Wednesday, May 31, 2017

திராவிட நாடு

ஜெயலலிதாவின் 68 சொத்துகள் பறிமுதல் செய்து உத்தரவிட்டிருக்கிறது ஜெயலலிதா வழியில் நடக்கும் தமிழக அரசு.. நல்லது.. இதிலிருந்து ஜெயலலிதாவை திருடி என ஒப்புக்கொண்டு தீர்ப்பை அமலாக்குகிறது.. அப்புறம் எப்படி மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஜெயாவின் படம் சட்டமன்ற வளாகத்தில் திறக்க முயற்சியெடுக்கிறது.. அதுவும் பிரதமரையே அழைத்துவந்து கிரிமினல் படத்திறப்பு மிகப்பொருத்தம்.. ஆம் நாளை கோட்சே சிலையை பாராளுமன்றத்தில் நிறுவ இந்த செயல் முன்உதாரணமாக அமையும்.. .. தமிழகத்தில் ஒரு ஆட்சி நடக்கிறதா என கேட்கும் அளவிற்கு மிக மோசமான அசாதாரண சூழல் நிலவுகிறது.. மாட்டிறைச்சிக்கான மாடுகள் விற்பதற்கு ஏற்படுத்திய சட்டவடிவை தடைசெய்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம் ஆனால் ஆளும் தரப்பில் முதல்வரும் அமைச்சர் ஜெயகுமாரும் டெல்லியில் தம்பிதுரையும் கவனமாக படித்துவிட்டு கருத்து கூறுவதாக சொல்லியிருக்கிறார்கள்.. எழுத்துகூட்டி படிக்க இத்தனை நாள் வேண்டுமா.. கேரளாவில் தனி சட்டமே இயற்றியிருக்கிறார்கள்.. கொஞ்சம் கூடுதலாய் திராவிட நாடு பேச செய்திருக்கிறார்கள்..இங்கே காலில் விழுந்து கிடக்கிற சொரணையற்ற அடிமைகளாய் .. வீரம் பேசிய கவுண்டன் கவிழ்ந்து கிடக்கிறான்..வெட்கம் வெட்கம்..பதவிக்காக இத்தனை தலைக்குனிவு தேவையில்லை.. .. இங்கே மற்றொன்றை சொல்ல வேண்டும் திராவிட நாடு கோரிக்கை வந்தவுடனே அவசர அவசரமாக தாழ்ந்தவனை(செ.கு.தமிழரசன்) பிடித்து திராவிடநாடு கோரிக்கை மாயை என புதிய தலைமுறை பேசவைத்திருக்கிறது.. திராவிடம் இருக்கும் ஆரியம் இருக்கும் வரை என்பதறியாதவராய் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.. எதற்கும் எல்லை உண்டென்பதை உணர்ந்து திரும்ப பெற வேண்டுமென தளபதி.ஸ்டாலின் இன்றைய போராட்டத்தில் எச்சரித்திருக்கிறார்.. .. எங்கள் எதிரிகளே.. எங்களினத்தோரை கொண்டே எதிர்கருத்தை சொல்ல வைக்க முயற்சிக்கிறீர்.. ( செ.கு.த..கிருஷ்ணமூர்த்தி.. தமிழிசை..) பாவம் சிறகொடிந்தவர்கள் இயலாமையில் ஏதாவது தேறாதா என அலைகிறவர்களை கொண்டு ஏவி விடுகிறீர்.. பாவம் முனைமழுங்கிய அம்புகள் அவை.. நாங்கள் எப்படி எதை தேர்வு செய்யவேண்டுமென தீர்மானிப்பது நீங்கள் தான்.. தளபதியின் எச்சரிக்கை தொடக்கம் தான்.. சின்னபொறி அதுபோதும்.. தீக்கரையாகிவிடும் . .. #எச்சரிக்கை .. தோழர். ஆலஞ்சி

Tuesday, May 30, 2017

நல்ல தலைவன்

மு.க.ஸ்டாலின் #இந்தியஅரசியலின்_உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். டைம்ஸ் ஆப் இந்தியா... .. நிதானமாக அதைநேரம் கூர்மையாக செயல்படும் தலைவராக திரு.ஸ்டாலின் திகழ்கிறார். கலைஞரின் ஓய்வால் ... இவருக்கு தரப்பட்ட அதீத பொறுப்பை மிக சாதூர்யமாக தொலைநோக்கோடு அவசரப்பட்டு அலங்கோல அவல ஆட்சியை கலைக்காமல் அதன் போக்கிற்கே விட்டு .. தமிழகத்தின் மிகசிறந்த தலைவர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தி இந்தியளவில் தனி கவனத்தை ஈர்த்திருக்கிறார்.. .. ஒரு இரவில் பூத்துவிடவில்லை.. நீண்டகால பயிற்சி மிசா காலந்தொட்டு கட்சிப்பணி.. ஏறக்குறைய ஐம்பதாண்டுகள் மக்களோடு இணைந்து பணியாற்றி.. கிளைக்கழகம் தொடங்கி..இன்று செயல்தலைவராக தன்னை உயர்த்தியிருக்கிறார்.. தமிழக அரசியலில் நாகரீகத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்.. இக்கட்டான நேரங்களில் கூட அமைதியாக அதேவேளை உறுதியோடு செயல்பாட்டை முன்னெடுக்கிறார்.. கலைஞர் உடல்நலிவுற்றவுடன் சிலர் முடிந்தது கதை என இறுதி அத்தியாயம் எழுத நினைத்ததும் .. மாற்றி புதிய அத்தியாயத்தை தொடங்கி எதிரிகளை தூரத்திற்கு விரட்டியடித்திருக்கிறார்.. கலைஞரைப்போல தன்னைச்சுற்றியே தமிழக அரசியலை இயங்கவைத்து ..தேசியளவில் திமுகவை முன்னெடுக்கும் உக்தியை கண்டு கலைஞரின் வழித்தடம் எவ்வளவு அருமையாக பயணிக்கிறதென அரசியல் நோக்கர்கள் உற்று ஆச்சரியத்தோடு கவனிக்கிறார்கள் .. .. திராவிடம் மிகப்பெரிய தாக்கத்தை தந்திருக்கிறது/ விதைத்திருக்கிறது.. நானிகாம் தலைமுறையை மிக வழிநடத்த சிறப்பான தலைவனை தேர்வு செய்திருக்கிறது.. தேசம் கவனிக்கிறது.. .. #நல்ல_தலைவன் .. தோழர். ஆலஞ்சி

Monday, May 29, 2017

அரைவேக்காடு

சினிமாகாரர்களின் அரசியல் பார்வை என்பது நிழலோடு காதல் கொள்வதை போன்றது.. சமுத்திரக்கனியின் அரசியல் பார்வையில் நல்லக்கண்ணு ஜோதிபாசு போன்றவர் தலைவர்களோடு உ.பி.யோகி யை ஒப்பிடும் அளவிற்குத்தான் இருக்கிறது.. சினிமாவில் அதிரடியாக செய்கிற நல்லவைகள் தலையில் தூக்கி கொண்டாடுகிறவர்கள் நிஜத்தின் வலி அறியாதவர்கள். .. இறந்த முஸ்லிம் பெண்களை தோண்டியெடுத்து உடலுறவு கொள்ளுங்கள் என சொன்ன யோகியை நல்லக்கண்ணு போன்றவரோடு சமமாக யோசிக்க முடிந்ததை நினைக்கும் போது அருவருப்பு தோன்றுகிறது.. இவை தெளிவற்றவர்களின் அல்லது மனதின் ஏதோ ஒரு மூலையில் ஜாதி/மதவெறி கொண்டவர்களாலேயே இப்படி பேச முடியும்.. குஜராத்தின் கசாப் கடைக்காரனை வானுற புகழ்ந்ததைப்போல.. .. சினிமாவில் பொதுவுடைமை பேசுகிறவனை நம்புகிற கூட்டம் இனியாவது கொஞ்சம் சிந்தித்துணரவேண்டும்.. அவரவர் அரசியல் பார்வையில் நாம் குறிக்கீடு செய்வதில்லை ஆனால் ஜோதிபாசு போன்ற தலைவர்களோடு ஆளுமைகளோடு .. கழிசடைகளை சேர்ப்பது சகிக்க கூடியதாக இல்லை தலித் மக்கள் தன்னை சந்திக்கவேண்டுமெனில் முதவில் சோப்பு போட்டு குளுத்துவிட்டு வரவேண்டுமென அதிகாரிகளை வைத்து உத்திரவிடுகிற.. பாசிச ஜாதி வெறிபிடித்தவரோடு நல்லக்கண்ணு போன்றோரை.. தவறவிட்ட பஸ்ஸூக்காக பேருந்து நிறுத்தத்திலேயே படுத்துறங்கி.. அரசியல் பயணத்தை தொடரும் அப்பழுக்கற்ற நல்ல மனிதரோடு இணைத்து பேசுவதன் மூலம் இவரது அரசியல் பார்வை என்பது சினிமாவில் வரும் கதாநாயக கம்யூனிஸ சிந்தனையை போன்றது. .. பாகுபலி 2 குறைச்சொன்னால் வீடுதேடி வந்து அடிப்பேன் எனும் அளவிற்குதான் இவரது விமர்சன பார்வை அதே அளவுதான் அரசியல் தெளிவுமிருக்கிறது..சமுத்திரக்கனி எல்லாம் தெளிவற்ற அல்லது சட்டென்று உணர்ச்சிவயப்பட்டு திமிரி எழுகிற அடிமாட்டு கூட்டத்தை சேர்ந்த ரகம்.. சினிமா தரும் கவர்ச்சியில் எதை சொன்னாலும் அது சரியாக இருக்குமென நம்பிய காலம் மலையேறிவிட்டது.. இன்றைய இளைஞர்கள் தெளிவாக பயணிக்கிறார்கள்.. தயை கூர்ந்து சமுத்திரக்கனி போன்ற அரைவேக்காடுகள் #வாய்மூடி_இருக்கவும்.. .. #Half_boiled… .. தோழர். ஆலஞ்சி

திராவிட நாடும் மாட்டுக்கறியும்

அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என 1950 பேரறிஞர் அண்ணா முழங்கினார்.. திராவிட நாடு கோரிக்கை தந்தை பெரியாரால் முன் வைத்த போது அது பிரிவினைவாதத்தை மக்களிடையே வளர்க்கிறதென்ற எதிர்ப்பும் பலமாக வந்தது.. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு தென்மாநிலங்கள் அதன் வளர்ச்சியில் அக்கறையில்லாத அரசும்.. குறிப்பாக திராவிட இனத்தவர்களை புறந்தள்ளி அரசு அதிகாரத்தில் ஆளுமைக்கொண்டதும் .. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் தேவை/உரிமை சார்ந்தும் திராவிட நாடு கோரிக்கையை வைத்தார்.. .. அரசியல் பங்களிப்பில் திமுக வருமென்ற நம்பிக்கையில் திராவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக விடுகிறோம்.. என்றார்..ஆனால் நோக்கம்/காரணங்கள் அப்படியே இருக்கிறதென்றார்.. இதோ மீண்டும் உயிர்தெழ தொடங்கியிருக்கிறது டி.எம்.நாயர் மண்ணிலிருந்து.. இதை கேட்டவுடன் சிலர் பதட்டபடுகிறார்கள்.. மலையாளியை விட பாப்பானை நம்பலாம் என்கிறார் இதிலிருந்து பாப்பான் ஏமாற்றி வந்ததை ஒப்புக்கொள்கிறார்கள் இதுவரை வாய்மூடி இருந்தவர்கள் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.. தமிழிசை குரலில்/சொல்லில் பயம் தெரிகிறது பிரிவினைவாதிகளை இளைஞர்கள் நம்பவேண்டாமென்கிறார்.. பரந்த அகண்ட பாரதம் கேட்பவர்களுக்கு திராவிட நாடு கசக்கதான் செய்யும்.. .. மக்களின் உணவில் கை வைத்தவுடன்.. சாப்பிடும் தட்டை பிடிங்க நினைப்பவனின் மேல் கோவம் வருவது இயல்புதானே.. அதுதான் நடந்தது.. எம் மக்களின் உணவை வடநாட்டான் தீர்மானிக்கமுடியாதென கேரள முதல்வர் பிரணாய் விஜயனும் மாட்டுக்கறி தடையை ஏற்க முடியாதென கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தெலுங்கானாவின் சந்திரசேகரராவும் நம்ம நாராயணசாமியும் எதிர்த்து அடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.. இன்னும் முழுமையாக படிக்கவில்லையென கமிழக முதல்வரும் தம்பிதுரை எம்பியும் வழக்கம் போல் அடிமைத்தனத்தை காட்டி நிற்கிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.. பிரதான எதிர்கட்சியான திமுக 31 ந்தேதி போராட்டத்தை அறிவித்திருக்கிறது.. திராவிட நாடு முழக்கத்தை முன்மொழிந்த அண்ணாவின் இயக்கம் கையிலெடுக்கிறது.. காங்கிரஸின் மல்லிகாகிஜூன் கார்கே நாங்கள் மண்ணில் மைந்தர்கள் (திராவிடர்கள்) வந்தேறிகள் (ஆரியர்கள்) நீங்கள் என்பதை மறந்துவிட கூடாதென சொல்லியிருக்கிறார்.. நீறு பூத்த நெருப்பாய்..பெரியாரின் முழக்கம் #திராவிடநாடு ஐம்பதாண்டை கடந்தும் உயர எழுகிறது.. .. நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டுமென எதிரியே தீர்மானிக்கிறான்.. .. தோழர். ஆலஞ்சி

Sunday, May 28, 2017

Dravida nadu

We are the Dravidian Legacy.. திராவிட நாடு கோஷம் வலுப்பெறுகிறது.. அப்போதே எங்கள் பெருங்கிழவன் சொன்னான் திராவிட கழகம் எனும் பெயர் சூட்டிய போது பாப்பன தூசி கூட நுழைய முடியாத பெயரை சூட்டியிருக்கிறேன் இதைவிட நல்ல பெயரை சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.. தெலுங்கனும் கைரளியனும் (மலையைாளி) கன்னடனும் திராவிடத்தை பற்றிக்கொள்ளும் காலம் வருமென்றான்.. ஆம் இப்போது (கைரளியர்கள்) மலையாளிகள் திராவிட நாடு முழக்கத்தை முன்னெடுக்கிறார்கள்.. .. நேற்று நான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுயிருந்தேன் இப்படியே போனால் ஒருங்கிணைந்த இந்தியாவின் கடைசி பிரதமர் மோடி என வரலாறு பதிவு செய்யுமென்றேன்.. பாப்பான் மொழியை பாப்பான் உணவை ,கலாச்சாரத்தை, மதத்தை பிற இனம் மொழி கலாச்சார மக்கள் மீது திணிக்க முற்படும் போது.. பல்வேறு கலாச்சாரத்தை கொண்ட பன்முகதன்மையை சிதைத்து ஆரியத்தை முன்னெடுத்தால் நாடு சிதறுண்டே போகும்.. .. எனது உணவை நீ தீர்மானிக்க முடியாது.. நான் எதை செய்யவேண்டுமென நீ எனக்கு கட்டளையிட முடியாது.. எனது உரிமைகளை நீ பிடிங்கிக்கொண்டு என்னை அடித்தமர்த்த கூடாது ஆரிய மதத்தை அதன் கோட்பாடுகளை பிராமணர்கள் கொண்டாடுவதில் எங்களுக்கு எந்த சங்கடமுமில்லை ஆனால் பிற மத இன மொழி உணர்வுகளின் மீதும் அவர்களின் பண்பாட்டின் மீதான தாக்குதலை ஏற்கமுடியாது அது எதிர்வினாயாற்றியே தீரும்.. .. திராவிட நாடு கோரிக்கையை இப்போது கேரள கரையிலிருந்து துவக்கம் குறித்திருக்கிறது.. தெலுங்கும் கன்னடமும் இணையும் .. யாருக்கும் உதவாத சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்வதும்.. பாப்பனர்களின் உணவு முறைகளை பிற சமூகத்தின் மீது வலுகட்டாயமாக திணிப்பது பிற சமூகத்தின் உணவை கேவலப்படுத்துவது.. இதெல்லாம் இந்தியா போன்ற பன்முக பேசும் நாட்டில் நடக்காது/ஏற்கமுடியாது.. திராவிடர்கென்ற நாகரீகம் கலாச்சார பண்பாடு உண்டு அது சிறப்பானதும் கூட.. இந்த மதவெறியர்களால் இந்தியா முழுமைக்குமான திராவிட முழக்கம் சென்றடையும்.. .. அப்போதே எங்கள் #பெருங்கிழவன்_பெரியார் சொன்னார்.. பாப்பான்களால்தான் நாட்டிற்கு கேடுவரும்.. எங்கள்.. #பெருங்கிழவன்_தீர்க்கதரிசி… .. #Dravidanadu.. .. தோழர். ஆலஞ்சி..

Saturday, May 27, 2017

மாட்டரசியல்

மாட்டுக்கறி சாப்பிட சொல்லி குர்ஆனில் இருக்கிறதா எச்.ராசா.. அதை விடுங்க இந்தியாவில் மாட்டுக்கறியை அதிகம் சாப்பிடுகிறவர்கள் யாரென்று NSSO சொல்கிறது.. ..//NSSO கருத்து கணிப்பின்படி தலித்துகளை உட்படுத்திய ஹிந்து சமூகத்தில் அதாவது தலித்கள் 77 % சதவீதம் பேர் மாட்டின் இறைச்சியை உண்ணுகின்றனர் . அடுத்து இடைநிலை பிற்படுத்தபட்ட சாதிகளை சார்ந்தவர்கள் 22% பேர் மாட்டின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள் . 7% ஏனைய உயர்சாதியினர் சாப்பிடுகின்றனர் . கிறித்துவ சமூகத்தில் 33% சதவீதமும் , முஸ்லிம்களில் 40% சதவீதமும் மாட்டிறச்சியை சாப்பிடுவதாக NSSO தெரிவிக்கிறது . ஆகவே இந்திய முஸ்லிம்களில் 13 கோடி பேர் மாட்டின் இறைச்சியை சாப்பிடவில்லை என்கிறது அதாவது மாட்டுக்கறியை தின்பவர்களில் இந்துக்களே அதிகம்.. ஆனால் இந்து வேதம் சாப்பிட சொல்லியிருப்பதாக எச்.ராசாவின் ஜகத்குரு.. பழைய கும்பகோணம் மடம் பின்ப காஞ்சி மடத்தின் அதிபதி.. சங்கராச்சாரியார் ஸ்ரீ சரஸ்வதி சுவாமிகள் புரிகிற மாதிரி சொல்லவேண்டுமெனில் காஞ்சி பெரியவர் தன் #தெய்வத்தின்_குரல்...(இரண்டாம் பாகம்) இப்படிதான் சொல்லி இருக்கிறார்.. :/தர்மத்துக்காகச் செய்யவேண்டியது எப்படியிருந்தாலும் பண்ண வேண்டும். ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ரு வதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா?.......அப்படி பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பே இல்லை." "பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜ பேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப்படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வ மேதத்துக்குக் கூட 100 பசுக்கள் என சொல்லியிருக்கிறது." .. குர்ஆனில் .. பசுக்கென்று அத்தியாயமே,உள்ளது.. இறந்தவரை எப்படி உயிர்தெழுப்புவான் என்ற கேள்விக்கு விடையளிக்க .. உழவிற்கு பயன்படைதா செந்நிற பசுவை அறுத்தென்று சொல்கிறது... அப்போதெல்லாம் யூதர்கள் தெய்வமாக #மாடுகள் இருந்தது .. மாட்டை வழிபடும் பழக்கம் இந்திய கலாச்சாரத்தில் இல்லை அது யூதர்களின் வழிமுறை .. யூதர்களின் வாரிசான ஆரியர்கள் இந்தியர்கள் மீது திணித்தது.. .. மாட்டிறைச்சியை ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் தினிபதை போல சித்தரிக்க பாஜக முயல்கிறது.. பசு பெரும்பான்மை இந்துக்களின் புனிதமென நம்பவைக்க முயல்கிறது இரண்டுமே தவறு.. பாஜகவின் இத்திட்டம் தோல்வியில்தான் முடியும்.. இந்தியர்களின் உணவில் மிர முக்கிய பங்கு வகிப்பது மாட்டிறைச்சி.. .. #தின்னும்சோற்றில்_அரசியல்… #மக்கள்மீதான_போர் .. தோழர். ஆலஞ்சி

தலையாட்டி பொம்மைகள் ..

இந்தியாவை ஆள்வது ஆர்எஸ்எஸ் தான் திருமா.. யார் காரணம் திருமா.. தமிழகத்தில் இந்த கேடுகெட்ட ஆட்சி வருவதற்கு யார்காரணம் திருமா.. காங்கிரஸை தடுத்து மோடி வந்தால் நல்லதென இங்கே கூப்பாடு போட்டது யார் திருமா... .. திமுகவை தனிப்படுத்த எண்ணி . வலிய வந்து வாழையிலை விருந்து வைத்தது யார் .. ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டியதை மறந்து வைகோ என்ற கேடுகெட்ட தரகனை நம்பி போனது ஏன்.. வாக்குகளை பிரித்து திமுகவின் வெற்றியை தடுக்க நினைத்து கடைசியில் இருக்கிற கோவணமும் அவிழ்ந்ததே யாரால் வந்தது இதெல்லாம் அறியாதவரா தாங்கள்... .. அரசியலில் எல்லோரும் வரலாம் வந்து பங்களிக்கலாம் மறுப்பதற்கில்லை அதை மக்கள் ஏற்கிறார்களா தங்களின் பலமென்ன என்பதை அறிந்திருக்க வேண்டாமா.. மீடியா #வெளிச்சம் வரவேண்டுமென்பதற்காக .. சேர்ந்து உண்டு சேர்ந்து திரிந்து கடைசியில் போய் சேருமிடம் தெரியாமல் தடுமாறி நிற்பதேன்.. இங்கே இன மொழி அரசியல் என்ற பெயரில் மறைமுகமாக சிவப்பு கம்பளம் விரித்து பாசிச சிந்தனையோடே வாழ்ந்த ஜெயலலிதாவை மீண்டும் வர வசதியாய் மாறி நின்றதன் விளைவு இன்று கல்கியெல்லாம் நீயும் பொம்மை நானும் பொம்மை என கிண்டல் செய்கிற நிலைக்கு தமிழக அரசியலை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.. .. அரசியல் கட்சி இதெல்லாம் மீறி தார்மீக பொறுப்பு இல்லாமல் போனதால்..ஆரிய கூட்டம் நேரடியாக இம் மண்ணில் அதிகாரம் செலுத்த முடியாதென்பதால் அதிமுகவை சிதைத்து சின்னாபின்னமாக்கி மறைமுகமாக ஆட்டுவிக்கிறது தேசியளவில் பாஜக என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இருப்பதைபோல .. அதிகாரத்திற்கு வராமலேயே இங்கேயும் மாமாக்களும் மாமிகளும் திமிரோடு பேசுகிறார்கள்.. உணவில் கூட அரசியல் செய்கிற கொடுமை உலகில் எங்கும் நிகழாதது.. .. தமிழகத்தில் திமுகவை தவிர்த்து எவருக்குமே ஆள தகுதி இல்லை அதுதான் உண்மையும்கூட.. சதா மீடியாக்களில் பேசி திரிவதால் எந்த மாற்றத்தையும் சீமான் வகையறாக்கள் ஏற்படுத்த போவதில்லை.. மக்களின் ஒரே நம்பிக்கை இன்றளவில் திமுக தான் .. அதை பின் துணைக்காவிட்டாலும் புறம் நின்று குத்தும்வேலையை உதிரி கட்சிகள் செய்யாமல் இருந்தால் போதும்...நாட்டிற்கு நல்லது நடக்கும்.. .. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாஜகவை மதவெறி மூடர் கூட்டத்தை ஜாதிவெறி கும்பலை மதம்,மொழி,இன வெறியாளர்களை வேரோடு சாய்த்திட திமுகவால் மட்டுமே முடியும்... மாநிலத்தில் மட்டுமல்ல மத்தியிலும் மாற்றத்தை கொண்டுவர .. திமுகவால் முடியும்.. .. #நிச்சயம்_நல்லதே_நடக்கும்… .. தோழர்