Friday, November 30, 2018
அரசியல் அறிவின்மை
மக்கள் டிவியில் கல்வியாளர்களை வைத்து நிகழ்ச்சி மாணவர்களை ஒருங்கிணைந்து நடந்தது ..அதில் சுவாரஸ்மே ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கபட்டு பதில் தருகிறார் அன்புமணி .. முதல்வராக தன்னை எண்ணிக்கொண்டு பதிலளிக்கிறாரென்று நினைக்கிறேன் தன்னை அறிவுஜீவியைப்போல காட்ட முனைந்து தோற்றுநிற்கிறார்..
செல்வி.ஜெயலலிதாவை நடிகை எந்த துறைசார்ந்த படிப்புமில்லை பன்னீர் டீக்கடை நடத்திவந்தவர் எடப்பாடி மணல் வியாபாரம் என்ற அளவிற்கு தாழ்த்துவதால் தன்னை அதிகம் படித்தவரென்று நினைக்கிறாரென்று கருதுகிறேன் ..ஊழலைப்பற்றி பேசுகிறார் உண்மையில் யாருமே அவர்மீது ஊழல் குற்றசாட்டு இருப்பதையோ வழக்கு நிலுவையில் உள்ளதையோ மறந்து போகிறார்கள்.. ஏரி குளம் பற்றியெல்லாம் பேசுகிறவர்கள் இவர்கள் கல்லூரியை பற்றி பேசவில்லை..
..
இத்தனைகாலம் ராமதாஸ் செய்த அரசியல் சாதிய வெறியை மட்டுமே நம்பி வட மாவட்டங்களில் வளர்ந்ததென்றாலும் காலம் கடைசியில் தூக்கியெறிந்து செல்லாகாசாக்கி நிறுத்தியிருப்பதை இன்னும் உணர்ந்தபாடில்லை .. இன்றைக்கு காடுவெட்டி குரு குடும்பமே நேரடியாக குற்றம் சாட்டி ராமதாஸால் தன் குடும்பத்திற்கு ஆபத்தென்று சொல்கிற நிலை சாதியை கையில் பிடித்து ஆடியது இது திரும்ப தாக்குகிறது பாமகவின் முகசாயல் இனி எத்தனைகாலமானாலும் மாற போவதில்லை என்பதை உணராமலேயே முதல்வராகிவிட்டதைப்போல அன்புமணி விவாதங்களில் பதிலளிப்பது வேடிக்கையாக இருக்கிறது .. இதை அவர் உணர இன்னும் காலமெடுக்கும்..
..
யாருக்குமே வேண்டாதவராக ராமதாஸ் தெரிகிறார் தனித்து செயல்படுவதாக சொல்லி மொத்தமும் காலியாகி யாராவது சேர்த்துகொள்ளமாட்டார்களா என நினைப்பது அப்பன் மகன் பேச்சில் தெரிகிறது முன்பைபோல பெரிதாக கண்டுக்கொள்ளபடவில்லை திமுகவிற்கு ஒரு எம்.பி.கூட இல்லையென நக்கலடித்தவர் தன் எம்.பி.தொகுதிக்குட்பட்ட பொன்னரகத்தில் தோற்கடிக்கபட்டார் .. மிக மோசமாக தோற்றுபோனார் .. தேர்தல் தோல்வி வரும் மாறும் ஆனால் அதை கூட புரிந்துக்கொள்ளாதவராக இருந்தவர்.. முதல்வர் லெவலுக்கு தன்னை கற்பனை செய்துகொள்வது நல்ல காமெடி .. தன்னை தவிர யாருக்குமே தகுதியில்லையாம் .. அதிகம் படித்தவராம் அனைத்துதுறையிலும் அறிவுள்ளவரென அவரே சொல்லிக்கொள்கிறார் ..பாவம் உள்ளுர் அரசியல் அறியாமல் ..தானென்ற அகந்தை கொன்றவர்கள் அரசியலில் முகமிழந்து கேட்பாரற்று லெட்டர்பேட்களாக வலம் வருவதை கண்டும் ஆசைவிடவில்லை ..
..
இன்றைய களநிலவரம் அறியாமல் திராவிடம் தோற்றுபோய்விட்டதாக புலம்புகிறார் முதலில் பாமக உதிரிக்கட்சி என்பதை அதுவும் சாதிகட்சி என்பதை.. அதிலும் அந்த சமுதாய மக்களாலேயே வெறுக்கபட்டவராக ராமதாஸ் வகையறா இருப்பதை உணரவே இல்லை .. தமிழகத்தில் சாதி மதம் பேசினால் கதைக்காது என்பதை உணராதவரை .. கற்பனை உலகில் சஞ்சரிக்கவேண்டியதுதான்.. அன்புமணி தன் சாதிய அடையாளத்தை துறக்காதவரை ..தமிழகத்தில் அவரால் காலூன்றவே முடியாது .. சாதிய நிலையை துறந்தால் யாரென்றே அறியபடமாட்டார் .. இதுதான் உண்மைநிலை.. தமிழக அரசியல் உண்மை நிலையை உணராதவராகவே இருப்பதிலேயே அவரது அரசியல் அறிவு தெரிகிறது ..
#சூன்யம்
..
ஆலஞ்சியார்
Thursday, November 29, 2018
தமிழகம் காத்திருக்கிறது
டெல்டா..
இன்னும் மீண்டபாடில்லை மழையும் இடையிடையே மக்களின் மீள விடாமல் அழுத்துகிறது அரசின் உதவியை கூட இடைதரகர்கள்(அரசு ஊழியர்) கவனிப்பிற்கு பிறகே என்ற இழிநிலை .. இத்தனை கொடூரமாய் இயற்கை சீற்றத்திற்கும் பிறகும் அரசின் மெத்தனம் ஆள்வோரின் லட்சணத்தை காட்டுகிறது.. இதைவிட மோசமாக பாதிக்கபட்ட கேரளாவில் விரைந்து அவர்களால் மீண்டு வர முடிந்ததே .. ஆட்சியாளன் மக்களின் நலனை சிந்திப்பவனாக இருந்தான்.. இங்கே மக்கள் வாய் திறக்கவே முடியவில்லை .. உள்ளூர் ஆளும்கட்சிகாரன் கேள்வி கேட்கிறான் வெற்றிபெற்றவனோ ..சும்மாவா ஓட்டுபோட்ட ₹1000 ₹2000 என்று வாங்கிட்டுதானே போட்டே என எதிர்கேள்வி கேட்கிறான்.. அரசு உதவியை கூட கமிஷனுக்கு பிறகே கிடைக்கிறது.. இந்த அவலநிலைக்கு ஒருவகையில் நாமும் காரணமானோம் ..
..
தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில இஸ்லாமிய அமைப்புகளும் திமுகவும் தன்னாலான உதவிகளை செய்த போதும் அது தற்காலிக தீர்வே தவிர நிரந்தர மீட்சிக்கு அரசாங்கத்தால் மட்டுமே தரமுடியும் அதை இந்த அரசிடம் எதிர்பார்க்கமுடியாது .. தமிழர்களின் எதிர்காலத்தை காவுகொடுக்கிற ஆட்சியாளர்களாய் நாம் விரும்பாதவர்களை நம்மை ஆள்கிற நிலையை தெரிந்தோ தெரியாமலோ நாமே ஏற்படுத்திக்கொண்டோம் ..மேகதாதுவில் அணையாகட்டும் மீத்தேன் எடுக்க அனுமதியாகட்டும்,ஸ்டர்லைட் ஆலை திறப்பு ஏன் நீட் ...தேர்வு..என எல்லாவற்றிலும் பழிவாங்கபடுகிறோம்..
தேர்வில் அரசுபள்ளி மாணவர்கள் சொற்ப எண்ணிக்கையில் 3700 பேர் தான் விண்ணப்பித்திருக்கிறார்கள் .. கலைஞர் பெருமகன் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் மருத்துவராக வேண்டுமென்று நீட்டை கடைசிவரை வரவிடாமல் காத்தார்.. இந்த ஆர்எஸ்எஸ்காரன் மாஃபா கல்வி அமைச்சரானவுடன் ஏனென்றே கேட்காமல் கையெழுத்திட்டு தமிழக மாணவர்களின் எதிரிகாலத்தையே .. மருத்துவராக வேண்டுமென்ற நினைப்பில் மண் அள்ளிபோட்டுவிட்டார்.. இந்த ஆட்சியை தூக்கியெறிகிற வரை தமிழகம் இன்னும் பல சங்கடங்களை துயரங்களை சந்தித்து கொண்டேயிருப்போம்.. தமிழக நலன்கள் புறக்கணிக்கபடும் .. இவர்களை போல அடிமைகள் பாஜகவிற்கோ பார்பன பாசிச சக்திகளுக்கோ இனி எந்த காலத்திலும் கிடைக்காதென்று தெரிந்தும் தொடர்ந்து இந்த அரசை இயக்கிகொண்டிருப்பார்கள் ..
நமக்குவாய்த்த அடிமைகள் சிறந்தவர்களென கொண்டாடுவார்கள் .. தமிழுக்கும் தமிழர்களுக்கும் கேடுவிளைப்பதே தங்களின் பெரும்பணியாய் செயல்படும் பார்பனர்கள் எப்படியேனும் இந்த அடிமைகளை காக்கவே முயற்சிப்பார்கள்.. இடைத்தேர்தல் நடத்தவிடாமல் தொடர்ந்து ஏதேதோ காரணத்தை சொல்லி தள்ளிக்கொண்டே போகிறார்கள்..தமிழர்கள் எப்போதெல்லாம் தவறிழைக்கிறார்களோ அப்போதெல்லாம் தங்களின் நலனை மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் சேர்த்தே பலிகொடுக்கிறார்கள்.. பணத்திற்கும் பொருளுக்கும் ஆசைபட்டு வாக்குகளை விற்கிற கேடுகெட்டத்தனத்தை விட்டாலொழிய தமிழகம் தலைநிமிராது..
..
இனியேனும் நல்லதொரு விடியலுக்காக நமக்காக உழைக்கிற நல்லவரை நம்பிக்கையானவரை இன காவலனாய் நிற்கிறவரை ஓயாது உழைக்கிற அரசியலில் நேர்மையை விரும்புகிற .. புறவழியே ஆட்சி தேவையில்லையென மக்கள் தேர்வில் வரவேண்டுமென விரும்புகிற மக்களின் தளபதியை தேர்வு செய்வோம் ..
திமுகவால் மட்டுமே தமிழகம் தலைநிமர செய்யமுடியும் ..
..
ஆலஞ்சியார்
..
Wednesday, November 28, 2018
அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவுக்கெட்டவனே..
65 ஆண்டுகள் கழித்தும் கலைஞர் பெருமகனின் எழுத்து பாசிசத்தை அலறவிடுகிறதென்றால் எத்தனை கூர்மையான வாளாய் அறுத்திருக்கும் ..
மீண்டுமொருமுறை சொல்லி பாருங்கள் அம்பாள் எந்தகாலத்திலடா.. பேசினாள்
பொதுவாக நம்மவர்கள் அம்மன் என்றுதான் அழைப்பார்கள்
ஆளாளுக்கொரு அம்மனை கொண்டுவந்து குலவழிபாட்டின் தொடர்ச்சியாய் நிற்பான் .. ஆனால் பார்பனர்கள் தான் அம்பாள் ஆண்டாளென கடவுளைகூட உயர்சாதியாக பார்பார்கள் .. அதை கூட நுணுக்கமாக எழுத்தில் கொண்டுவந்திருப்பார் .. சட்டென்று புரியாது இதெல்லாம் இன்றைக்கு மதம் பேசி திரிகிறவர்களுக்கு நாம் தான் விளக்க வேண்டியிருக்கிறது ..
கோவிலில் குழப்பம் விளைவித்தேன் கோவில் கூடாதென்பதற்காக அல்ல அது கொடியவரின் கூடாரமாய் ஆகிவிட கூடாதே என்பதற்காக..
பூசாரியை தாக்கினேன் பக்தி வேண்டாமென்பதற்காக அல்ல பக்தி பகல்வேஷமாய் மாறிவிட கூடாதே என்பதற்காக.. அந்த கொடியவரின் கூடாரமாய் ஆகிவிட கூடாதென்பதற்காக தான் .. பார்பனர்கள் பிடியில் இருந்த கோவில் சொத்துகள் அறநிலையத்துறையின் கீழ் வந்ததற்கு காரணம்..
..
கலைஞர் பராசக்தியில் படத்தில் பிச்சைகாரர்கள் நலவாரியமென்பார் .. ஆட்சிக்கு வந்ததும் செய்துகாட்டியவர் .. திரைபடங்களில் சொல்லபடுகிற முற்போக்கான விடயங்களை தன் ஆட்சிகாலத்தில் அதை சட்டவடிவமாக்கியவர் .. அழகு தமிழை அறிமுகபடுத்தி.. தமிழனின் ரசனையை அறிவின்பால் கொண்டுவந்தவர் அவரது வசனத்தை மனபாடம் செய்தான் தமிழன் .. அதை அலசி ஆராய தொடங்கினான் இவ்வளவு விசயமா இதில் என வியந்தான் .. சமஸ்கிருதம் கலந்த தமிழை வீழ்த்தி தேன்தமிழை தமிழர்கள் நாவில் கொண்டுவந்து பேசவைத்தவர் கலைஞர் .. சுவாமி நாதா என்ற அடிமைத்தனத்தை பேசிகொண்டிருந்ததை மாற்றி குணசேகரன் என பெண்ணை அழைக்கவைத்து பெண்ணுரிமை பேச வைத்தவர் .. அவரின் முற்போக்கு, சமஉரிமை சமூகநீதி பேசும் எழுத்துக்களை இத்தனை காலம் கடந்தும் பாசிசவாதிகள் கண்டு அஞ்சுகிறார்களென்றால் கலைஞரின் எழுத்து எந்தளவு கதறவிட்டிருக்கிறது....
..
கலைஞரின் எழுத்தில் குறைகளே காண முடியாது காலம் கடந்தும் பேசும்.. தொலைநோக்கு சிந்தனையை பகுத்தறிவை தான் கொண்ட கொள்கையை யாருமே சட்டென்று தெரிந்துகொள்ளாதவகையில் ஏற்றியிருப்பார் .. மந்திரிகுமாரியில் அண்ணா நீங்கள் தான் தளபதி என வசனம் வரும்.. ஒருமுறை பழம்பெரும் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு தன் நினைவுகளை இப்படி பகிர்ந்துகொண்டார் .. அண்ணாவின் வசனத்தில் கூட நீளம் கருதி சில வசனங்களை நீக்கிவிட்டு படத்தை திரையிட்டுவிட முடியும் கலைஞர் வசனத்தில் ஒரு வார்த்தை வெட்டிவிட்டால் கூட அந்த காட்சியின் பொருளே மாறிவிடும்.. திரைக்கதை போக்கையே மாற்றிவிடும் என்றார் .. கூர்மையான நுணுக்கமான விடயங்களை பேசும் அவரது எழுத்தும் பேச்சும்.. அவரது எழுத்து நூற்றாண்டு பின்னிட்டாலும் பேசபடும் கதறவிடும்
..
#கலைஞர்
..
ஆலஞ்சியார்
Sunday, November 25, 2018
என்னுடன் மோத முடியாதவர்கள் என்தாயை பழிக்கின்றனர்.. மோடி..
என்ன சொல்ல வருகிறார் தான் வகிக்கும் பதவியின் தரம் மறந்து தேர்தல் நெருங்குகிற போதெல்லாம் இதுபோன்று மட்டரகமான கருத்தை தெரிவித்து மக்களிடம் இரக்கத்தை பெற்றிடலாமென எண்ணுகிறார்.. இதுவரை யாரும் அவரின் தாயை மோசமாக பேசவில்லை தாயின் வயதோடு டாலர் விலையேற்றத்தை ஒப்பிட்டு பேசியதை ஏற்கமுடியாதுதான் மோடியின் தந்தையைப் பற்றி யாருக்காவது தெரியுமா என்ற கேள்வி கூட அவ்வளவு ரசகரமில்லைதான் .. ராகுலின் தந்தையை நாடறியும் என்பதற்காக சொல்லபட்ட சொல்லாடலாக கருதவேண்டும் .. தனிநபர் விமர்சனமென்பது சமீபத்திய அரசியலில் அதிகம் காணபடுவதும் கவலைக்குரியதுதான் .. காமராஜரை அண்டங்காக்கா என ராஜகோபாலச்சாரி சொல்லியது ஏனோ நினைவுக்கு வருகிறது ..
ஆனால் அதைவிட மிக மட்டரகமாக சோனியாவை விமர்சித்தவர்கள் தான் இவர்கள் ஏன்.. இவர்தான் தனிநபர் தாக்கு தொடர்ந்து செய்துவருகிறார்.. இளம்தலைவர் ராகுலை நாடாளுமன்றத்திலேயே பப்பு என பகடி செய்தவர் எப்போதெல்லாம் சறுக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் மலிவான அரசியலை கையிலெடுப்பவர்..
..
நாடு இன்றைய நிலையில் மிக மோசமான காலகட்டத்தில் கடந்து செல்கிறது அயோத்தியில் சிவசேனாவும் விஸ்வ இந்து பரிஷத்தும் தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்துகிறது அங்கு வாழும் முஸ்லிம்கள் .. ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமோ என அஞ்சி முதியவர் குழந்தைகளென குடும்பத்தோடு இடம்பெயர்கிறார்களென செய்திகள் வருகிறது சாமியாரின் கையில் அதிகாரமிருப்பதால் நிலவரம் அச்சம் கொள்ளவைப்பதாக சில நடுநிலை ஊடகங்கள் கவலை கொள்கின்றன இதையெல்லாம் கவனித்தில் கொள்ளாது திசைதிருப்பும் செயலை பிரதமரே செய்கிறார் என்பது கவலைதரும் விடயம்,..
..
அரசியலில் மதத்தை சாதியை தனிநபர் விருப்பத்தை காழ்ப்புணர்வை .. ஒருவித பயத்தை ஏற்படுத்தியவர்கள்.மக்களின் ஒற்றுமையை சிதைப்பதைவிட வேறொரு கெடுதல் இநத நாட்டிற்கு செய்யவேண்டியதில்லை .. மதவெறி அரசியலை கையிலெடுத்து ஒருவித பதட்டத்தோடு நாட்டை வைத்திருப்பவர்கள் இங்கே நியாயம் பேசுவதுதான் கொடுமை .. மதகலவரத்தில்.. சாதி மோதலில் இந்தியா உலக அரங்கில் முன்னணி வகிப்பது இவரின் வரவிற்கு பிறகுதான் உடனே மதவெறி மோதல்கள் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறைந்திருக்கிறதே எனலாம் கலவரம் செய்பவர்கள் கையில் நாடு இருக்கும் போது இதெல்லாம் நடக்காது .. ஆனால் மிரட்டல் பச்சைபடுகொலை அத்துமீறல் அடாவடித்தனம் ஜனநாயகபடுகொலை .. எல்லாம் நடக்கும் யாரும் ஏனென்று கேட்க கூடாது முடியாது மீறினால் ஊடகங்கள் மீது ரெய்ட் நடக்கும் ஊடகவியலாளர்கள் சமூகநீதி பேசுவோர் முற்போக்காளர்கள் கொலை செய்யபடுவார்கள்
இதையெல்லாம் மக்களின் எழுச்சியின் தான் சரிசெய்ய முடியும்,.....
..
திரு.மன்மோகன் சிங் சொன்னதைப்போல இந்த ஆட்சி தொடருமேயானால் இந்தியாவின் முகம் உலகளவில் வெறுக்கபடுகிற நிலை உருவாகும் பொருளாதாரம் வீழ்ந்து எழ முடியாதவாறு போகும் .. மதமும் சாதியும் பிற்போக்குத்தனமும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கும்
..
பாசிசபாஜகவை தூக்கியெறிவோம்
..
ஆலஞ்சியார்
Friday, November 23, 2018
சபரிமலை யுத்தகளமாக இருக்கிறது ..
கோவையை சிங்கபூராக மாற்றிக்காட்டுவோம்.. பொன்னர்..
இதற்குமுன்பு தமிழகம் வந்த மோடியை எதிர்க்கட்சிகள் வரவிடாமல் துரத்தி மனதை நோகடித்துவிட்டனர் ..அதனால் தான் கஜா புயல் சேதத்தை பார்க்க வரவில்லை கிருஷ்ணசாமி ..
..
கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மனநோயாளி ஆகிவிட்டனர் ..அமைச்சர் ஓ.எஸ்.மணியன்..
நான் ஒரே தொகுதியில் ஒன்பதுமுறை சட்டமன்ற உறுப்பினர்.. பழநிசாமி..
..
உண்மையில் இவர்கள் பைத்தியகாரர்களா அல்லது கிறுக்குத்தனமா நடிக்கிறார்களா ..பாஜகவோடு சேர்ந்த பிறகு பொய்யும் பித்தலாட்டமும் கிறுக்குத்தனமும் இவர்களோடும் சேர்ந்துவிட்டதா..
..
கோவையை சிங்கபூராக மாற்றாமல் விடாமல் ஓயமாட்டோம் என்று ஏசி அறையில் காலி சேர்களோடு கூட்டம் போடுகிறவர்கள் சொல்கிறார்கள் கோவையையும் குமரியையும் கலவரபூமியாக மாற்ற நீண்டநாட்களாக முயற்சிப்பதும் அது நடக்காமல் போவதும் இவர்களின் பேச்சில் தெரிகிறது .. குமரியில் பொன்னருக்கு ஆதரவாக கேரள போலீஸ் தடுத்து நிறுத்தியதற்காக.. இங்கே பந்த் .. யாருமே சட்டைசெய்யவில்லை ..
தேசபக்தர்கள் யாருமே ஏன்யா மலைக்கு போனே டெல்டாவே இயற்கையின் கோரபிடியில் சிக்கி சீரழிந்து உறைவிடமின்றி தெருக்களில் மக்கள் நிற்கிறார்களே அதை கவனிக்காம அங்கே என்ன ..வேலைன்னு கேட்கல.. அதுவும்சரிதான் அங்கபோனா தமிழிசையை விரட்டியபோல இவருக்கும் நடந்திருக்கும் தமிழக மக்கள் மோடியையே விரட்டியவர்கள்..
..
வேதாரண்ய மக்கள் அமைச்சரென்று பாராது விரட்டி விரட்டி வெளுத்ததும் .. சுவரேறி குதித்து ஓடியவர் .. புயலால் மக்கள் மனநலம் பாதிக்கபட்டிருப்பதாக சொல்வதிலிருந்தே மனநல பாதிப்பு யாருக்கு ஏற்பட்டிருக்கிறதென்று புரிகிறது .. சசிகலாவின் வீட்டுவேலையை கூட செய்து கொடுத்து ( வீட்டுலநடக்கிற தேவை திருநாளில் ஆன வாளிய தூக்கிட்டு திரிஞ்சவர்: தினகரன்) சட்டமன்ற உறுப்பினராகி சசிகலா சிறைக்கு போனதும் இன்றைக்கு வீரவசனம் பேசி திரிகிறவர் .. வாக்களித்த மக்கள் ஏண்டா வரலா என கேட்டால் பைத்தியமென்பாராம் .. இனி எக்காலத்திலும் தொகுதி பக்கமே போக முடியாதவாறு மக்கள் செய்துவிட்டார்கள் ..
ஆறுமுறை நின்று நான்கு முறை மட்டுமே வென்றவர் .. மறந்து மாறி பேசுவதில் வியப்பொன்றுமில்லை .. சேக்கிழாரின் ராமயணத்தை ஏற்றுக் கொண்ட நாம் இதையும் ஏற்போம் ..ஜெயலலிதா நான்கு முறை முதல்வரானவர் ஆறுமுறை என்ற போதும் அதை ஊடகங்கள் ஊளையிட்ட போதும் வியந்து பார்த்தவர்தாமே நாம் .. பொய்களை சொல்பவனையோ.. அதை திரும்ப திரும்ப பறைபவனையோ நாம் ஏன் என்று கேட்காதவரை பொய்களால் மட்டுமே நாம் சூழபடுவோம்.. எஸ் ஆர் எம் கல்லூரியில் பெண் லெப்டில் பாலியல் தொல்லைக்குள்ளாகிறார் ..எந்த ஊடகமும் வாய்திறக்கவில்லை .. தமிழக அரசு கூட தலையிடாது எம்ஜிஆர் ஆட்சிக்கு முன்பு வரை யாரென்றெ தெரியாத பச்சைமுத்து இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கொள்ளையர் எப்படி வளர்ந்தது என... எத்தனை நீர்நிலைகள் ஆக்கரமித்து பகல் கொள்ளையாய் கல்வி கூவி விற்படுவது தெரிந்தும் நாம் கேட்பதில்லை ..அரசோ எந்த தனியார் நிர்வாகமோ எதை செய்தாலும் நாம் பாதிக்காதவரை மௌனமாய் இருந்தே பழகிவிட்டோம் ..நாம் பொன்னரின் மதவெறியையோ அறிவுகெட்ட செயலையோ ..
தமிழக அமைச்சர்களின் கிறுக்குதனத்தையோ நாம் கேள்வி கேட்க மாட்டோம்.. ஆனால் திமுககாரன் குசுவிட்டால் கூட ஒலிபெருக்கியை வைத்து சத்தம் போடுவோம் ..
..
எப்போதெல்லாம் திமுகவை வேண்டாமென்று வைக்கிறோமோ அப்போதெல்லாம் நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்கிறோம்.. இனியும் காசிற்கு ஆசைபட்டு இதே தவறை செய்தால் கேட்க ஆளின்றி தெருவில் வீசபடுவோம் ..
இனி திமுக ஒன்றே அறிவுடை சமுதாயத்தை நல்ல முன்னேற்றம் கொண்ட நாட்டை நல்லதொரு விடியலை தரமுடியும் ..
..
ஆலஞ்சியார்
Thursday, November 22, 2018
தமிழ் நாட்டில் ஒரு மயான சூழல் ஏற்பட்டுளள நிலையில்.. எட்டு மாவட்டத்தில் மக்கள் எல்லாவற்றையும் இழந்து அடுத்த வேளைக்கு கையேந்துகிற பரிதாபகரமான நிற்கிறார்கள் உணவு, உடை , உறைவிடமின்றி கண்ணீரோடு நிற்கிறார்கள் இந்த நிலையிலும் சபரிமலைக்கு சென்று அரசியல் நடத்தி வருகிறார் கேடுகெட்ட மத்திய அமைச்சர்..
இந்திய ஒன்றிய அரசின் ஒரே தமிழக பிரதிநிதி
பொன்னா் சபரிமலையில் ..
சபரிமலை ஐயப்பன் கோயில் நம்பிக்கை குறித்தும் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க போராடுவதும் குறித்து எந்த பிரச்சனையும் இங்கு எழவில்லை.. ஆனால் தமிழ் நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் பொறுப்புள்ள ஒரு மத்திய அமைச்சர் தனது பொறுப்பில் இருந்து முற்றிலும் வெளியே வந்து அரசியல் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது..
அதுவும் விரதமிருந்து தாடியோடு பக்திமேலிட சரணம் அய்யப்பா என்று செல்லவில்லை.. மழுமழுவென சவரம் செய்த முகத்தோடு சபரிமலைக்கு சுற்றுலா சென்றவரைபோல சென்றிருக்கிறார் ..
..
தன் மாநிலத்தின் மக்கள் .. கொடுத்தே பழக்கபட்ட டெல்டா சீரழிந்து கிடக்கிறது ..அடியோடு பிடிங்கியெறியபட்ட தென்னைகள் .. விரைந்து பலன் தருமெண்டுமென்று ஆசைகாட்டி ஐந்தாண்டில் பலனென்று சொல்லி தந்தவைகள் வலுவிழந்து பிடிங்கியெறிபட்டுகிடக்கிறது நவீன விவசாயம் இந்த மண்ணை அழித்து நிற்கிறது.. மக்கள் இருக்கமிடமின்றி குடிக்க தண்ணீரின்றி கலங்கி நிற்கிற வேளையில் அய்யப்பனை வைத்து அரசியல் செய்கிறார்.. மகா கேவலம் ..
..
அரசியலை கடந்து திமுக அனைத்து மாவட்ட நிர்வாகமும் நிவாரணப் பொருட்களை கோடிக்கணக்கில் வாரி வழங்கியிருக்கிறது .. அரசு மெத்தனமாய் செயல்பட்டாலும் அதை விரைந்து செயல்பட ஊக்கியாய் தமிழக கட்சிகள் செயல்பட வேண்டிய சூழலில் மத்திய அரசின் நிவாரணத்தை விரைந்து பெற்றிட அமைச்சராய் பெரும் பணி காத்திருக்கிற வேளையில் சுற்றுலா செல்வதைப்போல தன் ஆதரவாளர்களோடு பம்பையில் காவல் அதிகாரியோடு வம்பிற்கு நின்று கடைசியில் அசிங்கபட்டு மலையேறியதை நாடு பார்த்து சிரித்தது .. மதம் தலைக்கேறியவர்கள் அய்யப்பனின் சாபமென்றும் கோபமென்றும் கதைகட்டிவிடுகிறார்கள்.. பொன்னர் அவமானபட்டது கூட சபரிமலையானின் வேலைதானோ..
..
கேரளம் போல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லையென எடப்பாடி சொல்கிறார்.. கேரள அரசு இதுபோன்ற பேரிடர் காலங்களில் எதிர்க்கட்சிகளை கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொண்டது .. இன்றைய தேதியில் திமுக சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்க்கட்சிகளின் பணி பாராட்டுக்குரியதாக இருக்கிறது .. திமுக மருத்துவஅணியின் பணி கட்சிபேதமின்றி பாராட்டுகிறார்கள் .. ஆளும்கட்சி மற்றும் அரசு இயந்திரம் மெத்தனமாய் செயல்பட்டாலும் அதற்கு போதிய நிதி ஆதாரத்தை மத்தியில் ஆளும் பாசிச அரசு தரவில்லையென்றும் சொல்படுகிறது .. இந்த நேரத்தில் மத்திய அமைச்சர் களப்பணி செய்யாமல் சபரிமலையில் ஓய்வெடுப்பது அவர் விரும்பும் சபரிமலை அய்யப்பனுக்கு கூட பிடிக்காது ..
எதில் எந்த நேரத்தில் அரசியல் செய்யவேண்டுமென்று தெரியாதவராய்.. நாகர்கோவில்காரர் ..
..
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் ஒவ்வொரு நொடியிலும் மக்களைப் பற்றி அக்கறை கொண்டவராக தன்னாலான எல்லா உதவிகளையும் செய்கிறார் பாதிக்கபட்ட மக்களை தரைமார்க்கமாக சென்று நேரில் சந்திந்து ஆறுதல் சொல்லி உதவிகளை செய்கிறார்.. எந்த விமர்சனத்தையும் பற்றி கவலைபடாமல் மக்கள்பணியில் தன்னை இணைத்துகொண்டு தன் கட்சியினரையும் ஈடுபடுத்தி மக்களின் காவலனாய் உயர்ந்துநிற்கிறார் தளபதி
..
ஆலஞ்சியார்
Tuesday, November 20, 2018
மதமேறிய..விஷங்கள்
இந்து மதத்தின் ஆச்சாராம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்காமல் நடப்பது தான் கஜா மற்றும் கேரளா வெள்ளத்தால் ஏற்பட்ட பெரிய பாதிப்பிற்கு காரணமாக அமைந்தது என்றும் நாடு முழுவதும் கலாச்சார சீரழிவு மற்றும் ஐயப்பன் கோயில் சபரிமலை தீர்ப்பு இது விவகாரங்கள் தான் இது போன்ற துயரங்கள் நடைபெற காரணமாக அமைந்தது. இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் என்கிறார்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜியர் ..
..
மத நம்பிக்கை என்பது வேறு..அது அவரவர் சார்ந்த சமூகத்தின் மீதான அடிப்படையை கொண்டு ஒருவித ஈர்ப்பை ..பக்தியை மெய்ஞானத்தை அது பொய்யெனினும் அதில் நிலைபெற செய்து .. அவனை சிந்திக்கவோ ஆய்ந்தறியவோ அதிலிருந்து வெளியேறவோ
விடாமல் அழுத்தி வைத்திருந்தாலும் அன்பை சகிப்புதன்மையை நிதானத்தை போதித்தது ..ஆனால் மத பெரியவர்கள் என சொல்லிக் கொண்டோர் .. தங்களின் நிலைநிறுப்பை காத்துக்கொள்ள ஒருவித பயத்தை மக்களிடையே விதைத்து .. மூடவழக்கத்தை பரப்பி பிழைத்து வந்தனர்/ வருகின்றனர்.. இதுபோன்று மூடநம்பிக்கையை வளர்ப்பது மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் .. இது எல்லா மதத்திலும் நடப்பதுதான் வேடிக்கை ..
அறிவுடை சமூகம் என்று சொல்லிக்கொள்கிற கூட்டம் இதில் சட்டென்று விழுந்துவிடுவதுதான் வேடிக்கை..
..
இப்படி பேசுகிறவர்களை கூர்ந்து கவனியுங்கள் களவாணிகளாக இருப்பார்கள் காமகொடூரர்களாக பெண்பித்தனாய்.. பொய்யர்களாய் இருப்பார்கள் பாரமனை சிந்திக்க விடாமல் செய்வதிலும் .. தன்னை நம்புகிறவனை.. மதமென்ற பெயரில் மூளைச்சலவை செய்து
எதிர்கருத்தை சொல்கிறவர்களிடம் மூர்க்கத்தனமாக நடக்க வைப்பதில் வல்லவர்கள்.. அவர்களை பொம்மைகளாக்கி
தங்களை சுற்றியே சக்கரமாக சுழலவைப்பதில் வல்லவர்கள்.. இயற்கை சீற்றத்தை மதத்தோடு ஒப்பிட்டு மக்களை மடையர்களாக்க முனைவது ஏற்புடையதல்ல.. இயற்கையின் கோபம் .. மாற்றம் மனிதனின் அத்துமீறல்களால் வருகிறதென்கிற யதார்த்தத்தை உணர மறுக்கிற நாம் .. இதுபோன்ற மதமேறிய விஷங்களை நம்புகிறோம்..
..
இறைவனின் கோபம் என்பதை விடுத்து .. இயற்கையின் சீற்றமென உணர தொடங்கினாலே.. மதம் பேசி திரியும் மூடர்கள்
வாயடைத்து போவர்..
தீதும் நன்றும் பிறர்தரவாரா..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)