வையாபுரி கோபால்சாமி..
சிறந்த parliamentarian என சொல்வதை கேட்கும் போது பல நிகழ்வுகள் ஞாபகம் வருகிறது உரக்க பேசுகிறவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள் என சொல் உண்டு அதை கோபால்சாமியிடம் காணலாம் .. இரண்டு நிகழ்வுகள் அதில் ஒன்று மேனாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா துணை குடியரசு தலைவராக இருந்த காலத்தில் மாநிலங்களவையின் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் .. ஒரு நாளிதழில் சர்மா அவர்களை தவறாக சித்தரித்து கட்டுரை வெளியாகி அது குறித்த விவாதத்தில் வை.கோ பேசும் உணர்ச்சிவயப்பட்டு அந்த காட்டுமிராண்டியை சபைக்கு இழுத்த வாருங்களென "மனோகரா" ஸ்டைலில் பேசினார் அப்போது குறுக்கிட்ட சபைத் தலைவர் சர்மா அவர்கள் நானே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார் உடனே எங்கள் சபையின் தலைவரை தவறாக பேசியிருக்கிறார் விட முடியாதென பேசி உணர்ச்சி பிழம்பாக நின்றார்..
மற்றொரு நிகழ்வில் எம்ஜிஆரை தவறாக பேசிய போதும் எங்கள் மாநில முதல்வரை எப்படி பேசலாம் என்று என உணர்ச்சி மேலிட குதித்தார்.. எப்போதும் இவர் இப்படிதான் தான் மட்டுமே தன்னால் மட்டுமே என்கின்ற நினைப்பில் எதையும் நிதானமாக அணுகாமல் சட்டென்று உணர்ச்சி பிழம்பாய் நிற்பார்..
நல்ல தலைவருக்கான இலக்கணம் சிறிதும் இல்லாமல் தன் நம்பி வந்த பெரும்சேனையை தவறாக வழிநடத்தி தானும் வழிதவறிய ஆட்டைப் போல திசை தெரியாது நிற்கிறார்.. இளமை காலங்களில் இவரின் பின்னால் அணிவகுத்து நின்று ஏதோ தவறாக தெரிகிறதே என அப்போதே எச்சரிக்கையோடு விலகி நின்றதை பெருமையாக கருதுகிறேன்.. அவன் நடிகன் என ஒற்றை வரியில் எங்கள் கண் திறந்த தஞ்சை பெரியார் "மன்னையார்" உயர்ந்து நிற்கிறார்..
.. திமுகவே நான் தான் என கலைஞருக்கு எதிராக சிலரை ஒருங்கிணைத்து நின்றபோது கலைஞர் தஞ்சையிலே பொதுக்குழுவைக் கூட்டிய போது எங்கள் மாவட்ட செயலாளர் மணி அண்ணனின் கட்டளையை ஏற்று அரூர் சுப்ரமணியன் கணபதி அக்ரஹாரம் சச்சிதானந்தன்ஞ இவர்களை பாதுகாப்பாக குருதயாள் சர்மா மண்டபத்திற்கு அழைத்து வந்தது கிடைத்த பெரும் பேறு..
..
கலைஞர் கையில் இருந்தவரை போர்வாளாக மின்னியவர்.. பின்பு உடைந்து துருப்பிடித்த வாளாய் இப்போது யாருக்கும் வேண்டாத மக்கிப்போன இரும்பு துகளாய் அவலநிலை இதெற்கெல்லாம் அவரின் பேராசையும் தன் உயரமறியா நிலையுமே காரணம் .. இன்னும் அவர் மக்கள் மன்றத்தில் கேட்பாரற்று நிலை காண நேரிடும் உள்ளுக்குள் நயவஞ்சகம் குமரி கடற்கரையில் துரைமுருகன் ஆற்காட்டாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கலைஞருக்கு பிறகு நீ தான் பேச்சுவாக்கில் சொல்ல பெரியார் போல கலைஞரும் 94 வயது வரை உயிரோடு இருந்துவிட்டால் என கேட்டவர் .. அப்போதும் நேர்மையாக இல்லை இப்போதும் நேர்மையாக இல்லை.. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சி பொறுப்பில் வந்த பிறகு யாரிடம் சொல்லாமல் இலங்கைக்கு சென்று திமுக அரசிற்கு சங்கடத்தை உருவாக்கி யாருக்கோ உதவியவர்.. எப்போதும் நம்பிக்கைக்குரியவரில்லை இப்போதும்
நொச்சிப்பட்டி தண்டபாணி
இடிமழை உதயன்
மேலப்பாளையம் ஜஹாங்கீர்
கோவை பாலன்
உப்பிலியாபுரம் வீரப்பன்
- 'மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்' உருவாக உயிர் கொடுத்தவர்கள். வைகோவுக்கு எதிராக நடத்தப்பட்ட வேள்வியில் தீ குளித்தவர்கள். மண்ணில் புதைந்த இந்த எலும்பு கூடுகள் இன்றைக்கு புரண்டு படுத்திருக்கும்!
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment