Tuesday, July 31, 2018
பேரதிசயம்
பேரதிசயம்..
நாங்கள் தான் முன்னமே சொன்னோமே..
கலைஞர்.. பூமி கிழிந்து வந்த வினையென்று..
எதிர்ப்பிலேயே வாழ்ந்து .. எதிரிகளை ஒவ்வொன்று வீழ்த்தி நெஞ்சரத்தோடு வாழும் பேரதிசயம்.. கலைஞர்
நீங்கள் நினைப்பதைப்போல வெந்ததை தின்று விதிவந்தால் செத்து போககூடியவரா..
எப்போது எங்கே எதை எப்படி கையாளவேண்டுமென்று அறிந்தவரை..
இறப்பு என்ன செய்துவிடமுடியும்
..
இந்திய துணைகண்டம் கண்ட தன்னிகரில்லா தலைவர்.. இவரைப்போல வாழ்ந்தவர் யாருமில்லை அழிந்தார் அழிந்தது என்று கூக்குரலிட்டபோதும் கூட.. வீறுக்கொண்டு எழுந்த தன்னையும் தான் சார்ந்த இயக்கத்தையும் காத்தவர்.. முடிந்தது திராவிடம் என்றவர்களுக்கெல்லாம் முடிவுரை எழுதி தன்னை பெரியாரின் உண்மையான சீடனென காட்டியவர்.. வெற்றின் இறுமாப்போடு சிலர் வாழ்ந்திருக்கிறாரகள் அவர்களுக்கு தோல்வி வந்தால் சட்டென்று விழுந்து இடம்தெரியாமல் போய்விடுவர்.. ஆனால் தோல்விகளை உரமாக்கி.. வென்றுகாட்டவேண்டுமென்ற வேட்கையோடு
வாழ்பவர்கள் சிலரே அவர்களில் தோல்விகளிலும் தம்மை சுற்றியே நகர்வை அமைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இல்லை ஆனால் கலைஞர் தன்னைச் சுற்றியே தமிழக அரசியலை இயங்கவைத்த #பேரதிசயம்..
..
போராளிகள் நிறைய வந்தார்கள்.. பெரியாரைவிடவா சிறந்த போராளி வேண்டும் .. ஆனால் அதிகாரத்தை அடையாமல் எதையும் சாதித்துவிட முடியாதென்ற உண்மையை உணர்ந்து தான் அண்ணா தேர்தல் அரசியலை கையிலெடுத்தார் ஆம்..
சாதி மறுப்பு சுயமரியாதை திருமணங்களை தகாத உறவென உசிசநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதுதான் சட்டபாதுகாப்பு தேவையென்பதை உணர்ந்து அதை இயற்றும் இடத்திற்கு நாம் வரவேண்டுமென்று திமுக உதயமானது.. காலம் அண்ணாவிற்கு கனியாமல் போனது.. அண்ணாவிற்கு பிறகு கலைஞரை தவிர்த்து யார் திமுக தலைமையை ஏற்றிருந்தாலும் திமுகவையே இல்லாமல் செய்திருப்பார்கள்.. கலைஞரின் தலைமை பகையிலிருந்து காத்ததோடு.. பெரியார் கண்ட கனவை நடப்பிலாக்கியது.. பெண்களுக்கு சொத்துரிமை .. அனைத்துசாதியினரும் அர்ச்சகராகலாம் இப்படி... 1970 லேயே அனைத்துசாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றியும் உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது மீண்டும்
நீண்டநெடிய சட்டபோராட்டம்..அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியை தொடங்கி பயிறிசியளித்து 214 பேர் தேர்வாகிய நேரத்தில் திமுகவிடம்
அதிகாரமில்லாமல் போனதும் ..ஜெயலலிதா கிடப்பில் போட்டார்.. காலம் கடந்தேனும் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்தாகிவிட்டது..
(தெய்வத்தைப் பார்ப்பனர் அர்ச்சிக்கும் நாட்டில் பஞ்சமும் நோயும் பெருகும் - திருமூலர்)
..
கலைஞரை பொய் வழக்குகளால் சாய்த்துவிடலாமென்ற ஆரிய சூழ்ச்சி .. சர்க்காரியா தொடங்கி.. 2ஜி வரை .. எல்லாவற்றையும் சட்டத்தின் துணைக்கொண்டு வென்று #அறம்வெல்லும் என்பதை நிரூபித்து அசைக்கமுடியாத வலிமையோடு நிற்கிறார்..
போராட்டமே வாழ்வியலாக கொண்ட கலைஞர்
ஒவ்வொருமுறையும் அதிசயக்கதக்க முறையில் மீண்டு ..இயக்கத்தை மீட்டெடுத்திருக்கிறார்..அதிகாரத்தில் இருந்த 19 ஆண்டுகளில் மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள்.. காலம்கடந்து பேசபடுவதாகவே இருக்கிறது.. இவர் முப்பதாண்டுகளுக்கு முன்பே கொண்டுவந்த திட்டங்கள் இப்போதுதான் வடமாநிலங்களில் கொண்டுவருகிறார்கள்..
இந்திய அரசியலில் பொதுவாழ்வில் அதிசயதக்க மனிதர்.. நெஞ்சுரமும் நேர்வழியும் வீழ்ந்துவிடாது காத்துநிற்கிறது..
இதுவரை கலைஞரைப் பற்றி கட்டிசமைத்த குற்றசாட்டுகள் பொய்யென .. கட்டியவர்களே களைய தொடங்கியிருக்கிறார்கள்.. குறிப்பாக இளைஞர்கள் கலைஞரை அறிய தொடங்கியிருக்கிறார்கள்.. கலைஞர் மட்டும் இல்லையெனில் வடமாநிலத்தை போல தமிழகம் தாழ்நிலையில் இருந்திருக்குமென உணர்கிறார்கள்.. இந்த கிழவனின் இருப்பு எப்படி பகைவர்களை அச்சம் கொள்ளவைக்கிறதென்று அறிகிறார்கள்..
எழுவருடமாய் ஆட்சியில் இல்லை இரண்டுவருடமாய் பேசுவதில்லை ஆனால் கலைஞரின் பெயர் உச்சரிக்காமல் பொழுது விடிவதுமில்லை சாய்வதுமில்லை..
..
#தமிழின_கண்ட_பேரதிசயம் ..
..
ஆலஞ்சியார்
Monday, July 30, 2018
கலைஞர்..
கலைஞர்..
இப்போது கலைஞரின் இருப்பை மக்கள் அறிய/ விரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.. தனி ஒருவனாய் இந்த சமுதாய ஏற்றதாழ்வை களைந்து.. பள்ளத்தில் இருந்தவனை ஏற்றிவிட்டவர் என்ற சான்றுகள்.. வீதிகளில் இரவில் உறங்குவது கண்டு.. இந்த மனிதன் ஏதோ செய்திருக்கிறான் இல்லையெனில் .. கொட்டும் மழையிலும் நள்ளிரவில் வீதியில் காத்துநிற்க இளைஞர்கள்.. முதல்பட்டதாரிக்கு முன்னுரிமையில் படித்து வந்தவன்.. ஏக்கத்தோடு நிற்கிறான்.. இனத்தை காத்த காவல்தெய்வம் மரணத்தோடு போராடுவது கண்டு அடிவயிற்றில் ஏதோ கலங்குவது கண்டு திகைத்துநிற்கிறான்..
..
ஆம்
பெரியாரின் சிந்தனையை செயலாக்க கலைஞரெனும் மாமனிதன் கிட்டாமல் போயிருந்தால் இன்று குலத்தொழிலோடு மல்லுக்கட்டிகொண்டிருப்பார்கள்..
தொலைநோக்கோடு கலைஞர் பெருமகன் தீட்டிய திட்டங்கள் இன்று கற்சிலையோடு பேசும் அதிகாரம் பெற்றான்.. வர்ணத்தை சொல்லி வாசலில் நிறுத்திய பார்பன சதியை .. சட்டம் கொண்டே முறியடித்து கருவறைக்குள்ளும் நுழைய காரணியாய் இருந்த பெருவுடையார் எம்மான் கலைஞர்..
இன்று மானமுள்ள தமிழர் நெஞ்சம் நேற்று எழுந்து வா என்ற குரலாய் ஒலித்ததே.. காவிரியின் கதவை துளைத்து கலைஞரின் காதுகளில் இசைத்ததே.. போராடி போராடி வென்ற வாழ்வில் இன்னமும் போராட்டம் ..
..
கலைஞர்..எனும் சொல் தமிழகத்தின் வரலாறு.. தமிழகத்தின் வளர்ச்சி..தமிழகத்தின் முன்னேற்றம்.. கலைஞர் சிந்தனையில் உதித்தவையெல்லாம் தொலைநோக்கோடு..
தமிழகம் வளம் பெற மக்களின் நலன் பெற அமைத்தது..
#பெரியாரை நினைத்ததை .. #அண்ணா முயன்றதை செய்து காட்டியவர் எம் பெருவுடைபெருமகன் கலைஞர் .. காலம் தந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி.. பெரியாரை உள்வாங்கி ..சமநீதியை நிலைநாட்டி சமூகத்தின் நீதியை காத்து.. ஒடுக்கபட்டவர்களை உயரத்தில் ஏற்றி.. பிற்படுத்தபட்டவரின் உரிமைகளை சில உயர்வகுப்பினர் பறிப்பதை தடுத்து .. கல்வி வேலைவாய்ப்பில் அனைத்துதரப்பினரின் உரிமையை உறுதிசெய்து.. சமத்துவ சமுதாயம் சமைத்தவர்..
..
தமிழகத்தில் ஒவ்வொருவரும் கலைஞரால் பயன்பட்டிருக்கிறார்கள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ .. கலைஞரின் திட்டங்களால் பலனை அனுபவித்திருக்கிறார்கள்.. தத்தளித்த படகை கரைசேர்த்ததைப்போல கலைஞர் ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டிருக்கிறார்.. இன்னும் செய்திருக்கலாம் .. ஆம் அதற்கான வாய்ப்பை தமிழர்கள் தொடர்ந்து வழங்காமல் போனதால் .. தொடர்ந்து வந்தவர்களின் காழ்ப்புணர்ச்சியால் காலதாமதமாகியிருக்கிறது.. தமிழக வரலாற்றில் எந்த தலைவரும் செய்யமுடியாததை செய்திருக்கிறார்.. எட்டாவது படித்தால் ஆசிரியர் பணி என்று அறிவித்தார் காமராஜர் ஆனால் படித்து வருவதற்குள் பிறகு வந்த பெரியவர் பக்தவச்சலம் நடப்பிலாக்காமல் போனார் அதை கலைஞர் தான் நடைமுறைபடுத்தினார்.. உயர்கல்வி சலுகைகள் தந்ததால் தான் இன்று இல்லம்தோறும் பட்டதாரிகள்.. இந்திய வரலாற்றிலேயே கலைஞர் அளவிற்கு திட்டங்களை செயலாக்கியவர்கள் யாருமே இல்லை..
..
கடைசியாக..
இன்றைய தேதியில் மத்திய சர்க்கார் அதிகாரம் இல்லாத மாநில சர்கார் பணியாளர்களிலும் உயரதிகாரிகளிலும் 70% பிரமாணன் அல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் கலைஞர் தான்..
இது பலநூறு ஆண்டுகள், ஏன் ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நடக்காத விஷயம். பல நூறு ஆண்டுகளாக அதிகாரம் அவர்கள் பிராமணர் கையில் இருந்தது
அதை மீட்டெடுத்தது திமுக அரசு என்பதில் பெருமை அடைகின்றேன்.. கருணாநிதி அரசுக்கு வலுசேர்க்கும் அவசியமும் கடமையும் நம் எல்லோருக்கும் இருக்கின்றது" என்றார் பெரியார்../1972ல்
..
தெம்பூட்டும்
கலைதோட்ட தேம்பாவனி..
அவர் பெருவாழ்வே
தமிழ்நாட்டின் வரலாறு இனி!!
..
#கலைஞர்_நிகரில்லா_தலைவர்..
..
ஆலஞ்சியார்
Sunday, July 29, 2018
கேடுகெட்டவர்கள்
கோழைகளே உங்கள் மீது கோபம் எல்லாம் இல்லை.. கலைஞரை உங்களையெல்லாம் மறந்து மன்னித்தாரே என்ற ஆதங்கம் தான்..
தியாகு போன்று நிறைய பேரை பார்த்திருக்கிறோம் என்ன.. அவர்களின் சிலர் கலைஞர் தெளிவாக பேசிக்கொண்டிருந்த போது விமர்சித்தார்கள் கலைஞர் அவர்களுக்கு விளக்கம் தந்தார்..
..
தியாகு.. கலைஞர் பேசாமல் இருக்கும் போது குற்றம் சாட்டுகிறார்..
கலைஞர் பதவிக்காக எதையும் செய்வார்.. அவரின் குற்றசாட்டை முழுமையாக தள்ளிவிடலாம் .. பதவி ஒன்றே குறிக்கோளாய் இருந்தால் காமராஜரை சிறையில் வைத்து இந்திராவோடு கைக்கோர்த்து ஜனநாயகத்தை ஆழ புதைத்திருக்கலாம் .. முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லையென காமராஜர் கைது செய்ய மறுத்ததோடு ஜார்ஸ் பெர்னாட்டஸ் போன்றோருக்கு அடைக்கலமும் தந்தார்.. நெருக்கடிகாலத்தில் இந்திராவை எதிர்த்த கலைஞர் ஏன் திரும்பவும் சேர்ந்தீர் என்கிறார்.. ஜனதாவால் நிலையான ஆட்சியை தரமுடியாமல் போனதும்.. நாட்டின் நலன் கருதி நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக என்றார்.. இதில் என்ன தவறு .. அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை நோக்கிய நகர்வைதானே விரும்பும் ..இலங்கை பிரச்சனையில் திமுகவின் இழப்புகளை யாருமே கருத்தில் கொள்வதில்லை.. திமுக வெற்றிபெற வேண்டிய தேர்தலில் .. பிரச்சாரத்திற்கு வந்த இந்த பிரதமராக இருந்தவரை கொலை செய்து அதன் பலியை திமுக மீது விழுந்ததும் .. காரணம் யார்..? அன்றைக்கு ஜெயலலிதாதானே பலன்பெற்றார் அதனால் தொடர்ந்து தமிழகம் சந்தித்த சந்தித்துக்கொண்டிருக்கிற துயரங்கள் இவ்வளவையும் மீறி ராஜீவ் கொலையாளிகளுக்கு வழக்கறிஞர் ஏற்பாடு செய்தது இன்றைக்கு விமர்சிப்போரல்ல.
..
ராஜமன்னார் குழு பரிந்துரையான தமிழை தேசிய மொழிக்கா என்ன நடவடிக்கையெடுத்தது என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது திமுக தான் தமிழை மட்டுமல்ல பிற மொழிகளையும் தேசிய மொழிக்காக தனி தீர்மானம் கொண்டுவந்ததும் திமுக தான் .. இன்றைக்கு பாராளுமன்றத்தில் அனைத்துமொழிகளிலும் பேசலாமென்ற உரிமையை பெற்று தந்ததும் திமுகதான்.. எல்லாவற்றையும் சில கால ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டுவரவோ செய்துகாட்டவோ முடியாது .. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கலைஞர் தன்னால் இயன்றதை போராடி பெற்று தந்திருக்கிறார் .. தமிழக தலைவர்களில் யாருமே செய்திடாத சாதனைகளை செய்திருக்கிறார்..
..
தமிழ்தேசிய பேசுவோரை சிறையில் அடைத்தாரென குற்றசாட்டை ஏற்க முடியாது தமிழ்தேசியம் என்ற பெயரில் அராஜகம் செய்வோரை போதைமருத்து கடத்த பயன்படுத்துவோரை ..துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபடுவோரை கொஞ்சிக்கொண்டிருக்கமுடியாது..
இவ்வளவு பேசும் தமிழ் தேசி தியாகு.. யாராவது ஒரு ஈழ அகதிக்கு எதாவது செய்திருக்கிறாரா.. அகதிகளாய் வந்திறங்கிய சொந்தங்களை வாரி அணைத்தவர்கள் திமுகவினர்கள் தான்..
திமுக ஆட்சியில் தான் மருத்துவ பொறியியல் இடங்களை ஒதுக்கியும் ..இலவச கல்வியை வழங்கியும் ஈழ சொந்தங்களை அரவணைத்தது திரும்ப வந்த ஜெயலலிதா அதையெல்லாம் சத்தமில்லாமல் ரத்து செய்தார்.. ஆட்சி பொறுப்பேற்ற சில தினங்களில் சென்னையில் வைத்து பத்மநாபாவை கொன்று திமுக ஆட்சிக்கு தீராத கலங்கத்தையும் பெரும் நெருக்கடியையும் தந்தவர்களை அப்போதே தீவிரவாதிகள்/பயங்கரவாதிகளென ஜெயலலிதா போல் கூறியிருந்தால் ஒருவேளை கலைஞரை புகழ்ந்திருப்பீர்கள்.
..
இன்றைக்கு தியாகு நடமாடுகிறாரென்றால் அது கலைஞர் இட்ட பிச்சை.. தூக்குகயிற்றிலிருந்து கருணையோடு காப்பாற்றி .. ஆயுளாக்கி அதையும் குறைத்து விடுத்ததால் இந்த நவீன தமிழ் தேசி கலைஞரை பதவிக்காக எதையும் செய்பவரென்கிறார்.. கலைஞரை விமர்சிக்களவிற்கு தகுதியில்லாதவர்
..
#கேடுகெட்டவர்கள்
..
ஆலஞ்சியார்
Saturday, July 28, 2018
கலைஞரெனும் பெருமகன்
கலைஞரை விமர்சிப்போர் .. சாக சொல்லி பேசுவோர் துரோகமிழைத்ததாக சொல்வோர் யாரென்று பாருங்கள்.. ஈழத்தழிழனுக்காக துரும்பை கூட கிள்ளாதவன்.. மாறாய் சொந்த மண்ணை சிங்களனிடம் விற்றுவிட்டு அகதிகளாய் ஐரோப்பா நாடுகளில் குடியேறி தப்பித்தோமென ஓடியவனிடம் காசை வாங்கி இங்கே குரைத்துக்கொண்டிருக்கிறான்..
பாவம் காசில்லாதவன் அகதியாய் மண்டபத்திலும் கோடியக்கரையிலும் வந்திறங்கிய போது சொந்த நிலத்தில் தங்கவைத்தும் சொந்த காசை சிலவு செய்தும் பிழைப்பிற்கு வழி செய்தவன் திமுககாரன்
..
ஈழத்தமிழர் விவகாரத்தில் கலைஞரைப்போல கவலைபட்டவர் எவருமில்லை .. எம்ஜிஆர் பிரபாகரனை கைது செய்தபோதுகூட .. ஏன் கீழ்தஞ்சை ..மற்றும் கடலோர மாவட்டத்தில் செக்போஸ்ட் போட்டு சிரமம் தந்தபோது கூட திமுககாரன்தான் எல்லாவற்றையும் சுமந்தவன் .. ஜெயலலிதா ஆட்சியில் பிரபாவை பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும் என்ற போதும் ராஜீவ் கொலையில் திமுகதான் காரணமென்ற போதும்.. இன்றைக்கு கலைஞரை விமர்சிப்போர் எங்கிருந்தார்கள்..ராஜீவ் கொலை வழக்கில் யாருமே வழக்காட முன்வராத போது வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்தது திராவிட இயக்கங்கள் தான்..
..
இறுதிப்போரில் கலைஞர் எதுவுமே செய்யவில்லை என்போரே.. யார் அன்றைக்கு ஆட்சியிலிருந்தாலும் எதுவுமே,செய்திருக்கமுடியாது .. சார்க் மாநாட்டில் இலங்கை எங்கள் நாட்டில் பலஆண்டுகளாக நடைபெற்று வரும் தீவிரவாதத்தை வேரறுக்க சார்க் நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டு ஒப்புதல் பெறப்பட்டபோதே. விவேகத்தோடு காய்நகர்த்தாமல் .. சொந்த நாட்டு மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி பல்லாயிரமானோர் சாக காரணமாக இருந்து கடைசியில் தானும் கொடூரமாக கொல்லபட்டதற்கு திமுக எப்படி பொறுப்பாகுமென சிந்திக்க வேண்டும் .. கலைஞரின் ஆலோசனைகளை புறந்தள்ளி விவேகமற்ற அறிவிலிகளை உணர்ச்சிமிகு பேச்சை நம்பியதால் வந்த வினை .. ப.சிதம்பரம் அன்றைக்கே போரை நிறுத்துங்கள் தேர்தல் முடிந்தபிறகு பேசி தீர்க்கலாமென்ற போதும்.. கேட்காமல் வாஜ்பாய் வந்துவிடுவாரென நம்பியதும்.. கடைசிவரை தோக்கு (துப்பாக்கி) கைகொடுக்காது விவேகமான பேச்சுவார்த்தைதான் சுதந்திரத்தை பெற்று தருமென்ற வரலாறை மறந்ததுதான் காரணமே தவிர கலைஞரல்ல..
..
சாவு எல்லோருக்கும் வரும் .. இன்றைக்கு வயதுமூப்பின் காரணமாய் போராடிக்கொண்டிருக்கிற மனிதனின் சேவைகள் .. அவர் தந்த உழைப்பு .. செய்த பணிகள் அதனால் பயன்பெற்றோர் எதிர் அரசியல் புரிந்தவன் கூட வாழவேண்டுமென ஆசைபடுகிறான் .. சில அரைகுறை அறிதலோடு எச்சைகளாய் திரிபோர் சாக வேண்டுமென்கிறார்கள்.. கலைஞருக்கு இறப்பில்லை அவரால் பயன்பட்டவன் .. அவரின் முயற்சியால் தொடர்ந்து பயன்பெற போகும் சமுதாயம் இருக்குவரை .. காலமாய் இருப்பார்..
நீங்கள் கத்தி கத்தி கடைசியில் செத்துபோவீர் யாருமற்ற ..கேட்க ஆளில்லாமல் போவீர்கள்..
..
மௌனமாய் இருத்கும் இந்த பெருமகனின் இருப்பே சிலருக்கு எரிகிறதென்றால் .. இந்த தமிழினத்தின் மீதான தாக்குதலை இந்த மனிதனை எப்படி தடுத்திருப்பார் இன எதிரிக்கு சிம்மசொப்பனமாய் இருந்திருப்பார்.. பெரியாரும் அண்ணாவும் கண்ட கனவை நடைமுறையாக்கி .. மிகவும் தாழ்ந்திருந்த தமிழனின் நிலை உயர காலமெல்லாம் பாடுபட்டவரை ..சிலரின் ஏச்சுகள் என்ன செய்யும்..
ஒரு நாத்திகருக்காக லட்சபோலட்ச மக்கள் பிராரத்தனை செய்கிறார்கள்..
இதைவிடவா சிறப்பு வேண்டும்..
..
#சூரியனுக்கு_ஏது_கறை
..
ஆலஞ்சியார்
Friday, July 27, 2018
தமிழர் செய்த தவம்
ஒரு தனிமனிதனின் சாதனைகள்.
உலகில் எவருக்குமே கிட்டாத இனி கிடைக்காத சாதனைகள் கலைஞருக்கு மட்டும் எப்படி கைவந்தது.. பொதுவாழ்வில் வைரவிழா.. சட்டமன்ற உறுப்பினராய் மணிவிழா கட்சித்தலைவராய் பொன்விழா.. தொடர்ந்து தேர்ந்தெடுக்கபட்ட வரலாறு.. கலை இலக்கியம் பேச்சாற்றல் எழுத்து .. திரைக்கலை.. நாடகம் .. தொட்டதெல்லாம் தனிமுத்திரையோடு வெற்றி..
அரசியலில் ஆழ்ந்த தெளிந்த துணிவாக விரைவான முடிவுகள் ..செயல்படுத்திய திட்டங்கள் காலங்கடந்தும் இந்திய துணைக்கண்டத்திற்கே வழி காட்டுகிறதே ..
எதிர்த்தவனும் .. இவரை கண்டால் இசைந்ததாய் தான் வரலாறு .. இவரை சுற்றியே தமிழக அரசியல் அறுபதாண்டாய் இயங்குகிறதே..
இவர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் இதுவரை எவரும் அரசியல் செய்ததில்லை..
அப்பப்பா.. இவரை தாக்கியவர்கள் தளர்ந்துபோய் விழுந்து மண்ணாகிவிட்டார்கள்..
அரசியலின் அரிச்சுவடியை இவரிடம் கற்கிறார்கள்
..
எப்படி சாத்தியமாயிற்று.. இதோ இப்போது உடல்நிலை பாதிப்பின் போதும் .. கட்சிகாரனை .. கதறவிடாமல் சாமிக்கு மண்சோறு தின்னச் சொல்லாமல்.. இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு என்று ஒலிப்பெருக்கி கட்டி அலறவிடாமல்.. சொத்து வரி உயர்த்திய அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் போராட்டமென அரசை அலறவிடுகிறது திமுக இதுதான் கலைஞர் சொல்லி தந்த நடத்தி காட்டிய அரசியல்பாடம்.. யாருமே எதிர்பார்க்காத .. இனி முடிந்தது திமுக என கொட்டை எழுத்துக்களில் தலையங்கம் போட்டு முதல் நாள் மகிழ்வான் மறுநாள் மக்களுக்கான போராட்டம் உடன்பிறப்பிற்கு கடிதமென தட்டியெழுப்பி.. புதிய கரைவேட்டியை கட்டிக்கொண்டு கடைத்தெருவில் திமுககாரன் நிற்கவைத்துவிடுவார் .. அரசியலை அறிந்த ஞானி..
..
இன்றைக்கும் வசைபாடுவோர் அரைகுறைகளை கருத்தோடு இவர்மரணத்தை நேக்கி நிற்கிறார்கள் ..ஒன்று தெரியுமா மரணம் அழகு.. அது எல்லோருக்கும் வரும் அதிலும் புகழோடு வழ்ந்தவனுக்கு .. பேரின்பத்தோடு அணைத்துக்கொள்ளும் .. அவன் இறப்பதில்லை மாறாய் காலமாய் நம்மோடு நிலைத்து நிற்பான்.. கோழைக்குதானடா மரணம்.. வீரனுக்கு விவேகிக்கு நாற்றமெடுத்த சமுதாயத்தை நன்னீராய் மாற்றியவனுக்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொன்றை நல்லதாய் அவன் வாழ்விற்கு விளக்கேற்ற செய்தவனுக்கு.. பசி போக்கியவனுக்கு.. எல்லோருக்கும் கல்வியென்ற இலட்சியவெற்றியை கண்டவனுக்கு.. இந்த சமுதாயத்தில் அழுக்கை அள்ளுகிறவனின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை தந்து உயர்த்திவிட்டவனுக்கு .. ஒவ்வொரு செய்கையையும் இந்த சமுதாயம் மட்டுமல்லாது.. உலகமே ஏற்கும் திட்டமாய் செய்த தொலைநோக்கிற்கு.. வரலாறாய் வாழ்ந்தவனுக்கு ...மரணமில்லை கோழைகளே..
இவரை கண்டுபடிக்காமல் இவரை தந்ததை சுவைக்காமல்.. இவரின் காலடிச்சுவட்டை பின்பற்றாமல்.. இவர் செய்துவிட்டு போன சொல்லிவிட்டு போனதை பின்பற்றாமல் யாருமே இயங்கவே முடியாதென்ற சூழலை உருவாக்கியவருக்கு மரணமில்லை.. காலம் எப்போதும் சொல்லும் கலைஞரே தமிழகத்தின் சுழற்சி.. அந்த சுழற்சியின் அச்சாணி.. கலைஞரே
தமிழகத்தின் வரலாறு ..
..
அறிந்துக்கொள்ளுங்கள் மூடர்களே..
இந்தியாவின் வழிகாட்டி..
அரசியல் பல்கலைகழகம்..
வாழ்வியல் அற்புதம்
தொண்டர்களின் மூச்சு..
..
கலைஞர் தமிழனின் வரம்.
தமிழ் செய்த தவம்..
இனத்தின் முத்து
மானமுள்ள தமிழரின் சொத்து..
..
#எம்இனத்தின்_பெருவுடைப்பெருவேந்தன்
..
ஆலஞ்சியார்
Thursday, July 26, 2018
கலைஞர் 50... ஆண்டு தலைவராக..
திமுகவின் தலைவராக கலைஞர் பொறுப்பேற்று இன்றோடு 49 ஆண்டுகள் முடிவடைகிறது. நாளை 50ஆவது ஆண்டு தொடக்கம்.
இந்திய அரசியலில் தலைவர் கலைஞருக்கு மட்டுமே தனித்துவமான சாதனைகள் உண்டு, அதில் ஒன்று ஐம்பதாண்டு தொடர்ந்து ஒரு இயக்கத்தின் தலைவராக இருப்பது.. அண்ணா மறைவிற்கு பிறகு ஆட்சியும் கட்சியும் கலைஞரை தேடி வந்தது .. யார் முதல்வர் என்ற வினா எழுந்த போது நாவலர் பெயரும் கலைஞர் பெயரும் மட்டுமே இருந்தது.. கட்சி சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்கிறவர் முதல்வராக வரவேண்டுமென முடிவு செய்யபட்டபோது .. கலைஞரை மதியழகன் முன்மொழிய சத்தியவாணிமுத்து வழிமொழிந்தார்.. போட்டி என வந்துவிட்டால் நான் பின்மாறிக்கொள்கிறேன் என்று நாவலர் சொல்ல கலைஞர் ஏகமனதாக தேர்வானார்.. அப்போது பேசிய கலைஞர் நாவலரும் தன் ஆட்சியில் பங்குபெற வேண்டுமென்றார் ஆனால் நாவலர் அமைச்சராக விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார் .. பிறகு அமைச்சரானது வேறு கதை..
..
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவர் யாரென்ற கேள்வி எழுந்தபோது, பெரியாரின் ஆதரவோடு தலைவரானவர் கலைஞர்!
அதுவரை கட்சிக்கு பொதுசெயலாளர் பதவிதான் இருந்தது கலைஞர் தான் சட்டவிதிகளை மாற்றி தலைவர் பதவியை உருவாக்கி போட்டியிட்டார் அன்று முதல் இன்று வரை ஐம்பதாண்டுகள் ஒரு இயக்கத்தின் தலைவராக .. கடும் சோதனையான காலகட்டத்திலும் அரசியல் புயல்வீசிய நேரத்திலும் .. தொடர் தோல்விகளின் போதும் .. ஆட்சி அதிகாரத்தை ஏற்ற போதும்.. தொடர்ந்து தலைவராக இருந்துவருகிறார்.. இதுவரை யாரும் நிகழ்த்திராத சாதனை..
..
ஒரு ஜனநாயக இயக்கத்தை .. அதிகம் விமர்சனம் செய்யபடுகிற .. அடிதட்டுமுதல் தேர்தலை சந்திக்கிற.. கிளைகழக செயலர் முதல் தலைவர் பதவி வரை தேர்தலை சந்திக்க வேண்டுமென்ற விதிகளுக்குட்பட்டு இந்தியாவிலேயே ஒரு கட்சி உட்கட்சி ஜனநாயகத்தோடு செயல்படுகிறதென்றால் அது திமுக மட்டுதான் என அன்றைய தேர்தல் ஆணையர் டி.என்.ஷேசன் சொன்னார்.. தேர்தல் ஆணைய விதிகளின் படி திமுக மட்டுமே அரசியல் கட்சியாக இருக்கும் யோக்கியதை இருக்கிறதென்றார்.. அந்தளவு ஜனநாயகதன்மை உடைய கட்சி திமுக.. இதெல்லாம் கலைஞர் பெருமகன் ஜனநாயத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக சாத்தியமாயிற்று
..
ஒருகட்சியின் தலைவனுக்கான இலக்கணம் எதுவென கேட்டால் கலைஞர் கைகாட்டலாம்.. பல்வேறு கருத்துடையவர்கள் கடும் விமர்சனங்களை பொதுக்குழுவில் பேசலாம் இது எந்த கட்சியிலும் காணகிடைக்காத நிகழ்விது வீரபாண்டி ஆறுமுகம் நெல்லிகுப்பம் கிருஷ்ணமூர்த்தி...மதுராந்தகம் ஆறுமுகம் கோ.சி.மணி ..நிறைய பேர் மிக கடுமையாக கட்சி நடவடிக்கை விமர்சனம் செய்திருக்கிறார்கள் ..சிலவற்றை கலைஞர் ஏற்று தீர்மானத்தில் திருத்தங்களை செய்திருக்கிறார்.. பல விடயங்களில் பொதுக்குழு உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து அவர்களை ஏற்றுக்கொள்ள செய்திருக்கிறார்.. இதெல்லாம் பொதுவுடை இயக்கத்தில் கூட கிடையாது..
கலைஞர் முழுமையான ஜனநாயகவாதி..
மிக சிறந்த தலைவர் .. ஒரு தலைவன் எப்படி கட்சிகாரர்களிடையே ஏற்படும் பிணக்கங்களை சரிசெய்து இருவரையும் சமமாக நோக்கி வழி நடத்தவேண்டுமென்பதில் கலைஞரின் திறமை வெளிப்படும்..
..
ஐம்பதாண்டுகள் ஒருவர் தலைவராக கட்டுகோப்போடு ஒரு இயக்கத்தை அதுவும் ஜனநாயகத்தில் என்பது வியப்பூட்டும் செய்தி..
எதிர்த்தவன் இடம் தெரியாமல் போனான்..
சதி செய்தவன் சகலமும் இழந்தான்..
விமர்சித்தவர்களே பாராட்டுகிறார்கள்..
இன்று வசை பாடுவோர்.. நாளை வாழ்த்தி வணங்கலாம்.. அதுதான் கலைஞர்..
..
பொன் விழா ஆண்டு..
பொன்னாய் மின்னும் பொதுத்தொண்டு..
பொன் எழுத்தால் பொறிக்கபடும் உனது வரலாறு..
தமிழே வாழிய..வாழிய.. நூற்றாண்டு..
..
ஆலஞ்சியார்
Wednesday, July 25, 2018
தர்மயுத்தம்
தர்மயுத்தம் ..
பன்னீர் தான் என்ன செய்கிறோமென்று அறியாமல் பாதுகாப்பு அமைச்சரை கோர்த்துவிட்டு போய்விட்டார்..
இராணுவ ஹெலுகாப்கடரை தனி நபருக்கு பயன்படுத்த அனுமதித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது..
பன்னீர் பரம அயோக்கியரென்று சசிகலாவை எதிர்த்தபோதே அறிந்ததுதான் அரசியலில் முதுகில் குத்தும் வழக்கம் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் செய்ததுதானே அதை தொடர்ந்து ஜெயலலிதாவும் எம்ஜிஆரை பதவிலிருந்து நீ்க்கி தம்மை முதல்வராக்க உதவுங்களென ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதியதும் ..துரோகங்களின் தொடர்தானே
அதிமுக அதனால் பெரிதாக யாரும் கட்சிக்காரன் கூட அலட்டிக்கொள்ளவில்லை
தான் காலில் விழுந்து பெற்ற வாய்ப்பை மறந்து யாரென்று கேட்கும் எடப்பாடி ..இவர்களெல்லாம் நிச்சயமாக வசமாக சிக்குவார்கள்.. நன்றி மறந்தவர்கள்..
யாருக்கும் தெரியாமல் தனக்கு உதவிய நிர்மலாவை காட்டி கொடுத்துவிட்டார்
காட்டிகொடுப்பது அதிமுகவினருக்கு கைவந்தகலைதானே ..
..
பன்னீர் தர்மயுத்தமென்று ஊரை ஏமாற்றி சசியை வீழ்த்த நினைத்து கடைசியில் தன்னோடு யாரும் வர மறுத்ததும் சசியை வீழ்த்த முடியாமல் பார்பன சூழ்ச்சியில் விழுந்து செய்வதறியாது நிற்கிறார்.. தன் மீதும் தன் குடும்பத்தார் மீதும் எழும் ஊழல் குற்றசாட்டிலிருந்து தன்னை காத்துக்கொள்ள இதுவரை தம்மை இயக்கிய பார்பன கும்பலிடம் மண்டியிட்ட போது கைவிரித்துவிட்டதால் எதையும் தாங்கும் இதயம் என்றெல்லாம் உளற ஆரம்பித்துவிட்டார்..
..
எந்த பதவியும் வகிக்காத பெரியாருக்கு அரசு மரியாதை செய்யவில்லையா என ஒரு கூமுட்டை தொலைகாட்சி விவாதத்தில் பேசுகிறது அதே போல பன்னீர் சகோதரருக்கு
ராணுவ ஹெலிகாப்டரை வழங்கியதில் என்ன தவறென்கிறார் .. முதலில் இந்த ஒப்பீடே தவறு தனிமனித உயிரை காக்க வேண்டுமென்பதில் தவறில்லை ..ஆனால் பன்னீர் சகோதரர் போன்ற குற்றவாளிகளுக்கு அனுமதித்ததை தான் கேட்கிறோம் அதைவிட கடலில் சென்று எங்கிருக்கிறார்களென தேட சொன்ன போது நிர்மலா சொன்ன வாசகம் சமரசம் போன்றோருக்கு மறந்து போயிருக்கலாம்..
பெரியாருக்கு அரசு மரியாதையென்பது நீண்டகால அரசியல் சமூக தொண்டின் காரணமாக எப்படி அரசு பதவியை வகிக்காத காந்திக்கு அரசு மரியாதை வழங்கியதோ அதேபோல் தான் பெரியாருக்கு அவர் செய்த சமூக புரட்சிக்கு அரசியல் சாசனத்தையே மாற்றிய புரட்சியாளரோடு சமூகவிரோதியை பார்பதென்பது ..சமரசத்தின் அறிவு கோளாறு..
..
பன்னீர் மட்டுமல்ல நாளை எடப்பாடிக்கும் இதே நிலை வரும் காரணம் நேர்மையின்றி நெஞ்சில் உரமின்றி திடீரென்ற வாய்ப்பு உயரத்தில் கொண்டுபோய் சேர்த்தது அதுவும் பார்பனர்கள் தங்கள் நலனுக்காக இனி இப்படியொரு வாய்ப்பு கிடைக்காதென்பதால் இவர்களை வைத்து கள்ள ஆட்டம் ஆடுகிறார்கள் .. தேவையில்லையென்கிற போது தூக்கியெறிவார்கள் ..
..
இன்னும் அசிங்கபடுவார்கள்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)