Tuesday, March 31, 2020

கொரோனா.. தமிழகம் திராவிடம்.ஸ

பொதுநலனையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்படுகிறார் தளபதி ஸடாலின் .. ஆரம்பம் முதலே அமைதியான நேர்மையான அரசியலை கையிலெடுத்து வருகிறவர் ..நீண்ட அனுபவம் அவரை தொலைநோக்கோடு சிந்திக்க வைத்தது .. சட்டமன்றத்தில் தனிமைபடுதல் தனிமைப்படுத்தலை தொடர்ந்து வலியுறுத்தியவர் அரசு செவிசாய்க்க மறுத்தபோதும் தொடர்ந்து தன்கடமையை செய்தார் .. இன்று இந்தியாவே தன்னை தனிமைபடுத்திக்கொண்டிருக்கிறது.  
..
திராவிடத்தால் வீழ்ந்தோம் எனச் சொல்லி திரிந்தவர்கள் யாகம் செய்ய சொல்லியும் 
கடவுள் வைரஸ் அவதாரம் எடுத்திருக்கிறாரென துக்ளக் அறிவாளிகள் நம்மை மடமைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில்
திராவிடத்தின் நான்காம் தலைமுறை தலைவர் மருத்துவ அணியை நியமனம் செய்கிறார் .. கலைஞர் அரங்கை  தற்காலிய மருத்துவ முகாமாக்க அனுமதியளிக்கிறார் .. தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடையே கலந்துரையாடுகிறார் .. கட்சிகாரர்களை களப்பணிக்கு தயார் செய்கிறார் .. சுணக்கம் காட்டி தாமதபடுத்தலை தவிர்க்கிறார் நேரடியாக இயக்கத்தினரை தொடர்புக்கொண்டு கேட்டறிகிறார் .. இளைஞரணி எந்த ந்ரமும் தொடர்புகொள்ள தொலைப்பேசி எண்ணை அளிக்கிறது .. மக்கள் பணியில் எப்போதும் போல் நிறைந்து நிற்கிறது ..
அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படவேண்டிய நேரம் .. அனைத்துக்கட்சி கூட்டத்தை காணொளியில் நடத்தலாம் என தளபதி சொல்வதை அரசு ஏற்கவேண்டும் .. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தருவோம் என தளபதி ..
..
ஆனால் இந்திய ஒன்றியத்தின் வடமாநிலங்களில் நிலை மோசமாக இருப்பதை ஊடகங்கள் வெளிச்சம் போடுகிறது.. பஞ்சம்பிழைக்க சென்றவர்கள் உயிருக்கஞ்சி சொந்த ஊருக்கு நடந்து செல்கிறார்கள் ..அப்படி வந்தவர்கள் மீது பூச்சிமருந்தை தெளிக்கிறது பாஜக அரசு இதை யாரும் கண்டிக்க மறுப்பது எந்தளவிற்கு நம்மிடம் மனிதம் செத்துக்கொண்டிருக்கிறதென்பதை காட்டுகிறது .. வடமாநிலங்களில் பெரியாரை போல ஒருவர் பிறக்காதது இன்றைய அவலங்களுக்கு காரணம் .. மனிதர்களை சிந்திக்கவிடாமல் கடவுள் வேதம் மதம் என போதை ஏற்றி .. கல்வியறிவை பகுத்தாயும் பண்பை தெளிவை தராமல் குறுகிய வட்டத்திற்குள் இருக்க செய்து மனிதம் வளர்க்காமல் மதம் வளர்த்ததின் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள் ..
..
விழிப்புணர்வோடு தமிழகம் ..
இந்த கட்டமைப்பை உருவாக்கி திராவிட இயக்கதலைவர்களுக்கு  நன்றி..
..
ஆலஞ்சியார்

Sunday, March 29, 2020

பிரதமர் நிவாரணம்

இந்திய ஒன்றியத்தின் பிரதமரும் தமிழ்நாட்டின் முதல்வரும் நிதி கேட்கிறார்கள் 
கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க போதிய நிதி ஆதாரமில்லாததால் மக்களிடம் கையேந்துகிறார்கள் வல்லரசாக்குவேன் என்ற பிரதமரும் அவரின் தலையாட்டியும் ..
..
நாட்டின் பிரதமர் இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனாவை கட்டுபடுத்துவது பெரும் சவாலாக உள்ளது என்கிறார் .. இதைவிட அதிக மக்களை கொண்ட சீனா சிறப்பாக திட்டமிட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது .. ஆனால் பிரதமரின் அறிவிப்பை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் திருச்சியிலும் உ.பி.யிலும் இன்னும் பிற பகுதிகளிலும் சாமி ஊர்வலங்களும் பெரும்கூட்டத்தோடு சாமிசிலை கொண்டு கொண்டாடி தீர்க்கிறார்கள் .. ஆனால் அதெல்லாம் காவல்துறைக்கு கண்ணில் படாது .. சில மதம் தலைக்கேறிய அறிவிலிகள் 
அசுரவதம் நடப்பதாக சொல்லி தங்களை தாங்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள் .. கொத்துகொத்தாய் மரணங்கள் உலகமே செய்வதறியாது வழிபாட்டுதலங்களை மூடிவிட்டு தெய்வங்கள்..? ஓய்வில் .. 
தொடர்ந்து ஓய்வின்றி மருத்துவர்களும் செவிலியர்களும் மக்களை காக்க போராடிவருகிறார்கள் .. இங்கே மடையர்கள் பல்லக்கு தூக்கி சாவை வரவேற்கிறார்கள்..
..
திடீரென இரவு உத்தரவு போடுகிறார் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு எப்படி சென்று சேர்வார்களென முன்யோசனை இல்லாமல் பிழைக்க தினக்கூலிக்காய் சென்றவர்கள் பெரும்கூட்டமாய் நெடும்பயணம் மேற்கொள்கிறார்கள் டெல்லியிலிருந்து பீகாரை நோக்கி .. இந்த அரசிடம் எந்த திட்டமிடலும் இல்லை .. திடீரென ஓரிரவில் பணமதிப்பிழப்பு செய்த மகான் திடீர் ஞானோதயம் வந்து உலகமெங்கும் இரண்டுமாதங்களாகவே ஆட்டுவிக்கும் கொரோனாவைபற்றி அறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் வந்தும்  குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதிஸ் கவனம் செலுத்தி.. கடைசியில் வேறு வழியின்றி கைமீறிவிடும் என்ற நிலை வந்தவுடன் தொலைக்காட்சியில் தோன்றி நள்ளிரவு முதல் ஊரடங்கு 21 நாட்கள் என்றார் ..மக்கள் அவதியில்..
..
இந்திய பொருளாதாரம் கடும்வீழ்ச்சியில் என அறிந்தும்,  தொடர்ந்து வல்லுநர்களால் 
எச்சரிக்கபட்டும் இங்கே மதம் ஆட்சி செய்தது .. வரலாறு படித்தவர்கள் நிதித்துறையை கையாண்டதில்  கடைசியில் தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள்.. வாராகடனையும், சில கொழுத்த தொழிலதிபர்களுக்கு பல்லாயிரம் கோடிகளும், தள்ளுபடியும் செய்துவிட்டு இன்று மக்களிடம் நிதி கேட்கிறது மத்திய அரசு .. இந்திய குடிமக்கள் என நம்மால் நிரூபிக்க முடியாமல் போனாலும் சரி .. உதவியென கேட்டுநிற்கும் அரசிற்கு நம்மால் இயன்றதை வழங்குவோம்
..
தருவோம் நம் மக்களின்,உயிர்காக்க 
பிரதமரின் நிவாரண நிதிக்கு .. மக்களின் உயிர் முக்கியம் .. தலையில் சுமையோடு  கைக்குழந்தைகளையும் அழைத்து கொண்டு சாலை வழியாக தொடர்ந்து பயணித்து உயிர் பயத்தோடு செல்லும் எம் சகோதரனை /சகோதரியை காக்க ..
பசியில் தெருவில் உறங்கும் முகவரியில்லாத பெருமக்களை காக்க .. செய்வதறியாது யாரிடமும் யாசகம் கேட்க அஞ்சும் எம் எளிய மக்களை காக்க ..மதங்களும் சாதிகளும் கடவுளும் கைவிட்டாலும் மனிதனின் பெரும் முயற்சி பெரும்சாவில் இருந்து காக்கும் மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையில்.. ஒன்றுபட்டு இந்தியாவில் கொரோனாவை அழித்தொழிக்க அரசோடு இணைவோம் ..
..
ஆலஞ்சியார்

Sunday, February 16, 2020

பூம்பூம் மாடு

#காயத்தை_குருதியைக்_கொண்டு_கழுவாதே என்றார் மௌலானா ரூமி அவர்கள் ..
..
பூம்பூம் மாடு..
இன்றைய சூழலில் CAA தேவை என்கிறது
வாணியம்பாடி தந்த பூம்பூம்மாடு ..
சில நேரங்களில் சில மனிதர்கள் தங்களின் நிலைபாட்டில் உறுதியோடு நிற்பதில்லை யாரென்றே அதுவரை அறியாதவர் ஒருநாள் கடைவீதிகளில் "ரௌடிபேபியாக" வலம் வந்து கடைகளை அடித்து உடைத்து ஜெயலலிதாவிடம் "நல்லபெயர்" எடுத்து யாரிவர் என கேட்கவைத்து இவ்வளவு துணிவா என கட்சியில் சீட் கிடைத்து .. வென்று அமைச்சரானார் .. தமிழக அரசியலில் இதெல்லாம் காண வேண்டியிருந்தது 
நல்ல முன்மாதிரிகளை தொலைத்துவிட்டு சில்லறைக்கு வாக்கை விற்றதன் விளைவின் எச்சம் இது .. கழிவுகள் கரைகள் நம்மை ஆக்கரமித்து சுவர் எழுப்பி ஜனநாயகத்தின் முகத்தை கோரமாக்கியது ..
..
இவரென்றில்லை நிறைய பேர் பூம்பூம்மாடுகள் தான் ..  தன் எஜமானின் வாசிப்பிற்கு தலையாட்டி நன்றி காட்டி அவனை பிழைக்க வைக்கும் மாடுகள் .. அலங்கரித்து நிற்க வைத்து கயிற்றை இழுத்தால் தலையாட்டும் பதவியெனும் அலங்காரம் பேசவைக்கிறது ஆம் தலையாட்டவைக்கிறது .. 
CAA வை பற்றி புரிதல் இல்லாமல் இல்லை ஆனால் பசிக்குமே என்ன செய்ய .. 
வெகுமக்கள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள் அவர்களின் அச்சம் நியாயமானதென பேச தொடங்கியிருக்கிறார்கள் இஸ்லாமியர் தவிர்த்து என்பதில் தான் அவர்களின் கவலை தெரிகிறது.. பார்பன சமூத்தவர்களில் கூட இவர்களின் கவலையை உணர்ந்து கதைக்கிறவர்கள் உண்டு சுமந்த்.ராமன்
இஸ்லாமிய சமூகத்தினர் நடத்துகிற இந்த போராட்டம் அவர்களின் வேதனையின் வெளிப்பாடாகவே இந்துக்கள் பார்க்கிறார்கள் . தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் மட்டும் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் போராடி வருகின்றனர். இந்த CAA NCR NPR அனைத்து  இந்தியர்களுக்கானதாகவே பார்க்க வேண்டிய ஒன்றே அல்லாமல் முஸ்லிம்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை நாம் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.... 
..
இந்தியன் எக்ஸ்பிரஸ் 
அமைதியாக தங்கள் தெருவுக்குள் போராடி கொண்டு இருந்த பொதுமக்கள் எந்த விதத்திலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை. ஆனால் காவல்துறை அங்கு சென்று கலைந்து செல்லுமாறு அத்துமீறிய போதுதான் பிரச்சினை ஏற்பட்டது..தற்போதைய நிலையில் இது மற்றொரு ஷாஹீன் பாங்காக உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஷிப்ட் முறையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு போராட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது என சொல்கிறது .. உண்மையும் கூட தங்களின் இருப்பின் மீது அச்சம் வரும் போது இழப்பதற்கு ஒன்றுமில்லை உயிரைதவிர என்கிற போது இவைதான் நடக்கும்..
..
உச்சநீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் "கருத்து வேறுபாட்டை தேசிய விரோதமாக கருத கூடாதென சொல்கிறார் போராடுவது கருத்து வேறுபாட்டை சொல்வதும் அவர்கள் உரிமை என்கிறார் ..
ஆனால் நிலோபர் கபில் CAA தேவை என கருத்திட்டு தன் பதவியை காப்பாற்றி கொள்ள பெரும் முயற்சியெடுக்கிறார் ..
காயத்தை குருதியை கொண்டு கழுவ முயற்சிக்கிறார் 
பாவம் ..வேறென்ன சொல்ல..
..
ஆலஞ்சியார்

Saturday, February 15, 2020

போராடு..

#பிணத்திற்கு_முன்_உணவுதட்டை_வைக்காதேஎன்றார் ..மௌலானா ரூமி அவர்கள் ..
..
தமிழக இஸ்லாமிய சமூகம் அதை தான் செய்கிறது .. எடப்பாடி மீதான நம்பிக்கை என்பது பிணத்தின் முன் உணவுதட்டை போல 
நேற்று நடந்த துன்பயியல் சம்பவம் அதை தொடர்ந்து விடிய விடிய போராட்டம் மக்களின் ஒற்றுமை கண்டு ஒருநிமிடம் மகிழ்ந்தாலும் சேர்ந்திருப்பவர்கள் "கோடாரிகாம்புகள் " என்கிற பயமும் வருகிறது .. பாக்கர் போன்ற சமூக துரோகிகள் இடையில் சமானத்தை முன்னெடுத்து பேச்சுவார்த்தையில் அரசின் நியாயத்தை ..? பேசியதாக அறிய முடிகிறது  உ.பி.யைபோல இங்கேயும் அடித்தமர்த்தலாம் என்ற நினைப்பை தமிழகம் தடுத்துநிறுத்தும் என்ற நம்பிக்கையை எடப்பாடி தலைமையிலான அடிமை அரசு பொய்பிக்க தொடங்கியிருக்கிறது .. துப்பாக்கிசூட்டையே காலையில் தான் தெரிந்துக்கொண்டேன் என்ற முதல்வர் பெற்ற பெரும்பாக்கியம் நமக்குண்டு 
சென்னையிலும் ஒரு ஷாகின் பாக்  உருவாகிவிடுமோ என அஞ்சுவதின் காரணம் தான் இந்த கலவரம் .. எச்.ராசா போன்ற தேசவிரோதிகள் 98 ல் கோவை கலவரகாரர்கள் மீண்டும் தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கலவரம் செய்ய வந்துவிட்டதாகவும் தமிழக அரசு இரும்புகரம் கொண்டு தடுக்கவேண்டுமென ட்வீட் செய்கிறார் .. திட்டமிட்டே இஸ்லாமியர்களை  CAAவிற்கெதிராக போராடுவர்களாக பிரித்துகாட்டவேண்டுமென்ற நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள் .. பெண்கள் குழந்தைகளோடு போராட்டகளத்தில் தங்களின் எதிர்காலம் குறித்த கவலையில் நிற்கவைத்த அரசும் போராடுபவர்களை தடியடி நடத்தி தங்களின் விசுவாசத்தை காட்டும் அடிமைகளும் வாய்த்தது நமது கேடுகாலம்..
..
இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பிற சமூக மக்களும் களத்தில் நிற்பது ஆறுதலான விடயம் .. பெரியார் மண் என பெருமை பேசி திரிந்தோம் இங்கேயேயும் அடக்குமுறையை ஏவி கலவரபூமியாக்க நினைத்து அதை அரங்கேற்ற திட்டம் வகுத்து தந்திருக்கிறார்கள் ..இந்த அரசை எவ்வழியிலேனும் தூக்கியெறிந்திருக்க வேண்டும் நேர்மை பேசி காலதாமதம் செய்த திமுகவும் இங்கே குற்றவாளி கூண்டில் .. அதிமுக அரசை இவர்கள் வைத்திருப்பதே தங்களின் தேவைகள் நோக்கங்கள் கொள்கைகள் சித்தாந்தங்கள் இவற்றை நிறைவேற்றதான் நேரடியாக களம்கண்டு வென்றிட முடியாதென அறிவார்கள் அதனால் தான் இனியொரு வாய்ப்பு கிடைக்காது என்பதால் இவர்களை பயன்படுத்தி தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் ..
..
தன்னெழுச்சியாக ஏற்பட்ட இஸ்லாமியர்கள் ஒற்றுமையை சிலர் தங்களின் செல்வாக்கிற்காக தங்களின் அமைப்பு லேபிலில் காட்ட ஆர்வம் காட்டுவது அயோக்கியத்தனம் ..சரியாக ஒருங்கிணைக்கபடாத சமூதாயமாக முஸ்லிம்களின் பரிதாபகரநிலையில் எத்திநிற்கிறது.. காயிதெ மில்லத் போன்ற ஆளுமைகளை உருவாக்க தவறியதும் பொறுப்பிற்கு வந்தவர்களின் சுயநல பதவிமோகமும் பிரிவினைகளில் தொடங்கி கடைசியில் "எண்ணிக்கையில் அடங்காத" இயக்கங்களாக உருபெற்று நிற்கும் அவலம்.. இஸ்லாமிய வாக்குவங்கிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதென்ற உண்மை விளங்கியதால் சம்பிரதாயத்திற்காக அரசியல் கட்சிகள் கைகோர்க்கின்றன.. அதிலும் சிலர் ஆளும் அரசிற்கு ஆதரவாக வெண்சாமரம் வீசி தங்களின் வளத்தை மேம்படுத்திக்கொள்ள முனைகின்றனர் .. உண்மையில் நாதியற்ற சமுதாயமாக மாறிவருகிறதோ என்ற அச்சம் வருகிறது .. ஒரே குடையின் வராதவரை எந்தவித மாற்றமும் நிகழபோவதில்லை ..
எதிரி யாரென்று தெரியும் யார் துரோகி என்றும் அறிவீர்.. எதிரியை வீழ்த்தும் வல்லமை யாருக்கிருக்கிறதென தெளிவாய் உணர்ந்து 
அவர்களை பின் துணைக்க வேண்டும் .. இல்லையெனில் விழலுக்கு இறைத்த நீரைப்போல வீணாகிவிடும் ..
..
#பிணத்திற்கு_முன்_உணவுதட்டை_வைக்காதீர்
..
ஆலஞ்சியார்

Friday, February 14, 2020

காதல்

காதல் 
உள்ளில் துளையிட்டு ஊடுறுவும் உணர்வு 
அகத்தில் அமர்ந்து மெல்லியதாய் எப்போதும் புன்சிரிக்கும்.. மறந்து திரிந்தாலும் இடையிடையே பெருமூச்சோடு ஜீவனை வெளிகாட்டும் .. 
வாழ்வின் இறுதிவரை நம்மோடு சேர்த்தணைத்தே நடக்கும் .. பலமுறை பூத்தாலும் முதல் முறை மொட்டாகி நின்றதே அத்தருணம் வாழ்வில் எல்லாநிலையிலும் உம்மை கண்ணீர் கசியவிடும் .. கல்வெட்டைப்போல நெஞ்சில் வரைந்த வரிகள் 
அழிக்கமுடியாத திரவியமாய் நிற்கும்.. காதல்
உன்னை புதுப்புதித்துக்கொள்ள உதவும் ..
..
மலரும் நினைவாய் .. சில வருடம் முன்பு
ஒருநாள் பழரசக்கடையில் தனியே அமர்ந்து 
ராசாவின் இசையை ரசித்து மகிழ்ந்திருந்த போது எதிரில் வந்து நின்று நானிங்கே அமரலாமா என்றவுடன் நாடிதுடிப்பு அடங்கியதைப்போல பிரமையில் நான்.. நடுதரவயது கூடவே 15 வயது மகளோடு சின்னசிரிப்போடு நலமா  நான் யாரென்று தெரிகிறதா என்றபோது மீண்டும் பிறந்ததைப்போல உணர்ந்தேன் .. எப்படியிருக்கிறாய் பையன் என்னபடிக்கிறான் இடையில் ஒருமுறை உன்னை பார்த்தேன் ஜவுளிகடையிலிருந்து வீட்டம்மாவை அழைத்துக்கொண்டு டூவீலரில் வெளியேறியதை பார்த்தேன் .. சிலநிமிடம் அடைமழைப்போல் கொட்டி தீர்த்தாள் .. என் மகள் இளையவள் 8 ல படிக்கிறாள் பெரியவ இந்த வருடம் +2 முடிக்கிறா .. 
மீண்டும் எப்படியிருக்கே .. நிலைகுலைய வைத்தது என்னை அவளின் வரவும் பேச்சும் ..
..
அரும்புமீசை காலத்தில் அறிந்தும் அறியாத வயதில் ஒருநாள் திடீரென காதல் கடிதம் தந்து 
அதை பிரித்து படிப்பதற்குள் நெஞ்சில் பட்டாம்பூச்சிகள் வண்ண மினுக்கி பறந்ததெல்லாம் வந்து போனது ஆசை வார்த்தை பேசி அழகுதமிழில் சிணுங்கி ஆற்றங்கரையில் விரல் கோர்த்து நடந்தும்.. ஆற்றுமணலில் புத்தகத்தால் முகமூடி படுத்திருந்தவேளையில் நெற்றியில் முத்தமிட்டதெல்லாம்.. மழைநின்று இலைசிந்தும் நீரில் நனைந்தபடி அன்பாய் பரிமாறிய முத்தங்கள்.. நிறைய கதைத்தும் மௌனமாய் சிலநிமிடங்கள் விழிகள் பார்த்தும் பேசிய ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தது..
அதிகால பனிமூட்டத்தில் மனமகிழ காத்துநின்றதெல்லாம் வாழ்வின் வசந்தங்கள்
கண்ணீர் கசிய கடைசியாய் பேசிவிட்டு போனதெல்லாம் வந்துபோனது .. நிறைய கதைக்கவேண்டும் போலிருந்து அக்கம்பக்கம் பார்க்காமல் அழவேண்டும் போலிருந்தது நீண்ட மௌனம் சொல்லாத வார்த்தைகள் காலம்கடந்த ஞானம் இவையெல்லாம் இழப்பையே தரும் .. அடாவடியாய் அழுத்தமாய் 
கடைசிவரை நின்றிருக்கலாம் விடமுடுயாதென  போராடி இருக்கலாம் நமக்கான வாழ்வை நாமே வாழ்ந்து பார்த்திருக்கலாம் .. பொய்யான முகமூடியோடு வாழ பழகாமல் மெய்யாய் நாம் நாமாய் இருந்திருக்கலாம் .. 
..
திரும்ப முகத்தெதிரே கை சுடக்கிய போது ஞானம் கலைந்து சிரித்துவைத்தேன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.. கடந்தகால நினைவுகள் தவிர்த்து எல்லாம் பேசினாள்.. பையன் பைக்கில விரசா போறான் 
என்ற அக்கறை கூட வந்தது திரும்பவும் பாதாம்கீர் வரவழைத்து குடித்தோம்.. நேரமாறது நான் கிளம்பட்டா .. என்ற போது 
Still love you என்றேன் தலையில் கொட்டி ..
நீ திருந்தமாட்டே எனச் சிரித்து வரேன் என சென்றவள் வாசல் அருகில் நின்று திரும்பி எனை பார்த்து தலையசைத்த போது ..
மீண்டும் அதே பட்டாம் பூச்சிகள் வண்ணமாய் மின்னின..
..
காதல் உள்ளில் துளையிடும் உணர்வு
..
ஆலஞ்சியார்

Saturday, February 8, 2020

தஞ்சையில் தமிழ்

தஞ்சை பெருவுடையார் கோவிலில் 
தமிழ் ஒலித்தது ..

கடவுளால் தேவங்கிரி மொழியை மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றும், தமிழ்மொழி அந்த மொழியுடன் இணையாக நிற்க முடியாது' என்ற வாதத்தை பழமைவாதிகள் முன் வைத்தார்கள் ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்காமல் நிராகரித்தது ..இதை இந்தியன்எக்ஸ்பிரஸ்  நாளிதழ் இது ஆரிய... திராவிட வேறுபாடு என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது ..
குறிப்பாக தமிழ் நாட்டில் 
மத நம்பிக்கையை தாண்டி .பார்பனர்களுக்கு எதிராகவே இது போன்ற குரல்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து ஒலிப்பதை உணரமுடியும் 
திராவிட ஆரிய பகை என்பது இங்கே உணர்வோடு பின்னியது ராணவனை அசுரனாக தமிழினத்தவனாக காட்டியதும் அது வடமாநில மக்கள் ஏற்கும் ராமனுக்கு எதிராக சித்தரிக்கபட்டதும் காரணம் ..
..
கடவுளுக்கு எல்லா மொழியும் தெரியவேண்டாமா ஒருமொழி மட்டுமே வணக்கத்திற்குரியதென்பதும் அதே போல் குறுப்பிட்ட பிரிவினர் மட்டுமே அதை பேசி கடவுளை தாலாட்ட முடியுமென்பதெல்லாம் அறிவுடை செயலா.. கடவுளோடு பக்தன் தனக்கு புரிந்த மொழியில் பேசுவதோ கேட்பதோ தானே சரி இடையில் எதற்கிந்த இடைதரகு வேலை.. அதிலும் குறிப்பிட்டவர்கள் தவிர பிறர் சென்றால் தொட்டால் அபிஷேகம் செய்தால் தீட்டென்றால் கூடாது பாவசெயல் என்றால் பிறகெப்படி அவர் ஏற்றதாழ்வுகளை கொண்டாடுகிற போதிக்கிற செயலை செய்துவிட்டு கடவுளாக முடியும் .. இதற்கெல்லாம் வேதவிற்பன்னர்களிடம் பதில் இல்லை
..
முஸ்லிம்கள் அரபுமொழியில்தானே தொழுகை நடத்துகிறார்கள் என்ற வாதம் வைக்கபடுகிறது 
பொருள் புரிந்து ஒதுகிறார்கள் அதில் கூட யார் வேணிடுமானாலும் வழிபாட்டை தலைமையேற்கலாம் என்ற நிலை உண்டு .. அதை விட அவர்களுக்குள் யாரும் அதை எதிர்க்கவில்லை என்பது கவனிக்கவேண்டியவிடயம் .. தமிழில் பிரசங்கங்கள் செய்யபடுகிறது..
அதற்காக முழுமையாக ஏற்பதாக பொருளில்லை..
..
சிந்து சமவெளியில் வாழ்ந்த பல சமய நம்பிக்கை கொண்ட மக்களிடையே கடவுள் இருந்ததற்கான தடயங்கள் இதுவரை கண்டெடுக்கபடவில்லை பிறகு வழிவழியாக வந்த மக்கள் பயம் காரணம் 
பல்வேறு குல தெய்வங்களை வழிபாடு செய்து வந்ததாக அறிய முடியும் அவை  பல்வேறு கடவுள்களை கொண்டதாக இருந்தது ஆரியர் வருகைக்கு பிறகே அதை சனாதனத்தில் மூழ்கி ஏற்றதாழ்வுகளை வரையறுத்து குறிப்பிட்ட வர்க்கம் மட்டுமே கடவுளின் தொண்டுக்கென சொல்லி கடவுளை கும்பிட கூட தீட்டு விதித்து பிரித்து வைத்ததும் நடந்தது  ஆங்கிலேயர் வரவிற்கு பிறகே
இவைகள் ஒருங்கிணைக்கபட்டு" இந்து " என்ற அடைக்குள் வந்தது .. இவர்கள் கூறும் வேதங்களில் கூட சரியான வழிபாட்டுமுறைகள் சொல்லபடவில்லை இவர்களாக ஏற்படுத்திய ஆகமவிதிகள் பார்பன நலன் சார்ந்து அவர்களின் பொருளாதாரம் மேம்பட அவர்களே உருவாக்கியதே தவிர அதில் எதுவும் உண்மையில்லை .. குறிப்பாக பார்பனர்களுக்கே கடவுள் வேதம் என்பதெல்லாம் புரட்டு என்று தெரியும் அதுதான் தம்மை மேம்படுத்தி காட்ட ஒரேவழி என்பதால் விட்டுகொடுக்க மறுக்கிறார்கள் ..
எல்லோரையும் அர்ச்சகராக ஆக்கிவிட்டால் அவனே கடவுள் இல்லை என சொல்லிவிடுவான் என பெரியார் சொன்னார் ..
அதுதான் கடைசியில் நடக்கும் ..
..
மதம் மறந்த மனிதமே என்றும் நிலைக்கும் 
..
ஆலஞ்சியார்

Thursday, February 6, 2020

ரஜினி

வேறு வழியில்லை அந்த உச்ச நடிகருக்கு 
66 லட்சம் அபராதத்தை கட்டி அவரை விடுவித்ததின் பின்னில் வருமானவரித்துறை மூலம் மிரட்டி CAA விற்கு ஆதரவாக பேசவேண்டும் என்ற நிபந்தனையோடு பாஜக தப்பிக்கவிட்டிருக்கிறது ..விஜய் ரெய்டுக்கு பின்னிலும் ரஜினி இருப்பதாகவும் Front Line இணை ஆசிரியர் ஆர்.ராதா கிருஷ்ணன் சொல்கிறார்  ரஜினியை வைத்து இனி பயனில்லை என்றவுடன் விஜய் மிரட்டபடுவதாகவும் சொல்லபடுகிறது ..
..
நாய் வேசம் போட்டவன் குலைக்கதான் வேண்டும் 
பாஜகவின் பிடியில் ரஜினி மிரண்டுகிடப்பது அவரின் பேச்சு உணர்த்துகிறது .. மாணவர்கள் போராட்டத்தை சிறுமைபடுத்த முயல்கிறார் மதபோதகர்கள் அவர்களை தூண்டிவிடுவதாகவும் அதை புரிந்து நடந்துக்கொள்ளவேண்டுமென பாஜகவின் குரலை பதிவு செய்து தான் முழு சங்கியாகவே மாறிவிட்டதை சொல்கிறது .. இன்னமும் அரசியலை படிக்கவில்லை மக்களை திடீரென திசைதிருப்பிவிடலாமென சில சொல்வதை நம்பிக்கொண்டு இடையிடையே வந்து பேட்டி தந்து அதை கூட முழுமையாக்காமல் ஓடியொழிகிற இவர் மக்களை காக்க வருவாராம் ..
..
தமிழ்நாடு விழுப்புணர்வு கொண்ட மாநிலம் வடக்கில் காவல் துறை அதிகாரியை கூட ஷூவை கழட்டவைத்தாலும் அது செய்தியாக கூட வராது ஆனால் இங்கே சிறுவனை அழைத்து செருப்பை கழட்டச்சொன்னால் அடிவிழும் வன்கொடுமை வழக்குவரும் .. சுயமரியாதையை தேசமிது இங்கே சங்கிகளுக்கு இடமில்லையென ஒவ்வொருமுறையும் தமிழ் தேசம் சொல்லிக்கொண்டே இருக்கிறது .. எத்தனை பித்தலாட்டங்கள் செய்தாலும் இங்கே பருப்பு வேகாது .. ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நின்று நிதானமாக பதில் சொல்ல வக்கில்லாதவர் சுயபுத்தியற்று சொல்லிக்கொடுத்ததை வாந்தியெடுத்துவிட்டு ஓட்டம் பிடிக்கிறவர் .. 
முஸ்லிம்களுக்கு பிரச்சனை வந்தால் முதல் ஆளாய் நிற்பாராம் ..உ.பியிலும் டெல்லியிலும் குஜராத்திலும் முஸ்லிம் வேட்டையாடியபோது எங்கு சென்றார் .. கமலை கூட சிறந்த நடிகர் என காலம் பேசும் ஆனால் ரஜினியின் வீழ்ச்சி மிக பரிதாபமாகவே இருக்கும் .. அரசியல் அறிந்து பேசவேண்டும் .. ஆர்எஸ்எஸ் குரலை உயர்த்துவதற்கு ஒரு அடங்கிய அடிமை கிடைத்திருக்கிறார் .. போராட்டம் செய்வது மாற்றுகருத்தை சொல்வதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமை ..  இதெல்லாம் கூடாதென்பது பாசிசத்தின் குரல் ..  மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு படிக்கபோக சொல்கிறது அதேபோல் மாணவர்கள் தன்படத்தை பார்க்க வீட்டில் பணத்தை கேட்டும் கேட்காமலும் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்து தரும் பணத்தில் கொழித்துக்கொண்டு புத்தி சொல்வதுதான் கொடுமை இனி தன் படத்தை மாணவர்கள் பார்க்காதீர்கள் சொல்லவேண்டும் அதுதான் சரி 
ஒருமுறை பம்பாய் (மும்பை) சென்றால் மதராஸி என்கிறான் கர்நாடகாவிலே மராட்டி என்றும் தமிழ்நாட்டில் கன்னடன் என்றும் சொல்கிறார்கள் நான் எங்கே போறது  ..எங்கேயோ கேட்ட குரலாய் இருக்கிறதா .. ரஜினி சொன்னது தான் இன்று பாஜகவின் பைத்தியக்காரத்தனத்திற்கு காவடி தூக்குகிறார் ..
..
ஆலஞ்சியார்