Tuesday, October 3, 2017
மங்குனி அமைச்சர்கள்
என்ன தவம் செய்தோம்..
இங்கே இவர்களை போன்ற அமைச்சர்களை யாம் பெறவே..
..
சிவாஜி சிலையிலிருந்து கலைஞர் பெயர் அகற்றபட்டதே என்ற கேள்விக்கு 133 அடி சிலையை நிறுவ எம்ஜிஆர் அடிக்கல் நாட்டினார் சிலையிலிருந்து எம்ஜிஆர் பெயரை அகற்றியவர் கலைஞர் .. எப்ப சிலை நிறுவ முடிவெடுத்ததென்றே அறியாத அமைச்சர்
..
டெல்லியிலிருந்து ஏர்பஸ்ஸில் வந்த கொசுக்கள்தான் டெங்கு பரவ காரணம்..
என்னை மாதிரி பெருத்த உடலை உடையவர்கள் சைவம் சாப்பிட்டால் உடல் இளைக்கும் ..
நீர் ஆவியாகுவதை தடுக்க தெர்மாக்கூல் போட்டு அணையை மூடலாம்..
மீன் இனபெருக்கத்தால் வைகை நீர்மட்டம் குறைவு..
நெய்யாற்றில் நுரை வர சோப்பு போட்டு குளிப்பதே காரணம்..
சுதா ரகுநாதன் சுஹாசினி.. பரதநாட்டிய கலைஞர்..
எடப்பாடி முதல்வரானாதால் தான் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகம்..
திமுக உறுப்பினர்கள் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை..
..
உண்மையிலேயே அறிவுஜீவிகளாகவே ஜெயலலிதா அருகில் வைத்திருந்திருக்கிறார்.. அறிவிலிகளின் தலைவராக ஜெயலலிதா திகழ்ந்திருக்கிறார்.. அத்தனை முட்டாள்கள் ஒரேநேரத்தில் அப்பப்பா.. தமிழகம் நிச்சயம் புண்ணியதேசம்தான் .. ஒருவர் கூட கொஞ்சமேனும் அறிவோடு கதைக்கிறாரா என பார்த்து பார்த்து அலுத்துவிட்டது.. ஆம் ஜெயலலிதா போன்றவரோடு அறிவுடையோர் இருக்கமுடியாது ஏன் எப்படி என கேள்வி கேட்காமல் வாய்பொத்தி தலைகுனிந்து கிடக்க அடிமைகள் தான் கிடைப்பார்கள் அவர்கள்
முட்டாள்களாக இருந்தே பழகிவிட்டதால் ..
திடீரென கேள்விகேட்டால் என்ன செய்வார்கள்.. கட்அவுட் வைத்து காலில் விழந்தும் நாலு காசுபார்க்கவும் தெரிந்தவர்களுக்கு வரலாறெல்லாம் தெரிய வாய்ப்பில்லை..
..
ஒட்டுமொத்தமாக கிறுக்குத்தனமாக பேசி திரிகிறார்கள் இவ்வளவு கேவலமாக தமிழக அமைச்சர்கள் இருந்ததில்லை.. ராஜாஜி சத்யமூர்த்தி ..சி.எஸ்.., பக்தவச்சலம்,காமராஜர் பரமேஸ்வரன் கக்கன்.. அண்ணா கலைஞர் நாவலர்.. நாஞ்சிலார் ராசாராம், ஹண்டே நம்ம துரைமுருகன்..
.. என நீண்டுக்கொண்டே போகும் எண்ணற்ற அறிவுடையோரை அமைச்சர்களாக கொண்டிருந்த தமிழகம் இன்றைக்கு படுகேவலமானவர்களை கொண்டிருப்பதெண்ணி வெட்கி தலைகுனிய வேண்டும்
..
இவர்களுக்கு பதில் சொல்ல உண்மையிலேயே தெரியவில்லை யாராவது ஒருவருராவது சரியான முறையில் கேள்வியையோ பதிலையோ தருவார்களா என எதிர்பார்க்கிறோம்,ஒட்டுமொத்தமும் பூஜ்யமாகவே இருக்கிறது..
சிலர் முட்டாள்தனமாக செய்கைகளில் சிலநேரம் ஈடுபடுவார்கள் அது தவறென்று அறிந்து திருத்திக்கொள்வதை பார்த்திருக்கிறோம் ஆனால் இங்கே மொத்தமும் கேனத்தனமாக பேசியும் நம்மையும் கேவலபடுத்துகிற இந்த மடையர்களை நாம் அமைச்சர்களென்றழைப்பது
எவ்வளவு பெரிய #அவமானம்..
..
#அறிவிலிகள்..
..
தோழர். ஆலஞ்சி
Monday, October 2, 2017
சரியாக கணிக்கிறார் ரஜினி
அரசியலில் வெற்றிபெற சினிமா புகழ் மட்டும் போதாது ரஜினி..
மிகச்சரியாக சொல்கிறார்.. அவர் சிவாஜியை உதாரணமாக சொல்கிறார்..அவர் சொல்கிற காரணங்கள் சரியல்ல எம்ஜிஆரும் ராமராவும் வெற்றி பெற்றார்கள் அதற்கு அவர்கள் சூப்பர்ஸ்டார்களாக இருந்தார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறாரென நினைக்கிறேன் அது கமலுக்கு தரும் தாக்கீது.. தற்காப்பு பெருசா தன்மானம் பெரிசா என்ற கமலுக்கு பதில்
..
உண்மையில் சிவாஜி திமுகவிலிருந்து வெளியேறிய போது அந்த இடத்தை நிரப்ப கலைஞரால் காங்கிரஸிலிருந்து கொண்டுவரபட்டவர் எம்ஜிஆர்.. சிவாஜியின் நாடகங்கள் திரைப்படம் மூலம் திராவிட கருத்துகள் அதிகளவில் கொண்டுசெல்லபட்டது.. அந்தளவிற்கு பிறகு எம்ஜிஆர் கூட கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில்லை.. திரும்பிபார் பட வந்த நேரம் சிவாஜிகணேசன் திருப்பதிக்கு போனாரென்றவுடன் திருப்பதி கணேசா திரும்பி பார் என கேட்டார்கள் அப்போதுதான் திமுகவிலிருந்து காங்கிரஸ் சென்றார் ..
எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்துவந்த நேரம் அவ்வளவாக வாய்ப்பில்லாதவராக இருந்தார் .. கலைஞர்தான் மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் முதலாளியிடம் சொல்லி மந்திரிகுமாரியில் கதாநாயகன் வாய்ப்பை வாங்கி தந்தார் ..
எம்ஜிஆரை கதாநாயகனாக்க மறுத்தார் சுந்தரம்.. தாவகட்டையில் பள்ளமிருக்கிறதென சொன்னபோது சிறிய தாடியை ஒட்டிக்கொள்ளலாமென சொன்னவர் கலைஞர்.. மாதம் 90 ரூபாய் சம்பளத்தில் ஆறுமாதம் நடிக்கவேண்டுமென ஒப்பந்தம்.. கலைஞருக்கு கொடுக்கப்பட்ட தொகையில் பாதிகூட இல்லையென பிலிம்நியூஸ் ஆனந்தன் சொல்வார்..
சரிவிடயத்திற்கு வருவோம்..
..
எம்ஜிஆர் பிரிந்து சென்ற போது அவரோடு திமுகவினர் மாவட்ட வட்ட கிளைகழகத்தை சேர்ந்தவர்கள் சென்றார்கள் ஆனால் சிவாஜி கட்சி ஆரம்பித்த போது ரசிகர்களை தவிர யாரும் கூட வரவில்லை.. சிவாஜிகணேசன் அரசியலை சரியாக கணிக்கவில்லை அவர் நிறைய தவறுகளை செய்திருந்தார் முதலில் ஜானகியோடு கூட்டு வைத்து 50 இடங்களில் மட்டுமே போட்டியிட்டார் .. அது முதல் தவறு தமிழகம் முழுவதும் போட்டியிட்டிருக்கவேண்டும் அப்போதுதான் அவர் மீது நம்பிக்கை வரும்.. 50 இடங்களுக்குள் என்றவுடன் அவர்மீதான அரசியல்பார்வை குறுகியதாகிவிட்டது இரண்டாவதாக தொகுதி தேர்வு.. கள்ளர்கள் அதிகம் வாழும் தொகுதிகளை தேர்வு செய்தார்.. தஞ்சையில் ஒரத்தநாடு திருவையாறு என சில தொகுதிகளில் அவர் திருவையாறை தேர்வு செய்தது பெரும் தவறாகிபோனது.. அங்கே கள்ளர்கள் அதிகளவில் இருந்தாலும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.. அந்த நேரத்தில் நடந்த ஒரு சம்பவம் .. கணபதி அக்ரஹாரத்தில் .. அதுதான் திருவையாறு தொகுதி தொடங்குமிடம் காவிரிக்கரையில் .. தேநீர்கடையில் அமர்ந்திருந்தேன்.. சில கார்களில் சிவாஜி உட்பட வந்தார்கள் எல்லோருக்கு டீ சொன்னார்கள் சிவாஜி சிரித்துக்கொண்டே டீ மாஸ்டரிடம் கேட்டார் என்னப்பா தொகுதி எப்படி வெற்றிவாய்ப்பு எப்படியென்றார்.. கொஞ்சமும் தயங்காமல் சொன்னார் .. இங்கே ஜெயிக்கமுடியாதுன்னே.. ஊர்க்காரனை தவிர எவனுக்கு ஓட்டுபோட மாட்டாய்ங்க என்றார்.. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. அவர்கள் போனபின் ஏன்ப்பா இதெல்லாம் சொல்லுறே என்றேன்.. உண்மைதானே கள்ளர் அதிகமுன்னு நிற்கவச்சுட்டானுக ஒரத்தநாடு பக்கம் போய் நின்னுருக்கலாம்.. அவர் சொந்த ஊரும்,அதுல வரும் என்றார் .. அதைபோலவே சிவாஜி திமுகவின் துரை சந்திரசேகரிடம் தோற்றார்..
..
சிவாஜியின் தோல்வி மக்களின் தோல்வியென்றார் ரஜினி இல்லை அது முழுக்க முழுக்க சிவாஜியின் தோல்வி.. காங்கிரஸ்லேஸே இருந்திருந்திருந்தால் கொஞ்சம் மெச்சபட்டிருக்கலாம் அல்லது அப்போது திமுகவோடு கூட்டுவைத்திருந்தால் அருகில் பாபநாசத்தில் நின்று மூப்பனாரையே தோற்கடித்திருக்கலாம்.. (சொற்ப வாக்குகளில் மூப்பனார் வென்றார் -எங்கஊர்) அரசியலை அறியாதவராக இருந்தார் சிவாஜி ..எம்ஜிஆர் ரசிகர்களை மட்டும் நம்பியிருந்தால் தேவுடு தெய்வமன்று சொன்ன ராமராவ் ஏற்பட்ட கதிதான் ஏற்பட்டிருக்கும்.. இப்போதெல்லாம் மிக தெளிவாக மக்கள் அன்றாட பிரச்சனைகளை அலசுகிறார்கள்.. இன்றைய காலம் வெகுவாக மாறியிருக்கிறது அதனால்தான் ரஜினி தயங்குகிறார்.. ஆழம்தெரியாமல் காலைவிட தயாரில்லை..
..
இனி யார் வந்தாலும் சட்டென்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..ரஜினி கமல் போன்றவர்கள் வரவேண்டும் அப்போதுதான் உண்மை தெரியும்.. சினிமா மோகமெல்லாம் சிலநாட்களென புரியும்...
ரஜினி தெளிவாக இருப்பதாக தெரிகிறது எதையும் இழக்க தயாரில்லை.. பரமகுடிகாரர் பாவம்..
..
#பட்டுதான்_திருந்தவேண்டும்..
..
தோழர். ஆலஞ்சி
Sunday, October 1, 2017
வெங்காயம்
பார்பனன் உண்ட எச்சிலையில் சூத்திரர்கள் உருள கர்நாடக அரசு தடை..
பாஜக கடும் எதிர்ப்பு.. கொஞ்சமேனும் அறிவுள்ளவன் இந்த செயலை கண்டிக்கவேண்டும் அடுத்தவனின் எச்சிலையை புனிதமாக்குவது அயோக்கியத்தனமென உணர்ந்திருக்கவேண்டும்.. எச்சில் கிருமியென அறிவியலையாவது போதித்திருக்கவேண்டும்..
அதைவிடுத்து கண்டனம் செய்கிறவர்களை என்னவென்று அழைப்பது.
..
மூடநம்பிக்கைகளுக்கெதிராக கர்நாடகம் சமீபகாலமாக தொடர்ந்து தடையை விதித்து வருகிறது .. சடங்கென்ற பெயரில் மனிதனை மிக மட்டமாக சித்தரிக்கும் செயலை.. தன்னை விட தாழ்ந்தவனாக்க முயற்சிக்கு செயலை தீண்டாமையை தடுத்து நிறுத்துவது அரசின் கடமை.. இங்கே தமிழகத்தில் தலைகீழாகி போனது.. எல்லாருக்கும் முன்பே பகுத்தறிய சொன்ன மண்ணில் சில பன்னாடைகள் ஆட்சிக்கு வந்ததும்..மண்சோறு தொடங்கி குழந்தைகளுக்கு அலகு குத்துகிற செயலை அரசியலுக்காக செய்ய தொடங்கி .. அதை வியாபாரமாக .. தங்களின் அரசியல் பயணத்தின் படிகளாக்கிய முட்டாள்தனத்தை அதிமுக தொடர்ந்து செய்து வருகிறது..
தெய்வநம்பிக்கை அவரவர் விரும்பமாக இருக்கவேண்டுமே தவிர யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ.. யாருடைய கவனம் தன்பக்கம் வேண்டுமென்பதற்காகவோ இருந்தால் அது தூய்மையான பக்தியாக இருக்காது அவன் அவன் நம்புகிற இறைவனையே ஏமாற்றுகிறானென்றே பொருள்..
..
எந்த உயரத்திலிருந்தாலும்.. பிரபலமாக மக்களால் விரும்பபட்டாலும்
மதம் தலைக்கேறியால் செய்வதறியாது போவார்கள் என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு மலையாள நடிகர் #சுரேஷ்கோபி..
அடுத்தஜென்மத்தில் நம்பிக்கை இருக்கிறது.. அதில் பார்பனனாக பிறந்து ஐயப்பனை தொட்டு தொழவேண்டும்..என உளறிவைத்திருக்கிறார்..
ஏனடா நான் மட்டும் தொட்டு தொழ முடியவில்லையென கேள்வி எழுப்பியிருந்தால்
அவரின் செயல்பாடுகளை மெச்சலாம் அதைவிடுத்து தன்னை தாழ்த்துக்கொள்ளும் செயல் மடத்தனம்.. இங்கே இசைஞான்
இளையராசா கூட இதுபோல் இந்த இழிபிறவியை துடைக்க பிராயசித்தம் செய்கிறேன் என்றார்..
தன்னைவிட எவனும் மேலில்லை என்று தோன்றியிருக்கவேண்டும்
அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப்போல
எவனுக்கும் நான் அடிமையில்லை எவனும் எனக்கடிமையில்லை.. அதைவிடுத்து கடவுள் பக்தியென்ற பெயரில் தாழ்த்திக்கொள்ளல்
இறை நம்பிக்கையையே கேலிசெய்வதைப்போல
அவரின் இறைநம்பிக்கையென்பதே மூடத்தனத்தை நம்புவதாகிறது...
..
மதங்கள் எல்லாம் சில நல்லவற்றை போதிக்கிறது ஆனால் சடங்குகளென்ற பெயரில் ஏற்றதாழ்வை அறிவுக்கொவ்வா செயல்களை ..
மனிதன் இடைபுகுத்தி அதுதான் வழி மார்க்கமென்கிற அறிவிலித்தனத்தை நம்பவைக்கிறான்.. அதை கண்டு விழித்தெழுபவனே அறிவுடையோனாகிறான்..
..
#மூடபழக்கங்கள்_முட்டாளுக்குரியது..
அட.. வெங்காயம்..
..
தோழர். ஆலஞ்சி
Saturday, September 30, 2017
மாற்றான் தோட்டமாயினும்
மௌனமாய் கடந்து போவோமென்றிருந்தேன்..
நண்பர்கள் விடுவதாயில்லை.. திருமிகு.ஸ்டாலின் எப்படி கலந்துக்கொள்ளலாம்
எச்.ராசா மணிவிழாவில் என கேள்விகள்.. கொள்கை பிறழ் என்றெல்லாம் உள்ளடப்பில் கதைத்தார்கள் .. பதிலளிக்கவேண்டியது கடமையாகிறது..
..
தளபதியார் கொள்கையை விட்டுக்கொடுத்தாரா ..
ஏற்கனவே எஸ்.வி.சேகர் விடயத்தில் கூட மிக தெளிவாக நட்பு என்பது வேறு ஏற்றுக்கொண்ட
திராவிட இயக்க கொள்கையை விட்டுக்கொடுக்கமுடியாதென மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்.. தனிநபரின் சொந்த விழாக்களில் கலந்துக்கொள்வதால் அனுசரித்து போவதாகவோ அல்லது அவர்களின் தயவை நாடுவதாகவோ பொருள் அல்ல..
ராசா சாரணர் தேர்தலில் போட்டியிடுகிறாரென்று அறிந்தவுடன் மிக கடுமையாக விமர்சித்தார்.. சாரணியர் தேர்தலை அரசியலாக்குவதாகவும் அதை காவிமயமாக்கி .. இளம் மாணவர்கள் நெஞ்சில் விசத்தை விதைக்க முயலுவதாகவும் .. இதற்கு முதல்வரும் அமைச்ர்களும் துணைபோவதாக கடுமையாக எச்சரித்தார் அதனால்தான் ராசாவின் தோல்வியை நாமெல்லாம் கொண்டாடினோம்.. கல்வியாளர்கள்.. கல்வித்துறை அதிகாரிகளென 200 மேற்பட்டவர்கள் வாக்குரிமை பெற்றவர்கள்.. அமைச்சரே நேரடியாக தொலைப்பேசியில் அழைத்து ராசாவிற்கு வாக்களிக்க சொன்னார்கள்.. வேறொரு ஆளில் பெயரில் விண்ணப்பம் பெற்று திருட்டுத்தனமாக வெற்றிபெற்றிடலாம் என்றிருந்த ராசாவின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர்.. தளபதியின் ஒற்றை அறிக்கை கல்வியாளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததோடு மணி அவர்களை போட்டியிடும் துணிவையும் தந்து வெற்றிபெறவும் செய்தது.. கொள்கை எப்போதும் விட்டுக்கொடுக்காமல்.. பாசிச நுழைய காலூன்றாவண்ணம் தடுத்துநிறுத்தியவர்..
..
பேராசான் பெரியார் கடுமையாக பார்பனர்களை விமர்சிப்பார் ஆனால் அவரது இல்ல நிகழ்வுகளுக்கு செல்வார் .. ராஜாஜியோடிருந்த நட்பு அரசியலை கடந்தது.. ராஜாஜியின் மகள் பால்ய விதவையாக வீட்டில் அடைப்பட்டுகிடந்ததை ராஜாஜியிடம் ஏன் குழந்ததையை வீட்டிலேயே வைத்திருக்கிறீர்கள் படிக்க அனுப்பலாமே என்ற போது அவ ப்ராப்தம் அவ்வளவுதானென சொன்னவரின் மனதை மாற்றி அவருக்கு மறுமணம் செய்துவைக்க பெரும் முயற்சி செய்தார் .. அந்த லட்சுமியின் மகன்தான் குடியரசுத் துணைதலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்.. திரு.கல்கி கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணத்திற்கு அழைத்திருந்தார் திருமண நிகழ்வெல்லாம் முடிந்தபிறகு வீட்டிற்கே சென்று ஆசிர்வாதம் செய்கிறார்.. கல்கியிடம் குழந்தைகளை அழைத்துவாருங்களென சொல்லி குங்குமத்தை கொண்டுவர சொல்லி நெற்றியில் இட்டு வாழ்த்துகிறார்.. அருகிலிருந்த கல்கியின் உதவியாளர் இந்த சம்பவத்தை எழுதி பெரியாரின் இரட்டை வேடமென எழுதலாமென்ற போது கல்கி சொன்னார் பெரியார் கொள்கையில் பிடிவாதமானவர் .. நேர்மையானவர்.. நாம் மனம்கோண கூடாதென்பதற்காக.. நமது சடங்குகளை மதிக்கிறாரே தவிர அதை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமில்லை.. என்றார்.. அதைதான் தளபதியும் செய்தார்..
..
கொள்கையில் விட்டுகொடுப்பதல்ல ..மாறாக அவர்களின் கொள்கைகளுக்கு மதிப்பளிப்பது..
#மாற்றான்_தோட்டமாயினும்_மனமுண்டு.
..
தோழர். ஆலஞ்சி
ஜெயலலிதா நீதிவிசாரணை..
என் வாழ்நாளுக்குள் திமுகவை இருந்த இடம் தெரியாமல் அழிப்பேன் என்று சபதமேற்ற ஜெயலவிதாவிற்காக திமுக தான் நீதி கேட்கிறது..
என்ன விசித்திரம் என்கிறீர்களா.. அதுதான் திமுக..
..
மூட்டைப்பூச்சியைப்போல் நசுக்குவேனென்ற ராஜாஜியையும்.. 6000 அடி ஆழத்தில் புதைப்பேனென்ற பக்தவச்சத்தலத்தையும் திமுகவை இருக்குமிடம் இல்லாமல் செய்வேன் என்ற காமராஜரையும்.. ஏன் சுடுகாட்டிற்கு அனுப்புவேன் என்ற எம்ஜிஆரையும் பார்த்தாயிற்று..இவர்களுக்கெல்லாம் நினைவுமண்டபங்களை கட்டி அழகு பார்த்தவர் கலைஞர்.. தன் சிலையை உடைத்த இளைஞனை கூட கவிதையில் ரசித்தவர்..
செயல்ப்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னதம்பி முதுகில் குத்தவில்லை நெஞ்சில் தான் குத்துகிறான் அதுவரை நிம்மதி எனக்கு.. என்றார்
..
ஜெயலலிதா மிக மோசமான அரசியலை கையிலெடுத்தவர் நாகரீகமற்ற தனிநபர் தாக்குதலை செய்தவர் தனக்கு கிடைக்காத வாழ்வு பிறருக்கு கிடைத்திருக்கிறதே என்ற பொறாமையை அடிக்கடி செயலிலும் சொல்லிலும் வெளிப்படுத்தியவர்.. அடிமனதின் ஆழத்தின் ஏக்கம் அவரின் செயல்பாடுகளில் தெரிந்தது.. அதை காட்டிக்கொள்ளாமல் வாழ தெரியாமல் போனார்.. கூட இருந்தவர்கள் தன் நிழலை தவிர எல்லோருமே ஏமாற்றுகாரர்களென அறிந்தே இருந்தார்.. தாயார் தொடங்கி உறவினர்கள் நண்பர்களென எல்லோருமே இவரை பகடையாக பயன்படுத்தினார்கள்.. அதை அவர் அறிந்தே இருந்ததுதான் கொடுமை..
..
பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி தான் அடைய முடியாத கதாநாயகி தகுதி தன் மகளை கொண்டேனும் அடையவேண்டுமென நினைத்து தான் இரையான மகோராவிடமே மகளை சேர்த்ததில் தொடங்கி .. பணம் புகழென உயர்ந்த போது .. உடன்பிறந்தவரும் உறவினர்களும் அவரின் சொத்து மீது நாட்டம் கொள்ள ..கடைசியில் யாரையும் நம்பமுடியாத போதுதான்.. சசிகலா அறிமுகமானார்.. ஜெயலலிதாவிற்கு தெரிந்தே தான் சசிகலாவின் சட்டவிரோத செயல்பாடுகள் இருந்தாலும்..எல்லாம் இழந்தவர் கிடைத்த தும்பை பிடித்தேனும் நகரவேண்டுமென்ற நிலையில்.. சசி நம்பிக்கையானவராக காட்சி தந்தார்.. தன்னை வைத்து பிழைக்கிறார் ஆனால் தன்னை மீறியோ அல்லது காட்டிக்கொடுத்தோ தப்பிக்க நினைக்கவில்லையென்றவுடன் அவரோடான நெருக்கம் அதிகமானது.. அதை சசி&கோ சரியாக பயன்படுத்தி பள்ளத்திலிருந்தவர்கள் உச்சியை தொட்டார்கள் இதெல்லாம் யாவரும் அறிந்ததுதான்.. இப்போது ஜெயலலிதா சிறைச்சென்றால் கட்சியை விட்டே நீக்குவோமென்கிறார்களே இவர்களை விட அந்த மாபியா கும்பல் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாகதான் இருந்திருக்கிறது...இருக்கிறது..
..
இப்போதும் ஜெயலலிதாவின் அரசியலை வெறுத்து ஒதுக்கினோமே தவிர தனிநபரை அல்ல அதனால்தான் ஆளகூடாதென்றுதான் சொன்னோம் வாழகூடாதென்று அல்ல எங்களால் இரங்கற்பா பாடமுடிந்தது ..
அவரின் மரணம் குறித்து அவரின் கூட இருந்தவர்களே எழுப்பும் சந்தேகங்களும் கூட இருந்தே குழிப்பறித்தவர்களையும் ஜெயலலிதாவை சாய்த்தால் வளரலாமென திட்டம்தீட்டியவர்களையும் மக்கள் முன் தோலுறிக்கவேண்டியிருக்கிறது.. அதனால் தான் திமுக சிபிஐ விசாரணை கோருகிறது.
..
மிக கேவலமானவர்கள் கேடுக்கெட்டவர்களை அடையாளங்காட்டுவோம்
..
தோழர். ஆலஞ்சி
Friday, September 29, 2017
இந்திய பொருளாதாரம்
80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார் யஸ்வந்த் சின்ஹா-ஜெட்லி
இதுதான் பாசிசத்தின் முகம்..
..
சொல்லப்பட்ட கருத்தை/ குற்றசாட்டை எதிர்க்கொள்ள திராணியற்று தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதுதான் பழைமைவாதிகளின் செயலாக இருக்கும்.. குற்றசாட்டை மறுக்கமுடியாமல் அவரை தாக்குவதென்பது கோழைத்தனம் கையாலாகாதசெயல்..
..
யஷ்வந்த் சின்ஹா மோடியும் ஜெட்லியும் சேர்ந்து நாட்டை திவாலாக்குகிறார்கள் பொருளாதார மந்தநிலையில் கூட இந்திய பொருளாதாரம் தடம்புரளாமால் இருந்தது இப்போது உலகின் பொருளாதாரம் நல்லநிலையில் இருக்கும் வேளையில் இந்தியவின் நிலை மிகமோசமாக இருப்பதாக சொல்கிறார்.. 5.7 என்பது அல்ல உண்மையில் 3.7 தான் வளர்ச்சியென சொல்வதை .. எந்த பொருளாதார வல்லுநர்களும் தவறென்றோ காழ்ூ்புணர்ச்சியில் சொல்வதாக சொல்லாதபோது நாட்டின் நிதியமைச்சர் நிலைமையை நாட்டுமக்களுக்கு சொல்வதை விடுத்து யஷ்வந்த் சின்ஹாவை கிண்டல் செய்வதிலிருந்தே மிக மோசமாகி கொண்டிருக்கிறதென்பது தெரிகிறது..
..
நாங்கள் சொன்னோம் எதிர்க்கட்சிகளில் குற்றசாட்டாக கவனித்தில் கொள்ளவில்லை இப்போது பிஜேபியை சேர்ந்தவர்களே நிலைமையை உணர்ந்து கேள்வி கேட்கிறார்கள் என்கிறார் ப.சிதம்பரம்.. சிவசேனாவோ ஒருபடிமேலேபோய்.. பொருளாதார மேதைகள் டாக்டர்.மன்மோகன்சிங்கும் ப.சுதம்பரமும் முன்பே எச்சரித்தார்கள் இன்றைய மோசமாக நிலையை முன்கூட்டியே கணித்தார்கள் என்கிறது..
..
மதம் தலைக்கேறியவர்கள் வாய்ஜால வித்தைகாரர்கள்.. எப்போதும் பொய்பேசி திரிபவர்கள் இவர்களை மகாபுத்திசாலிகள் போல் காட்டி.. ஊழல் நிர்வாக சீர்கேடென ஏதேதோ சொல்லி நாட்டின் சிறந்த வல்லுநர்களை வேண்டாமென வைத்து கார்ப்பரேட்டுகளின் வியாபாரஉக்தியை அரசியலாக்கி மோடி போன்ற அரைவேக்காடுகளை .. உன்னதநிலைக்கு உயர்த்தி பிடித்ததன் விளைவு .. இன்று நாடு சந்திக்கிறது .. அதிரடி என கூறி ஒரே இரவில் பணமதிப்பிழப்பை அறிவித்து .. நாட்டுமக்களை நடுத்தெருவில் நிறுத்தியதை ஒஹோவென புகழ்ந்த மோடி ரசிகமணிகள் இப்போதும் சப்பைக்கட்டுவதை நினைத்து வேதனையாகிறது..
..
கருத்திற்கு/குற்றசாட்டிற்கு ஆதாரத்தோடு பதிலளிக்க திராணியில்லாமல் 80 வயதில் பதவிக்கு ஆசைபடுவதாக கொச்சைபடுத்துவதை ஏற்கமுடியாது..
பாஜக ஆர்எஸ்எஸ்காரர்களின் பேச்சு இப்படிதான் ஆணவத்தோடு இருக்கும் .. எதற்கும் பதில் சொல்ல வக்கில்லாமல் நேரடி தாக்குதலை செய்வார்கள் ..தமிழகத்தில் எச்.ராசா தமிழிசை போன்றோர்களின் பேச்சை கவனியுங்கள் இதே தொனியில்தானிருக்கும்.. ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தில் /பயிற்சியே இந்தமுறைதான் .. பதிலளிக்க முடியாமல் போகும்போதெல்லாம் தனிப்பட்ட தாக்குதலை செய்வார்கள் ..
..
ஜெட்லிக்கு பேச்சை நாடே எதிர்க்கிறது யஷ்வந்த் சின்ஹா அவர்கள் நான் வேலைக்கேட்டு விண்ணப்பம் செய்திருந்தால் இன்றைக்கு முதலிடத்தில் ஜெட்லி இருந்திருக்கமுடியாதென பதிலடி தந்திருக்கிறார்.. கருத்தை எதிர்க்கொள்ளமுடியாத கோழை ஜெட்லி..
..
#தேசத்தின்_பேராபத்து..
Thursday, September 28, 2017
அறிவிலிக்கூட்டத்தை விரட்டுவோம்
விகடன் அட்டைப்படம்..
விகடன் ஏற்கனவே கருத்துப்படங்களில் கேலிச்சித்திரங்களில் அமைச்சர்களை கிண்டல் செய்து வெளியிட்டிருக்கிறது கடுமையான விமர்சனங்களை ஆட்சியாளர்கள் மீது வைத்திருக்கிறது..
மகோரா [எம்ஜிஆர்]ஆட்சியில் ரௌடியைப் போல சித்தரித்த கேலிச்சித்திரத்திற்கு கைதுவரை சென்றார்
விகடன் ஆசிரியர் சீனிவாசன்
ஆனால் அதற்கு விளக்கமளித்த ஆசிரியர் விமர்சனபார்வையை கூட ஏற்க முடியவில்லையென்றார்...
கலைஞர் உட்பட ஜனநாயகத்தில் விமர்சனத்தை உள்வாங்கவேண்டும் பழிவாங்கும் போக்கு சிறந்த நடைமுறையல்ல என்றனர்
..
இப்போது விகடன் வெளியிட்டியிருக்கும் கேலிச்சித்திரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது ஜனநாயக கடமையை மீறி ஒரு உறுத்தல் தோன்றுகிறது .. சினிமா கொட்டகைகளில் பஜார்களில் தாயம் உருட்டும் சூதாட்டக்காரர்களென.. இந்த
திருடர்களை, கண்முன் காட்டி ஏமாற்றுக்காரர்கள் ..இவர்களென ஓங்கி அறைந்து சொல்லியிருக்கிறது.. சட்டென்று சிரித்துவிட்டு கடந்துபோக முடியவில்லை .. இந்த அயோக்கிய கும்பல் ஆட்சிக்கு வர நாமும் காரணமாகிவிட்டோமே என மக்களின் மனதை உறுத்தவைத்தத்திருக்கிறது.. ஆம் நாமும் தான் காரணம் .. சொற்பகாசும் அது தரும் தற்காலிக நிம்மதிக்காக நீண்ட நெடும் துயரத்தை விலைக்கு வாங்கியிருக்கிறோம்.. தெரு பொறுக்கிகள்/சூதாடும் ரௌடிகள் அளவிற்கு தரம்தாழ்ந்து மாநில முதல்வர் விமர்சிக்கப்படும் போது நாமும் இம் மாநிலத்தில் வாழ்வதை எண்ணி வெட்கி தலைகுனிய வேண்டியிருக்கிறது..
..
அரசியலதிகாரம் இருக்கிறதென்பதற்காக இன்னமும் இவர்களை விட்டுவைப்பது ... நேரடியாக அரசாங்கத்தை சூதாட்டகாரர்களிடம் அல்லது ஏலமெடுப்போரிடம் தந்துவிடலாம்.. ஏலமெடுத்தவன் கூட அடுத்தமுறை நமக்கு கிடைக்கவேண்டுமென்பதற்காக சற்று ஈரத்தோடு நடந்துக்கொள்வான்
இனி எப்போதும் நமக்கு வாழ்வில்லை என்பதறிந்து மக்களைப்பற்றி கவலைக்கொள்ளாமல் பூம்பூம் மாட்டைப்போல தலையாட்டி திரிகிறார்கள்..
நக்கி பிழைக்கிறார் அதையே நல்லதென்கிறார் என்ற பாவேந்தர் வரிகளைப்போல அடிமைகளைவிட கேவலமாய் கூனிகுறுகி நிற்கிறார்கள்.. பொய்யும் புரட்டும் சர்வசாதாரணமாக வருகிறது இப்படியொரு கேடுக்கெட்ட கூட்டத்தை இதுவரை தமிழகம் கண்டதில்லை.. மாநில நலனுக்கெதிராக கொஞ்சம் கூட அச்சப்படாமல் நீட்டிய இடங்களிலெல்லாம் கையெழுத்திட்டு .. விற்றுவிடுகிறார்கள்..
..
ஜனநாயகத்தின் மீதும் இந்த மண்ணின் மீது சிறுதும் அக்கறையின்றி இவர்கள் நடத்து சூதாட்டகூத்து எத்தனை நாள் பொறுப்பது.. இவர்களையும் இவர்களை ஆட்டுவிக்கும் கூட்டத்தையும் வேரோடு சாய்க்கவேண்டும்..
..
இவர்களை அரசியலை விட்டே விரட்ட உறுதியேற்போம்.. நமக்காக உழைக்கிறவனை அடையாளம் காண்போம்.. #நமக்கு_நாமே ..என முரசொலிப்போம்
வெற்றி வெகுதூரமில்லை.. இலக்கை சரியாக வடிவமைத்துக்கொண்டிருக்கிறோம்.. நிச்சயம் வெல்வோம்..
#வெற்றிமட்டுமே_நமது_இலக்கு…
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Posts (Atom)