Wednesday, January 31, 2018

தளபதி

தளபதி.. கட்சியின் செயல்தலைவராய் நிறைய தடைகளை கடந்து நிமிர செய்யும் பணியில் தன்னை விரைந்து ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.. தளபதி மிளிர்கிறார்.. மிகவும் பக்குவப்பட்ட உரையாடல்களும் நடத்தையும் அவரை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டுவருகிறது.. நிதானமாக செயல்படுவோர் நெடுகாலம் நிலைத்து நிற்பர்.. தளபதியாரின் சமீபத்திய நடவடிக்கைகள் கூர்ந்து கவனியுங்கள்.. மிகவும் கண்ணியமான நாகரீக அரசியலை வளர்த்தெடுக்க முற்படுகிறார்.. அரசியல் தலைமையென்பது அரவணைத்து செல்லும் பெரும்பணி என்பதை உணர்ந்து மாவட்டவாரியாக தொண்டர்கள் கருத்தறிந்து கட்சியை வடிவமைக்க.. இடையில் முளைத்த களைகளை பிடிங்கியெறிய தாமே நேர்சென்று .. யாரையும் துணைக்கழைக்காமல் தொண்டரின் நாடியை பிடித்து உணர்வதென்ற நோக்கம் நல்ல செழுமையை தரும்.. .. ஏதோ இன்றைக்கு தான் ஸ்டாலின் இந்த நல்ல போக்கை கடைப்பிடித்ததாக தோன்றும்..அவரை தொடர்ந்து கவனிக்கறவர்களுக்கு அவரின் பண்பு நன்கு விளங்கும்.. முதல்முதலில் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றவுடன் நடந்த முதல் கூட்டம் பாபநாசத்தில் ஏற்பாடு செய்திருந்தோம்.. ஒருமரத்தை நட்டு குடைபோல் மேடை அமைத்திருந்தோம்.. பேசும் போது ஸ்டாலின் என்னை நம்பி இளைஞர்அணி பொறுப்பை தந்திருக்கிறீர்கள் இந்த மேடையை கூட ஒற்றை மர குடைப்போல் வடிவமைத்து இருக்கிறீர்கள் இங்கு பேசியவர்கள் என்னிடம் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை சொன்னார்கள்..அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்..உங்கள் அனைவரின் ஆதரவு இல்லாமல் என்னால் தனித்து செயல்பட முடியாது உங்கள் துணைக்கொண்டு வெற்றிகரமாக கலைஞரும் பேராசிரியரும் என்னை நம்பி ஒப்படைத்த பொறுப்பை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என்றார்.. அந்த தன்மைதான் இந்தளவிற்கு உயர்த்தியிருக்கிறது.. இதோ நான்தான் தலைவன் என்றவர்கள் விலாசம் தெரியாமல் போனதற்கு இந்த எளிய பண்பில்லாமல் போனதே காரணம்.. .. எப்போதும் கூடவே இருப்பவர்கள் எதையாவது மறைக்க கூடும் மனம் கஷ்டபடுமே என பிறகு சொல்லிக்கொள்ளலாமென தவிர்க்ககூடும் .. அதனால் மூத்த செயல்பாட்டாளர்களை கூட தவிர்த்து தானே நேரடியாய் சென்று கருத்தை கேட்பதும்... நேரில் சொல்ல முடியாத விசயங்களை எழுதி பெட்டியிலே போடசொல்லி அதை மிக நாணயமான நேர்மையான தியாகராஜன் பழனிவேலை கொண்டு பதிவேற்றி முழுவதுமாக அறிந்துகொள்ளுதல் சரியான பாதை வகுக்க பெரிதும் பயன்படும்.. கடந்தால தவறகளிலிருந்தும் அல்லது பிழைகளிலிருந்து பாடம் படித்தலே..சிறந்துவிளங்க உதவும். தமிழகத்தின் நம்பிக்கை தளபதி அவர்கள் எதிரிகளும் வாயடைத்து போய்நிற்கிற இவரின் நேர்மைான செயல்பாடு நல்ல எதிர்காலத்தை தரும் இந்த நேரத்தில் திராவிடம் தந்த பெருந்தகைகள் கலைஞருக்கும் பேராசியருக்கும் நன்றிகள்.. மிகச்சரியான நபரை தேர்வு செய்து வார்த்தெடுத்து செதுக்கி ..இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவனாக்கி தந்திருக்கிறீர்.. நன்றி! நன்றி!! .. #எம்இனத்தின்_நம்பிக்கை .. Aalanci Spm

No comments:

Post a Comment