தலைவன்..
பொதுவாழ்வில் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக பாவித்து தொடர்ந்து இயங்குகிற தலைவன்.. வெற்றிக் கண்டு துள்ளி குதிக்கவில்லை.. தோல்வி அவரை முடக்கிவிடவில்லை.. தன்னை தோற்கடித்த கொளத்தூர் மக்களிடையே மறுதினமே சென்று நன்றி சொல்கிறார்.. மக்கள் செய்வதறியாது கண்ணீர் மல்க கைகூப்பி நிற்கின்றனர்..
..
ஊடகங்களில் ஸ்டாலின் தோற்றிருக்க கூடாதென நடித்த நடுநிலைவாதிகள் கொளத்தூரில் ஸ்டாலின் நன்றி அறிவிப்பை கண்டு மிரண்டு போனார்கள்..
..
கொளத்தூர்
கண்ணீரால் குளமானது..
வழிநெடுக நின்றவர்கள்
வாய் பொத்தி அழுததை
வரலாறு பதிவு செய்தது ..
..
நன்றி கூற தான் சென்றார்
வெற்றி களிப்பில் அல்ல
தோல்வியில் துவண்டுவிட மாட்டேன்
எப்போதுமிருப்பேன் என சொல்லாமல் சொன்னார்
..
வழி நெடுக
வளர்ச்சிகள் தந்தவன்
தலைநிமிர்ந்து
நடைப்போட்டான்
கண்டும் உண்டும்
மகிழ்ந்தவர்கள்
தலைகுனிந்து நின்றனர்
"அட்டாலும் பால் சுவையில் குன்றாது" ..
..
எதிரிகள் கூட தோற்றதைக்
கண்டு கலங்கி நின்றனர்
ஆனால்..
கட்சிக்காரன் சொல்கிறான்
வாக்களிக்கச் செல்லும் முன்
என் இரு குழந்தைகள்
காலில் விழுந்தன நம் வாக்கா மாறிவிட போகிறதென நினைத்தேன்..
மற்றொருவர்
வளர்ச்சி எல்லாம் சரி
கட்சிக்காரனுக்கு என்ன செய்தார்
கேள்விகள் ஆயிரம்
பதில் ஒன்றுதான்.. கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய தேர்தல் இது
..
கட்சிக்குள் புது இரத்தம் பாய்ச்சபட வேண்டும்
தனக்கு வாய்ப்பில்லை என்றவுடன்
கூறுமாறும் "கயமை" களையப்பட வேண்டு்ம்.. பல்வேறு அணிகள் செயல்பாடடில் ஆதிக்க திமிரையும், லாபிகளையும், தடுத்து நிறுத்த வேண்டும்.. கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் கண்டு அவர்கள் சொல் கேட்டு வழிநடத்தும் நிர்வாகிகளை தேர்வுச் செய்ய வேண்டும்.. மாவட்டங்களில் தனக்கு பிறகு தனக்கு வேண்டியப்பட்டவன் என்ற நிலை மாறவேணடும்.. மொத்தத்தில் பழைய திமுகவாக வேண்டும்
..
ஆளும்கட்சியாக பார்த்த இளம்தலைமுறை எதிர்க்கட்சியாக பார்க்க வேண்டும்..
பழைய எதிர்க்கட்சியாக..
தலைவர் நேற்றே களத்தில்.. இனி
we will fight we will win
..
திமுக எப்போதும் மக்களுக்கானது
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment