Wednesday, March 20, 2019
உதிக்கட்டும் சூரியன்
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் அதிமுக கூட்டணியை
கதிகலங்க செய்திருக்கிறது
அன்புமணி ராமதாஸ் தனக்கு நெருக்கமான கட்சி பிரமுகர்கள் இடம் பொள்ளாச்சி பாலியல் ரீதியான செய்திகள் குறித்து ரெம்பவே புலம்புகிறாராம் அதோடு மட்டுமில்லாமல் #பேசியது இன்னும் அவர் கைக்கு வந்து சேரவில்லை என்பதால் புலம்பல் அதிகமாம் ..
நீங்கள் களத்திற்கு போங்க வந்து சேரும் என்று பதில் வந்ததை கேட்டு மீண்டும் அப்செட் என்பதாகவும் தெரியவருகிறது. இவருக்கு மட்டுமல்ல பிரேமலதாவிற்கும் இன்னும் வரவில்லையாம் ..
தேர்தல் நேரத்தில் நக்கீரன் வெளியிட்டு கூட்டணிக்கு பலவீனமாக பார்க்கபடுகிறது.. வேட்பாளர் தேர்வில் பன்னீரோடு வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தன் மகனுக்கு மட்டும் தேனியை ஒதுக்கியது சலசலப்பை தந்திருக்கிறது ..
..
பாஜக வேட்பாளர் பட்டியல் தமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்க்கிறார்கள் .. பாஜகவின் வெற்றிகரமான தோல்வி உறுதிசெய்யபட்டுவிட்டது .. திமுக இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும் .. இனி வரும் காலங்களில் திமுகவின் வெற்றி கல்வெட்டில் செதுக்கிவைத்ததைப்போல நீண்டநாட்கள் நிலைபெற்று நிற்கும்.. பலவீனமான ஆளும்கட்சி .. நிறம் மாறும் பச்சோந்தியாய் பாமக .. நிற்கவே வலுவில்லாமல் தேமுதிக.. இவர்களோடு தமிழகத்தில் முகவரி தேடும் பாஜக இவர்களை மக்கள் வெறுக்கிறார்கள் ... முழுவதுமாக புறக்கணிக்கபடவேண்டியவர்களென மக்கள் அறிந்திருக்கிறார்கள் .. நாம் தமிழர் .. மக்கள் நீதிமய்யம் என்பனவெல்லாம் களைந்து போகும் கனவை போன்றவர்கள் அரசியலின் இலக்கணமே அறியாதவர்கள் .. மய்யம் அரசியல் தெளிவின்றி சொல்கிறது குறைந்தபட்ச பட்டபடிப்பு தகுதியாம் ..
பாமரர்களுக்கு படிப்பறிவில்லாதவர்களுக்கு வாக்குறிமை தர கூடாதென்ற சர்ச்சில் சொன்னபோது .. அவர்களை சேர்ப்பது தான் உண்மையான ஜனநாயகம் என்றார் பண்டிட் ஜவகர்லால் நேரு..
..
திமுகவின் களப்பணி மிக சரியாக இருக்குமேயானால்
வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை தரகூடியவகையில் வெற்றி அமையும் .. முழுவதுமாக தோற்றுப்போய் நிற்கிற மாநில அதிமுக அரசும் மக்கள் விரோத பாசிச பாஜக அரசையும் வீழ்த்த .. அதே வேளை மிக சரியான மாற்றாக காங்கிரஸ் திமுகவை வெற்றிபெற வைக்க மக்கள் தயார் என்பதை தான் தஞ்சை திலகர் திடலில் மக்கள் எழுச்சி நமக்கு காட்டுகிறது .. முப்பது நாட்கள் தொய்வின்றி உழைத்தால் நாடு முன்னேறும் .. தளபதி சொன்னதைப்போல கலைஞர் பிறந்த ஜூன் 3 ..
மத்தியில் ஆட்சி மாற்றத்தை செய்து ... நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கும் தானைதலைவருக்கு .. பேரருளாளன் கலைஞருக்கு பிறந்தநாள் பரிசளிப்போம் ..
..
உதயசூரியன் உதிக்கட்டும் இருள் அகலட்டும் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment