பதவியேற்றவுடன் மிகசரியான பாதையில் விரைந்து செயலாற்றுகிறார் முதல்வர்
பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் அதேபோல் திருநங்கைகளுக்கும் தரலாமே என ஒருவர் ட்விட் செய்கிறார்.. அவர்கள் நலனின் எப்போதும் திமுக அரசு அக்கறை கொள்ளும் என்பதோடு நிறுத்தாமல் கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி என்கிறார்.. அதற்கு பதலுரைத்தவர் இத்தனை காலம் முதல்வராகாதது தங்களின் இழப்பில்லை எங்களின் இழப்பென்கிறார்..
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு..
என்றான் வள்ளுவன்
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்..
..
பெண்களுக்கு கட்டணமில்லை என்பதை மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறது குறைவான சம்பளம் பெறுவோர், அன்றாடம் சிறுவியாபாரம் செய்வோர் வாயைகட்டி சேகரிக்கும் நிலைமாறும், பெரும் ஆசுவாசம்
பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது..
..
சுகாதாரத்துறை அமைச்சர் பாதுகாப்போடு நோயாளிகளை சந்திக்கிறார்.. 15ந்தேதிக்குள் 12500 ஆக்சிஸன் படுக்கை தயாராகும், எங்கே படுக்கை இருக்கிறதென்பதை வலைதளத்திலேயே தெரிந்துக்கொள்ளலாம்,ரெம்டிசிவிர் மருந்தை இனி சென்னை மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் பெற முடியும்.
வெளிப்படையான அரசு ..
..
ஒவ்வொரு துறைசார்ந்த அமைச்சர்கள் மிக விரைந்து தெளிவான தளபதியின் ஆலோசனையோடு பயணிக்கிறார்கள் .. கல்வி தொலைக்காட்சி இன்னும் புதுமைகளோடு செயல்படும்.. சென்ற அரசின் நிதிநிலை செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை தரப்படும் 10ந்தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரருக்கு ₹2000 வழங்கபடும் .. இடைவிடாது பணியாற்றுகிறார்கள்..
மத்திய அரசிடம் ஆக்சிஸன்கேட்டவுடன் கிடைக்கிறது..
..
பத்தாண்டாய் பாழ்பட்ட தமிழகத்தை சீரமைக்க இத்தனை வேகம் தேவைபடுகிறது .. தளபதி முதல்வரானது நமது வரம்..
நல்ல தலைமை கிடைத்தால் நாடு மிளிரும்.. முழுஊரடங்கால் வெளியூர் செல்லும் பயணிகளிடத்தில் அதிகதொகை வசூலித்தால் ₹10000 அபராதம், வழக்கும் வரும் 6மாதம் சிறை
உண்மையில் மக்களுக்கான ஆட்சி..
..
"ஸ்டாலின் பஸ் " நல்லசேவை
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment