Monday, July 29, 2019

பொருளாதார இடஒதுக்கீடு மோசடி

#10PercentFraudReservation .. இனி மெல்ல மெல்ல அழிந்துபோவோம்.. நம் உரிமைகள் நாமே காவுகொடுக்கிறோம் .. சில ஆயிரங்களுக்கு ஆசைபட்டு வாக்குகளை விற்ற நாம் .. பாட்டனும் அப்பனும் பட்ட கஷ்டங்களை நம் பிள்ளைகள் மீது திணிக்கிறோம்.. பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளன் கலைஞரும் கட்டி காத்த சமூக நீதி கண் முன்னே சவக்குழியில் .. உயர்ஜாதி ஏழை என்ற தகுதியில் பார்பன கூட்டம் மொத்தத்தையும் கொண்டு போகிறது .. நாம் வேடிக்கை மனிதராய் நிற்கிறோம் .. நாம் தமிழ் தேசியம் பேசியும் .. சாதி பெருமை பேசியும் உரிமைகளை இழப்பதே அறியாமல் .. என்ன கொடுமை .. .. இனி ஐம்பதாண்டு பின்னோட்டு செல்வோம் பார்பன அடிமைகளாய் திரிவோம் பாஜக என்பதே பார்பன ஜனதாவிற்கானது .. அவர்கள் நலம் மட்டுமே முக்கியமாய் கொண்டு இயங்கும் .. தேசபக்தி ஜெய்ராம் மாட்டை புனிதமாக கருதும் மடத்தனம் இவையெல்லாம் சொல்லி நம்மை அடியாட்களாக வலம்வரவிட்டு அவர்கள் அமைதியாய் அரசு பதவிகளில் அமர்கிறார்கள் .. ஜெய்ராம் சொல்ல சொல்லி மனித ரத்தத்தை கையில் ஏந்தி ராம் ராம் என கொக்கரிப்போம் .. நம்மை விட தாழ்ந்தவனை அம்மணமாக்கி அடித்து உதைத்து.. நம் உரிமைகளை கல்வியை வேலைவாய்ப்பை இழந்து அம்மணமாவோம் ..உண்மையில் பார்பனர்களை பாராட்டதான் வேண்டும் நம்மில் ஏற்றதாழ்வை சொல்லி கலகம் செய்து அடியாட்களாக்கி மதவெறியை சாதிவெறியை தூண்டி நம் மக்களை ரௌடிகளாய் அடியாட்களாய் கலககாரனாய் செய்துவிட்டு. நோகாமல் குறைந்த மதிப்பெண் பெற்றாலே போதும் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்துவிடலாம் என்ற மிக அருமையாக திட்டம்தீட்டி அதை நம்மை கொண்டே செயல்படுத்தி வென்றிருக்கிறார்கள் .. .. பொருளாதார இடஒதுக்கீடென்பதே ஒருவகையில் ஏமாற்று.. அயோக்கியத்தனம் அதிலும் உயர்ஜாதி வருமான உச்சநரம்பு 8 லட்சம் ஐந்து ஏக்கர் மெட்ரோ நகரில் 1000 சதுர அடி .. இவையெல்லாம் வைத்திருப்பவர்கள் பாவம் ஏழைகள் .. ஆனால் மற்றவர்கள் ஐந்து லட்சம் வருமானமென்றால் பணக்காரர்கள் .. வீட்டில் ஏ.சி இருந்தால் ரேசன் கிடையாது எல்லாவற்றையும் கடந்து போவோம் .. நமக்கு அத்திவரதர் தரிசனம் கிடைத்தால் போதும்.. அதை கூட நம்மிடமிருப்பதை கொள்ளையடிக்க என்பதை கூட அறியவில்லை .. .. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதரை .. நமக்கு விழிப்புணர்வு வராவிட்டால் எதை சொன்னாலும் தலையாட்டுகிற எடப்பாடிகளே போதுமென்றால் ஏன் என்று கேள்வி எழுப்பி போராடாமல் போனால் நம் குழந்தைகள் கல் உடைக்கவும் மாடுமேய்க்கவும் அப்பன் தொழிலை செய்ய வேண்டிய நிலை தான் வரும் .. யாரை தேர்ந்தெடுப்பது என்று அறிந்திருக்கவேண்டும் அதை விட யாரை தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டுமென்ற அறிவு வேண்டும் .. இல்லையெனில் அரும்பாடுபட்ட கட்டிகாத்த சமூகநீதி சவக்குழிக்குள் போகும் எச்சரிக்கை .. .. ஆலஞ்சியார்

Sunday, July 28, 2019

அரசியல் பிழைகள்

வாழும் காலத்திலேயே ராமதாஸை புரிந்துக்கொண்டு பெருமைபடுத்துங்கள் அன்புமணி ராமதாஸ் .. கூடவே பெரியார் இருந்த போது உதாசீன படுத்திவிட்டு பின்பு புகழ்கிறோமே அதுபோல் அல்லாமல் வாழ்கிற போதே போற்றுங்கள் என்கிறார் .. அப்பன் மீது மகனுக்கிருக்கும் அன்பு அக்கறை நமக்கு புரிகிறது ஆனால் பின் தொடரதக்கவரா ராமதாஸ் .. .. நெஞ்சம் முழுக்க சாதீய வெறியோடு தன் நம்பி வந்தவர்களை நடாற்றில் விட்டதைப்போல எல்லா பதவிகளும் தன் குடும்பத்தை தன் ஜாதி உறவையோ போய் சேரவேண்டுமென எண்ணுகிறவர் .. தன் சமூகத்து இளைஞர்களை, அடியாட்களைப்போல பயன்படுத்தி குடிசைகளை கொளுத்தும் செயலுக்கு பயன்படுத்தி வழிகேட்டில் நிறுத்தியிருக்கிறவரை பெரியாரோடு ஒப்பீடுடென்பதே ஒருவகையில் அயோக்கியத்தனம் யார் பெரியார் தெரியுமா .. எனக்கு மதபற்றோ சாதிப்பற்றோ மொழிப்பற்றோ இனப்பற்றோ இல்லை இருப்பதெல்லாம் மானுடபற்றுதான் என்றவரோ சாதியத்தை சுமந்து திரியும் யோக்கியரை ஒப்பிட்டு பேசுவதே தவறானது .. .. ராமதாஸ் சொல் சுத்தம் இல்லாதவர் அரசியலில் ஒருவகையில் சாதீய தீயை பற்றவைத்தவர் .. தலித் அல்லாத சமுதாய மக்களை ஒருங்கிணைக்க பாடுபட்டு தோல்வி கண்டவர் .. சமூக மக்களை இடஒதுக்கீட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென போராடியவர் கடைசியில் திமுக ஆட்சியில் அது நடைமுறையாக்கபட்டதும் .. வேறுவழியின்றி அரசியலில் தன் சாதி மக்களை மட்டுமே நம்பி வென்றுவிடலாமென எண்ணி கடைசியில் உள்ளதும் போய் நிர்கதியாய் நிற்பவரை "உதாரணபுருஷனாக " எடுத்துக்கொள்ள முடியுமா என்ன.? .. திராவிடத்தை வீழ்த்துவோமென சொல்லி கடைசியில் திராவிட பேர் சொல்லி திரிவோரிடம் நக்கி பிழைக்கிற நிலைக்கு வந்தது யாரால் .. தன் நிலை அறியாது தனது சக்தி புரியாது தானே எல்லாம் தெரிந்தவர் .. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் தமிழ்நாட்டில் நான் மட்டுமே ஒழுக்கசீலன் அனைத்தும் அறிந்த அறிவாளியென பேசி மற்றவர்களை எள்ளிநகையாடி கடைசியில் அவர்கள் காலடியில் அப்பனும் மகனும் விழுந்த கதை நாடறியும் .. சுயமரியாதை இழந்து மக்களால் வெறுத்து ஒதுக்கபட்டு கடைசியில் யாரை ஏசினோமோ அவர்கள் தயவில் காலத்தை கழிக்கலாமென்று மாநிலங்களவை உறுப்பினரானதை கேட்டு நாடு சிரிக்கிறது .. .. இவர்கள் பின்பற்றதக்கவர்கள் அல்ல அரசியல் பிணிகள் வருங்கால இளைஞர்கள் புறந்தள்ள வேண்டிய அரசியல் பிழைகள் .. சுயநலத்திற்காக சமூகத்தையே காவு கேட்பவர்கள் .. வெறுக்கதக்க செயல்பாடுகளால் தமிழக அரசியலில் தரந்தாழ்த்து போனவர்கள் .. தானெனும் அகந்தையும் தானே சிறந்தவனென்ற நினைப்பும்,தானே அனைத்திற்கும் தகுதியானவன் என்ற எண்ணமும்,கொண்டவர்கள் வீழ்ந்துபோவார்கள் என்பதற்கு இவர்களே சாட்சி.. .. புதிதாய் தமிழக அரசியலுக்கு வரும் இளைஞர்கள் எப்படி செயல்பட கூடாதென்பதற்கு இவர்களே சாட்சியம் வகிக்கிறார்கள் .. சுருங்க சொன்னால் பின்பற்ற கூடாத #அரசியல்_பிழைகள் .. ஆலஞ்சியார்

Saturday, July 27, 2019

கலைஞர்

#கலைஞர்_திமுகதலைவர்51…… ஒரு தனிமனிதனின் சாதனைகள். உலகில் எவருக்குமே கிட்டாத இனி கிடைக்காத சாதனைகள் கலைஞருக்கு மட்டும் எப்படி கைவந்தது.. பொதுவாழ்வில் வைரவிழா.. சட்டமன்ற உறுப்பினராய் மணிவிழா கட்சித்தலைவராய் பொன்விழா.. தொடர்ந்து தேர்ந்தெடுக்கபட்ட வரலாறு.. கலை இலக்கியம் பேச்சாற்றல் எழுத்து .. திரைக்கலை.. நாடகம் .. தொட்டதெல்லாம் தனிமுத்திரையோடு வெற்றி.. அரசியலில் ஆழ்ந்த தெளிந்த துணிவாக விரைவான முடிவுகள் ..செயல்படுத்திய திட்டங்கள் காலங்கடந்தும் இந்திய துணைக்கண்டத்திற்கே வழி காட்டுகிறதே .. எதிர்த்தவனும் .. இவரை கண்டால் இசைந்ததாய் தான் வரலாறு .. இவரை சுற்றியே தமிழக அரசியல் அறுபதாண்டாய் இயங்கியதே.. இவர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் இதுவரை எவரும் அரசியல் செய்ததில்லை.. இனியும் முடியாதே .. அப்பப்பா.. இவரை தாக்கியவர்கள் தளர்ந்துபோனதாக தான வரலாறு.. புதிதாய் அரசியலுக்கு வருகிறவர்கள் இவரின் அரசியலின் அரிச்சுவடியை தான் முதலில் கற்க வேண்டும் .. .. எப்படி சாத்தியமாயிற்று கடும் உழைப்பால் விடா முயற்சியால் வந்தது.. இனி முடிந்தது திமுக என கொட்டை எழுத்துக்களில் தலையங்கம் போட்டு முதல் நாள் மகிழ்வான் மறுநாள் மக்களுக்கான போராட்டம் உடன்பிறப்பிற்கு கடிதமென தட்டியெழுப்பி.. புதிய கரைவேட்டியை கட்டிக்கொண்டு கடைத்தெருவில் திமுககாரன் நிற்கவைத்துவிடுவார் .. அரசியலை அறிந்த ஞானி.. .. மரணம் அழகு.. அது எல்லோருக்கும் வரும் அதிலும் புகழோடு வழ்ந்தவனுக்கு .. பேரின்பத்தோடு அணைத்துக்கொள்ளும் .. அவன் இறப்பதில்லை மாறாய் காலமாய் நம்மோடு நிலைத்து நிற்பான்.. கோழைக்குதானடா மரணம்.. வீரனுக்கு விவேகிக்கு நாற்றமெடுத்த சமுதாயத்தை நன்னீராய் மாற்றியவனுக்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொன்றை நல்லதாய் அவன் வாழ்விற்கு விளக்கேற்ற செய்தவனுக்கு.. பசி போக்கியவனுக்கு.. எல்லோருக்கும் கல்வியென்ற இலட்சியவெற்றியை கண்டவனுக்கு.. இந்த சமுதாயத்தில் அழுக்கை அள்ளுகிறவனின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை தந்து உயர்த்திவிட்டவனுக்கு .. ஒவ்வொரு செய்கையையும் இந்த சமுதாயம் மட்டுமல்லாது.. உலகமே ஏற்கும் திட்டமாய் செய்த தொலைநோக்கிற்கு.. வரலாறாய் வாழ்ந்தவனுக்கு ...மரணமில்லை கோழைகளே.. காலம் எப்போதும் சொல்லும் கலைஞரே தமிழகத்தின் சுழற்சி.. அந்த சுழற்சியின் அச்சாணி.. ஒன்று தெரியுமா இவரை கண்டு படிக்காமல் இவரை தந்ததை சுவைக்காமல்.. இவரின் காலடிச்சுவட்டை பின்பற்றாமல்.. இவர் செய்துவிட்டு போன சொல்லிவிட்டு போனதை பின்பற்றாமல் யாருமே இயங்கவே முடியாதென்ற சூழலை உருவாக்கியவருக்கு மரணமில்லை.. கலைஞரே தமிழகத்தின் வரலாறு .. .. ஆனாலும் இவரின் இழப்பு நமக்கு நிறைய உணர்த்துகிறது ..ராமன் எந்த இன்ஜினியரிங் காலேஸில் படித்தான் என கேட்டு அலறவிட முடிந்தது .. ஒரே வரியில் ஒற்றை கடிதத்தில் உடன்பிறப்பே என்ற விளியில்..இந்திய ஒன்றிய அரசையே அலறவிட முட்ந்தது.. எப்போது கலைஞர் மறைவாரென காத்திருந்த பகை .. ஒவ்வோன்றாய் கலைஞர் பெற்று தந்ததை சூறையாட வருகிறது கல்வியில் வேலைவாய்ப்பில் நம்மை வீழ்த்துகிறது இந்த ஒற்றை மனிதனின் இழப்பு நமக்கு நிறைய உணர்த்துகிறது .. வீணாய் போனவர்கள் அடிமடையர்களை முட்டாள்களின் அடிமைகளின் கையில் அரசை தந்துவிட்டு மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் தமிழகம் சொல்லண்ணாதுயரில் .. ஆனாலும் நம்பிக்கையாய் தளபதி .. அறிந்துக்கொள்ளுங்கள் மூடர்களே.. இந்தியாவின் வழிகாட்டி.. அரசியல் பல்கலைகழகம்.. வாழ்வியல் அற்புதம் தொண்டர்களின் மூச்சு.. கலைஞரின் வழியில் வென்றெடுப்போம் .. கலைஞர் தமிழனின் வரம். தமிழ் செய்த தவம்.. இனத்தின் முத்து மானமுள்ள தமிழரின் சொத்து.. #எம்இனத்தின்_பெருவுடைப்பெருவேந்தன் .. ஆலஞ்சியார்

Friday, July 26, 2019

#அமைதி வேண்டும்.. சிறிதுநேரம் .. சில்லென்று காற்றை.. நுகர்தல்..வேண்டும் உள்ளமும் உணர்வும்.. ஒரே நிலையில் வேண்டும் பகட்டாய் பாசம் பேசும்.. பச்சோந்திதனம் மாறவேண்டும் .. இரவின் நிழலில்.. இதமான பொழுதில்.. இன்பம் தரும்.. எல்லாம் வேண்டும் கண்ணின் பார்வை நேர்பட வேண்டும் கயமை மாறி #கதிரவன் ஒளிப்போல் நெஞ்சில் .. வெளிச்சம் வேண்டும்.. பகைவர் தன்னை நான் அறிதல் வேண்டும்.. நான் நெஞ்சில் பகை கொண்டு அழையும் நிலை.. முற்றிலுமாய்.. மாற வேண்டும்.. பொய் ,புரட்டு, பித்தலாட்டம், சூழ்ச்சி, சுயநலம், இல்லா நிலை இனியாவது வேண்டும்.. பசித்தவர் கண்டால் மனமிழகி.. ஈகும் நிலை.. எல்லா நாளும் வேண்டும்.. தினந்தோறும் புதிய அறிவை பெறும் புதிய..சிந்தனை.. பூக்க வேண்டும .. புதிது புதிதாய் பூக்க வேண்டும் என்னை நானே எடைபோட. இடையிடையே சின்னச்சின்ன தோல்வி ..வேண்டும். #நான் எனும் அகந்தை மாறி.. நற்குணம் வேண்டும்.. உள்ளமும் உணர்வும் .. ஒரே நிலையெனும்... மன.. அமைதி வேண்டும்.. இவையெல்லாம் . #இனியாவது.. .. ஆலஞ்சியார்

Thursday, July 25, 2019

திமுக..

சிலைத் திருட்டில் தொடர்புடையதாக இரு அமைச்சர்கள் பெயரை கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்டு விவாதமாக்கியுள்ள சூழலில் எந்தவொரு #நடுநிலைஊடகங்களும் வாய் திறக்கவே இல்லை .. விசாரணை அதிகாரி உயர்நீதிமன்றத்தில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு என அறிக்கை தாக்க செய்த நிலை ஊடகங்கள் என்ன செய்திருக்க வேண்டும் புலனாய்வு செய்து செய்தியை வெளியிட்டிருக்கலாமே .. குறைந்தபட்ச செய்தியை மக்களிடையே வேகமாக கொண்டு சேர்த்திருக்கவேண்டாமா..? இதே திமுகவினரென்றால் விடிய விடிய கூவும் நடுநிலைகள் யாரும் வாய் திறக்கவே இல்லை இந்துக்களின் பாதுகாவலர்கள் இந்து தெய்வங்களின் உறவுகள் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை குறைந்தபட்ச அறிக்கை கூட காணோமே.. ஏன் .. யாருக்காக வாய்மூடி மௌனிக்கிறார்கள்.. .. எதற்கெடுத்தாலும் திருட்டு திமுக என சொல்லி திரியும் அறிவிலிகள் எதற்காக எதுவும் பேசாமடைந்தையாக இருக்கிறார்கள் ..அரசியலில் எதிர்க்க முடியாமல் திமுகவை குறைச் சொல்ல வழியின்றி திருடர்கள் என பேசுவோர் இதுவரை திமுக ஏதேனும் வழக்கில் தண்டிக்கபட்டிருக்கிறதா .. ஆனால் உச்சநீதிமன்றத்தாலேயே இருமுறை தண்டிக்க/கண்டிக்கபட்ட ஜெயலலிதாவை தியாக உருவமாக சொல்லும் மனநிலையை பைத்தியகாரத்தனம் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது .. லோக்தள் அமைப்பு மக்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட ஊழல்வாதி எடியூரப்பாவை எல்லாம் ஜனநாயகவாதியாக காட்டும் ஊடகங்கள் .. உண்மையில் வெளிப்படையாக சிறந்த ஜனநாயக மரபுகளை பேணி இயக்கம் நடத்தும் திமுகவை இன்னமும் சிலை குறைகூறி வருகின்றனர் .. ஊடகவியலாளர் போர்வையில் வன்மத்தை கக்குகின்றனர் .. திமுக பாஜக அரசிற்கு வெண்சாமரம் வீசுகிறதாம் .. அப்படி வீசவேண்டுமெனில் இந்நேரம் திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ..நாடாளுமன்றத்தில் பாஜகவை வெளிநடப்பு செய்து ஆதரிப்பதாக சிலர் பதறுகிறார்கள் .. நூற்றாண்டு கண்ட இயக்க கொள்கையில் தேர்தல் அரசியலில் அறுபதாண்டுகளை கடந்த இயக்கம் எதையும் வெளிப்படையாக (ஆதரித்தாலும் எதிர்த்தாலும்) ஜனநாயக நெறிமுறைகளோடு செய்யும் ‍.. இப்போது கூட பார்பனர் ஏழைகளின் இடஒதுக்கீட்டை விவாதிக்க நோட்டீஸ் அளித்திருக்கிறது .. ஸ்டேட்பாங்க் கட்ஆப் விவகாரத்தில் நிதியமைச்சர் பதிலளிக்க கோருகிறது வெளியுறவு விவகாரத்தில் பிரதமரை அவைக்கு வரவேண்டுமென உரக்க சொல்கிறது .. இவையெல்லாம் அரசு செவிமடுக்காமல் போகலாம் ஆனால் மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் .. .. திமுக மீது வன்மத்தோடு பார்பன பத்திரிக்கைகள் கதை கட்டுகின்றன .. திருமதி துர்கா திமுகவின் முடிவுகளை எடுப்பதாக எழுதிய ஜூனியர் விகடன் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கிறார் 10கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு .. ஆம் இதை முன்பே செய்திருக்கவேண்டும் திமுக மீது கலைஞர் மீது அவதூறு பரப்புவோர் மீது வழக்கு தொடர்ந்திருந்தால் இன்றைக்கு எவரும் திமுகவை திருட்டு திமுக என சொல்லிவிட்டு போய்விட முடியாது ..விமர்சிப்பதற்கு ஒரு அளவு உண்டு உண்மையான செய்தி எனில் அதை வெளியிடவோ கண்டனம் செய்யவோ விமர்ச்சிக்கவோ செய்வதில் தவறில்லை .. ஆனால் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மீது திராவிட சிந்தையாளர்கள் மீது திமுக மீது பொய் பரப்புரையை செய்யும் ஊடகங்களும் தனிநபர்களும் ஊடகவியலாளர்களும் கவனம் .. .. எல்லாவற்றையும் பொறுத்தருளும் பேரருளாளன் கலைஞர் இல்லை .. இது ஸ்டாலின் திருப்பி அடிக்கும் காலம் இது.. ஸ்டாலின் மிகவும் மென்மையானவர் கவனமாக கையாளுங்கள் இல்லையெனில் ... நிலைகுலைந்து போவீர் .. ஆலஞ்சியார்

Tuesday, July 23, 2019

நவநாகரீக வாழ்க்கை

இப்போதெல்லாம் நவீன நாகரீகம் என்ற பெயரில் நாசூக்காக பேசுவது பெருமையாகிவிட்டது சிரமபட்டு நல்ல சொற்களை தேடி கதைக்கிறோம் இயல்பாக பேசும் வழக்கம் நம்மிடையே காணமல் போய்விட்டது பேச்சில் நையாண்டி நக்கல் இதெல்லாம் இல்லை ஒருவித சோக்குத்தனம் சொற்களில் வந்து மெய்யிழந்து நிற்கிறோம் .. கேலி செய்வதில் கூட நாகரீகம் பார்க்கிறோம் எங்கே கோபித்து கொள்வாரோ என அஞ்சிகிறோம் உறவுமுறை சொல்லி அழைப்பதோ .. மண்ணின் மணமாறாமல் கதைப்பதோ இல்லை .. அதிகம் படித்துவிட்ட நினைப்பு அல்லது அதிகம் அறிந்தவராக நம்மை காட்டிக்கொள்ள பொய் முகமூடி தரிக்கிறோம் .... .. கிராமபுறங்களில் சிலநேரங்களில் மிகவும் கொச்சையாக திட்டுவார்கள். ஆனால்..அது புண்படுத்தாத செயலாகதான் இருக்கும். சில நேரம் நாகரீக சொல் நளினமாய் நடனமாடும்.. ஒருமுறை கீழவழுத்தூர் மளிகைகடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்த போது நடந்த உரையாடல்.. பெரியவர் மூப்பனார் அவர்களும் வேறொரு பெண்மணியும் தரையில் அமர்ந்து வெற்றிலை சீவல் போட்டுக்கொண்டிருந்தார்கள்..அப்போது ஒருவர் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் .. அவரை மூப்பனார் டேய் #வக்காலி இங்க வாடா என்றார் அவனும் கோபடாமல் வந்து அதான் ஒன்னுக்கு ரெண்டா அக்காள கொடுத்தோமில்ல வச்சு வாழ விதியில்ல மூணாவது ஒரு அக்கா வேணுமோ என்றார்.. அவன் சொல்லறதும் சரிதானே என்றார் அந்த பெண்மணி .. ஆம் அவருக்கு இரண்டுமுறை கல்யாணமாகி மனைவிகள் இருவருமே இறந்து விட்டார்கள் .. அவன் எவ்வளவு நாசுக்காக.. சொன்னான்.. தன்னை திட்டியவரையே சிரிக்க வைத்து சொன்ன சொல்லின் பொருளுணர்ந்து விசரமின்றி பதிலளித்து யதார்த்தமாய் கடந்து போனான் .. மற்றொரு சம்பவம்.. இருபெண்மணிகளுக்கு சண்டை வந்து வீதியிலே வந்து திட்டிக் கொண்டுயிருக்கிறார்கள். மாமியாரும் மருமகளும்.. வார்த்தை தடிக்கிறது.. என்மவன் தொடயிடுக்கில புகுந்து பிள்ளை பெத்த உனக்கு இவ்வளவு திமிருன்னா.. அவனையே இந்த தொட இடுக்கில இழுத்துப்போட்ட எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்டி.. என்கிறாள் தாய்.. நாசுக்கான வார்த்தையில் நடனமாடினாள்.. கிராமங்களில் சிலநேரம் மிகவும் மோசமாக வார்த்தை தடிமனாக கூட பேசுவார்கள் ஆனால்.. அதில் விரசமே வராது அல்லது தோன்றாது.. கொச்சையான வார்த்தைகளை கூட சொல்லும்வண்ணத்தில் தேன் தடவி சென்றுவிடுவார்கள் .. கோபத்தில் வரும் வார்த்தைகள் சில நேரம் அதிரவைக்கும் ஆனால் எல்லைமீறாது .. எசக்குபிசக்கா..பேசினாலும் யதார்த்தமானவர்கள் .. வெள்ளை உள்ளம் கொண்டவர்களாய் இருப்பார்கள் இப்போதெல்லாம் பக்கத்துவீட்டுகாரனையே தேவை திருநாளில் தான் பார்க்கிறோம் பேசுகிறோம் .. அந்தளவிற்கு வேகமேறிய வாழ்க்கை .. உண்மையில் மெய்யிழந்து வாழ்கிறோம் .. வாழ தெரியாமல் வாழ்கிறோம்.. .. ஆலஞ்சியார்

Monday, July 22, 2019

அத்தி வரதர்

வரதர்.. அத்தி வரதர் பார்பனர்களின் இன்றைய மார்க்கெட்டிங் ஆனால் பாருங்கள் வேறு யாராலும் இந்தளவு அசிங்கபடுத்த முடியாது அத்திவரதர் என்னை மீண்டும் புதைக்காதீர்கள் என்று ஜீயரின் கனவில் வந்து சொன்னாராம் .. திருடர்களுக்கு பயந்து தான் புதைத்து வைத்திருந்தோம் என்று வேறு சொல்லி மொத்த வரதரின் இமேஜையும் டேமேஜ் பண்ணிட்டாங்க.. .. நாற்பதாண்டுகளுக்கு முன்பு அதாவது 1979 ல் பார்பனர்களின் செல்லபிள்ளை தான் ஆட்சிக்கு வந்தது இதிலிருந்து கடவுள்..? காணாமல் போகும் வழி நமக்கு பிடிபடும் தன்னை தானே காப்பாற்ற வக்கில்லாதவரிடம் ஏன் இறைஞ்சவேண்டும் .. தெய்வ நம்பிக்கை என்பது அவரவர் விரும்பம் ஏதோ ஒரு சக்தி நம்மை காக்கிறதென்று நம்புகிற பாமரனை அது இதுதான் என வியாபாரம் செய்யும் பார்பு கூட்டம் பிழைக்க தெரிந்தவர்களாய் தொடர்ந்து மக்களை ஏமாற்றுகிறவர்களாய் இருக்கிறார்கள் .. வரதரை காண விஐபி டிக்கெட் பலகோடிகளுக்கு அச்சடித்திருக்கிறார்கள் இதற்கெல்லாம் வருமானவரி GST ...கிடையாது பகிரங்க கொள்ளை நடக்கிறதென சில பத்திரிக்கைகள் எழுதியும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை .. சிலர் இன்னும் சிலகாலம் வைத்திருந்தால் காஞ்சி சுற்றியுள்ள ஊர்கள் வளம் பெறும் பொருளாதாரத்தில் மேம்படும் வணிகம் பெருகும் என சொல்ல தொடங்கியிருக்கிறார்கள் .. திருப்பதிக்கே சவாலாக வரலாமென்றெல்லாம் கதைக்க தொடங்கியிருக்கிறார்கள் .. அலைமோதும் கூட்டம் நல்ல வரவாக அவர்களுக்கு கிடைக்கிறது .. பாவம் சாதாரண பக்தன் வரிசையில் நின்று மூச்சிழக்கிறான் ..அதெல்லாம் தண்ணில் கிடந்த வரதருக்கு தெரியாது .. .. பார்பனர்கள் கையில் கோவில்கள் இருந்தால் சிலைகள் காணாமல் போகும் அறநிலையதுறையிடம் இருப்பதால் வரதர் திருட்டுபோகமாட்டார் எனவே புதைக்க தேவையில்லையென வரதரை வைத்து காசுபார்த்த கூட்டம் சொல்கிறது .. உண்மையில் பக்தியோ தெய்வமோ அல்ல மரகாச்சி பொம்மை .. அதை வைத்து பிழைக்கலாமென்ற எண்ணம் பாருங்கள் அதில் தான் பார்பனர் வெற்றிபெற்றிருக்கிறார்கள் .. திருகச்சி நம்பியோடு உரையாடிய வரதன் (கலைஞரின் ராமானுஜர்_மதத்தில் புரட்சி செய்த மகான்) ஏன் இன்று என்னை வைத்து பிழைப்பு நடத்தாதீர்களென சொல்லவில்லை .. தெய்வ நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் தெய்வம் இருக்கிறதா இல்லையா என்பதல்ல ஆனால் அதை வைத்து மக்களை ஏமாற்றுகிற செயல் அயோக்கியத்தனம்.. தன்னையே திருடர்களிடமிருந்து காத்துகொள்ள முடியாதவரென அவர்களே சொல்கிறார்கள் .. காஞ்சியில் நடக்கும் கூத்தையெல்லாம் பார்க்கும் போது .. #ஆசான்_கலைஞர் அப்போதே சொன்னது தான் ஞாபகம் வருகிறது "கோவில் கூடாதென்பதல்ல.. கோவில் கொடியவரின் கூடாரமாக மாற கூடாது என்பதுதான்" வரதர் வியாபாரம் நல்ல மவுசோடு இருக்கும் போதே புதைத்தால் நல்லது மீண்டும் தேவைபடும் போது தோண்டி எடுத்து கல்லா கட்டலாம் ..இல்லையெனில் யாரும் சீண்டாமல் யாருக்கும் பயனில்லாமல் போய்விடும் .. .. ஆலஞ்சியார்