாஜக என்றெல்லாம் இல்லை என்ன பாஜக எல்லோரையும் நேரடியாகவே மிரட்ட பயன்படுத்துகிறது காங்கிரஸ் கொஞ்சம் ராஜதந்திரத்தை பயன்படுத்தும் அவ்வளவுதான்..
..
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகிய மறுநாளே தளபதி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தது.. உதயநிதியின் ஹம்மர் கார் முறைகேடாக வாங்கபட்டதாக ஊடகங்கள் செய்திகூட வெளியிட்டன .. காலைநேர உடற்பயிற்சிக்காக தளபதி நடைப்பயணம் சென்றிருந்த நேரத்தில் அதிகாலையில் ரெய்டு.. வீட்டுக்கு வந்த தளபதியார் காரை வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டுபோய் விட சொன்னார் உங்கள் சந்தேகங்கள் தீர்ந்த பிறகு கொண்டுவந்து தந்தால் போதும் என கூறி காரை அலுவலகத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.. வேறு வழியின்றி அதிகாரிகளே காரை திருப்பி கொண்டுவந்து தந்துவிட்டு போனார்கள்...
..
இப்போதெல்லாம் அரசியலுக்காக அல்ல எதிர்கருத்தை சொன்னாலே வருமானவரி சோதனை தான் ..
இதனால் பெரிதாக சாதித்துவிட முடியாது மிரட்டலாம் ..அல்லது பணியவைக்கலாம் மனஉளைச்சலை தரலாம்.. அடக்கிவாசிக்க மறைமுகமாக எச்சரிக்கலாம் வேறொன்றும் செய்துவிட முடியாது ..
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெயலலிதாவே 15 ஆண்டுகளுக்கு பிறகு .. வரியும் வட்டியும் அபராதமும் சேர்த்து செலுத்துவதாக சொல்லி வழக்கிலிருந்து வெளியே வரவில்லையா.. தண்டனையெல்லாம் கிடையாது..
இதெல்லாம் நாடகம் இந்த சட்டத்தால் ஒரு மசிரையும் புடுங்கமுடியாது.. அதிகபட்சமாக அபராதம் ..அவ்வளவுதான் ஏனெனில் நிறைய வழக்குகளில் வருமானவரித்துறை அபராதத்தை வாங்கிக்கொண்டு தண்டிக்காமல் விட்டிருக்கிறது..
ஆனால் சோதனை நேரத்தில் பெயரை கெடுக்க உதவும்.. 2ஜியில் கூட வளைச்சு வளைச்சு சோதனை செய்தும் ஒரு ஆதாரத்தை கூட எடுக்க முடியவில்லை.. ஆதாரங்களை எடுத்த வழக்குகளிலே கூட இதுவரை தண்டிக்கபட்டதாக அறிவில்லை.. ஆனால் அந்த நேரத்தில் பெயரை கெடுக்க முடியும் ஊடகங்கள் அதை பெரிது படுத்தும்
அவ்வளவுதான்..
..
விஷால் அலுவலக ரெய்டு விஜய்க்கு முன்னறிவிப்பு..அவ்வளவுதான் மானகெட்டுப்போய் திருட்டுத்தனமா நெட்ல பார்த்ததாக சொன்னவரை வெட்கமில்லையா என கேட்டதற்கு சின்ன மிரட்டல் இதெல்லாம் ஒன்னுக்கும் உதவாது ஆனாலும் சிலர் வாய் மூட இது பெரிதும் உதவும் நமக்கேன் வம்பென சிலர் மாறி செல்ல உதவும் அதுதான் அவர்களுக்கு வேண்டும்..
..
வருமானவரித்துறை ஆளும் கட்சியின் கைப்பாவை(பொம்மை)
The income tax department is the slave of governance
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment