Monday, October 3, 2022

சேரன் சோழன் பாண்டியன் 
எவனுமே மக்களுக்கு நல்லது செய்திடவில்லை .. அரச அதிகார மோகம், பெண் பித்து,மக்களின் உரிமைகளை பறித்தல் .. சகோதர யுத்தம், பெண்களை போதையாக்குவது அடிமைபடுத்துவது, ஆரிய சூழ்ச்சிக்கு அடிமையாவது  மக்களிடம் வரிப்பணத்தை வசூல் செய்து ஆரியனுக்கு தங்கள் புகழ்பாடிகளுக்கு "இனாமாக " வழங்குவது அங்கு வாழும் மக்களை அவர்களுக்கு அடிமைசாசனம் எழுதி தருவது 
யுத்தம் என்ற பெயரில் கொள்ளையடிப்பது இதுதான் இவர்களின் வரலாறு ..
..
கோவில்களை கட்டிய அளவிற்கு கல்வியறிவு தந்தானா ..
மக்களுக்கு மருத்துவ வசதிகளை கட்டி இனாமாக தந்தானா .. அந்தரபுரத்தில் "அழகில்" மயங்கி ஊர்ஊராக எழுதி தந்ததை தவிர வேறென்ன செய்தார்கள் .. விளைச்சலுக்காக சில நன்மைகள் அது கூட வரிவருவாய் பெருக வேண்டுமென்பதற்காகவே அன்றி மக்களுக்காக அல்லவே ..
மந்திரம் பூஜை யாகம் என ஆரியத்தின் பிடியில் அழிந்ததை தவிர இவர்கள் வரலாறு அப்படியொன்றும் மக்களுக்கான ஆட்சியாளன் என்றில்லை..
..
இமயம் வரை சென்றான் ..சரி எத்தனை உயிர்கள் போயின .. அங்கிருந்து கல் சுமந்து கோவில் கட்டியதை தவிர .. மக்கள் மடிந்ததும் குலம் அழிந்ததை தவிர..
தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும், மீனாட்சி கோவில் கட்டிட கலையும் தமிழனின் தனித்திறமையை பறைச்சாற்றியும் .. உலக அதிசயமாக கொண்ட முடியாமல் போனது இவை மதத்தின் அடையாளமாக போனதால் தான்.. சீனப் பெருஞ்சுவரை போல தாஜ் மஹல் (காதல்)போல பொதுவானதாக இல்லை ..
தமிழ் மன்னர்கள் பிராமணீய மதத்தை வளர்த்த அளவிற்கு தமிழ்த் தொண்டெல்லாம் செய்யவில்லை என்பது தானே வரலாறு ..
..
ராஜராஜன் ஆட்சி மநுநீதியின் அடிப்படையிலானது.. குறைந்தபட்சம் நெடுஞ்செழியன் ஆட்சி போல் கூட இல்லை .. ஜனநாயகன் என தம்பட்டம் அடித்தாலும் மக்களுக்காகவோ மண்ணுக்காகவோ தமிழுக்காகவோ ஆட்சி நடத்தவில்லை .. அப்படியிருந்தால் "கல்கி" கும்பல் கொண்டாடியிருக்காது.. 
"பிராமண" மதத்தை நம்மீது திணக்கவும் அதை கொண்டாடவும் நடைமுறைபடுத்தவும் பயன்பட்டதே தவிர வேறொன்றுமில்லை 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment