திமுககாரனுக்கு துரோகங்கள் புதிதல்ல..
..
விசிக தலைவர் தோல்.திருமாவளவன் எங்கள் கட்சியினர் விசிக போட்டியில் தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளில் சரியாக பணியாற்றவில்லை என்கிறார்.. மகிழ்ச்சி இப்போதாவது ஒப்புக்கொண்டமைக்கு .. திமுகவிற்கு எப்போதுமே தலித் சமூகம் (குறிப்பாக பறையர் சமூகம்) பெருவாரியாக வாக்களித்ததில்லை. காங்கிரஸ் நிலக்கிழார்களின் சொல்லிட்டு வாக்களித்தவர்கள் எம்ஜிஆர் காலத்தில் கவர்ச்சி ஈர்ப்பின் காரணமாக வெகுவாக வாக்களித்தவர்கள் தான்.. கலைஞருக்கு சொற்பமாக உணர்வுள்ளவர்கள் வாக்களித்திருகிறார்கள்.. அவர்களின் முடிவை நான் விமர்சிப்பதற்கில்லை.. ஆனால் "அமைப்பாய் திரள்வோம்" என பறையர் சமூகத்தை ஒருங்கிணைத்த திருமா இன்று பலவீனப்பட்டு நிற்கிறார்..
தேர்தலுக்கு முன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டிய பிறகு களம் மட்டுமே கவனமாக இருக்கவேண்டும் ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விசிக உட்பட நேர்மையாக உழைக்கவில்லை அதிலும் காங்கிரஸ் அலட்சியமாக செயல்பட்டது..
..
கூட்டணி ஒழுங்கு இம்முறை இல்லை என்பதை முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அறிவார்.. அதனால்தான் தன் கட்சியினரை மிக கவனமாக முனைப்போடு செயல்பட சொன்னார்.. கூட்டணிக்கட்சிகளின் தலைவன் எல்லாரையும் விட கடுமையாக உழைத்திருக்கிறார்.. ஆனால் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தங்களின் பலமறியாமல் சலசலப்பை தொடர்ந்து உணடாக்கினர்.. ஆனால் அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்தி தான் மிகச் சிறந்த தலைவனாக தமிழ்நாட்டில் உயர்ந்து நிற்கிறார்.. கூட்டணிக்கட்சிகள் தங்கள் பங்களிப்பதை சரியாக செய்யவில்லை என்ற போதும் திமுக மிக எழுச்சியோடு செயல்பட்டிருக்கிறது இந்த என்பதை மே 4 சொல்லும்
..
கருத்துகணிப்புகளில் தலித் மற்றும் இஸ்லாமிய சமூகம் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என தெரிகிறது.. கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களுக்கு பிறகு இஸ்லாமிய வாக்குகள் முழுவதுமாக திமுகவிற்கு வந்ததில்லை. அதிமுக திமுக என வாக்குகளை மடைமாற்றிய வரலாறும் உண்டு.. இப்போது பல்வேறு அமைப்பாய் பிரிந்து திமுக துரோகம் செய்துவிட்டதென்ற புலம்பல் நாம் கேட்டுக் கொண்டுதானிருநதோம். எப்போதும் நம்பிக்கைக்குரியவர்களாக தலித் மற்றும் இஸ்லாமிய சமூகம் இருந்ததில்லை, இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை.. ஆனால் தங்கள் பலமறியாமல் பேசுவதும் இன்றைய மெச்சதக்க நிலைக்கான காரணிகளில் திமுகவும் ஒரு காரணம் என்பதை மறந்து பேசுவதும் சில நேரங்களில் ஏசுவதும் கேட்க சகிக்கவில்லை..
..
திருமா அவர்களுக்கு நன்றி!.. வெளிப்படையாக சொன்னதில் மகிழ்ச்சி..இது போன்று பல்வேறு காலகட்டங்களில் ஏமாற்றங்கள் துரோஙகள் சந்தித்தவைதான் ஆனால் இந்த முறை உங்கள் எண்ணம் ஈடேறாது .. திமுகவை இம்முறை வீழ்த்த முடியாது தெளிவான திட்டமிடல் யாரை எங்கே எப்படி கையாள்வது எங்கே நிறுத்துவதென என திறம்பட செயல்பட்டு தலைவர் ஸ்டாலின் மிகச்சிறந்த ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்..
..
வெல்வோம்
திராவிடம் வெல்லும்...
#திராவிடமாடல் 2.O தொடரும்..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் எனும் நான்..
..
ஆலஞ்சியார் ..
No comments:
Post a Comment