Monday, December 24, 2018

மக்களிடம் செல்வோம் மக்கள் மனதை வெல்வோம்

மக்களிடம் செல்வோம் மக்களிடம் செல்வோம் மக்கள் மனதை வெல்வோம்.. .. மிகச் சரியான பாதை ..ஜனநாயகத்தின் அடித்தளமே மக்களின் பேரன்பை பெறுவது அவர்களின் கட்டளை என்ன என்பதை அறிந்து செயல்படுவது .. மக்களின் தேவையென்ன .. எதையெல்லாம் மக்கள் வெறுக்கிறார்கள் எது அவர்களுக்கு தேவை என்பதை அறிந்து செயலாற்றுவது சிறந்த ஜனநாயக போக்காகும், .. இந்தியாவில் மிகச் சிறந்த ஜனநாயகவாதியாக கலைஞர் இருந்தார் மக்கள் வெற்றியை தந்தபோதும் தோல்வியை தந்தபோதும் அவர்களிடமே சென்றார் அவர்களுக்கு எது தேவை எது அவசர தேவை என்பதை அறிந்தவராக இருந்தார் .. தொலைநோக்கோடு ஒருதாயின் பரிவோடு இருந்தது அவரது செயல்களும் திட்டங்களும் .. கொண்ட கொள்கையிலிருந்து சிறுதும் மாறுபடாது இந்த மண்ணின் நிறம் மாறாமல் பார்த்துக்கொண்டு செயலாற்றிய விதம் .. இன்று ஊரே மெச்சுகிறது இந்திய ஜனநாயகத்தின் மீது அவர் கொண்ட கருத்தொற்றுமை வேற்றுமை இருந்தபோதும் மக்கள்பணியில் சிறுதும் தொய்வின்றி அவரால் இயங்கமுடிந்தது காரணம் அவர் மக்களை நேசித்தார் மக்களுக்காக உழைப்பதுதான் சிறந்த அரசியல் என்பதில் கவனமாக செயல்பட்டார் .. இன்றைக்கு தளபதியின் புதிய முழக்கம் திமுகவை சரியான பாதையில் செலுத்தும் என்பதில் ஐயமில்லை மிகச் சிறந்த தலைவராக அதிலும் சிறந்த ஜனநாயகவாதியாக வரலாறு பதிவு செய்யும் .. நிறைய வாய்ப்புகள் வந்தும் கொஞ்சம் "கள்ளக்களி" ஆடினால் அதிகாரத்திற்கு வந்துவிட முடியுமென தெரிந்திருந்தும் கொஞ்சம் அடித்தாடினால் .. எதிரிகளின் கூடாரத்தையே கதிகலங்க செய்துவிட முடியுமென தெரிந்திருந்தும் நேர்மையோடு மக்கள் அங்கீகாரத்தோடு வென்று வரவேண்டுமென காத்திருந்தவர் எதையும் நேர்வழியில் பெறவேண்டுமென்ற வேட்கையோடு களப்பணியாற்றுகிறவர் .. தோல்வி வெற்றி என எல்லா நிலையிலும் மக்களை சந்தித்து அவர்களோடு இரண்டறகலந்து செயல்படுகிறவர்.. மிகப்பெரிய இயக்கத்தின் தலைமை பொறுப்பேற்றிருந்தும் எளிமையாக நடந்துகொள்கிறார் .. நிச்சயமாக மக்கள் நேசிக்கிற தலைவராக வலம் வருவார் .. மக்கள் நல்லதொரு தொடக்கத்தை விரும்புகிறார்கள் .. மிக மோசமான ஆட்சியாளர்களால் (மத்திய மாநிலஅரசு) கடுமையாக பாதிக்கபட்டிருக்கிறார்கள் தங்கள் உரிமைகள் பாதிக்கபட்டும் ...உணர்வுகளை சிதைத்தும் இந்த பாசிச மற்றும் பாசிச அடிமை அரசை தூக்கியெறிய தயாராகியிருக்கிறார்கள் .. .. மிக சிறந்த ஜனநாயக இயக்கத்தின் மிக சிறந்க ஜனநாயக தலைவரின் .. ஆக சிறந்த ஜனநாயகம் .. மக்களிடம் செல்வோம் மக்கள் மனதை வெல்வோம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment