காங்கிரஸ்..
கழுதை தேய்ந்த கதையாக..
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.. நன்று..
முதலில் தன் பலம் அறிதல் நன்று!..
..
முன்பெல்லாம் சிற்றூர்களில் நிலக்கிழார்களும் செல்வந்தர்களும் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்ததும் அவர்கள் பண்ணையாட்களோடு அதிகார தொனியில் நடந்துக்கொண்டு காங்கிரஸை நடத்தி வந்தார்கள்.. தேர்தல் காலக்கட்டத்தில் மொத்தமாக விலைபேசி வாக்குகளை வாங்கி வென்றவர்கள் திராவிட இயக்கம் வளர தொடங்கிய போது மெல்ல மறைய தொடங்கினார்கள்..
..
1967 க்கு பிறகான அவர்களது அரசியல் திராவிடக்கட்சியான திமுக மற்றும் அதிமுக என சார்ந்தே நின்று வென்றவர்கள் நாளடைவில் கரைந்து சிலர் பாசிசத்தின் பிடியிலும் சிலர் வேண்டாவெறுப்போடு அரசியல் செய்கிறார்கள்.. இன்று காங்கிரஸ் யாராவது கைதாங்கலாக பிடித்தால்தான் நடக்கவே முடியும் என்கிற நிலை.. காங்கிரஸ் சீரழிவு என்பது இயல்பாக நடப்பதைப்போல தோன்றினாலும் அதன் பின்னால் ஆர்எஸ்எஸின் வலை பின்னப்பட்டிருக்கும் அது மிக சிரத்தையோடு மெல்ல விழுங்க செய்யும்..
..
மாண்பமை மன்மோகன்சிங் பிரதமராகாமல் ஆர்எஸ்எஸ் பிரணாப் முகர்ஜி பிரதமராகிருந்தால் அமைதியாக இருந்திருப்பார்கள் .. ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை தவிர்த்த காங்கிரஸை இனியும் விட்டுவைப்பதில் பலனில்லை என அறிந்து காய்ந்த நகர்த்துகிறார்கள்.. இப்போதும் காங்கிரஸ் உள்ளே ஆர்எஸ்எஸின் "கைகள்" இருப்பது காங்கிரஸ் மேலிடம் அறியாமலா இருக்கும்..
..
தமிழ்நாட்டில் ஊருக்கு 10 வாக்குகள் கூட இல்லாத வெற்றுச்சுமையை தோளில் சுமக்க வேண்டுமா என்ன.. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கொஞ்சம் உயிர்ப்போடு இருக்கும் காங்கிரஸை சாகடிக்க வெளியிலிருந்து யாரும் தேவையில்லை அவர்களே அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் இட்ட கட்டளையை செவ்வனே செய்து "காரியம்" நடத்திடுவார்கள் அதைதான் சிலர் ஆட்சியில் பங்கு என பழைய பல்லவியை புதிய சுரத்தில் பாடுகிறார்கள்.
..
சிறிய கட்சிகள் கூட தங்கள் பலத்தை நிரூபிக்க தனியாக மாநாட்டை நடத்தி வலிமையை காட்டுகிறார்கள்.. எத்தனை விழுக்காடு கிடைக்குமென அறிந்து அதற்கேற்ப பங்கீட்டை கேட்கிறார்கள் ஆனால் கூட்டம் நடத்தவே வக்கில்லாமல் பழைய நினைப்போடு வலம் வருவது "ஏட்டுச் சுரைக்காய்" தான்..
..
கடந்த தேர்தலில் இரட்டை இலக்கில் தொகுதி ஒதுக்கியதே காங்கிரஸ் "பேரியக்கம்" என்பதால் தானே தவிர பலமான கட்சி என்பதால் அல்ல அதை காங்கிரஸ்காரர்கள் புரிந்துக்கொள்வார்கள்.. ஆனால் ஆர்எஸ்எஸ் அடிவருடிகள் கூட்டணியை கலைக்க வாய்ப்பிருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள்.. அதை தெளிவாக அறிந்ததால்தான் தலைவர் ஸ்டாலின்
M. K. Stalin ஆட்சியில் பங்கு இல்லை என தெளிவாக பிரகடனம் செய்துவிட்டார்..
ஊளையிடுவோர் சத்தம் குறையலாம். காஙகிரஸ் கடந்த தேர்தலைவிட குறைவான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்..
வெற்றுச்சுமையை ஏன் சுமக்க வேண்டும்..
..
காங்கிரஸ் வெளியேறுவதால் காங்கிரஸிற்கு இழப்பே தவிர திமுகவிற்கல்ல .
பிற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் காணாமல் போகும்.
நல்லதே நடக்கும்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment