Thursday, October 19, 2017
வயிறு எரிவோரே..
கலைஞர் இல்லாமல் கட்சி நடத்த முடியாதா ..
வயதான காலத்திலே ஏன் தொந்தரவு பண்ணுறேள்..
கலைஞர் வந்துவிட்டார் இனி வெற்றிடம் இல்லை என பத்திரிக்கையாளர் மாலன் ..
நிறைய புலம்பல்கள் கேட்கிறது..
இந்த வயதிலும் உங்களை புலம்ப வைத்திருக்கிறார் பாருங்கள் அதில்தான் எங்களின் வலிமை தெரிகிறது..
..
முதலில் கலைஞரை தொந்தரவு செய்வதல்ல வயதானால் வீட்டிலேயே முடக்கிவைத்து .. அல்லது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் கூட்டத்திற்கு இதெல்லாம் தெரியாது .. வாஜ்பாயை அத்வானியை புறம்தள்ளியதை போல எங்களால் முடியாது.. ஏனெனில் நாங்கள் நன்றி மறக்காத வம்சம்...
கலைஞரை தொந்தரவு செய்வதல்ல.. மூத்தோரை மதித்தல் ஆலோசனை பெறுதல் எப்படி எங்ஙனம் பகை தீர்க்கவேண்டுமென கேட்டு அதன்படி செய்தல்.. அதனால்தான் அவரை பாதுகாத்து வருகிறோம்.. இன்னமும் அவர் பெயர் கேட்டால் நடுங்குகிறார்களே அப்போது தெரியவில்லையா எங்கள் இனத்தின் #பெரும்தலைவனென்று..
பகை முடிக்க எங்கள் கையிலுள்ள பேராயுதம் கலைஞர்..
..
கலைஞர் இல்லாமல் கட்சியை நடத்த முடியாதா என்போரே இதோ இப்போது கூட மாவட்ட செயலர் கூட்டம் பேராசியர் பெருந்தகை தலைமையில் நடைபெறுகிறதே.. இதோ நவம்பர் 7 முதல் எழுச்சி பயணம் துவங்குகிறார் #தளபதி அவர்கள் .. தினமும் மக்கள் பிரச்சனையை கேட்டு மக்களோடு நின்று போராடி .. களப்பணியை தானே நேர்நின்று நடத்தும் தளபதியார் .. செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறது திமுக.. இப்போது கூட எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சியை விமர்சிப்பதை விட்டுவிட்டு தளபதியை திமுகவை விமர்சிப்பதிலிருந்தே தெரியவில்லையா .. தலைமை அவர்தானேன்று..
வீறுகொண்டு செயலாற்றுவது கண்டு பதறுகிறதே.. புரியவில்லையா.. புரிந்தும் குழப்பம் விளைவிக்க எண்ணி நீவிர் செய்யும் சூழ்ச்சி புரிகிறது..
அதனால் தான் மாலன் கலைஞர் வந்துவிட்டார் வெற்றிடமில்லை என கேலி செய்கிறாராம்.. எப்போது இருநிதது வெற்றிடம் .. அண்ணா மறைவிற்கு பிறகு கூவி பார்த்தீர் மகோராவை கொம்பு சீவியும் பார்த்தீர்.. கலைஞர் உடல் நலிவுற்ற போது முடிந்தது திமுக என்றெல்லாம் சொல்லி பார்த்தீர்.. ஒன்றும் நடக்கவில்லை காரணம் இங்கே கொள்கையால் இணைந்த கூட்டமிது.. பணத்தை பவுசை, காட்டி கூடிய கூட்டமல்ல.. மதம் சாமி ஜாதி என பொய்யான கட்டமைப்பில் உருவான இயக்கமல்ல.. அடிமட்டத்தில் நிற்பவனை .. உயர்த்தி பிடிக்க.. சமூக நீதியை சமமான நீதியை பெற்று தர சரியான அடித்தளமிட்டு .. எப்போதும் மக்கள் பணியாற்றும் இயக்கம் இது..
இதற்கு தோல்வி இல்லை..
ஏனெனில் திமுக.. இனத்திற்கான மொழிக்கான மக்களுக்கான ஜனநாயக பேரியக்கம்..
..
#எதிரிகளே_எரிகிறதா..
நாங்கள் சரியான பாதையில்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment