விக்ரம் ..
கமல் படம் இல்லை..
படம் முழுவதும் ஆக்ரமித்து one man show காட்டாமல் இன்றைய நிலையறிந்து நடித்தபடம் .. படத்தில் பகத் "மிகச்ச நடனாக" மிரட்டியிருக்கிறார்..
கமல் சக நடிகர்களுக்கு வாய்ப்பு தந்து படத்தின் ஓட்டத்தை வேகம் குறையாமல் செய்ததும்
விஜய் சேதுபதி வழக்கம் போல தனித்திறமையை பதிவு செய்திருக்கிறார்
..
இரண்டு விடயங்கள்.. கமல் படத்தில் வரும் வைணவ மேலாதிக்கம் இல்லை .. பிக்பாஸில் கூட மய்யத்தின் லோகோ பறித்த கோட் அணிந்திருப்பார் இதில் அரசியல் குறியீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் .. அது சரி சொந்த தயாரிப்பில் எல்லாம் ரிஸ்க் எடுக்கமாட்டார் .. கமலின் சமீபத்திய தோல்விகள், விஸ்வரூபம்2, படுபாதாளத்தில் தள்ளியதும் சபாஷ் நாயூடு வெளிவராமல் இருப்பதும் அவரை அரசியலில் சம்பாதிக்க வழி செய்தது .. கொஞ்சம் மெச்சபட்டவுடன் கமலின் "சினிமா போதை " மீண்டும் நம்மிடம் கொண்டுவந்திருக்கிறது ..
..
நல்ல நடிகராக சிலநேரம் தலைகனத்தோடு திரிந்தாலும் "தமிழ் சினிமா " கொண்டாடி தீர்க்கவேண்டியவர் என்பதில் மறுகருத்தே இல்லை .. பாபநாசம் படத்தில் புதைத்த இடத்தை தோண்டும் போது அவரின் முகபாவனை சற்று திமிர் கலந்ததாக இருக்கும் ஆனால் மலையாளத்தில் மோகன்லால் அப்பாவியைப்போல முகத்தை வைத்திருப்பார் .. கமலிடம் சிலநேரம் நடிப்பில் மிகை / திமிர் இருக்கும் .. கமலிடம் சிலநேரம் திகைப்பு தட்டினாலும் மதுரத்தை வேண்டாமென்றா சொல்லும்.. கமல் திரைத்துறையில் வித்தகன் .. தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல், போலி நாத்திகம், வைணவப்பற்று, குளிர்காயல், இதையெல்லாம் தாண்டி அவரின் பரிட்சார்த்தம் (முயற்சி தேடல்) பாராட்ட வேண்டிய ஒன்று .. தமிழ் சினிமா கண்ட நல்ல திறமையாளர்களில் ஒருவர் .. அவரது அரசியல் புரிதல் குப்பை ..
மய்யம் என்ற ஒன்றே உலகில் எங்கும் எதிலும் இல்லை இரு எதிர்மறைகள் தான் (உண்டு- இல்லை, நன்மை-தீமை) இயக்கத்தின் அடிதாளம் ..
..
விக்ரம் பகத் படமா, விக்னேஷ் படமா, கமல் படமா, என்பதை தவிர்த்து நல்ல ஜனரஞ்சகமான படம் .. கமலுக்கு இந்த வெற்றி* அவசியம் தேவை .. இன்னமும் சில வருடங்கள் அவரின் பங்களிப்பை உறுதி செய்ய இந்த வெற்றி தேவைபடுகிறது .. கமலுக்கு நடிப்பு சினிமா தான் சரி என மக்கள் அளித்திருக்கும் வரவேற்பை உணர்ந்து நல்ல படங்களை தரவேண்டும் .. எல்லா ஜாம்பவான்களுக்கு அடி சறுக்கும் காலம் தரும் பாடம் அது .. அதிலிருந்து மீண்டு தனக்கான கதாபாத்திரத்தை தேர்வு செய்து காலத்திற்கேற்ப மாற வேண்டும் .. அப்படி செய்தால் தொடர்ந்து சினிமாவில் இருக்கலாம் .. மூன்றாண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இல்லை பிக்பாஸ், அரசியல் என பொழுதை கழித்தாலும் மக்கள் விரும்புவதென்னவோ கமல் எனும் நடிகனில் "சினிமா" வை என புரிந்திருக்கும் .. நல்ல படங்களை தந்து மக்களை மகிழ்விக்கும் கலைஞனாக கமல் திகழ வேண்டும் ..
கலைஞானி கமல்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment