Thursday, October 19, 2017
எம் இனத்தின் ஈரம்
தி இந்து
தேர்தல் வந்தால் திமுக 71% வாக்குகள் பெறுமென சொல்கிறது.. இந்து ஆரம்பகாலங்களில் திராவிட எதிர்ப்பை அதிகமதிகம் பதிவு செய்திருந்தாலும் திரு.ராம் வரவிற்கு பிறகான பார்வை நிறைய மாற்றங்களை கொண்டது.. அவர் நாத்திகராக தன்னை காட்டிக்கொண்ட போதும் அதையெல்லாம் மீறி இந்த மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு நம்மை பார்த்து சிரித்த காலமுண்டு..
தெற்கிலிருந்து ஒரு சூரியன் நல்ல தொடக்கம் நம் எதிரியாக அறியபட்டவர்களையே நாம் பேச வைத்திருக்கிறோம்.. இது திராவிடத்தின் வெற்றி..
இனியும் நிறைய வருவார்கள்.
..
திரு.ஸ்டாலின் தவிர்க்கமுடியாத தடையமுடியாத பெரும் சக்தியாக வளர்ந்து வருகிறார்.. மிக நீண்ட வரலாறு கொண்டிருந்தாலும் அதிக காலம் பிடித்திருக்கிறது.. தன்னெச்சையாக சுழல..
ஆலமர நிழலில் எதுவும் வளராதெனிபதை போல கலைஞரின் நிழலில் நின்று கொண்டிருந்ததால் இவருக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரங்கள் தாமதமானதே தவிர ..அது கூட சிறந்த பயிற்சிகாலமாக கருதி மக்கள் பணியாற்றினார்.. கலைஞரின் வயதும் உடல்நலிவும் அவரை ஓய்வில் நிறுத்திய போது சிலர் அவ்வளவுதான் திமுக என நினைத்தனர்.. உடனே பொதுக்குழுவை கூட்டி செயல்தலைவராக பொறுப்பேற்று இயக்க செயல்பாட்டை முன்னெடுத்தார்.. கலைஞரைப்போல இல்லை என்ற விமர்சனம் வந்தது கலைஞரைப்போல எங்கு தேடினும் கிடைக்காது கலைஞர் கலைஞர்தான் ஆனால் அவர் ஆற்றிய பணியை முன்னெடுக்க சரியான பாதையில் கொண்டுச் செல்ல சரியான நபரை இயக்கம் அடையாள காட்டியது பாருங்கள் அங்குதான் திராவிடத்தின் வேரின் ஈரம் இன்னமும் இருக்கிறதென்பதை காட்டுகிறது.
..
தி மு கழகம்.. இனத்தின் மொழியின் ஈரப்பதம்..
ஆம் அளவில் சிறது குறையலாம் சிலநேரம் ஈரப்பதம் அதிகமாகலாம் ஆனால் அந்த ஈரப்பதம் இல்லாமல் போனால் வறண்டு மலடாகிப்போகும் எம் இனம்.. நிறைய முறை தோற்கடிக்கிறார்கள் அதே வேளை முன்னெப்போதுமில்லாத அளவில் வெற்றிப்பெற வைத்திருக்கிறார்கள்.. ஆம் சிலநேரம் தோல்வி வெற்றியோ ஆனால் கைவிடவில்லை.. மண்ணின் ஈரப்பதத்தைப்போல கூடுதல் குறைவு அவ்வளவுதான்..திமுக தமிழகத்தின் மைய சக்தி அதை சுற்றிதான் பிற கட்சிகள் இயங்க முடியும் இப்போது கூட ஆளும்கட்சியை சகிக்கமுடியாத போது கூட நம்மைபற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. முன்பு கலைஞரை மய்யபடுத்திவர்கள் இப்போது தளபதியாரை சுற்றியே அரசியல் செய்கிறார்கள்.. அவர்களும் பிழைக்கவேண்டுமே.. தன்னை சுற்றியே அரசியலை இயங்க செய்தவர் கலைஞர் ..
அதையே பின் தொடர்கிறார்..
..
#இனி_தளபதி ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment