Tuesday, February 12, 2019
மோடி வெறும் மாயை
பிரதமர் மோடியை ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என ராகுல்.. பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கூட தகவல் தரபடாத நிலையில் பிரதமர் மட்டுமே அறிந்திருந்த விடயம் அனில் அம்பானிக்கு தெரிந்திருந்திருக்கிறது .. இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு பத்துநாட்கள் முன்பு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்திருக்கிறார்.. மோடி யாருக்கு தரகர் வேலை பார்க்கிறார் .. ரகசிய காப்பை மீறிய செயல் தேசதுரோகம் .. இதுவரை எந்தோ பிரதமரையும் யாரும் இப்படி விமர்சனம் செய்ததில்லை .. மிக மோசமான பிரதமரென பெயர் எடுக்கிறார் .. ஆந்திரா சென்றவர் அங்கு சந்திரபாபு நாயுடுவை மாமனாருக்கு துரோகம் செய்தவரென பேசிவிட்டு வர .. சந்திரபாபு மோடியை கிழித்து தொங்கவிட்டார் ..
1999-ம் ஆண்டு நான் ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்றேன். ஆனால் மோடி 2002-ம் ஆண்டுதான் குஜராத்தின் முதல்வரானார். நான் கடந்த 40 வருடங்களாக அரசியலில் உள்ளேன்.
நான் லோகேஷின் அப்பா ..
உங்களுடைய அடையாளம் என்ன? ..
முத்தலாக் பற்றிக் கருத்து கூறும் மோடி, நீங்கள் விவாகரத்து செய்யாமலே உங்கள் மனைவியைப் பிரிந்து வாழ்கிறீர்கள்... இதற்கு என்ன பதில்..?
நான் என்.டி.ஆரின் மருமகன். அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் முறையாக வழங்கி வருகிறேன். அவரின் ஆசீர்வாதத்துடனே இந்தக் கட்சியை வழிநடத்தி வருகிறேன்... ஆனால் நீங்கள் உங்கள் குருவான அத்வானிக்கு என்ன மரியாதை செய்கிறீர்கள்
குஜராத் கலவரம் கோத்ரா விவகாரத்தில் உங்களை பாதுகாத்த அத்வானிக்கு நீங்கள் தந்த மரியாதை என்ன..? மோடி என் குடும்பத்தையும் சொந்த விஷயங்களையும் விமர்சிக்கிறார். இப்போது நான் கூறும் கருத்துகள் என் தனிப்பட்ட கருத்துகளே எல்லை மீறி பேசினால் நாமும் அவர்கள் வழியிலேயே பதில் சொல்லவேண்டியிருக்கிறது ...
..
மிக மட்டரகமான அரசியலை செய்துவருகிறது பாஜக .. பிரியங்கா டெல்லியில் இருக்கும் போது மார்டன் உடையணிகிறார் கிராமங்களுக்கு போனால் சேலை அணிகிறாரென பாஜகவினர் பேசுவதிலிருந்தே அவர்களின் தகுதி தரம் தெரிகிறது ..
மோடியின் அரசியல் என்பது பொய்களாலும் .. மதவெறியாலும் மோசமான அரசியல் நகர்வுகளாலும் ஆனது .. இந்தியா கண்ட பிரதமர்களில் இவர் மட்டும்தான் என்ன படித்தார் எங்குபடித்தார் இவரின் ஆரம்பகால நிலை என்ன என்பது பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை ..டீ விற்றேன் என்ற தகவல் கூட மெய்பிக்கபடாததாக இருக்கிறது .. வாய்சொல் வீரராய் வலம் வரும் மோடி சிறந்த நிர்வாகியாகவோ நல்ல தலைமைபண்புள்ளவராகவோ, சிறந்த தலைவராகவோ இல்லை ..
எல்லாம் பொய் எதிலும் ஒளிவுமறைவு .. நேர்மையற்ற செயல் ஊழலை ஒழிப்பதாக சொல்லி ஊழல் செய்தவர்களை காப்பாற்ற.. ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழலுக்கு எதிரான சரத்து நீக்கியது
மோசடியாளர்களை காப்பாற்ற துணை நிற்பது இதுதான் மோடி
..
பாசிச பாஜக வீழித்தபடவேண்டும் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment