Sunday, February 24, 2019
அதிமுக தமிழகத்தின் அவமானம்
கனிமொழியை எதிர்த்து தமிழிசை நிறுத்தலாமென பாஜக மேலிடம் விரும்புவதாக செய்திகள் கசிகின்றன .. உண்மையில் பாவம் தோன்றுகிறது கனிமொழி கடந்த இரண்டு வருடங்களாக தூத்துக்குடியை கணக்கில் வைத்து காய் நகர்த்தியிருக்கிறார் தொடர்ந்து அதிகவனம் செலுத்தி தானே நேரடியாக சென்று களநிலவரத்தை கண்டு களமிறங்குகிறார் சென்ற தேர்தலில் திமுகவும் மதிமுகவும் அதிகளவில் வாக்குகளை பெற்ற தொகுதியும் கூட.மிக பாதுகாப்பான தொகுதி என்று கூட சொல்லலாம் ..
தமிழிசை மீது என்ன கோபமோ தெரியவில்லை பலியாடாக நிறுத்த போகிறது .. மிகப்பெரியளவில் வாக்குகள் வேறுபாட்டை தரபோகிற தொகுதி..
..
இந்த தேர்தலில் மிக முக்கியமாக அதிமுகவின் இறுதி அத்தியாயத்தை எழுதுகிற தேர்தலாக இருக்கவேண்டும் எதற்காக பாசிச சக்திகளால் எம்ஜிஆரை கொண்டு அதிமுக தொடங்கபட்டதோ அதன் முழுமை பெற தொடங்கியிருக்கிறது .. எந்த தனிநபரின் ஆளுமையில்லாமல் மக்களால் தேர்வுசெய்யபடாதவர்களை அங்கீகாரமில்லாதவர்களை கொண்டு தமிழகத்தில் நடத்திவரும் அதிகாரமிக்கவர்களாக பாஜகவினர் செயல்படுகிறார்கள் அவர்கள் மீது வழக்கு தொடரபட்டால்கூட அது செயலிழந்துபோகிறது .. வெளிப்படையாக மதவெறியும் சாதிவெறியும் தூண்டபடுகிறது .. தமிழகம் விரும்பாதவைகள் திணிக்கபடுகின்றன அது மொழி கலாச்சாரம் மண் வளம் என எல்லாம் அழிக்கபடுகிறது ..வைகோ சொன்னதைப்போல பாஜகவிற்கோ மோடிக்கோ வாக்களிப்பது உங்கள் தலைமுறைக்கு கொள்ளிவைக்கிறாய் என்றே பொருள்..
..
பாஜக தலைமையிலான கூட்டணி .. ? அப்படிதான் அதிமுகவை மிரட்டி சொல்லவைக்கிறார்கள் .. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள்தான் கடந்த ஐம்பதாண்டுகளாக தலைமையேற்றுயிருக்கிறது இவர்களின் அயோக்கியத்தனத்தால் இவர்கள் அடித்த கொள்ளையால் ஊழல்களால் பாஜக அரசிடம் பயந்து குலைநடுங்கி கிடக்கிறார்கள் .. நோட்டாவை கூட வெல்ல முடியாதவர்களுக்கு ஐந்து தொகுதியும் தலைமையுமாம்,.. யாரெல்லாம் கூட்டு நேற்றுவரை
ஊழல் செய்துவிட்டார்கள் டயர்நக்கிகள் இவர்களுக்கெல்லாம் மந்திரியென்றால் என்னவென்று தெரியுமா நிர்வாகம் என்றால் தெரியுமா என்று .. கவர்னரிடம் 208 பக்க ஊழல் குற்றசாட்டை சொன்ன சாணக்கியன்..? திடீரென காலநக்கி நிற்பதும் .. நேற்றுவரை நாடாளுமன்றத்திலேயே பாஜகவால் தமிழகத்திற்கு இழைக்கபட்ட கொடுமைகளை பட்டியலிட்டவர் .. அதே பாஜகவை மீண்டும் ஆட்சியில் வருகிறார்களாம் .. எவ்வளவு கயமை கொஞ்சமும் அஞ்சாமல் மக்களை விலைக்கு வாங்கிவிடலாமென்ற திமிர் இவர்கள் முற்றிலுமாக விரட்டபடவேண்டியவர்கள் ..
அதிமுக பாமக பாஜக கூட்டு.. தமிழர்களுக்கு எதிரான தமிழகத்திற்கெதிரான வேட்டு.. அதிமுக தமிழகத்திற்கு அவமானம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment