கலைஞர்கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்வு இல்லை ஸ்டாலின் மோசமானவர் என வேலுமணி கதறல் .. இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை இதுவே காலதாமதம் அத்தனை அநீதிகளை பாஜகவோடு சேர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்திருக்கிறீர்கள் .. ஒவ்வொருமுறையும் அறிந்தே பாஜகவிற்கு பயந்து செய்ததெல்லாம் சரிசெய்ய எவ்வளவுகாலம் வேண்டும் தெரியுமா .. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் வடமாநிலத்தவர்கள் நுழைய காரணமாய் இருந்ததை மறக்கமுடியுமா .. நீட் தேர்விற்கு ஜெயலலிதா கூட கடுமையாக எதிர்த்தை மறந்து யாருக்கும் தெரியாமல் கையெழுத்திட்டதை மறக்கமுடியுமா .. அடித்த கொள்ளைகள் அதற்காக அடிபணிந்து தன்மானமிழந்து தமிழர் உரிமைகளை அடகுவைத்ததெல்லாம் அவ்வளவு சீக்கரம் மறந்துபோக முடியுமா..
..
கலைஞர் அல்ல ஸ்டாலின் ஆம்
மன்னிக்கும் மாண்பு அளவிற்கு அதிகமாக கலைஞரிடத்தில் கண்டதால் தான் வீண் பழிகளை சுமந்தே வாழவேண்டியிருந்தது .. எத்தனை கசப்பானவைகள் தனிமனித உறவுகளை கூட கொச்சைபடுத்தியும், கேவலமாகவும் பேசியும் ஊழலென நிரூபிக்க முடியாமல் போனவைகளை எல்லாம் திரும்ப திரும்ப சொல்லியும், தீவிரவாதிகளுக்கு பயங்கரவாதிகளோடு தொடர்பு என வன்மத்தை கக்கிய போதும்
"அறம் வெல்லும்" என காலத்தை கடத்தி காத்திருக்க கலைஞரல்ல ஸ்டாலின் .. உடனுக்குடன் திருப்பி தராமல் போனால் எல்லை மீறி போகிறீர்கள் .. கலைஞர் காலமல்ல.. செய்திக்கு மறுப்பு சொல்லி அது மறுநாள் நாளிதழில் கடைசிபக்கத்தில் எட்டுஇலக்கத்தில் வரும் அதற்கு பொய் சலங்கைகட்டி ஆடி தீர்த்திருக்கும் .. திரும்ப திரும்ப மறுப்பு சொல்லி சொல்லியே நாங்கள் ஓய்ந்து போவோம் .. இப்போது நொடிபொழுதில் அவதூறுகள் தகர்த்தெறியபட்டு உண்மையை உலகு சொல்கிறோம் வலைதளங்களும் செய்தி ஊடகங்களும் ஒரளவு உண்மை பேசுகின்றன முன்பெல்லாம் பார்பனர்கள் கையிலிருந்து சொல்வதுதான் உண்மை என்ற நிலை.. இப்போது பொய்கள் முகம் கிழிக்கபடுகிறது..
..
அதிமுக என்றைக்கோ தன் பலத்தை இழந்துவிட்டது எப்போது சித்தாந்தத்தை இழந்ததோ அப்போதே அழிவை நோக்கி நகர்கிறது.. பன்னீர் எனும் பரம அயோக்கியரும் பழனி எனும் நம்பிக்கை துரோகியும் அதிகாரம் கையிலிருந்ததால் ஒரளவு வரமுடிந்தது ஆனால் இப்போது மொத்தமும் காலியாகிப்போனது..
நல்ல தலைமையில்லை நேர்மை இல்லை, அடிமைத்தனம், கடைந்தெடுத்த அயோக்கியத்தனமும், மட்டுமே உண்டு மெல்ல எம்ஜிஆர் ரசிகர்கள் காலி செய்கிறார்கள் இனி விழும் போது எழுந்துநிற்க கூட கால்கள் இல்லை .. ஸ்டாலின் படையோட்டத்தை எதிர்க்க தெம்போ திராணியோ இல்லை .. உண்மையில் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அவர்களுக்கு சரியான எதிரியாக நீங்கள் இல்லை என்பதுதான் உண்மை .. ஆரம்பிப்பதற்கே முன்பே கதறுகிறீர்கள் .. இனிதான் ஆட்டமே ஆரம்பிக்க போகிறது
..
விதைத்ததைதான் அறுக்கமுடியும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment