Thursday, July 6, 2017
முத்தம்
முத்தம்..
அரும்புமீசை வளரும் போதில்
காதல் கொண்டு ஆற்றங்கரை படுகையில் அவளோடு கரம்கோர்த்து அலைந்த காலம்.. சிலுசிலு நீரோட ..
ஆற்றின் மத்தியில் கண் மூடி
வானம் பார்த்திருந்த நேரத்தில்
அருகமர்ந்து பிடிமண்ணை கையில் அள்ளி
கண்மீது போட்டு விழி திறக்காமல் இதழ்பதித்த முத்தம் எல்லாம்
நிச்சயமாய் காமத்தில் இல்லை..
..
பெரும் மழையில் நனைந்து உடல்நடுங்கி மரத்தடியில் நின்றவேளை.. மழைநின்று இலை சிந்தும் நீரில் நனைந்தபடி ..
தந்த முத்தம் ..
ஆடி பெருக்கில் காவிரி கிளைநதியில்
குருமுருட்டி கரையோரம்..
கூடிய கூட்டத்தில் நடுவில்
கண்ணசைத்து காற்றினிலே .. தந்த முத்தம்..
அக்ரஹார கோவில் சுவற்றில் கிறுக்குத்தனமாய் பெயரின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் கிறுக்கிநின்ற போது..
கண்ணில் காதல் கொண்டு
கருவிழி உருட்டி
கவிதையாய் தந்த முத்தம்..
..
ஆத்திகம் பேசும் பைங்கிளியிடம்..
ஆண்டவனை மறுப்பவனின்
அடியொற்றி கதைத்தபோதும்..
திராவிட பேசி..
சண்டையிட்ட போதும்..
பெரியவாளையா பெரியாரையா
அதையெல்லாம் தூக்கிவை..
அன்பில் கரைந்து ..
அமுதமாய் மொழி பேசி..
சிணுங்கி சிணுங்கி..
சில்லறையாய்.. சிரித்து
சேர்த்தனைத்து.. சிங்காரி தந்த
முத்தமெல்லாம்..
நிச்சயமாய் காமத்தில் இல்லை..
..
அன்பை மட்டுமே தந்தது
அதிலும்.. மதமேறிய சிலரின்
வறட்டு பேச்சை செவிமடுக்காமல்
காதலாய்..காதலாய்..
கனிந்து கரைந்து
உயிரில் கலந்து..
நெஞ்சில் .. மாறாத வடுவாய்
இன்றைக்கும் இருக்குதடி..
இன்றும் இதழோரம்..
சிலநேரம்.. தித்திக்கும்..
அன்று நீ தந்த
அன்பின் அடையாளம்..
முத்தம்....
..
அன்பில் விளைந்தது
#முத்தம்..
..
தோழர். ஆலஞ்சி
Wednesday, July 5, 2017
இசைகுயில்
தமிழ்த்தாய் வாழ்த்து..
நண்பரின் பதிவொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துபாடலை எம்எஸ்வி பாட மறுத்தது குறித்து கருத்தை பதிவு செய்திருந்தேன்.. அதில் சதாசிவ அய்யர் பாட கூடாதென கட்டளையிட்டதே பாட மறுத்ததின் காரணம் என எழுதியிருந்தேன்.. மறுத்தும் சரியென்றும் சிலர் உள்ளடப்பில் கதைத்தார்கள்..
..
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை கலைஞர் எம்எஸ்வியை கொண்டு இசையமைக்க பணித்த போதே திருமதி எம்.எஸ்.வி தான் பாடவேண்டுமென சொல்லியிருந்தார்..ஆனால் திருமதி எம்எஸ்வி அவர்கள் அதில் சிலவரிகளை சுட்டிகாட்டி ஆரியம்போல உலகவழக்கிழந்து அழிந்தொழிந்து என்று வருவதால் பாட முடியாதென சொன்னார்.. என்று சொல்லபட்டது அதற்கு முன்பே கலைஞர் ஆரியம்போல் உலகவழக்கிழந்த என்ற வாக்கியத்தை நீக்கிவிட்டுதான் இசையமைக்க விஸ்வநாதனிடம் சொல்லியிருந்தார்..
..
இசையரசியைப்பற்றி முதலில் சொல்லவேண்டும்
தேவதாசி பிரிவை சேர்ந்தவர்..அவர்கள் தந்தை பெயரை இன்சியலாக போட்டுக்கொள்ளமாட்டார்கள் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கம் தான் எம்எஸ் என்றெழக்கப்பட்டார்..
அதாவது தாயாரின் பெயரிலேயே அவர்களது வழக்கப்படி அழைக்கப்பட்டார்..
பின்னாளில் தன் தந்தை சுப்ரமணிய அய்யர் என்று சொல்லிக்கொண்டார்..
அன்றைய காலகட்டத்தில் கோவில்களில் அமர்த்தபடும் பெண்களை அன்றைக்கு ஆதிக்கம் செலுத்திய பார்பனர்கள் கல்யாணம் செய்தோ அல்லது தங்களுக்கு இணங்கி இருக்கும்படியோ செய்தார்கள் அதனால் தான் தந்தை பெயரை அவர்கள் பயன்படுத்துவதில்லை..
திருமதி சுப்புலெட்சுமி அவர்களின் மேலாளராக பணி செய்த சதாசிவம் திரைப்படங்களில் நடித்த போது துணைக்கு வந்தவர் /அவரிடம் வேலைபார்த்தவர் சதாசிவ அய்யர்
பிறகு அவரையே மணம் முடித்துக்கொண்டார்..
..
திரைப்பட தயாரிப்பாளர் மதுரை நாட்டாமை மல்லி தான் சேவாசதனம்" படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர்..(1937)
1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் கல்கியும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை....சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வார இதழ் தொடங்கப்பட்டது. பின்பு 1945ல் மீரா படத்தில் படத்தில் நடித்து பாடிய காற்றினிலே வரும் கீதம் பாடல் இன்றைக்கும் பிரசித்தம்.. அவரை உயரத்திற்கு கொண்டு சேர்த்தது..
..
ஆனால் தொடர்ந்து கர்நாடக இசையை மட்டும் பாடவேண்டுமென்றும் நீசபாஷை தமிழை பாட கூடாதென்றும் கட்டளையிடபட்டு ஏறத்குறைய கூண்டுக்குள் அடைத்துவைத்த கிளியைப்போலவே தன் வாழ்நாளை கழித்தவர் அந்த இசை பெருமாட்டி..நண்பர் சோமசுந்தரம் கூறியதைப்போல கொடுஞ்சூரன் கையில் சிக்கிய கிளியாகவே இருந்தார்..
..
மூன்று இசையரசிகளில் எம்.எல் வசந்தகுமாரி .. பட்டம்மாள் இருவருமே பார்பனர்கள் சுப்புலெட்சுமி மட்டுமே ஒடுக்கபட்ட சமூகத்திலிருந்து வந்தவர்.. அதனாலேயே என்னவோ அவர் மீதான ஆதிக்கம் அதிகமாக இருந்தது.. மார்கழி மாதங்களில் சென்னை கச்சேரிகளில் விரும்பி நேயர்கள் தமிழை பாட கேட்டும் மறுத்திருக்கிறார்.. தமிழை பாட கூடாதென மறைமுகமாக அழுத்தம் தரபட்டதாக இசை விமர்சகர் சுப்புடுவே ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்..
..
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சுப்புலெட்சுமி பாடவேண்டுமென கலைஞர் மிகவும் விரும்பியும் அது நடைபெறாமல் போனது.. அழித்தொழித்து என்ற வாக்கியங்களை எடுத்துவிட்டு பாட அழைத்த போதும் கூட தமிழ்த்தாய் வாழ்த்தை பாட தடை விதிக்கபட்டிருந்தது.. ஆனால் அந்த இசைகுயில் மீது கலைஞர் மிக மரியாதை கொண்டிருந்தார்
..
தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதி வடிவம் தந்து சிலவற்றை நீக்கி சிலவற்றை சேர்த்த போது சிதைத்துவிட்டதாக சொன்ன கூட்டம் தான் ..
இன்றும் நம்மோடு பகை கொண்டே திரிகிறது..ஆனாலும் தமிழ்த்தாய் பாடலை பாடும் போதெல்லாம் கலைஞர் நினைவு வந்து போவார் அதுதான் உண்மை..
..
குறை ஒன்றும் இல்லை.. மறைமூர்த்தி கண்ணா
என்று முதல்முதலில் பாடியவர் கடைசிவரை.. குறைகளோடே வெளியில் சொல்லமுடியாமல் பாடி திரிந்த குயில்.. ஒடுக்கப்பட்ட குரல்.. இனிமையாய் நம்மை கரைத்துக்கொண்டே இருந்தது..
..
தோழர். ஆலஞ்சி
Tuesday, July 4, 2017
தமிழ்த்தாய் வாழ்த்து
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா எழுதியது யாருன்னு கேளுங்க தெரியலேன்பார்கள் இல்லைன்னா பாரதின்னு சொல்வாய்ங்க காரணம் பெண்ணை பற்றி உயர்வாக எழுதியிருந்தாலே பாரதிதான் எழுதியிருப்பாரென நினைப்பு.. உண்மையில் அப்படியே டிசைன் செய்யபட்டிருக்கிறோம்.. கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.. இங்கே பாரதி பேசபட்டது போல் மற்ற கவிஞர்கள் பேசபடவில்லை உயரத்திற்கு கொண்டு செல்லபடவில்லை..
இதோ.. தமிழ்தாய் வாழ்த்தை பற்றி இன்று ஜூலி பேசியவுடன் தவறான புரிதல் என்பதை தாண்டி கிண்டல் செய்கிறார்கள்.. உண்மையில் மனோன்மணியனார் எழுதிய பாடலிலிருந்து கலைஞர் சிலவற்றை மட்டுமே எடுத்து தமிழ்தாய் வாழ்த்தாக்கினார். அதற்கிசை அமைத்த எம்.எஸ்.வி. அவர்களை நினைவு கூறுவது நமது நன்றிகடன் ..
..
//ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ..
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே//.. என நீளும்
தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார் அவர்கள்..
தாய்மொழியின் வாழ்த்தில் மற்றொரு மொழியின் அழிவை குறிப்பிடுவது நாகரீகமல்ல என கருதி
#ஆரியம்போல்_உலகவழக்கிழந்த என்ற வரியை நீக்கியவர் கலைஞர் அவர்கள்..
..
முழுபாடலும் இதுதான்..
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
..
அதில் கூட
திராவிட மொழிகளை குறிப்பிட்டு ..
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்..
என்றுதான் பாடினார்..
#மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள்..
..
தோழர். ஆலஞ்சி
பேரறிவு
#பேரறிவாளன்..
நீண்டநாட்கள் சிறையில் தன் இளமையையெல்லாம் கழித்து இன்றும் செய்வதறியாது சிறையில் வாழ்கிறார்..
நீண்ட விளக்கங்களோடு அணுகவேண்டியிருக்கிறது.. முதலில் தப்பு செய்ததாகவே ஒப்புகொள்ளவில்லை என்பதும் அதை தொடர்ந்து ராஜீவ் கொலையை நியாயப்படுத்தி பொதுவெளியில் விவாதிப்பதும்.. வழக்கை தீர்க்கவிடாமல் செய்தது..
இன்னும் சொல்லபோனால் கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவை கடைசிவரை நம்பி இன்று வேறுவழியில்லை என்கிற போது அந்த தாய் நிலைகுலைந்து நிற்கிறார்..
..
தமிழகத்தின் தமிழீழம் பேசும் அமைப்புகள் ராஜீவ் கொலையை வைத்து அரசியல் செய்தார்களே தவிர இன்னும் சொல்லபோனால் அதை திமுகவிற்கு எதிர்ப்பாக காட்ட நினைத்தார்களே தவிர சமயோசித புத்தியை கையாளவில்லை.. இலை மலர்ந்தால் ஈழம் மலருமென்று சொல்லி ..ஜெயலலிதாவை அறியணையேற்ற பகிரங்கமாகவே பாடுபட்டதன் விளைவு.. திமுக தொடர்ந்து ஆட்சி செலுத்த முடியாததால் பின்நோக்கி செல்கிற அவலம் ..
நளினின் தண்டனையை ஆயுளாக மாற்றியபோது கலைஞர் கையாண்ட விதம் மிகவும் பக்குவபட்ட சரியான சூழலை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட அமைதிகாக்கிற சூழலை உண்டாக்கியது.. அதை யுக்தியை கையாண்டிருக்கவேண்டும் அதற்கான அவகாசமே தராமல் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியதும் பின் தொடர்ந்து திமுகவை ஈழவிடயத்தில் குற்றவாளியாக சித்தரிக்க கடும் முயற்சி கொண்டதும் அதை ஜெயலலிதா தனக்கு சாதகமாக்கியதும் நடந்ததே தவிர.. கண்ணீரோடு அற்பதம்மாள் சந்தித்தெல்லாம் வாக்காக மாறியதே தவிர வேறெந்த பலனுமில்லை..
..
இந்திய பிரதமரை கொன்ற வழக்கென்பதை மறந்து தொடர்ந்து சோனியாவையும் காங்கிரஸையும் சீண்டி தங்கள் வயிறுகளை வளர்த்துக்கொண்டார்களே தவிர காரியமாய் ஏதேனும் சாதிக்க முடிந்ததா இந்த தமிழீழம் போராளிகளிடம்.. காரணம் எளிது முன்பே சொன்னதுதான் தமிழீழத் தலைவர் பிரபாகரன் ராஜீவ் கொலை சம்பவத்தை துன்பயியல் சம்பவம் என்றதும்... புலிகள் அமைப்பு மீதான பார்வை உறுதியானது
அதுமட்டுமல்லாமல் திட்டமிட்ட கொலையாகவே பார்க்க/ பேசபட்டது.. இதுவரை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சிலர் நம்பிக்கொண்டிருப்பதால் .. பேரறிவாளனுக்கு தொடர்பில்லையென விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை.. தொடர்ந்து மவுனம் சாதிப்பது கூட ஒருவகையில் இந்தவழக்கிற்கு இடைஞ்சலையே தந்திருக்கிறது..
..
இனி.. மனிதாபிமான அணுகுமுறை வேண்டும் ஆனால் அதற்கான சூழலை இந்த தமிழ் தேசியர்கள் உருவாக்குவதே இல்லை தொடர்ந்து காங்கிஸையும் அரசையும் விமர்சிப்பதால் அவர்களின் எதிர்காலத்திற்கு பலனளிக்காமே தவிர அது பேரறிவாளனுக்கு எந்தவிதத்திலும் உபயோகபடாது.. பிரபாகரன் தாயார் சென்னை வருகிறாரென்றவுடன் விமான நிலையம் நோக்கி படையெடுத்து அரசியல் செய்ய நினைத்த உளுத்துப்போன நெடுமரங்களால் சங்கடமே வந்தது..முன் கூட்டி தகவல் தராமல் அரசியல் லாபத்தை கணக்கில் கொண்டதால் இழப்பு வந்தது.. இந்த பேரறிவாளன் விடயத்திலும் தமிழ்தேசியம் பேசுபவர்களால் துரும்பைகூட அசைக்கமுடியாது.. ஆனால் அமைதி காப்பார்களே ஆனால் யாரை சந்தித்தால் சரியான தீர்வு கிடைக்குமென ஆய்ந்து அதன் வழியில் பயணப்படவேண்டும்.. அதுவரை நெடுமரங்களும் .. பிஞ்சுகளும் வாய்மூடி இருக்கவும்..
..
இங்கே ஒன்றை குறிப்பிடவேண்டும் ராஜீவ் கொலையுண்ட சமயத்தில் வழக்கை நடத்த கூட யாரும் முன்வராத நிலையில் அப்போது நெடுமாறன் எல்லாம் வாயை பொத்திக்கொண்டிருந்தபோது திராவிட கழகம் தான் வழக்கறிஞர்களை நியமித்தது.. கலைஞரை சந்தித்து துரைசாமி நளினிக்காக வாதாட போவதாக சொன்னபோதும்.. திமுக மீதான மக்களின் புரிதல் இல்லாத கோவத்தை கூட பொருட்படுத்தாமல் புன்னகையோடு அனுமதி தந்தவர் கலைஞர்..
இப்போது கூட திமுகதான் கவனஈர்ப்பு தீர்மானத்தை சபையில் கொண்டுவந்திருக்கிறது ..
..
2013 ல் பேரறிவாளன் எழுதிய கவிதை
எழுத்துப்பிழையோடு இருந்தது.. இன்னமும் வாழ்வில் பிழையோடே கழிக்கவேண்டியிருக்கிறது
புனைவு எனினும் இன்னமும் தெளிவில்லை..
புனைவுகள் புரட்டபடாமலேயே இருக்கிறது
..
நிச்சயமாக விடுவிக்கபடவேண்டியவர் பேரறிவாளன்..
..
#அநீதி..
..
தோழர். ஆலஞ்சி
Monday, July 3, 2017
அரசியல் அறிவிலிகள்
GST மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.. தமிழிசை..
சிங்கப்பூரில் எச்சில் துப்பினால் தண்டம் .. நிர்மலா சீதாராமன்..
பெரியார் கலைஞருக்கு அரசியல் நாகரீகம் தெரியவில்லை பானு..
திமுக காலாவதியான கட்சி .. இருக்குமிடமே தெரியாமல் விரட்டபட்ட பாமக அன்புமணி..
..
முட்டாள்களோடு பயணிப்பது எவ்வளவு கஷ்டமான காரியம்.. கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல் கூசாமல் பொய் சொல்ல எப்படி முடிகிறது.. கொஞ்சமே கூட சிந்தனை திறன் இல்லாததவர்களால் நாடு சீரழிகிறது.. மதமும் தங்கள் ஜாதியும் உயர்ந்தென நினைக்கும் மனநோய் அரசாள்வோரிடமும் அரசை பின்துணைப்போரிடமும் மூர்க்கத்தனமாய் இருக்கிறது
..
பெரியாரும் கலைஞரும் அரசியல் நாகரீகம் தெரியாதவர்களென்று சொல்லிவிட்டு இங்கே இருக்கமுடிகிறது பாருங்கள் அதுவே சாட்சி.. வடமாநிலங்களில் தலைவர்களை மட்டமாக பேசிவிட்டு வீடுதிரும்ப முடியாது..
பெரியாரை பற்றி இந்த புல்லுக்கு என்ன தெரியும்.. சிறு குழந்தைகளை கூட வாங்க என்று பேசுகூடியவர் பெரியார்.. மேடை ஏறினால் மட்டும் தான் இந்த மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற பாசிசத்தை வர்ணாவை மிக கடுமையாக எதிர்த்தார் அவர் எதையெல்லாம் எதிர்த்தாரோ அதெல்லாம் சரியென்றே அவரின் மறைவிற்கு பிறகும் நமக்கு பாடம் புகட்டிக்கொண்டே இருக்கிறது..
கலைஞரைப்போல அரசியல் நாகரீகம் தெரிந்தவரை தமிழகத்தில் பார்க்கமுடியாது.. எதிர்ப்பில் கடுமையாக இருந்தாலும் எத்தனை விமர்சனங்கள்.. பொய் பிரச்சாரங்கள் என புறம்பேசி திரிந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாகவோ.. அல்லது கண்காட்டி தாக்குதல் நடத்தவோ பணித்ததில்லை.. ஜெயலலிதா போன்று மிரட்டவில்லை.. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பேராற்றல் இருந்தது..
..
பாஜகவினரை பற்றி அதிகம் பேசவேண்டியதில்லை அவர்களுக்கு அதிகாரம் இருப்பதால் சொல்வதெல்லாம் உண்மை என மக்கள் நம்பிவிடுவார்களென்ற அகந்தை சிங்கப்பூரில் குப்பை கொட்ட முடியாதாம்.. சிங்கப்பூர் சாலைகள் போல இங்கே வைத்திருக்கிறீர்.. அல்லது இங்கே உள்ளது போல டோல்கேட் என பகல்கொள்ளை அங்கே நடக்கிறதா.. மிக குறைவாக எரிப்பொருள் (பெட்ரோல்டீசல்) விலையுள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.. 200% வரியெல்லாம் இல்லை.. அதைவிட அங்கே இரண்டுவிதமான நீதி இல்லை..
..
ஜாதி போதகர் என்ன சொன்னாலும் யாரும் செவிமடுக்கவில்லை என்பதால் எதையாவது உளறிக்கொட்டி நானுமிருக்கிறேன் உள்ளேன் அய்யா போடுகிறார்.. சிலர் சிறந்த நிர்வாகி என தூக்கிபிடிக்கிறார்கள்.. தன்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய தர்மபுரி மக்களுக்காக என்ன செய்தார்.. அதைவிட பாராளுமன்றத்தில் அதிகம் மட்டம் போட்ட
முதல் நபர் இவர்தான்.. பாராளுமன்றத்தை சந்திக்கவே அஞ்சுகிற.. இவர்தான் ஒத்தைக்கு ஒத்தை வரியா என சொல்லி திரிகிறார்..
பலம் பொருந்தியவன் பலவீனமானவர்களோடு மோதுவதில்லை என்ற நியதி அறியாமல் .. கலாவதியான சீட்டை வைத்துக்கொண்டு வண்டிக்கி காத்திருக்கிறார்..
..
சமீபகாலமாக வெற்றுகூச்சல் காதுசவ்வை கிழிக்கிறது.. மீடியா வெளிச்சம் இருக்கிறதென்பதாலேயே எதைபேசினாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்பார்களென்ற எண்ணமும் .. தங்கள் நிலைநிறுப்பை காட்டிக்கொண்டே இருக்கவேண்டுமென்ற நினைப்பும் அருவருக்கதக்க பேச்சுகளை சகிக்கமுடியாத பேத்தல்களை அள்ளிவீச வைக்கிறது..
முதலில் நிற்க பழகுங்கள் கால் தரையில் வலுவோடு நிற்கிறதா என பாருங்கள்.. அடுத்தவர்(பிரதானகட்சிகள்) துணையின்றி எழுந்து நிற்க முடியுமா என யோசியுங்கள் பிறகு கதைக்கலாம்..
..
நிற்கவே முடியாதவன் ஓட்டபந்தயத்தில் கலந்துகொள்ளகூடாது.
..
தோழர். ஆலஞ்சி
Sunday, July 2, 2017
அவசரமும் அவசியமும்
பாஜக ஆட்சிக்கு வந்த போது சொன்னது தான் நடக்கிறது..இன்னும் 50 ஆண்டுகளுக்கு நாம் இழந்த இடங்களை நிரப்ப போராட வேண்டிவரும்..
பாஜக ஆட்சிக்கு இந்த மூன்றாண்டுகளில் இந்தியா முழுவதுமாக பார்பனர்கள் உயர்பதவிகளை மிக சுலபமாக தகுதியிருந்தும் மற்றவர்களை புறந்தள்ளி அடைந்திருக்கிறார்கள்.. எல்லாநிலைகளிலும் (எல்லாபதவிகளும்) வாய்ப்பு தரவேண்டியவர்களை கீழே தள்ளி உயர்பதவிகளை எடுத்துக்கொண்டு ஆடுகிறார்கள்.. பேச்சில் செயலில் ஆணவத்தோடு
மற்றவர்களை தங்களை விட கீழானவர்களாக எண்ணும் அந்த பழைய திமிரோடு திரிகிறார்கள்..
..
எங்கே இருந்தானென்றே தெரியாதவனெல்லாம் தாங்கள் தான் தேசபற்றாளன் போல் பேச தொடங்கியிருக்கிறான்.. தெனாவட்டாக பேசும் பழைய பார்பன பேச்சு மீண்டும் துளிர்விடுகிறது..நான் பாப்பாத்தி தானென வீதியில் வந்து கூச்சலிட முடிகிறது..வீட்டில் சமைத்து தின்பவர்களுக்கு வரி கிடையாதென திமிரோடு கிண்டலாக பேசமுடிகிறது.. பார்பனர்களை தவிர மற்றவர்களை கோவிலில் சேர்த்தால் திருட்டுபோகுமென .. மற்றவர்களை திருடனாக சித்திரித்து பேசமுடிகிறது..
..
பசிக்காக எலிக்கறி தின்றவனை ருசிக்காக தின்றதாக சொன்ன பாப்பாத்தி ஜெயலலிதாவின் கருத்தை ஒட்டிதான் இன்று வீட்டில் சாப்பிடுகிறவர்களுக்கு வரி இல்லையென்ற ஆணவபேச்சும் இருக்கிறது
நாளை வீட்டு கக்கூஸில் போனால் வரி இல்லையென்று கூட சொல்வார்கள்..
..
தொலைகாட்சி விவாதங்களில் தான்தோன்றிதனமாக பேசுவதும் அதை சரியென கடைசிவரை தம்பிடித்து நிற்பதும் கேட்க சகிக்கவில்லை..
ஆட்சி அதிகாரம் கையிலிருப்பதால் இனி எதுவும் செய்யலாம் பேசலாம் .. அறிவிற்கொவ்வா கருத்துகளை பரப்பலாம் இடைமறித்தால் காட்டுகத்தல் கத்தி திசைதிருப்பலாம்.. அதற்கும் அசரவில்லையென்றால் மிரட்டலாம்.. இது தான் அவர்கள் அஜந்தா.. அதிகாரத்தில் இல்லாத போது திறக்கப்படாத கதவுகளை ஆயுதமாக கொண்டவர்கள்..இப்போது திறந்தவெளியில் பகிரங்கமாக திமிராக ஆணவத்தோடு கதைக்கிறார்கள் பொய்யை..
..
இது நீண்டநாட்கள் நீடிக்காது.. சிறுபான்மையினரையும் தலித்களையும்(கடைசாதிக்காரன்) குறிவைத்தவர்கள் இப்போது இடைசாதிக்காரன் மீதும் அம்புவீச தொடங்கியிருக்கிறார்கள் .. அவர்கள் நோக்கம் இதுதான் இடஒதுக்கீடென்ற பெயரில் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை இல்லாதாக்கி அதிலும் பார்பனர்களை நிரம்பவேண்டுமென்பதுதான் அதைதான் இப்போது others என்ற பெயரில் நுழைந்து விழுங்கபார்க்கிறார்கள்..
அப்போதே எச்சரித்தோம்..
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகி போனது..
..
எப்பாப்பானாயினும் தலையை தடவப்பாப்பானென்ற பாவேந்தர் வரிகள் நியாபகம் வருகிறது.. நாட்டை சேதப்படுத்தும் விசவிதைகளை தூவி வளர்த்து விடும் செயல் ஆபத்தானது.. பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைய வேண்டிய அவசரத்தில் நாடு இருக்கிறது .. அவசியமும் கூட..
..
#ஒருங்கிணைந்து_வேரறுப்போம்..
..
தோழர். ஆலஞ்சி
Friday, June 30, 2017
பார்பனர்..யார்
அம்பேத்கர் பெரியார் வட்டம் APSC சார்பில் தோழர் மதிமாறனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்பன கும்பலை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் சென்னை பல்கலைகழக வளாகத்தில் ஒரு பார்பன சகோதரி எப்படி நீங்கள் பாப்பாத்தி என அழைக்கலாம் என கேள்வி எழுப்பினார்.. கண்ணியமாக பதிலளித்த தோழர்களுக்கு வணங்கங்கள்..
..
முதலில் நான் பாப்பாத்தி தான் என்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள் பெண்கள் முழு உரிமையோடு பேசவும் செயல்படும் தான் பெரியார் ஆரம்பம் தொட்டே போராடி வந்தார்.. வேலைக்கு செல்லும் பெண்களை விபசாரிகள் என்ற சமூகத்திலிருந்து வந்து இன்று எதிர் கேள்வி கேட்கிறீர்கள் மகிழ்ச்சி.. வேலைக்கு செல்லும் பெண்களை கேவலப்படுத்தி தீட்டு வந்த பெண்கள் பெண்கள் வெளியே வருவதால் தான் லோகத்தில் பூகம்பங்கள் வருகிறதென #அருளிய மகாபெரியவரின்..? மீதான நம்பிக்கை கொண்டவர்கள் போராட்ட குணம் கொண்டிருப்பதில் எதிர்கேள்வி கேட்பதில்
பெரும் மகிழ்ச்சி..
..
விசயத்திற்கு வருவோம்..
ஏன் பார்பனன் என அழைக்க சொன்னார் பெரியார்..
பிராமணன் என நாங்கள் அழைத்தால் .. தலையில் இருந்து பிறந்தவன் (உயர்ந்தவன்) என்ற தங்களின் கோட்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ..நாங்கள் தான் மனிதர்கள் அனைவரும் சமமென்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் பின் எப்படி பிராமணன் என அழைப்பது..இரண்டாவதாக பார்ப்பு தொழிலை செய்யதான் இங்கே வந்தவர்கள் நீங்கள்.. "பார்த்துக்கொள்ளுதல்" அதை செய்யவேண்டிய விதத்தில் செய்து இந்த மண்ணை ஆண்டவர்களை
சரிசெய்ததால் இன்று உயரத்தில் இருந்துக்கொண்டு கதைக்கிறீர்.. சடங்கு சம்பிரதாயம் வேதம் என கதைகள் சொல்லி ஆண்ட இனத்தை அடிமைபடுத்தி வைத்திருந்தீர்கள்.. இன்று வெகுண்டெழுந்து கேள்வி கேட்பதால் ஆத்திரம் வருகிறது..
..
செய்யும் தொழிலை வைத்து சாதியை பிரித்தவர்கள் ..அதையே அடையாளமாய் வைத்து நாங்கள் விளிக்கிற போது.. கோவம் வருகிறது ஆண்டாண்டு காலமாய் அதே நடைமுறையை பின்பற்றி எம்மை அழுத்திவைத்ததின் விளைவு திருப்பி தாக்கும் போது கொஞ்சம் வீரியமாய் தோன்றும்..
..
பிராமணன் என்றால் தங்களை உயர்வானர்வர்கள் என ஏற்றுக்கொண்டதாக பொருள்.. நாங்கள் வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொள்ளாததாலும்.. பார்த்து வந்த தொழிலை வைத்தே எல்லோரையும் அழைக்கிற பழக்கத்தை உருவாக்கியது நீங்கள் தான் என்பதால் அதையே நாங்களும் நடைமுறைபடுத்துகிறோம்..
..
#பார்பனன்_என்றசொல்_தவறானசொல்_அல்ல
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Posts (Atom)